Followers

Thursday, March 31, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 31.3.11

நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு மாசம் தூங்கமாட்டே...........ஊரு போய் சேரமாட்டே..............வாயா மானி வரும்போதே தலைவலி பாட்டா.................

மானி: பின்ன என்னய்யா என்னா அடி அது............அந்தாள இதுவரைக்கும் சினிமால தான்யா வீரன்னு நெனச்சேன்......பாரேன் தன்கிட்ட சிக்குன மனுசன என்னமா அடிச்சாப்புல....................

குவா: இது பெரிய விஷயமா............அரசியல்வாதி ஆயிட்டாலே ரோட்ல அடிசிக்கறதும்...........கோமணம் உருவறதும் சகஜம் தானே.........ஹிஹி!........அதுசரி இந்த தலைவலி நடிகரு பிரசாரம் பண்ணுவாரா மாட்டாரா................

மானி:அத கேக்குறியா...........பயபுள்ள எடுக்கவோ கோக்கவோ........அந்த நிலையில இருக்காம் ஹிஹி!

குவா: போற போக்கப்பாத்தா தலீவரு ஜெயிசிருவாறு போல ஹிஹி!..............


மானி: நம்ம மக்கள் ரொம்ப விவரமானவங்க...........ஆனா பாரு இந்த முறை சேத்த எடுத்து இந்த அரசியல் வியாதிங்க அடிச்சிக்கறது நேரடி காட்சியா வேற TV ல காட்றாங்க அத பாத்துட்டு ஊட்டுல இருக்க பசங்க கண்ட மாதிரி பேசுதுங்க..........ஒரே பயமாகீது...........

குவா: நம்ம தலீவரு தன் ஆட்சியும், பழைய ஆட்சியும் ஒப்பிட்டு பாத்து ஓட்டு போட சொல்லிருக்காரே பாத்தியா..................

மானி: என்னையா ஆச்சி இவருக்கு........இவரே சங்க ஊதுறாரே.............ஏற்கனவே மக்கள் காண்டுல இருக்காங்க இவங்க அடிச்ச கொள்ளயப்பாத்து..........இதுல இவரே அவங்களுக்கு ஞாபகப்படுத்துறாரே!

குவா: வெடிவேலு கலக்கறாரே பாத்தியா.............

மானி: தப்பி தவறி அம்மா ஜெயிசிட்டங்க கொய்யால அந்தாளுக்கு சங்கு தான் ஹிஹி!


குவா: ஆனா டைசன் சைடுல இருந்து ஒன்னும் பதிலே காணோம்...........

மானி: அவருக்கு தெரியாதா எப்படி சும்மா இருந்த தன்னை சீண்டி பெரியாலாக்குனாங்க என்பதை.......இப்போ இவரு வெடிய தாக்குனா அந்தாளு இன்னும் பெரியாளாயிருவான் ஹிஹி!

குவா: ஆமாம் இந்த பச்சோந்தி டாக்டரு ஓவரா துள்ளுராறு போல!

மானி: அவரு எப்பவும் போலவே இப்பவும் நெனச்சிட்டு இருக்காருய்யா........ அதனால தான் தூக்கிருவோம்னு சொல்லிட்டு இருக்காரு........இதய தெய்வத்தலைவரு இருக்கும் போது என்ன பன்னாரோ அந்த மாதிரி ஒரு முறை செய்ஞ்சா சரியாயிடுவாறு ஹிஹி!

குவா: என்ன இருந்தாலும் நம்ம தலீவரோட தில்ல பாராட்டனும்யா..........பாரு அந்த Spectrum பயபுள்ளைய ஜெயில்ல வச்சிக்கிட்டே தேர்தல்ல சந்திக்கிராறு பாரு..........


மானி: அது என்னமோ உண்மைதான்யா.............இந்தாளுக்கு எப்படி ஊருக்கு நாலோ அதே மாதிரி அந்த நாலுங்க மூலமா வந்த வாரிசுங்களுக்கும் ஆம்பள பொம்பளன்னு பேதமில்லமா கள்ள தொடர்பு இருக்குதுயா.........அத வேற நம்ம மக்கள் பெரிய வீரத்தமிழச்சி ரேஞ்சுக்கு உசுப்பி விட்டுட்டு இருக்காங்க ஹிஹி!

குவா: நம்ம கரடி அறிக்கைய பாத்தியா.............

மானி: ஒரு நிமிஷம் அதிர்ச்சி ஆயிட்டேன் மச்சி............பாரேன் அந்தாளுக்கு எவ்ளோ நல்ல எண்ணம் இருந்தா இந்த முறையாவது இந்த மக்கள் பொழச்சி போகட்டும்னு தேர்தல்ல நிக்கலன்னு சொல்லி இருப்பாரு.........உண்மையில டாப்புய்யா அந்தாளு.............

குவா: சரி அம்மாவும் டைசனும் ஒரே மேடையில பிரசாரம் பண்றத்துக்கு வாய்ப்பு இருக்கா..........

மானி: சரியா தெரியல ஆனா..........கடைசி நேரத்துல எதுவும் நடக்கலாம் ஹிஹி! ஆனா பிறிஞ்சி போன அன்பு சகோதரர் எப்படி தன எதிர்ப்பா பதிவு பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்காராம்...........

குவா: இந்தியா ஜெயிசிருச்சே பாத்தியா என்னா ஆட்டம்...........

மானி: அதுக்கு தான் சொல்றது ஓவரா பேசக்கூடாதுன்னு.......பாகி கேப்டனு ஓவரா பேசுனாப்புல அதான்..........ஆனாலும் எனக்கு ஒரு டவுட்டு......45 ஓவரு வரைக்கும் ஏன் அந்த உள்ள இருக்க ரவுண்டுக்குள்ள நிக்க வைக்கிற விஷயத்த யோசிக்கல..........இன்னொன்னு கொஞ்சம் உத்துப்பாத்தா பய புள்ளைங்களுக்கு உடம்பு உதறிகிட்டே ஆடுனாப்போல இருந்துது.........லக்கு தோனிக்கு இருக்குதோ இல்லையோ சச்சினுக்கு நேத்து பயங்கர மச்சம் ஹிஹி!........
பாப்போம் அடுத்து நல்லவங்க கூட ஆடனும்......

குவா: சீன்மா மேட்டருபா............

டவுட்டு 1: 18 வயசு புள்ளயா நடிக்கிறாராம் சியான் நடிகர்....

நெசம் : ஆமாம்பா.....தெய்வத்திருமகன் படத்துலதான் இப்படி.....அது சரி மாபிங் மாதிரி இருக்காதுன்னு நம்புவோம் ஹிஹி!

டவுட்டு 2: சாந்தி படம் வராததற்கு கண்டனம்...........

நெசம் : ஆமாங்க பதிவுலக பிட்டு தலைவருகூட தீ குளிக்க முயற்சி பண்ணாராம்.........ஆனா அவரு கேட்ட நேரம் நாலு பேரு சேந்து தடுத்துட்டாங்கலாம் ஹிஹி!

டவுட்டு 3: புர்ச்சி தமிழன் படம் பப்படம்...........

நெசம்: ஆமாங்கோ.......பயபுள்ள தமிழ்நாட்டுல இருந்துகிட்டு போடுற டிரஸ் எல்லாம் என்னமோ குளிர்பிரதேசத்துல போடுறா மாதிரி இருக்குதாம்......அதுவும் இல்லாம குரஅங்காடி சித்தரு மாதிரி தாடி வேற எல்லாம் செதறி ஓடுராங்கலாம்.............


ஆரோக்கியசாமி சொல்றாரு:

பாதாம் பருப்பு சக்கர நோய் வர்ரதய்யும் உடல் பருமன குறைக்கரதுல சிறந்த மருந்தாம்............அளவோடு சாப்பிட்டால் மட்டுமே இது சாத்தியம்!

இந்த வார தத்துவம்:


இந்திய ஜொள்ளு:


வியத்நாமிய ஜொள்ளு:கொசுறு: காப்பாத்துங்க காப்பாத்துங்க ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அய்யய்யோ அப்புறம்...........!

வணக்கம் நண்பர்களே.............ஆயிரம் ஆயிரம் ஆசைகளை தாங்கிய வீடு இது...........அந்த ஆண்டவன் வாழத்துடிக்கும் குடும்பம் எனும் கோயிலிது................

கொஞ்சம் இந்த அரசியல் பரக்காவேட்டிகளை மறந்து என்னோட சிறு வயது காலத்திற்கு பின்னோக்கி போகிறேன்(நீங்களும் கொசுவத்திய எடுத்துக்கங்க ஹிஹி!)....................பள்ளி படித்த காலங்கள் இன்றும் மறக்க முடியாத பாதிப்புகள நம் மனதில் ஏற்ப்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்...............


அந்த நேரங்களில்......என் அப்பா அம்மா திடீர் திடீர்ன்னு எதாவது வாங்கி வா என்றோ அல்லது போய் விளையாடு என்றோ கூறுவார்கள்.............ஏனென்று தெரியாமல் சென்று இருக்கிறேன்..............பொதுவா என்தந்தைக்கு விளையாட்டு பிடிக்காது என்றே சொல்லலாம்(இன்னிக்கு விழுந்து விழுந்து மேட்சு பாக்குறாரு அதுவேற விஷயம் ஹிஹி!)...........அதனால் என்னை படி என்று நித்தம் நித்தம் சொல்லிட்டு இருப்பாரு(டார்ச்சர் என்று நினைத்திருக்கிறேன்!).............ஏன் நம்மள அடிக்கடி இப்படி திடீர்னு வெளிய அனுப்புறாங்கன்னு பார்க்க போனா...............வீட்டுல இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பெரிய சண்ட நடக்கும்...........அது எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாமலே இருந்தது...................


பெரியவர்களின் கருத்து வேறுபாடு நமக்கு தெரியக்கூடாதுன்னு நெனச்சித்தான் என்னை இப்படி வெளியில் அனுப்பி விடுகிறார்களா என்று எனக்கு புரிந்த போது அதிர்ச்சியாக இருந்தது................ஆனால் அதே நேரத்தில் பள்ளி தோழர்களில் பலர் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே அழுவதை கண்டு இருக்கிறேன்.............ஏன் என்று கேட்டால் வீட்டுல அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை அதான் என்று அழுது கொண்டே கூறும்போது நானும் வருந்தி இருக்கிறேன்...................


இன்று என் மகன், என் மனைவியின் தந்தைக்கும் தாய்க்கும் சில மன சங்கடங்கள் வந்து சண்டையிடும்போது ...........ஏன் தாத்தா இவ்ளோ வயசாவது இப்ப போய் சண்ட போடுறியே.........எங்க அம்மாவையும் அப்பாவையும் பாத்து கத்துக்க..............அய்யோ அய்யோ உன்ன கொண்டு போய் ஸ்கூல சேர்க்கணும் போல என்று சொல்வதாக என் மனைவி கூறினாள்.............எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.........


குடும்பத்தில் கருத்து வேறுபாடு என்று வரும்போது குழந்தைகள் முன் சண்டையிடுவதை தவிருங்க.............இல்லன்னா நம்மைப்பற்றிய தவறான அபிப்ராயம் ஏற்ப்பட்டு அதுவே நம்மை விட்டு விலகிப்போக அதிக வாய்ப்பு கொடுக்கும் விஷயமாகிப்போகும்................

கொசுறு: தலைப்போட விளக்கம் என்னன்னா..........அடிக்கடி பள்ளில பேசிக்கும் போது சக மாணவர்கள் கேற்கும் விஷயம் ஹிஹி!.........எல்லா வித பதிவும் போடுற பழக்கம் வேணும் ஹிஹி (மனசாட்சி!!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, March 30, 2011

செக்ஸ்...இந்தியர்கள் பழமை விரும்பிகளா(!?)

வணக்கம் நண்பர்களே...........இந்த பதிவை படிக்க வருபவர்களுக்கு ஒரு நற்செய்தி...........அது என்னன்னா இது சாதாரண மனிதன் ஒருவனின் மனப்பிரதிபலிப்பு மட்டுமே...........ஆராய்ச்சி கட்டுரை அல்ல.............


சமூக காவலர்கள் one step back ப்ளீஸ் சரியா............

உண்மையில் செக்ஸ் எனும் சொல் எப்படி பாலினத்தை குறிக்கிறதோ.....அந்த வார்த்தை சொல்லி முடிக்கும் முன் நம் மக்களின் முகம் அஷ்ட கோணலாகிப்போகும்.........எதோ அருவருப்பான விஷயத்தை சொல்லப்போவதாக முடிவு செய்து விடுகிறார்கள்.............

உண்மையில் இப்போதுள்ள சமூகத்துப்பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான விஷயம் இது..........இதை சரியான முறையில் அறிவுறுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில தவறான பாதையில் நம் குழந்தைகள் செல்வதை தடுப்பது சிரமம் என்பது என் கருத்து...................

ஆனால் அவ்வாறு விளக்குவது நம் கலாசாரத்தை கொச்சைப்படுத்துவதாக எண்ணுகின்றனர் நம் பழமை விரும்பிகள்..................என்னை கேட்டால் இதற்க்கு காரணம் நம் பிள்ளைகளின் மீது நமக்கு இருக்கும் பாசம் மற்றும் ஒரு வித மன நெருடல் என்பதே..............

எனக்குள் ஒரு கேள்வி எப்போதுமே எழும் அது ஒரு யதார்த்தமானது என்றாலும்...........!


ஒரு பெண் பூ பெய்தபின் நம் சமூகத்தில் குழந்தை என்ற பிம்பத்தில் இருந்து பெரிய மனுசி ஆயிட்டா என்று சொல்லக்கேட்டு இருக்கிறேன்...............அதே நேரம் எந்த ஆணையாவது இவன் பெரியமனுசன் ஆயிட்டான் அப்படின்னு சொல்லிகேட்டு இருக்கிறோமா?............ஏன்?

இதுக்கு பல மருத்துவர்களின் பதில்கள் இருக்கும்............ஆனா நான் கேற்ப்பது விளங்கிக்கொள்கிரா மாதிரி இருக்கணும்...........நான் என்னுடைய 12 வகுப்பில்தான் செக்ஸ் எனும் விஷயத்தை பற்றி சிறிதளவாவது புரிந்து கொண்டேன் (அப்போ +2 ல Science Group)..................


அப்போ கூட பல விஷயங்கள் எனக்கு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது...........யாரும் தப்பா நினைக்கலைன்னா சொல்லறேன் கேளுங்க.............அம்மா, அப்பா எப்படி இப்படியா இருந்து இருப்பாங்க என்று நினைக்கும் போது என்னுள் ஒரு வித அருவருப்பு தோன்றியது என்மேல்!

ச்சே இது படிப்பு மட்டும் தானா அல்லது வாழ்கையின் சாராம்சமா.......இதனால் தான் அவங்க அப்படி நடந்து கிட்டு இருப்பங்களோ.......இது உண்மையா இல்லையா.........இப்படியாக பல வித குழப்பமான மன நிலை ஏற்ப்பட்டது. அதனில் இருந்து வெளிவர மனரீதியாக நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.............

இந்த நிலைக்கு காரணம் படிப்பு மட்டுமா அல்லது அந்த வயதில் எடுத்து சொல்ல ஆளில்லாத நிலையா..............!

அதனால்தான் என்னைப்பொறுத்தவரை செக்ஸ் கல்வி அவசியமான ஒன்று...........முன்பு போல ஒரு படத்த பாக்க ஒளிஞ்சி போயி பாக்கப்போரதில்ல நம் இக்கால குழந்தைகள்...........வீடு வரவேற்ப்பு அறைக்கே வரும் TV நிகழ்சிகள்..........முடிந்தவரை குடும்பத்தோட உற்க்காந்து TV பாத்திடுவீங்களா நீங்க!..........விட்டுடுவோமா நாங்க என்ற நிலையில் தான் எல்லா சேனலும் இருக்கிறது...........


அதே நேரம் நாம படிக்கும்போது பாக்காத கம்பியூட்டர இப்போ இருக்க பசங்க காமிக்ஸ் புக்க புரட்டராபுல புரட்டுதுங்க..............இந்த நிலமையில இவங்களுக்கு எப்படி ஒரு பாதுகாப்பான வாழ்கை முறைய நாம கொடுக்கப்போரோம்னு தெரியல................

இப்போ லேட்டஸ்டா வேற லிவிங் டுகெதர் அப்படின்னு ஆரம்பிச்சி இருக்காங்க...........இது மேலை நாடுகள்ல வெறும் உடல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கு......ஆனா அவங்க அத காதல் சம்பந்தப்பட்ட விஷயமா சொல்லிப்பாங்க அது வேற விஷயம்(இதில் எனக்கு உலகம் சார்ந்த அறிவு கம்மி ஹிஹி!)...............

இப்போ இருக்க பசங்களுக்கு இந்த உடல் சம்பந்தப்பட்ட ஈர்ப்பு 12 வது வயதிலிருந்தே ஆரம்ப மாகிடறதா ஒரு கணிப்பு சொல்லுது..............(ஆனா அவங்கள மீறி இந்த வயசுல அவங்களுக்கு பல விஷயங்கள் தெரியவருது!) ஆரோக்கியமான சமூகத்த வளக்க வேண்டிய பொறுப்பு நம்ம எல்லாருக்கு உண்டு என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.............இதைப்பற்றிய உங்க கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது..........

கொசுறு: அறிவியல் எத வளத்துதோ இல்லையோ....................! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

மக்கள் ஆட்சி(தண்டனை!)

வணக்கம் நண்பர்களே.........இன்றைய பொழுது யாவருக்கும் நலமாக போகும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்....................................................


அடுத்து வரும் விஷயங்கள் உங்களுக்கு தெரிந்த இடத்தில் நடப்பனவே............

ஆமாம் மக்கள் ஆட்சி தான் அமைஞ்சிடுச்சே எங்கப்பா அந்தப்பழைய அரசர் மற்றும் அரச குடும்பத்த காணோம்................

அத ஏன்கேக்குற.............அவர்களின் இன்றைய(நாளைய!) நிலமைய பாரு ஹி ஹி!.............


காட்சி - ௧

ஏன்டா மவனே இந்த வயசான காலத்துல இந்த அத்துவான காட்டுல கொண்டு வந்து நம்மள போட்டு போயிட்டானுங்களே படுபாவி பசங்க.........

ஏன்பா உன் வயசுக்கு நீ சும்மாவா இருந்தே என்னா ஆட்டம் அதான் உன்னோட சேர்த்து எங்களையும் கொண்டுவந்து இங்க போட்டுட்டானுங்க............ஆனா பாரு இப்பதான் உனக்கு சராசரி மனுசன மாதிரி பேச்சு வருது................

அண்ணே சத்தமா பேசாதிங்க ஏதாவது சிக்கலாகிடப்போகுது ..............

டேய் நீ ரொம்ப நல்லவன்டா வேலை கைல இருக்க வரைக்கும் இந்தாளுக்கு ஜால்ரா அடிச்சே காலத்த ஓட்டிட்ட...........நான் எப்படி இருந்தேன் தெரியுமா.......டிஜிடலு பேனரு கணக்கா........என்னயுமில்லடா கூட்டியாந்துட்டீங்க உங்களோட............


அண்ணே என் தலைஎழுத்த பாருன்னே ..........இங்க வந்து சாணி அல்ல வச்சுட்டானுங்க...........

அடியே என்னா ரவுசு உட்ட நீ ...........இந்தப்பக்கம் பேசுவாளாம்...........அந்தப்பக்கம் பேசுவாளாம் ....ஒரு போனு கிடைச்சதுன்னு என்னா ஆட்டம்! ........... ஏதோ இங்கிலீசுல நாலு வார்த்த தெரிஞ்சி வச்சிக்கிட்டு ........என்னைய என்னமா ஓட்டுன நீயி...........

என் குலக்கொழுந்தே உண்மையை ஊருக்கு கேட்க்கும்படி உரக்கசொல்லாதே.......

என்னடா இது இன்னும் உங்க ரெகுலர் டயலாக்க காணுமேன்னு பார்த்தேன்...........
இந்த மாதிரி ஓவரா பெசுனதுனால தானே இங்க கொண்டுவந்து போட்டு பன்னி மேய்க்க விட்டு இருக்கானுங்க நீ திருந்தவே மாட்டியா...........


hey what is this? whats happening here? lets talk something good?

வாடா பிஞ்ச வாயா ஏன்டா டேய் இந்த அமுலு பேபி மூஞ்ச வச்சுக்கிட்டு நாலு வார்த்தைய சொளட்டி பேசிட்டா நீ இங்கிலீசுகாரனுக்கு மவனா .............வாயில அசிங்க அசிங்கமா வருது............

இனமே பயம் கொல்லாதே நானிருக்கிறேன்.............

எலேய் நீ இருப்ப நாங்க இருப்பமா சொல்லு.........சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்த கணக்கா ஊட்டுல இருக்க பின்சது பிய்யாததுக்கு எல்லாம் வேலை கொடுத்து ஊட்டையே கொண்டாந்து பன்னி மேக்க விட்டவனே ..............

அய்யோ அய்யோ நான் தான் அப்பவே சொன்னேன்ல..............

வாடா ராசுக்குட்டி ..........உன்ன தான் தேடிட்டு இருக்கேன்.......என்னாமா பம்முன ..........இப்ப எங்க வந்து இருக்க பாத்தியா...........ஒரு சொட்டு தண்ணி கிடையாது குடிக்க..........இந்த மாதிரி வனாந்தரதுல கொண்டாந்து போட்டதுக்கு யாரு காரணம்.............

அண்ணே நான் இல்ல..........

உன்ன எனக்கு அன்னிக்கே தெரியும்டா....... நீ நான் வேலைல இருக்கும்போதே என்னப்பத்தி ஓவரா பேசனவன் ஆச்சே......வாடா ஒத்தைக்கு ஒத்த மோதலாம் வா...........

அண்ணே நான் வறுமை கோட்டுக்கு கீழ பொறந்தவன் ...............

அப்போ நாங்க எல்லாம் .........அந்தரத்துல பாகிஸ்தான் பார்டர்லய பொறந்தோம்........டேய் நீயாருன்னு எனக்கு தெரியும் .......கண்ணு வா கண்ணு.............ரெண்டு சாத்து...ரெண்டே சாத்து தான்..........

என் தலைமகனே கலங்காதே ..........நாளை விடியும் நமக்காக...........

ஏலே இது உனக்கே ஓவரா தெரியல ..........இன்னிக்கே குடிக்க தண்ணி இல்ல .......எப்போ உசிரு போகப்போதுன்னே தெரியல.....இதுல நாளைக்கு............உன்ன சொல்லி குத்தமில்ல எல்லா அந்தக்காலப்பெருசுங்க ..........உன்னைய உசுபேத்தி இந்தமாதிரி பேசவச்சி பாத்துடுசிங்க............அதே பேச்சு தான் இங்க கொண்டாந்து விட்டுருக்கு............

எப்பே நான் படந்தேன் நடிச்சேன் அதுக்காக என் கோவணத்த உருவிட்டாங்க...........

சரி விடு அது மட்டும் போச்சே.........

இப்பவாவது நான் சொல்றத கேளுங்க ..........


ஏண்ணே எதாவது வழி இருக்கா தப்பிக்க............இருந்தா சொல்லுங்க................

எல்லோரும் ஒழுங்க வேலயப்பருங்க ...........அதப்பாத்தாதான் கூழு ஊத்தறதா இப்போதான் அந்தப்பயபுள்ள சொல்லிட்டு போச்சி................

கொசுறு: இந்த டயலாக்கு எல்லாம் யாரோடதுன்னு தெரியலீங்க........ தொலைவிலே ஒரு வானொலி பாட்டு கேக்குது இருங்க கேப்போம்-

"எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...........சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்......சமயம் பாத்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்....................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, March 29, 2011

ஈமச்சடங்கு - பாவமன்னிப்பு உண்டா(!?)


என்னுடைய அடிவருடிகள் என்னை சாணக்கியன் என்பார்!?


நன்றி கெட்ட என்னை மன்னியுங்கள். உங்கள் கால்களுக்கு செருப்பாய் பிறந்தாலும் எனக்கு கிடைத்த பழி போகாது. என் சுயநலத்துக்காக உங்களை கொன்றேன். உங்கள் நல் ஆவி என்னை விடாது என்று தெரிந்தும் என் வயது என்னை இந்த கொடுமையான செயலை செய்ய வைத்தது.நான் இன்று நான் அல்ல என்று சொன்னாலும் என்னை யாரும் மதியார். எனக்கு முன் இருந்த என் நண்பன் உங்களுக்கு செய்த காரியங்களை எண்ணி மனம் வெதும்பி இருக்கும்போது, எப்படியேனும் நான் உங்களுக்கு தலைவனாக காட்டிகொள்ள முயற்சித்தேன். பதவி எனும் மகுடத்தை எத்தனை முறை என் தலை மேல் வைத்து அழகுபார்தீர்கள். நான் அதற்க்கு தகுதியானவனாக நடந்து கொண்டேனா என்று காலம் போனபின் இன்று நினைத்து பார்க்கிறேன்.

என்(பலரை முட்டாளாக்கி என் மூளைபலம் கொண்டு வாங்கிய) பதவி எனும் போதை தலைகேறிவிட்டது. மன்னியுங்கள் என்று கேட்டாலும் மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட நல்லோரே. நான் வரும் போது எனக்கு விருந்தோம்பல் முறையில் "வாருங்கள்" என்று கூறி  உடகாரவைத்து பேசும் பண்பு உங்களிடம் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆனாலும் என் செய்வேன் நான் அறிவு கெட்டு ஒன்று பெற்காமல் ஊருக்கு நாலு பெற்றதால் என் தலை இன்று பல இடங்களில் உருண்டு கொண்டே இருக்கிறது.


மற்றும் நான் ஊழ்வினை உருத்து வந்து வூட்டும் என்பதை அறிந்து வைத்து இருப்பதால் எனக்கு சிறிது பயமாக உள்ளது. என் மக்களே நீங்கள் என்னை மன்னிப்பீராக. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் இது என் அடுத்த பிறவிக்கு அடிக்கோளியுள்ளது.

மக்களே நான் என்னால் முயன்ற்றதைசெய்தேன் என்று சொல்லி உங்களை இப்போது ஏமாற்ற விரும்பவில்லை. அப்படிசொல்லித்தான் உங்களை ஏமாற்றினேன் என்பதை என் மனசாட்சி எனக்கு அடிக்கடி கூறிக்கொண்டு இருக்கிறது. நான் செய்த பாவங்கள் அடுத்த பிறவியில் அனுபவிக்க முயன்று தோற்று இப்பிறவியிலேயே என் மூலமாக வந்தவர்களாலே அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். என் தமிழினமே என்னை மன்னிக்காதே.


என் பால் கொண்ட அன்பால், நான் ஏதாவது முயற்சி செய்து உங்களை காப்பாற்றுவேன் என்று இருந்து மாண்ட என் அன்புக்கினியோரே. அன்று நான் உங்கள் அவஸ்தை தெரியாமல் என்(பெற்ற)மக்களுக்காக மத்தியில் போராடிக்கொண்டு இருந்ததால் எனக்கு
உங்கள் நினைவு வராமல் போனது. மன்னியுங்கள் என்று என் மனம் சாதாரணமாக கூறினாலும் என் உடல் அந்த விஷயத்தால் ஏற்பட்ட கலக்கத்தால் துவண்டு போனது.

மன்னிக்காதீர் என்னை மறந்து விடுங்கள்...............

கொசுறு: ஓர் மனசாட்சியின் குரல்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

அபிமன்யு The Great(!?)

வணக்கம் நண்பர்களே......................வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார்............................மாபெரும் வீரர்.....மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்.............


இவரைத்தெரியாதவர்கள் இருக்க முடியாது...................அன்றொரு நாள் போரில்...............

சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு உள் புகுந்தான் அபிமன்யு எனும் மாவீரன்................கோழையாக வளர்க்காமல் வீரனாக வளர்க்கப்பட்டவன்......எப்பேர் பட்ட எதிரி எதிரில் நின்றாலும் பயப்படாமல் போர் புரியக்கற்றவன்........

சுற்றிலும் சொந்தக்காரர்கள் (கோழைப்படை) எனும் எதிரிப்படை............தனி ஒருவனாக அப்படையை எதிர்த்து சண்டையிட்டுக்கொண்டு இருந்தான்..............

மகா பராகிரமசாளிகள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருந்தனர்............அவனை பார்த்து கெளரவப்படை சிரித்தது............அப்போதும் சிறிதும் மனம் கலங்காமல் சண்டையிட்டுக்கொண்டு இருந்தான்.............

உன் காலம் முடியப்போகிறது சிறுவா............உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்...............என்றான் அந்த மிகப்பெரியப்படையின் தலைவன்


என் காலம் முடிந்து விடும் என்று தெரிந்தே இந்த வியுகத்துக்குள் புகுந்தேன் பெரியவர்களே.........உங்களிடத்தில் போர்த்திறமை அதிகமிருந்தும் தர்மம் எனும் உயரிய குணம் இல்லாததது வருத்தமே...........நான் இறக்கலாம்.......என் வீரம் இறக்காது........உலகம் தன் வாழ் நாள் வரை என்னை மாவீரன் என்றும், மிகப்பெரிய படையை தனி ஒரு சிறுவனாக தன்னந்தனியாக எதிர்த்து போரிட்டு மாய்ந்தான் என்று புகழ் பாடும்..............


அதே நேரத்தில் உங்கள் நிலையை எண்ணிப்பாருங்கள்........இதுவரை பல கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய நீங்கள்......இனி வரும் சமுதாயத்தின் பார்வையில் மனிதர்களாக அல்லாமல் புழுக்களாக மதிக்கப்படுவீர்கள்.........தாங்கள் இதுவரை எடுத்து வைத்த நல்ல புகழ் மறையும்........இப்புவி உள்ளவரை உங்கள் கோழைத்தனம் எதிரொலிக்கும்........நீவீர் புகழ் மாண்டு போகும்.............நான் இறப்பதற்கு அஞ்ச கோழை அல்ல......என் தாய் என்னை இப்புவிக்கு அளித்ததே இந்த அரும்பெரும் சாதனையை படைக்கத்தான் என்று இன்று புரிந்து கொண்டேன்......வெறும் மண்ணுக்காக......மதியிழந்து உங்கள் உயிரை இழக்கப்போகும் பெரியோரே.......அந்த மண்தான் உங்களையும் அரிக்கப்போகிறது ஞாபகம் வைத்துக்கொள்வீராக..........


சிரித்துக்கொண்டே உயிர் துறந்தான் அந்த மாவீரன்...............

கொசுறு: எத்தனை உயிர்களை பலி கொடுத்து வாங்கிய ஜனநாயகம் எனும் அபிமன்யுவை உங்களுக்கு தெரிகிறதா நண்பர்களே........இந்த அரசியல் வியாதிகள் அவனை குறிவைத்து நிற்பது தெரிகிறதா.........அவனைத்துளைத்திருக்கும் ஒவ்வொரு அம்பும் இலவசம் எனும் விஷம்.........முடிவெடுங்கள்.....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, March 28, 2011

கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கப்பா(ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே..........நம் அன்றாட வாழ்கைல மிக முக்கியமான விஷயம் இது................


இந்த வயசிலையும் இவங்க பண்ற பயிற்சிகளப்பாருங்க.............அதிக பட்சம் 50 - 60 கிலோக்கு மிகாமல் தங்கள் உடலை பாது காக்குறாங்க..........


இவங்க வயசு கிட்ட தட்ட 70 க்கு மேல................... நமக்கு இதில் நெறய பயிற்ச்சி வேண்டுமோ 
இதையும் பாருங்க : http://www.youtube.com/watch?v=6prB7u89wb4

கொசுறு: நாமளும் முயற்சி செய்யலாம்.....ஆனா இந்த மாதிரி இடங்களுக்கு எங்க போறது வீடே ஏரிக்குள்ள தான் இருக்கு ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தக்காளி ஓட்டு போடுமா(!?)

வணக்கம் நண்பர்களே...........தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.............இந்த நேரத்தில் நடந்த ஓர் சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..........


ஒரு சின்ன ப்ளாஷ் பேக்................

அது ஒரு காலை நேரம்.....நானும் என் அம்மாவும் ஓட்டு போட சென்னை சாலிகிராமம் பூத்துக்கு சென்றிருந்தோம்...........

மணி 11.30 இருக்கும்...............

டேய் குமார்...........என்னடா இவ்ளோ கூட்டமா இருக்கு.............

விடும்மா சீக்கிரத்துல ஓட்டு போட்டுட்டு போயிறலாம்...........

(என் அம்மாக்கு இரத்த அழுத்தம் உற்பட பல விஷயங்கள் இருந்தாலும்.......ஓட்டு போடுவதை தவிர்த்ததில்லை இதுவரை!)

அப்போது திடும் என உள் புகுந்த கரை வேட்டிகள் அந்த அறையில் இருந்த வாக்காளர்களை வெளியேற்றினர்...........

அப்போது நான் அந்த அதிகாரியிடம்........49 O விண்ணப்பபடிவம் கேட்டுக்கொண்டு இருந்தேன்............என் தோளில் ஒரு கரை வெட்டி(வேட்டி!) கை வைத்தது..........

தம்பி கெளம்பு என்றது..........(நான் அந்த நண்பரை முறைத்து விட்டு என் பணியை தொடர்ந்தேன்!)

டேய் உன்னதான்............

நான் அப்போதும் அந்த படிவத்தை எழுதி முடிப்பதில் கண்ணாக இருந்ததால்.....என்னை விட்டு விட்டு மற்றவர்களை வெளியேற்றியது.........நானும் என் தாயும் அந்த தாளை கொடுத்துவிட்டு வெளியேறும்போது...........

உனக்கு இன்னைக்கு நேரம் நல்லா இருக்கு.........அதான் முழுசா போறே என்றான் அந்த தீவட்டி...........(நான் அவனை முறைத்தேன்!)


டேய் குமார் வா போலாம் என்று என்தாய் என்னை இழுத்துக்கொண்டு வந்தார்கள்........

(என் தாய் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை வேறு விதமாக நடந்திருக்குமோ........)

இன்று....................

Account மேனேஜரிடம் இருந்து நெட் போனில் அழைப்பு..........

ஏம்பா திடீர்னு லீவு கேட்டு இருக்க............அதுவும் personal காரணம்னு சொல்லி......என்ன விஷயம்னு பாஸ் கேக்கறாரு...........

அது வந்து சார்................

சொல்லு பரவாயில்ல..........பணம் ஏதாவது வேணுமா...........

இல்லங்க.........ஏப்ரல் 13 எங்கூர்ல தேர்தல்...........அதுக்கு ஓட்டு போட போகணும் அதேன்..............


அந்தப்பக்கம் ஒரே சிரிப்பு சத்தம்..............ஏன்யா யாருக்காவது முடியல்லன்னு சொல்லு ஒத்துக்கறேன்..........அதுக்காக இப்படி ஒரு பொய் தேவையா................

சார் நீங்க விடுங்க நான் பாஸ் கிட்ட பேசிக்கிறேன்.......என்னை நீங்க அவமானப்படுத்தறதா நெனைக்கிறேன்..................

சரி டென்சன் ஆகாதே............இங்க பாரு project sign ஆகுற நேரம் நீ இருந்தே ஆகணும்........அதுவும் இல்லாம கொஞ்சம் யோசிச்சி பாரு நீ ஊருக்கு போயிட்டு வர கிட்ட தட்ட $2500 அதாவது 1 லட்சம் செலவாகும் யோசிச்சி முடிவு பண்ணு....அந்தப்பணம் இருந்தா உன்னோட குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட உபயோகப்படும்.........என்னவோ போப்பா நான் உன் நல்லதுக்கு சொல்றேன்..........

சார்...........நீங்க சொல்றது உண்மை தான்........ஆனா என் நாட்டுல எனக்கு இருக்க கடமை ஓட்டு போடுறது.......அது உங்க பார்வைல எப்படியோ.........4 நாள் லீவு கெடச்சா போதும்.......எனக்கு துட்ட விட கடமை முக்கியம்...........ஒரு வேளை நான் சொல்றது உங்களுக்கு முட்டாள் தனமா தோணலாம்...........என்னைப்பொறுத்தவரை இது என்னோட உரிமையோட கலந்த கடமை.................


உன்ன நெனச்சா என்ன சொல்றதுன்னு தெரியல போ...............என்றார்.

கொசுறு: இவை உண்மையாக நடந்தவை தங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன...............
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Sunday, March 27, 2011

அதிமேதாவியா பெண்கள்(!?)

வணக்கம் நண்பர்களே..................சில நினைப்புகள் மீண்டதினால் இந்த பதிவு................நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்........கொஞ்ச கொஞ்சமாக தரை இறங்கும் விமானம் போல சராசரி மனநிலைக்கு வந்துகொண்டு இருக்கிறது என் மனம். இந்த நேரத்தில் என்னைப்பாதித்த தோழிகளைப்பற்றி கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.

என் சிறுவயது முதல் கடந்து வந்த பாதையில்(முட்கள் எனும் அனுபவங்களின் கோர்வைக்கு நன்றி) பல பெண்கள் என்னை மனதளவில் பாதித்துள்ளார்கள். அவர்களின் ஒரு பகுதி தொகுப்பு இந்தப் பதிவு.


அ. சித்ரா (ஹாக்கி சித்ரா):

எங்க கேங்குல இருந்த பசங்க எப்பவுமே ஒரு புனைபெயருடன் தான் சுத்துவோம். அதுவும் நமக்கு நண்பி ஆயிட்டா கேக்கவே வேணாம்!?. அவங்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வச்சி ஓட்டுவோம்(பட்டப்பேர மட்டும்).

இவங்க சாதாரண ஆள் இல்லீங்க பயங்கர வேகமா ஹாக்கி விளையாடக்கூடிய பெண் சிறுத்தை(புலின்னு சொல்லப்படாதுள்ள!?). இவளுடைய மேட்சுக்கு மறக்காம லீவு போட்டுட்டாவது போயிடுவோம். இல்லன்னா வீட்டுக்கே வந்து அவளோட ஹாக்கி ஸ்டிக்கால மண்டயப்பொலந்திடுவா! அவ்ளோ பொறுமைசாளின்னா பாத்துக்கங்க. சும்மா சொல்லப்படாது இவளோட ரிவர்ஸ் ப்ளேக்கு நாங்க அடிமை(கூட்டாளிங்க கூட்டுத்தொகை 12).


ஆ. ஆனந்தி (கதை, கவிதைப்புயல்- ரீல் ஆனந்தி)

இவங்க கத சொல்ல ஆரம்பிச்சாங்கன்ன நம்ம டைரடக்கருங்க கெட்டாங்க போங்க. சீன் சீகுவன்செல்லாம் சொல்லுவா. அப்போ நமக்கிருந்த அறிவுக்கு இவ தான் எங்க கேங்குலையே பெரிய கவிப்பேரரசு. எவன் வந்து கேட்டாலும் அவன் ஆள மடக்கரத்துக்கு என்கந்து சுட்டு கொண்டு வருவா தெரியாது, சும்மா கவிதைய கேட்ட அந்தப்பய்யன்னுடைய ஆளு அப்பிடியே மயங்கி விழுந்துடுவான்னா பார்த்துக்கோங்க. யாரு சொன்னா கட்டடிக்கரதுல பசங்கதான் பெரிய ஆளுன்னு!?

இவ சூப்பரா ப்ளான் பண்ணிக்குடுப்பா, எப்படி வீட்டுல, காலேஜுல மாட்டிக்காம கட் அடிக்கறதுன்னு ஒரு புக்கே போடக்கொடிய தகுதி இவளுக்கு உண்டு.


இ. லக்ஷ்மி (வரைகலை நிபுணி- zoo லக்ஷ்மி)

இவங்க பெரிய வரைகலை நிபுனிங்க. எங்க ரெகார்டு புக்கு காலத்துல இருந்து எங்களுக்ககாவே சேவை செய்ய வந்தவுங்க. யார் எத சொல்லி வரையசொன்னாலும் சும்மா அரைமணில வரைஞ்சி அசத்திப்புடுவாங்க. இந்த அம்மணியாலதான் ஸ்கூல்ல விலங்கியல் பிரிவுல அதிக மார்க்கே வந்தது. கொஞ்சம் கூட அடுத்தவங்க மனச புண் படுத்த தெரியாத அப்பாவி. படிப்புல பயங்கர சுட்டி மற்றும் விளையாட்டுலயம் தான்.

மிச்சம்: இவங்க மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டுன்னா அது இந்த மூணு அறிவாளிகளும் காதல்ங்கிற அரக்கனால எங்கள விட்டு பறந்து போன பட்டாம்பூச்சிக்கள். உயிர் எனும் மிகப்பெரிய விஷயத்த ரொம்ப மலிவா நினச்சி தற்கொலைப்புரிந்துகொண்ட அதி மேதாவிகள். காலம் எனும் காலன் என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை. எத்தன இழப்புகள தான் நான் தாங்குறது................. அவ்வளவு கொடியவனா நான்....................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

போட்டி வாங்கலையோ குடல் போட்டி(!) - இப்படிக்கு ரவுடி(!)

எனது தமிழ் மற்றும் அனைத்து விதமான மொழி பேசும் கண்மணிகளுக்கு என் தமிழ் வணக்கம்...............மத்த மொழில எங்க தலீவர்கள திட்டும் கோடான கோடி ஆயிட்டங்காரங்களுக்கும் வணக்கம்.................


மச்சி மன்னாரு உன் மனசுக்குள்ள பேஜாரு ட்டச்சி பண்ணாரு மெர்சலாயி போனாரு...............

என்னபா யார பாக்க வந்து கீற..............

நிருபர்: அண்ணாத்தைய தாங்க.................

ரவுடி: என்னா செல்லம் எப்டி கீற...............

நிருபர்: ங்கனா தேர்தலு வருது அதான் உங்க பேட்டி போடாலமுனு.............

ரவுடி: எது போட்டி எடுக்கப்போறியா...........டேய் *&^%$#@!

நிருபர்: இல்லைங்கண்ணா உங்க கருத்துகள கவ்விட்டு போலாம்னு வந்து இருக்கேன்..........

ரவுடி: சரி மாமு கேளு...............

நிருபர்: ஆம்மன்னே இந்த முறை யாருக்காக வேல செய்யப்போறீங்க.............


ரவுடி: அத ஏன் கேக்குற.............முன்னெல்லாம் எங்கள பாத்த உச்சா போற பசங்கல்லாம் இப்போ ரிச்சா போறானுங்க...........பய புள்ளைங்களுக்கு பயம் போயிருச்சி.............இப்போ ரொம்ப உசாராயிட்டாங்க............நேரா போயி நிக்கற சோமாறி கிட்டயே கட்டிங் பேசிடரானுங்க...............ஒரே மெர்சலா கீது பா............

நிருபர்: சரி தல அப்போ என்னதான் பன்றதா இருக்கீங்க...............

ரவுடி: நம்ம பய புள்ளிங்கள கூட்டிகினு போயி மம்மி கட்சில சேர்ந்துடலாம்னு கீறேன்..........ஏன்னா அங்க தான் என்ன மாதிரி நெறைய பேரு சேர்ந்து கீறாங்க.............

நிருபர்: ரொம்ப மனசு கஷ்டப்பட்டு பேசராப்புல தெரியுது..............


ரவுடி: பின்ன என்னாய்யா அந்த மவராசி ஜெயுக்குதோ இல்லையோ எப்படியும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரந்தான் சீரியசா வேல பாக்கும் ஆனா மஞ்ச மன்சன் கிட்ட போனா ஒரு பெரிய கூட்டமே இருக்குய்யா............அந்த கூட்டத்துல நாம எங்க போயி போட்டோல நிக்கறது............அதுவும் அவரு தூங்குற நேரம் கூட முதல கணக்கா கண்ணா தொரந்துகினே தூங்குவாரு...........

நிருபர்: இப்போ போற போக்க பாத்தா அவரு தானே ஜெயிப்பாரு போல.............


ரவுடி: நம்ம மக்களை சொல்ல முடியாது.............துட்ட வாங்கி போட்டுகுனு எப்படியும் இவரு அடிச்சது போதும்...........அவங்க வந்து மீதிய அடிசிக்கட்டும்னு நெனப்பாங்க...........நம்ம தோஸ்துங்க நெறைய பேரு ஏற்க்கனவே சமஉ வா வேற இருக்காங்க................

நிருபர்: உங்களுக்கு எதாவது கொள்கை இருக்கா?

ரவுடி: எப்பவும் நான் போட்டி தான் சாப்பிடுவேன்............அது தான் சரக்கடிக்கும்போது உள்ள போய் என் போட்டிய காப்பாத்துது...............

நிருபர்: இல்லன்னே நீங்க என்னதான் பண்றதா இருக்கீங்க.............


ரவுடி: இந்த தொழிலு ரொம்ப போரடிச்சி போச்சி பா.............அதுனால நம்ம தோஸ்துங்க போல காலேஜி ஆரம்பிக்கலாம்னு கிறேன்..............

ஏன்னே உங்களுக்கு அந்த கஷ்டமான வேல.............

இன்னா அப்டி சொல்லிட்ட..........நாம தான் படிக்கல..............நாலுபேரு படிக்கறத பாத்தாவது குஷியாயிக்கலாம்னு தான்.................

ஆக மொத்தம் இந்த தேர்தல்ல நீங்க இறங்கல அதானே..............

அப்படி சொல்ல முடியாது ஏன்னா..............எப்போ என்னா நடக்கும்னு தெரியல ஹிஹி!

கொசுறு: இந்த மனிதர் உங்களுக்குள்ளும் உலவலாம் ஜாக்கிரதை............யாருப்பா அது ஆர்ட் பிலிம் கணக்கா பதிவு போட முடியாதுன்னு சொன்னது................!!!!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Saturday, March 26, 2011

கட்டி கொடுத்திருப்பாங்களோ(ஹிஹி!?)

வணக்கம் நண்பர்களே..............எனக்கு வந்த ஒரு இமாலய டவுட்டு...........என்னை போலல்லாமல் நீங்க எல்லாரும் அறிவாளியாக இருப்பதால் உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று.....................


அப்படிப்போடு...................அடிச்சிப்போடு...............மாப்ள என்ன ஆச்சி உனக்கு..........இப்படி பின்ற.............


மாப்ள போற போக்குல நீ புலின்னு சொன்னவெல்லாம் போடா கொட்ட எடுத்த புலின்னு சொல்லிபுடுவானுங்க பாத்துக்க.............


என்னமோ மாப்ள..................இந்த முறை உன்னால தப்பிச்சிட்டோம்.............


சூனியம் இவ்ளோ செஞ்சும் எப்படி.....................


அது வந்து மாப்ள ஒரு பெரிய மலை அதுல ஒரு குய்.................


டேய் போற போக்கப்பாத்தா என்னை கட்சீல பந்து பொறுக்கி போடுறதுக்கு நீங்க யூஸ் பன்றீங்கங்கறதே இப்பதான் புரியுது..................மாப்ள உங்க ஆளுங்க ரொம்ப நல்லவங்கய்யா..........
டேய் எனக்கு உன் மேலதான் டவுட்டு...........அடப்பாவி நீ டிரஸ் போட்டாலே பாக்க பயமா இருக்கும்....இதுல இப்படி வேறயா ஹிஹி!


இவ்ளோ கொடுத்த பய புள்ளைங்க எனக்கு எதுவும் கொடுக்கலையே.........அந்த யுவி பயபுள்ள பிகர கொடுத்தாத்தான் வாங்குவேன்னு சொல்லி ஒத்த கால்ல நின்னதால ஜெயிச்சிட்டோம்......ஆனா துட்டு மேட்டர்ல நான் தோத்துட்டனே.......பயபுள்ளைங்க....................500 மேட்சு ஆடுனாலும் கெடைக்காத காச ஸ்விஸ்ல போட்டுட்டாங்க........இனி இந்தப்பக்கமே நான் வரமாட்டேன்............


அடியே பிரீத்தி உன்ன இப்படியே ஊதிடுறேன் பாரு.............


கொசுறு: ஒரு வேலை கட்டி கட்டியா கொடுத்து ஜெயிசிருப்பாங்கலோன்னு ஒரு டவுட்டு ஹிஹி.............. 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment