Followers

Tuesday, November 30, 2010

அரசியல்வாதி வாழதெரியாதவனா?
இவ்விஷயத்துக்கு போகும் முன் சற்று உலக நடப்புகளைப்பார்ப்போம்:


1. அரசியல்வாதி கோடி கோடியாக கொள்ளையடித்து விட்டான்.
2. பணக்காரன் இன்னும் பணக்காரனாக ஆகிக்கொண்டு இருக்கிறான்.
3. ஏழை இன்னும் ஏழை ஆகிக்கொண்டு இருக்கிறான்.
 (உபயம் - சிவாஜி the boss)
இந்த மூன்றுமே ஒன்றை உணர்த்துகிறது. அது இன்று இருக்கும் சமுதாயத்தில்அவரவர்களின் நிலை.

இவ்விஷயங்களில் கூர்ந்து கவனித்தால் பொதுவான ஒரு கோபம் இருக்கும். அது நடந்து போகும் ஒருவன் பைக்கில் செல்பவனைப்பர்த்து பொறாமைப்படுவது போல் தான் (அந்த பைக்க maintain பண்ற கஷ்டம் அவனுக்கு தெரியாதே),
இந்த விஷயம் படிப்படியான வர்க்கப்பிரசினையாக உருவெடுக்கிறது

ஒரு அரசியல்வாதி கோடி ருபாய் எப்படி கொள்ளையடிக்க முடிகிறது என்றால் அது அவனுடைய வாய்ச்சவடால் எனும் மூலதனம் மூலமே, அதுவும் எளிதல்ல. அவன் அளவுக்கு நமக்கு பொய் சரளமாக சொல்ல வருவதில்லை. அதே நேரத்தில் அவனுக்கு அதிர்ஷ்டமும் (பகுத்தறிவாதிகள் மன்னிக்கவும்) உதவி செய்கிறது. இல்லையெனில் பல காலம் அவனால் தொடர்ந்து சம்பாதிக்க முடியாது.

நம்ம மக்கள் எப்பவுமே யார் மீதாவது குற்றம் சொல்லிகொண்டே இருக்கின்றனர்.
 .தா. அவனுக்கென்னப்பா நேத்து வரைக்கும் சும்மா சுத்திட்டு இருந்தான் திடீர்னு பணக்காரனாயிட்டான்.

நாம எங்க ஆகுறது, நேர்மையா உழைச்சு என்னத்த கண்டோம்!?

இந்த வார்த்தைகளை கவனியுங்கள் உங்களுக்கே தெரியும் - தன் நேர்மை தனக்கு என்ன தந்தது என்ற ஆற்றாமை

நம்ம ஊருல சொல்வாங்க  - நேர்மையா உழைச்சி கிடைக்கிற காசுக்கு என்றுமே மரியாதை இருக்கும் என்று.

என்னதான் உழைச்சாலும் நாலு காசு சேக்க முடியல

இப்படிப்பட்ட உணர்வுகளும் பணக்காரர்களுக்கு எதிராக திரும்புகின்றன. இருப்பது ஜனநாயகம் பேசும் பணநாயக நாட்டில் பேசுவதோ சோஷலிசமும், கம்யுனிசமும்.

எப்படிப்பா நடக்கும்!  ஒவ்வொரு பணக்காரனுக்கும் ஒரு வரலாறு(வரலாறுன்னா history தானேன்னுல்லாம் கேக்கப்படாது) உண்டு. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்

ஒரு ஆட்சிய மக்களுக்கு புடிக்கலன்னாலும் அத  மாத்துறதுக்கு எதிர்கட்சிங்க கோடி கோடியா செலவு செய்ய வேண்டி இருக்கே(இது அவங்க ஆட்சி கொண்டு வர). ஆக மொத்தம் எதுவும் உடனே கெடச்சிடாது. எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு அது உழைப்பா இல்ல உங்க அறிவா என்பதே இப்போதைய கேள்வி?
(அறிவு சார்ந்த உழைப்பாகவும் இருக்கலாம்)     
                                 
நாம ஏன் ஒருத்தன பார்த்து சரில்லன்னு சொல்றோம். அவனுக்கு அது சரியா போயிட்டு இருக்கும் பட்சத்தில், அதேநேரத்துல நம்மளால அந்த விஷயத்த மனசார ஏத்துக்க முடியல

.தா. - வீட்ல இருக்க பெண்கள் tv  பாத்துட்டு இருக்கும் போது நமக்கு ஒரு கோபம் வரும் பாருங்க. அப்போதான் எதாவது அவங்ககிட்ட பேசி அவங்கள divert பண்ணப்பார்போம். இந்த விஷயத்துல அவங்களோட தனிப்பட்ட விருப்பத்துல நாம் நம் விருப்பத்த திணிக்கிறோம் இல்லையா(அப்பாடா பெண்கள் அதரவு விக்கிக்கு கெடச்சிடும்!).

ஒருத்தன் நல்லா வசதியா வாழரான்னா அது அவனோட தனிப்பட்ட ஏதோ ஒரு தெறமைக்கு கிடைத்த வெற்றி என்பதே என் கருத்து.

ஆனா நாம பேசுறது எல்லாம் நம்மை விட உயர்ந்த விஷயங்களை பற்றியே உள்ளது. இவ்ளோ சோஷலிசம் பேசுறவங்க தன் வீட்டுல எப்படி நடந்துக்கராங்கன்னு யாருக்கு தெரியும் (என்னையும் சேர்த்துதாங்க). பாதிப்பேரு கம்பியுட்டர மனைவி ஆக்கி ரொம்ப காலம் ஆச்சி

பொய், புரட்டு, ஏமாற்றுதல் மட்டுமே வாழ்கை என்று வாழும் பல பேர் பார்க்க மட்டுமே காஸ்ட்லி வகையை சேர்த்தவர்கள். கொஞ்சம் உள்ள போய் பாத்தீங்கன்னா  தெரியும் பல ஓட்டைகள்(நோ டபுள் மீனிங்விக்கி ரொம்ப நல்லவன்!)
உண்மைல பாவப்பட்ட ஜீவன்கள் இவர்கள்.

கொஞ்சம் உற்று நோக்கி பாருங்கள் - அரசியல்வாதியை -

தான் பல புரட்டு செய்து சம்பாதித்ததை சரியாக கவனிக்க கூட முடியாதவன். தான் இருக்கும் போதே அந்த பணத்திற்க்காக தன்னை பிணமாக்க காத்திருக்கும் கூட்டதிட்க்கு நடுவில் நடை பிணமாக வாழ்பவன்.
ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் நாலு பேரு துணை இல்லம் செல்ல இயலாத பிணம்(இல்லைனா கொன்னு புடுவாங்களோ என்கிற பயம்).
வாழ்கையை வாழும்போதே கைதி போல வாழ்பவன்

தனக்கு எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்று நித்தம் உயிரை பிடித்துகொண்டு வாழ்வது ஒரு வாழ்கையா.
(நமக்கு குவாட்டரும், கோழி பிரியாணியும் ரெடி பண்ணிப்புட்டு அவங்க பாவம் என்னத்த சாப்புடராங்கன்னு தெரியல)

நம்மள பாருங்க - நினச்ச நேரத்துக்கு எங்க வேணா போகலாம், வரலாம். நமக்கு சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆக்க டாக்டரு தேவையில்ல

கொசுறு: இந்த வாழ்கை நித்தம் சுவர்க்கம் இதை விடுத்து என்னை நரகத்தில் தள்ளிவிடாதே இறைவா.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Saturday, November 27, 2010

இந்தியாவில் - பொழைக்க தெரிந்த கூட்டம்(இனம்)


சில நேரங்களில் எனக்கு உரைக்கும் சில விஷயங்களை நேரிடையாக யாரிடமாவது விவாதிக்க வேண்டும் என்று எண்ணுவேன். ஆனால் அது இனம் சம்பந்த பட்ட விஷயமாக இருப்பதால். அவ்வாறு விவாதிக்க இயலாது. 

இந்த இனம் சாதாரண இனமா அல்ல! கிட்டத்தட்ட பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் தழைத்தோங்கிய இனம்.

இங்கிலிஷ்க்காரன் காலத்துலயும், அவனுக்கு முன்னாடி ஆண்ட பல பெரிய அரச பரம்பரையிலும் தனக்கு என்று ஒரு பலம் வாய்ந்த பதவிய பிடிச்சி வச்சிருந்த இனம். 
யாரு ஆண்டாலும் இவங்க தான் அமைச்சருங்க. இவங்களுடைய வேதங்களில் கூறப்பட்டவை யாதெனின்: பெண்கள், குழந்தைகள் மற்றும் இந்த இனத்தை சேர்த்தவர்களுக்கு எந்த வித கெடுதலும் சமூகத்தில் நடக்ககூடாது. குறிப்பாக போர் காலங்களில் இந்த விஷயத்தில் போர் புரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே போரை மூட்டிவிட்டு குளிர் காய்ந்த கூட்டம். ஒரு புறம் விடுதலை வேண்டி அனைவரும் சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் போது, அந்த கிளர்ச்சியாளர்கள் எங்க என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று ஆங்கிலேயனிடம் போட்டுகுடுத்து கூலி வாங்கி பிழைத்த கூட்டம். 

எப்போதும் ஒரு நரிக்குனத்தோடு எத்தனையே வீரர்களை சாய்த்த கூட்டம். 2000 வருடங்களாக கல்வி எனும் மூலப்பொருளை மூலதனமாக வைத்துக்கொண்டு, இந்த பாரதம் முழுதும் தன் ஆக்டோபஸ் கரங்களால் மறைமுகமாக ஆண்டு வரும் கூட்டம். 


ஒரு காலத்தில் ஆடு, மாடு மேய்த்து வந்த, நாகரிகம் என்றால் என்ன என்று அறியாத ஒரு தேசமாக இருக்கும் ஒரு வல்லரசின் ஒரு பகுதியில் தன் அறிவாற்றலை கொண்டு போய் காசாக்கிக்கொண்டு அங்கேயே தங்கலாமா என்று ஏங்கிக்கொண்டு இருக்கும் கூட்டம்.

தமிழ் எனும் மொழி சென்னையில் ஒரு விதமாக, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி இந்த இடங்களில் ஒவ்வோர் விதமாக பேசுவோர் பலர் இருந்தாலும். அதே மொழியை எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாக பேசும் வல்லமை கொண்ட கூட்டம்.

நான் நின்ற இடத்தை தண்ணி ஊற்றி கழுவிய காலம் போய் இன்று தன் கூட்டத்துக்காக யார் காலையும் கழுவ தயாராக இருக்கும் கூட்டம்.

தான் இன்று வாழ்வதற்க்காக ஜாதி மதம் வேண்டாம் என்று கூறி இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கூட்டம். இது அறியாமல் நம் மக்கள் நாட்டை எப்படி திருத்துவது என்று நித்தம் நினைத்து ஒரு பதிவு போட்டுகொண்டு இருக்கின்றனர்.


இந்த நாட்டின் கட்டமைப்பு இடங்களில் தங்கள் கொடுமையான எண்ணங்களை புகுத்தி தன் இனம் வாழ பல இனங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இனமே உனக்கு அழிவு வெகு தொலைவில் இல்லை. 

முதலில் இந்த கூட்டத்திடம் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள். இதுவே பல கலைகளை கற்றதட்க்கு சமம். 
இந்த நாடும் நாட்டு மக்களும் நலமாக இருக்க வேண்டும் என்றால் இந்த அமைச்சர் குலம் விவசாயக்குலமாக, நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் கூட்டமாக மாறினால் மட்டுமே முடியும்.


அது மாறும் காலம் எந்நாளோ!?

கொசுறு: நேரிடையாக பாதிக்கப்பட்டவனின் குரல். இதனை எடுத்துக்கொள்வதோ, விட்டு விடுவதோ அவரவர் விருப்பம். 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, November 26, 2010

காதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்!?

தளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும்: திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இருந்ததால் பதிவு போட இயலவில்லை

சரி நூடுல்ஸ் கதைக்கு வரேன்.

Start action:காருல ஏறி உற்காந்தாச்சி

அப்புறம்………(ஆப்புக்கு அப்புறம்னு கேட்ட மாதிரி இருந்தது)

எங்க சாப்பிட போலாம் சொல்லுங்க.

இப்போ உங்க வீடு எங்க இருக்கு

எங்களுக்கு ரெட்டை ஏரி கிட்ட.

அப்படியா எனக்கு அண்ணா நகர் தான் என்ன குமார் வீடு ஞாபகம் இருக்கா?

(மறக்க முடியுமா) இருக்குங்க.

அப்புறம் சொல்லுங்க friend. 


இல்லங்க நீங்க வண்டி ஓட்டும்போது பேசுறது நல்லதில்ல அதான்

it is ok, பரவாயில்ல பேசலாம்

சாரிங்க நாம இறங்கனதுக்கு அப்புறமா பேசலாமா (என்னடா gap உடாம அடிக்கராங்கலேன்னு பார்த்தேன் ஸ்ஸ்ஸ் பரவால்ல..timing ok)

காரை விட்டறங்கி அந்த பணக்கார ஓட்டலுக்குள் நுழைந்தோம்

சாப்பிடும் வகையறாக்களை menu கேட்பவரிடம் சொல்லிவிட்டு.... 


ஓகே சொல்லுங்க என்னோமோ சொல்ல வந்தீங்களே... 3  நாளைக்கப்புறம் கிளம்பறதா........

ஆமாங்க இவருக்கு இப்போ வேலை வியட்நாம்ல. இப்போ நாங்க லீவுக்கு வந்து இருக்கோம். அததான் சொன்னேன்.......

அப்படியா .... அவள் என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்தாள் (அதன் அர்த்தம்:மவனே அதான் என் கண்ணுலேயே மாட்டலியா)


என்ன குமார் எப்போ போனீங்க.....

நாங்க போய் ஒரு வருஷம் ஆகுதுங்க.... 

அங்கே எப்படி இருக்கு life?

என்ன food மட்டும் பிரைச்சினை. மற்றபடி மக்கள் ரொம்ப அன்பானவங்க(என்னமோ போடா குமாரு சூப்பரா கலக்கறே).

சரி நான் கொஞ்சம் குழந்தைய toilet கூட்டிட்டு போயிட்டு வந்திடறேன்........
ஏன் உங்க வீட்டுகாரர் போக மாட்டாரா

உடனே நான் அப்படில்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்லிக்கொண்டே குழந்தைய தூக்கிட்டு கிளம்பினேன்(நான் வேண்டிகொண்டது  - அம்மா தாயே gap கிடைச்சுதுன்னு நல்லா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போயிடாத).

நான் சென்ற இடத்தில் நிறைய பேர் என்னைப்போல குழந்தையுடன் நின்று கொண்டு இருந்தனர்(ஏன்டா டேய் இவ்ளோ பெரிய restaurant கட்டிவிட்டுட்டு ரெண்டு toilet கட்டுனா என்ன?)

கொஞ்ச நேரம் கழித்து வந்து சாப்பிட ஆரம்பித்தேன். அதன் பிறகு எந்த பேச்சையும் காணோம் (என்ன புயலுக்கு முன்னே அமைதியோ). அவள் சாப்பிட்டு முடித்து விட்டு என்னைப்பார்த்து - நீ ரொம்ப lucky குமார். நீங்க ரெண்டு பேரும் made for each other(என்னடா நடக்குது வசிஷ்டர் வாயால.....) - என்று சொல்லிவிட்டு என் பதிலை எதிர் பார்க்காமல் கிளம்பிவிட்டாள்(கிளம்பிட்டாயாகிளம்பிட்டாயா ).

பின்பு நான் என் மனைவியிடம் என்ன நடந்தது என்று கேட்டேன்.

ஒன்னும் இல்லைங்க நீங்க போன உடனே அவங்க நான் யாரு தெரியுங்களா அப்படின்னாங்க.......

நான் அவங்களையே பார்த்தேன் ....பிறகு............அவங்களே .......... நானும் குமாரும் ஒரு காலத்துல lovers அப்படின்னாங்க............ (சொல்லிட்டாளா - நல்லாதானே போயிட்டு இருந்தது- ஒரு சின்ன toilet ... டைமிங் மிஸ்ஸிங்)


அதுக்கு இப்போ என்னங்க அப்படின்னேன் 
என்ன நீங்க கொஞ்சம் கூட டென்சனே ஆகலையே என்றாள்.

இதுக்கு என்னத்துக்குங்க டென்ஷன். அவரோட கல்யாணத்துக்கு முந்தய personal விஷயங்க எனக்கு தேவையில்லாதது அப்படின்னு சொன்ன உடனே அவங்க கண்கலங்கிட்டாங்க(ஏன் கலங்க மாட்டா, என்னை ஒரு கலக்கு கலக்கனும்னு நெனச்சு இருப்பா முடியல அதான் it ok ma - தேங்க்ஸ்ரா கடவுளே

நீங்க சொன்னத தான் சொன்னேன். எப்போ சொன்னேன் என்ன சொன்னேன்?

கல்யாணம் ஆன முதல் நாளே சொன்னீங்களே மறந்துடீங்களா............ஆமாம் என்னது .............. (நான் ரொம்ப நல்லவன்னு சொல்லி இருப்பேன்)


“””நான் உன்னோட past life பத்தி எதுவும் கேட்க மாட்டேன். நீயும் என்னோட past பத்தி கேக்காத”””
(வாரே வா என்ன ஒரு ஞாபக சக்தி ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்)
நம்மளோட life என்னிக்குமே சந்தோசமா இருக்கும் அப்படின்னீங்க. (என்னைக்கோ கொஞ்சம் புத்தியோட செயல்பட்டது இன்னிக்கு தல தப்பிடுச்சி)

wife is life இல்லையா ...................

முடிசாகனுமே.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment