Followers

Sunday, July 31, 2011

இன்றைய கிச்சிலிக்கா பாருங்கோ!

வணக்கம் நண்பர்களே.........

இங்கு வரும் மூன்று வீடியோக்களையும் பார்த்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்......


எங்கள் மகனின் டான்சே -


என் வியட்நாமிய உதவியாளருடன்....


கேமெராமேன் ஆக முயற்சித்த தக்காளி (பய புள்ள ஸ்லிப் ஆகி இருந்துது...போட்டோவ வீட்ல மாட்ட வேண்டி இருக்கும்.....ஹிஹி!)


கொசுறு: சும்மாத்தான் பார்த்துட்டு சொல்லுங்கோ!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Saturday, July 30, 2011

மூணு மூனா சொல்லணுமாமே!

வணக்கம் நண்பர்களே.... நண்பர் tamilvaasi  அவர்கள்(பேரு மட்டும் தான் தமிழ் வாசி ஆனா ப்ளாக் பேரு ஆங்கிலத்துல ஹிஹி!)......முன்னுக்கு பின்னாக ச்சே மூணுக்கு மூணாக(moon அல்ல!) என்ற விஷயத்த தொடர அழைத்திருந்தார்.....எதோ எனக்கு தோன்றியவைகளை டைப்பறேன்...பாத்துக்கோங்கப்பா!(எங்கப்பா அல்ல!)

1. நான் விரும்பும் மூன்று விஷயங்கள்....?

    பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எந்த வித குறை பாடு இல்லாமல் பிறக்கவேண்டும் (அதுவே பெரிய சொத்து!)
 
    முடிந்த வரை அடுத்தவரை புண் படுத்தாத வார்த்தைகள் அடங்கிய பேச்சு!
    மனசாட்சியை கொல்லாத வாழ்கை!

     முன்கோபம் எனும் அரக்கனை குறைத்து வருவதால்.....முடிந்த வரை சர்ச்சையில் சிக்க கூடாது என்ற எண்ணம்.

2. விரும்பாத மூன்று விஷயங்கள்.....?

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்!

    சபிக்கப்பட்ட ஜனநாயகம்

    என்னால முடியாது எனும் சொல்!


3. நான் பயப்படும் விஷயங்கள்....?

    கடவுள் = மனசாட்சி!

    அக்கா = இறந்துவிட்டாலும் அவள் அதிர்வுகள் இன்றும் இறக்கவில்லை!

     நேர்மை = எந்த நேரத்திலும் கொடுத்த வேலையில் தவறி விடக்கூடாது!(எந்த அளவுக்கு நிர்பந்தம் ஏற்பட்டாலும்!)

4. நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்....?

   புதிய பாதை

   சேகுவேரா - ஆங்கிலம்!

   நான் சிகப்பு மனிதன் 

5. நான் ரசித்த மூன்று பாடல்கள்....?

    வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா....

     நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.....

     நீ நான் சிவம்.....


6. எனக்கு பிடித்த மூன்று உணவுகள்....?

     அம்மா வைக்கும் மீன் குழம்பு
   
      மனைவி வைக்கும் சாம்பார்(ஐஸ் இல்லீங்கோ!)

      சிக்கன்(சொந்த சமையல்!)
     
7. இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?

    நம்பிக்கை

    மனைவி

    தேடல்

8. கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்...?

    பொறுமை (மனைவியிடம் இருந்து!)

     கம்பியூட்டர் பற்றிய விஷயங்கள்

      மொழிகள் (பல!)

9. கேட்க்க விரும்பாத மூன்று விஷயங்கள்...?

     அழுகை

     ஆணவமான பேச்சு

      துரோகம்


10. நான் பெருமையாய் நினைக்கும் மூன்று?

      திருமணம்

      நானா இப்படி(!)

      நண்பர்கள் (என் பதிலுக்காக காத்திருப்பார்கள்!)

11. எனக்கு புரியாத மூன்று விஷயம்...?

      வாழ்கை (என்றுமே புரியாத புதிர்!)

       பணத்துக்காக தொடரும் சொந்தங்கள்(!)

       இறந்தாலும் ஈகோ பார்க்கும் மக்கள்

12. வாழ்நாள் முடிவற்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயங்கள்......?

       உலகை சுற்றி வந்து விட வேண்டும்

       நல்ல அரசியல் வாதியாய் வர வேண்டும்!

        அறிவாளியான மானிட்டர்(!) மூர்த்தியை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும்(இப்போது மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறான்!)

13. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருள்கள்....?

      செல்போன்

      பர்ஸ்

      தண்ணீர் குவளை


14. தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று விஷயங்கள்....?

      மலேசிய சுற்றுலாவுக்கான முயற்சி

      குழந்தையின் வார இறுதி சுற்றுலாவுக்கான முயற்சி

       இந்தியாவுக்கு செல்ல முயற்சி

கொசுறு: என்னையும் மதித்து(!) தொடர் பதிவுக்கு அழைத்த திரு தமிழ்வாசி அவர்களுக்கு நன்றிகள்!


கொசுறு: பிரபலங்களுடன் எனக்கு ஏற்ப்பட்ட நேர்காணல்கள் விரைவில்! ..எதிர் பாருங்கள்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, July 29, 2011

அழகு நிலையம் - வியட்நாம் (பெண் பார்வையில்!)

வணக்கம் உறவுகளே.....

பெண்கள் வீட்டு பொறுப்பை மட்டும் கவனித்து வந்த காலம் மறைந்து வருகிறது என்று நினைக்கிறேன். முடிந்தவரை உழைப்போம், அது குடுமபத்தின் சந்தோஷத்தை பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்!

என் கணவர் பல விஷயங்களில் எனக்கு பெரிய தூண் என்பேன். அவரின் தூண்டுதலான வார்த்தைகள் தான் என் தாழ்வு மனப்பான்மையை அகற்றியது. எனக்கு கிட்ட தட்ட 10 வருட அனுபவம் இருந்தது அழகியல் துறையில்(!). அதை விட்டு விடாத வண்ணம் செயலாக்கி கொண்டு இருக்கிறேன். அதுவும் வியட்நாமில் இந்த வேலையை செய்வது சற்று சிரமமே. ஏனெனில், இங்கு இருக்கும் பெண்கள் மஞ்சள் நிறத்தவர்கள் என்பதால் முக  சம்பந்தப்பட்ட வகைகள் (அலங்காரம் தவிர!) அதிகமாக தேவை இருக்காது.

இருந்தாலும் இவர்களின் சுத்தம் என்னை அதிசயிக்க வைத்தது. உடல் அழகுக்கு பெண்கள் அதிகமாக செலவழிக்கிறார்கள். இருந்தாலும் இந்தியாவை போல தனித்தனி பொருள்கள்(instruments!) கொண்டு செய்து கொள்பவர்கள் குறைவு மற்றும் இங்கு இருக்கும் பெண் அழகு நிலையங்கள் அதிகப்படியான பணத்தை பிடுங்கி விடுகின்றன.


இந்த வேலை சம்பந்தப்பட்ட பொருள்கள் இங்கு கிடைக்காது. ஒவ்வரு முறையும் இந்தியா செல்லும்போதும் கொண்டு வருவேன். கணவரின் நண்பர்கள் சிங்கப்பூரில் இருந்தோ அல்லது மலேசியாவில் இருந்தோ வரும்போது கொண்டு வந்து தருவார்கள்.

நான் முதலில் ஆரம்பித்தது இந்திய பெண்களுக்கு மட்டுமே. ஏன்னெனில், என் அனுபவம் அதனை சார்ந்து மட்டுமே இருந்ததால். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன், அதிலும் இங்கு வரும் பெண்கள் எளிதில் திருப்தி அடைந்து விட மாட்டார்கள். இங்கிருக்கும் (இந்திய)பெண்களின் கணவர்கள் பெரிய வேலைகளில் இருப்பதால் அவர்களால் வீட்டவர்களுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை.


அதுவும் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் பெண்கள் பாடு திண்டாட்டம்தான். எனவே வெளியில் சென்று வருவது மூலம் தங்கள் நேரத்தை தனிமை எனும் கொடிய விஷயத்தில் இருந்து காத்து கொள்கிறார்கள். பலர் பகுதி நேர ஆசிரியர்களாக ஆங்கிலம் கற்று கொடுக்க செல்கிறார்கள்.

நாங்கள் அழகு நிலையம் வீட்டில் ஒரு சின்ன அறையை ஒதுக்கி ஆரம்பித்த போது, இந்திய பெண்கள் தங்கள் வீட்டுக்கு வர சொல்லி வற்ப்புறுத்தினார்கள்(!)..என்னை பொறுத்தவரை அப்படி சென்று வருவதை விரும்பாத காரணத்தால் ஏற்க்க மறுத்து விட்டேன். கொஞ்ச காலம் சென்றது...தானே பெண்கள் வர ஆரம்பித்தனர். இப்போது சுமாராக போய் கொண்டு இருக்கிறது.

இதில் பல வகை உண்டு - முக அழகு, தலை முடி அழகு, கால் அழகு மற்றும் பல இருக்கிறது. இவை எல்லாம் செய்ய வேண்டுமானால் இடம் பெரிதாக வேண்டும். சீக்கிரத்தில் அதுவும் நடக்கும் இன்று நினைக்கிறேன்.


விரைவில் ஒரு தனி நிலையம் அமைக்க யோசித்து கொண்டு இருக்கிறேன். ஏனெனில் பல நாட்டு பெண்களும் வர ஆரம்பித்து உள்ளனர். இதன் மூலம் என் நண்பிகள் வட்டம் பெரிதாகி வருகிறது(!). வீட்டை விட்டு வெளியே செல்லவே பயந்த நான் இன்று பல நாட்டு பெண்களுடன் சகஜமாக பேசி வருவது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

வெறும் பணத்துக்காக இதை செய்யாமல் நான் கற்று கொண்ட விஷயத்தை விட்டு விடக்கூடாது எனபதால் ஆரம்பித்ததே இந்த நிலையம். இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. படிப்பறிவு குறைந்து திருமணம் ஆன இந்தப்பெண்(!) இன்று ஆங்கிலத்திலும், சொந்த வேலையிலும் வெளுத்து வாங்குகிறாளே என்று!


சொச்சம்: எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே!(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ!)


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, July 28, 2011

இப்படி பாத்து இருக்கீங்களா? - வியட்நாம்!

வணக்கம் நண்பர்களே..........நேற்று ஒரு புதுவித அனுபவமாக இருந்திருக்கும் என் மனைவிக்கும், மகனுக்கும்...ஏனெனில் INS Airavat (ஐராவதம்!) - எனும் பெயர் கொண்ட இந்தியாவின் போர்க்கப்பல் வியட்நாம் வந்து இருந்தது...அழைப்பின் பேரில் சென்று இருந்தோம்...


ஹோனாயிலிருந்து துறைமுகத்திற்கு கிட்ட தட்ட 90 கிமீ தூரம் இருக்கும்...துறைமுகத்தின் பெயர் - ஹைபோங்!....அழகிய துறைமுகம் என்று சொல்ல முடியாவிட்டாலும்....முக்கிய துறைமுகம் என்று சொல்லலாம்!...2 மணி நேர பயணத்தில்(உபயம் -தூதரக பஸ்!) போய் சேர்ந்தோம்....


பெரிய போர் கப்பல் என்பதால் அனுமதி கெடுபிடிகள் அதிகம்...அதுவும் எங்களின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்த லிஸ்ட் காணாமல் போயிருந்தது குறிப்படத்தக்கது...அனைவரையும்(10 இந்தியர்கள், 15 வியட்நாமியர்!) கரையிலேயே நிற்க வைத்து விட்டார்கள் வியட்நாமிய போலீஸ்காரர்கள்!....பின் அந்த கப்பலின் கேப்டனிடம்(ப்ளாக் டைசன் அல்ல!) பேசிப்பார்த்தோம்....அவரும் இந்தியர்களை மட்டுமாவது அனுமதிக்குமாறு அந்த அதிகார்களிடம் பேசி அனுமதி வாங்கினார்......


எவ்வளவு பெரிய கப்பல்....உள்ளே டாங்கு மற்றும் ஒரு பெரிய அளவிலான லாரி நிற்கும் அளவுக்கு கீழ் தளம் இருந்தது...நல்லிணக்க காரணமாக வந்து இருந்ததால் அதனை தாங்கி வரவில்லை கப்பல்.....மேலும் மேல் தளத்தில் நவீன ரக ஹெலிகாப்டர்(ரோந்து!) நிற்க வைக்கப்பட்டு இருந்தது.....அது எவ்வாறு அந்த தளத்தில் இருந்து மேலெழும்பும் என்று விளக்கப்படுத்தினார் ஒரு அதிகாரி....


மொத்தம் 20 ஆபிசர்களும், 180 சிப்பந்திகளும் இந்த கப்பலில் பயணம் செய்கின்றனர்......அப்படியே பார்த்து கொண்டு வந்த போது ஒரு அதிகாரி என்னை பார்த்து தமிழா என்றார்...ஆமாங்க என்றேன்...நீங்க என்ற போது அவர் தான் ஆந்திரம் என்றும் தமிழ் தெரியும் என்றும் சொல்லி அவருடைய ஆபீசர்கள் தாங்கும் குளிர் அறைக்கு கூட்டி சென்றார்....மேல் தளம் அதிகமான வெப்பத்தில் தகித்தது...உள்ளே மிதமான குளிர்(A/C) வீசிக்கொண்டு இருந்தது....

நலம் விசாரித்த வண்ணம் பேசலானேன்.....உள்ளே இருந்த மிகப்பெரிய LCD டிவியில் கேம் X எனப்படும் விஷயத்தை என் மகனிடம் கொடுத்து விளையாட சொல்லி விட்டார் அந்த அதிகாரி(கார் கேம் 3D)....அந்த அதிகாரியின் முகம் என் நண்பன் ஒருவரின் முகதத்தை போல இருந்தது...அன்னியோன்யமாக பேசினார்...சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான்(HIET) கல்லூரியில் ஏரோனாடிக்ஸ் படித்ததாக கூறினார்....(இந்த கல்லூரி கிண்டி முனை - ஜோதி தியேட்டர்(ஹிஹி!) அடுத்து இருக்கிறது)....

அவர் பேசிக்கொண்டே வந்தார்....எப்படிப்பட்ட வேலை...கடல் நடுவே செல்ல வேண்டும்...தொடர்ந்து பல வாரங்களாக கடலில்(கப்பலில்!) இருப்பதாகவும்...பொதுவாக மாதத்துக்கு சில நாட்கள் குடும்பத்தை பார்க்க முடியும் என்றும்(விடுமுறை அல்ல!) என்றும் கூறினார்....இந்த கப்பல் விஷாகப்பட்டினத்தில் இருந்து வருவதாகவும் வரும் வழியில் புரூனே, கம்போடியா மற்றும் ங்காசாங் (அழகிய வியட்நாமிய துறைமுகம்!) கடந்து வந்ததாக கூறினார்!.....

பல விஷயங்களையும்...போர் நேர நடை முறைகளையும் விளக்கினார் அந்த நண்பர்(காபி மற்றும் ஸ்நாக்ஸ் உடன்!)....எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது இந்த பயணம்...இரவு வந்து சேர்ந்தோம் இனிதாக!

கொசுறு: எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, July 26, 2011

அதிசயம் ஆனால் உண்மை! - Air lines!

வணக்கம் உறவுகளே,

கொஞ்ச நாள் முன்பு ஒரு விமான நிறுவன ஏமாற்று பற்றி பதிவிட்டு இருந்தேன்....என்னுடைய முதல் விமானப்பயணத்தை பற்றிய பதிவுக்கு தாங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி....இந்தப்பதிவு நான் விமான நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட கதையை தெரிவிக்கும் பதிவு!

StarredMALAYSIA AIRLINES CHENNAI to me
show details May 25

Dear Sir,
Refund details as below:
For Adult: Approximately - Rs.11900/- and Child - Rs10,000/-
Once Onward journey is commenced , please submit the ticket for Partly refund.
Documents reqiured:
1. Passport copies
2. Letter signed by the passenger which should contain ticket numbers, contact number, name as per Bank account, bank name ( scan and attach with the mail).
Please note Cheque will be issued in Passenger Name.
Any further clarification, please contact 044-42191919/42199999
Thanks and regards
Sandhya

சென்னையில் இருந்து ஹனோயிக்கு விமான டிக்கெட் வழங்கும் இடத்திற்க்கு சென்று இருந்தேன். அங்கிருந்த பெண் முதலில் சொன்னது ஒருவழி டிக்கட்டுக்கான பணம் மற்றும் ஒரு வழி டிக்கட் அளித்தால் immigration இல் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறினாள். சரியென்று இருவழி டிக்கட் எடுத்தோம்...அப்போதே கேட்டேன்...எனக்கு ஒரு வழி டிக்கட் போதும்....திரும்பும் வழி டிக்கட் பணத்தை பற்றி கேட்டேன்..
அதற்க்கு அந்த பெண் 21,500 ரூபாய்கள் திரும்பக்கிடைக்கும் என்றாள்(ருபாய்  58,000 இருவழிக்கு!)..சரியென்று வீட்டவரிடம் போனில் சொல்லி விட்டு அந்த பணத்தை கட்டி விட்டு வந்தோம்....அப்போதே கேட்டுக்கொண்டேன்...நான் வியட்நாம் சென்று விடுவேன் என் பேங்க் அக்கவுன்ட் எண்ணில் அந்த பணத்தை இட முடியுமா என்று...அதற்க்கு அந்த பெண் ஒரு இமெயிலில் அந்த விஷயங்களை போட்டு அனுப்பினால்...அதன் படி பணத்துக்கான காசோலை என் தந்தையிடம் அளிக்கப்படும் என்று உறுதி கூறினாள்....

அதனை நம்பி சென்று விட்டேன்...அவளும் அதற்க்கான ஈமெயிலில் எவ்வளவு பணம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தாள்..

fromMALAYSIA AIRLINES CHENNAI mhticketing@gmail.com
tovenkat kumar <vbvvvmv@gmail.com>
dateTue, Jun 14, 2011 at 7:17 PM
subjectRe: Ticket refundable Matter
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details Jun 14 (5 days ago)

Dear Sir,
This is to inform you that refund is processed. Cheque is ready to collect.
You can send your person tomo to collect the cheque . The Total amount is  Rs.11532/-
Tks nd rgds
Sandhya

இப்போது எல்லாம் முடிந்து அந்த காசோலை பற்றி கேட்டால்...அந்த சகோதரியின் மேலாளர்....அவ்வளவு தர இயலாது என்றும்..ஏதேதோ இடையில் கழித்து வெறும் ரூபாய் 10,500 மட்டுமே தர முடியும் என்றும் கூறி விட்டாராம்....என்னால் இதனை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை....

என்ன செய்வது...தங்களுக்கு தெரிந்தால் சொல்லவும்.....(என் கணவர் இதைப்பற்றி கேட்டு சலித்துவிட்டார்...கன்சூமர் கோர்ட் மூலமாக போவதானால்...யாராவது தொடர்ந்து இந்த விஷயத்தை எடுத்து செல்லவேண்டும் என்பதால் விட்டு விட சொல்கிறார்!)

நான் சிரத்தையுடன் விடாமல் தொடர்ந்து வந்தேன்.....அந்த பெண்ணை என் தந்தை நேரில் சந்தித்த போது தொடுத்த வார்த்தைகள்(நியாயமான) அந்தப்பெண்ணை நெகிழ வைத்திருக்கக்கூடும். திடீரென்று ஒரு மாதத்துக்கு பிறகு தொலைபேசி அழைப்பு வந்தது எனக்கு!

என்னவென்று கேட்டேன்,

மேடம் நான் சந்தியா பேசுகிறேன் சென்னையிலிருந்து....

சொல்லுங்கள்..என்ன விஷயம் என்றேன்!

நான் தங்களுக்காக எழுதிய மெயில் மேலிட நபரால் சிரத்தையுடன் பார்க்கப்பட்டது...அதனால் உங்கள் மீதப்பணம் கிடைத்து விடும் இன்னும் இரு நாளில் என்றாள் அந்தப்பெண்!

எனக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கிடைத்தால் உங்களுக்கு மிகவும் நன்றி சொல்வேன் என்றேன்!

venkat kumar
Dear Madam Sandhya, Please find the attachment. Further contact number is :
 
ReplyReply
More|
MALAYSIA AIRLINES CHENNAI to me
show details Jul 23 (3 days ago)

Madam Vidya,
Please note the balance refund amount Rs.10230/- is processed and ready to collect our end.
Kindly send your father to collect the cheque on your behalf.
Tks n rgds
sandhya

இன்று அந்தப்பணம் எனக்கு கிடைக்கப்பெற்றது. என் தந்தை அந்த பெண்ணுக்கு நன்றி கூறிவிட்டு வந்ததாக கூறினார்!...நானும் தொலைபேசியில் என் நன்றியை கூறினேன்! முயற்சி விடாமல் தொடர்ந்து சென்றோமானால் எல்லாம் நம் வசம் உறவுகளே!

கொசுறு: உழைத்த பணம் கண்டிப்பாக திரும்பி வரும் என்பார்கள். கிடைக்காத போது எப்படி அதை பதிவிட்டேனோ, அது கிடைத்த போது பகிர வேண்டாமா தங்களிடம்! நன்றி!

வித்யா குமார்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, July 25, 2011

கால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்- 4 Updated

வணக்கம் நண்பர்களே.....


அந்த ரெஸ்டாரென்ட் ஸ்பேனர் ச்சே ஓனர் மிரட்டிய மிரட்டலில் நண்பன் தன் பைக்கை உதைத்து கிளம்பினான்....பத்து நிமிஷத்தில் வரேன்னு சொல்லி விட்டு சென்றவன் அரைமணி கழித்து வந்து பணத்தை கொடுத்தான்....அந்த அரைமணி நேரம் ஹிட்லரின் ஞாபகமே வந்தது எனக்கு....பெண்களை விட்டு விட்டு நம்மை கொண்டு போய் கும்மி விடுவானோ....

ஏன் மகா...இம்புட்டு கஷ்டப்படனுமா...ஒரு சைன கழட்டி கொடுத்து புட்டு பணத்த கொண்டாந்து கொடுத்திட்டு வாங்கிக்கலாம்ல என்றேன்.....வந்திருந்த நண்பிகள் யாருடைய சைனும் ஒரிஜினல் இல்லையாம்...(ஹிஹி!)


 வெளியில் வரும் பெண்கள் ஒரு சைனோ (சைனா அல்ல!) மோதிரமோ போட்டு வருவதில்லை கொய்யா பூசுங்க!.....எப்ப பாரு வெறும் கழுத்தோட சுத்துங்க....இல்லன்னா ஏதாவது போலியான விஷயங்களை கழுத்தில் போட்டு இருக்கும்!...இதில் மேரி எனும் நண்பி கையில் ஒரு தடித்த வளையல் போட்டு இருப்பாள்(!)...அது அடியாள்கள் போட்டு இருக்கும் வலயம் போன்று இருக்கும்...

எப்படியோ தின்னதற்க்கு பணத்தை கட்டிவிட்டு திரும்பி நடந்தோம்....

ஏன்டா...அர்னால்டு(!)...அந்தாளு உள்ள வச்சி கும்முறேன்ன உடனே மூஞ்சி எல்லாம் வெளிரிப்போச்சி....ஏன் இப்படி பயந்து சாகுற....- கீர்த்தி

ஏன் சொல்ல மாட்டே சண்டைன்னா பரவாயில்ல....தின்னதுக்கு துட்டு கொடுக்கலன்னா அவமானமா இல்ல...- நான்..

சரி விடு கெளம்புவோம் என்றாள் - மகா!

அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன்...அப்போது அந்த கம்யூட்டர் சென்டருக்கு அருகில் ஒரு நண்பனின் வீடு இருந்தது....அவன் பெரிய பணக்காரன்...ஆனால், வயதுக்கு தகுந்தாற்போல இல்லாமல் குழந்தை போல நடந்து கொள்வான்....அவன் அம்மா என்னிடம்....இவனை கொஞ்சம் பாத்துக்கப்பா இவனுக்கு உலகம் தெரியாது என்பாள்(!)....அதனால் நான் அவனுடன் நெருங்கிய நட்பு கொள்ள வேண்டி இருந்தது.....

ஒரு நாள் கிளாசில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தேன்....மாப்ள! என்ற குரல் கேட்டு திரும்பினேன்....அவன் நின்று கொண்டு இருந்தான்....

என்னடா...இன்னைக்கு கிளாசுக்கு வரலையா என்றேன்....


அவன் முகத்தில் ஒரு குரூர புன்னகை மின்னியது....ஒன்றும் புரியாமல் விழித்தேன்..அவனே பேசினான்...

வீட்டுக்கு வா....என்னை எல்லோரும் ஒன்னுத்துக்கும் உதவாதவன்னு சொன்னாங்களே நான் என்னெல்லாம் செய்ஞ்சிருக்கேன்னு காமிக்கிறேன் வா என்றான்!....


சரி என்ன பெரிசா செய்ஞ்சி இருக்கப்போறான்னு நெனச்சி கிளம்பி சென்றேன் அவன் வீட்டுக்கு!...அவன் வீடு அந்த பணக்காரர்களின் தெருவில் மின்னியது!....அதுவும் அவனின் தாய், தந்தை இருவரும் மருத்துவர்கள்....அவனின் பெரிய தந்தை பிரபல வக்கீல்!....அந்த வீட்டுக்கு சற்றும் சம்பந்த மில்லாத இந்த கருப்பு உருவத்தை அவன் அடிக்கடி அழைத்து செல்வது...அவன் தாயை தவிர யாருக்கும் பிடிப்பதில்லை...

அவனின் வற்புறுத்தல் காரணமாகவே நான் அங்கு வந்து சென்று கொண்டு இருந்தேன்!...அது ஒரு பெரிய கூட்டு குடும்பம்!


வீட்டுக்கு வந்த உடன் அவனை பார்த்து கேட்டேன்...என்னடா அப்படி செய்ஞ்சி கிழிச்சிட்டே இன்னைக்கு என்றேன்...அவன் அந்த அகல டிவி யில் அந்த காட்சிகளை வீடியோ டேபேரிக்காடரின் துணை கொண்டு ஓட விட்டான்...அதில் நான் கண்ட காட்சி.....என்னை அப்படியே உறைய வைத்தது...


அந்தக்காட்சியை பார்த்ததும் உறைந்து போனேன்....அந்த காட்சியில் இவனின் சித்தி(இவர்களும் ஒரு வக்கீல்!) இவனுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ந்து விட்டேன்....

ஏன்டா...இதெல்லாம் நல்லதா...இப்படி நடந்து கிட்டு இருக்கியே என்றேன்...


இதுக்கே இப்படி சொல்றியே இன்னும் கொஞ்சம் முன்னோக்கி(forward!) செய்யிறேன் பாரு என்று....மீண்டும் காட்சிகளை ஓட விட்டான்....பார்த்தால் அந்த சித்தியின் மகள் இவனுடன் அந்தக்காட்சியில்(!) இருக்கிறாள்....இதற்கும் அவளுக்கு இன்னும் இரு மாதங்களில் திருமணம் நடக்க இருக்கிறது(அப்போது!)....


என்னால் எதுவும் பேச முடிய வில்லை....வாயடைத்து போனேன்...பணக்கார குடும்பம் வெளி வேஷம்...தாங்கள் பெரிய இது என்று நினைத்து கொண்டு நான் வந்து சென்ற இடத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி தங்கள் குலத்தை(!) உயர்த்தி காட்டிக்கொள்ளும் செயல் என் கண்முன் வந்து சென்றது.....அந்த இரு பெண்களின் மேல் ஒரு வித அருவருப்பு தோன்றியது....


டேய்...என்னடா அவங்க தான் அப்படி நடந்து கிட்டாங்க நீ ஏன்டா அப்படி நடந்து கிட்ட - கேட்டது நான்!


ஏன்டா பெண்கள் அவங்களுக்கே கூச்சமில்ல என்ன வலுக்கட்டாயமா அவங்க ரூமுக்கு வரவச்சி தனி தனியா இப்படி நடந்துக்கிட்டாங்க...- என்றான் அவன்!


அது சரி இந்த கருமத்த எல்லாம் எப்படி வீடியோ பண்ணி வச்சிருக்க என்றேன்...


இதையும் அவர்கள் விருப்பத்துடன் தனி ரூமில் செட் செய்து விட்டு இருக்கின்றனர் என்பதை சுட்டி காட்டினான்....

டேய்....இவங்கல்லாம் பொம்பளைங்களா இல்ல உடல் வெறியர்களா என்றேன்!


நீ என்னமோ தப்புங்கறியே....தப்பா இருந்த அவங்க ஏன் இப்படி செய்ய சொல்லி என்ன வர்ப்புருத்துனாங்க சொல்லு என்றான்!......


எனக்கு பீதியாகிவிட்டது(பேதியல்ல!)......இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் இந்த காம குடும்பத்தில் நான் எதோ கையடக்க அடிமையாகி விடுவது போன்று தோன்றியது.....


டேய் ராஜா...நான் எதோ உங்க வீட்டுக்கு வர்றது சும்மா பொழுது போக்கத்தான்...அய்யயோ இந்த நிலமையில இருக்கா இந்த வீடு உட்ரா சாமி....என்றே எடுத்தேன் ஓட்டத்தை...


கொசுறு: இன்று இவன் ஒரு கம்பனிக்கு முதலாளி....அந்த பெண் ஒரு பெரிய வக்கீல்...இரண்டு பிள்ளைகளுக்கு தாய் அவள்....!.....என்னத்த சொல்ல....இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் நண்பர்களே!


தொடரும்.....

கொசுறு: இது பீலா கதைகள் அல்ல!....சந்திக்க(!) கூடாத விஷயங்களை அதிகமாக சந்தித்த ஒரு மாக்கானின் பார்வையின் பிரதிபலிப்பு!...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, July 22, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 22.7.2011

வணக்கம் நண்பர்களே....


சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...தெரிஞ்சும் தெரியாமா நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ!...

வாய்யா மானிட்டரு...எப்படிய்யா இருக்க!

மானிட்டர்: நல்லா இருக்கேன் நண்பா...ரொம்ப நாளா குடிக்கறுது இல்ல அதனால உடம்பு இப்போ நல்லா இருக்கு.....

குவா: பாட்டெல்லாம் அமக்கலப்படுதே என்னா விஷயம்.....

மானி: இப்போ நடக்குதே அதான் விஷயம்....

குவா: அப்படி என்னய்யா பெருசா நடந்து போச்சி....அதான் கூப்பாடு போட்டு எங்க தலீவன தூக்கி புட்டீங்க இல்ல...அப்புறம் என்ன இப்போ தேனாறு ஓடுதோ!...

மானிட்டர்: அதத்தான்யா சொல்ல வந்தேன்...மாமிக்கு பெரிய அவமானமா பூடுச்சாம்...அதனால இந்த படிப்பு மேட்டர மேல் கோர்ட்டுக்கு அனுப்பி இருக்காங்க...ஆனா அங்க பாரு...முதல்ல நோட்டு புக்க கொடுத்து புட்டு வைட் பண்ணு(!) அடுத்து என்ன பண்றதுன்னு யோசிச்சி சொல்லுரோம்னுட்டாங்க....

குவா: ஆமாம்யா....மூக்கு உடஞ்சி போச்சி...இப்போ என்ன பண்ணப்போறாங்களாம்...

மானிட்டர்: அதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்க நம்ம சனம் இருக்கு இல்ல....போக்கு காட்டிகிட்டே ரொம்ப நாள் இருக்க முடியாது...பாப்போம்!..

குவா: என்னதான் அடி பட்டாலும்.....அஞ்சில வளையாதது ஐநூறுல கூட வளயாதுய்யா....சரி அப்படி என்னதான் மேட்டர்..

மானிட்டர்: அதாவது....ஒரு ஆளு என்னடான்னா மொழி விஷயத்த காட்டியே மக்களை கொலையா கொல்லுறான்....இன்னொரு பக்கம் என்னடான்னா.... நீங்க ஏன் படிச்சி பெரிய ஆளா வர்றீங்க....பணக்காரனும் நீயும் ஒண்ணா(!)....ஓட்டு போட மட்டும் தான் நீ வேணும்(!) அப்படின்னு நெனைக்கிற கூட்டம்!....நல்லது நடக்கும்னு நம்புவோம்...மத்தியிலயும் கோர்ட்டு தான் நாட்ட ஆளுது...இங்கயும் ஆரம்பிச்சாச்சி...

குவா: ஆமா, என்ன கொடுமைய்யா....நம்ம சின்ன மேடத்துக்கு பெயிலே கொடுக்க மாட்டேங்குறாங்களே....


மானி: ஒரு வேல செக்குழுத்த செம்மலின்னு ஏதாவது விருது கொடுத்த அப்புறம்தான் வெளிய விடுவாங்களோ என்னமோ....ஆனா ஒன்னுய்யா....கஷ்டப்பட்டு உழைச்சி சாபிடுற நாம பெரிய சொகுசு வாழ வாழலைன்னாலும், தலைக்கு கை வச்சி நிம்மதியா தூங்குறோம்...இதுங்கள பாரு....கோடி கணக்குல ஆட்டைய போட்டு புட்டு அங்க போய் தூக்கம் வராம கஷ்டப்படுதுங்க....

குவா: இதுல இருந்து என்ன சொல்ல வர்ற....

மானி: ஒரு புடி சோறு தின்னாலும் சொந்த உழைப்புல துன்னனும்...இந்த மாதிரி அடுத்தவங்க உழைப்ப புடுங்கி தின்ன இப்படிதான் நடக்கும்னு சொல்லறேன்...

குவா: ரொம்ப தான் அட்வைசு பண்ண ஆரம்பிச்சிட்டே....அது சரி பாண்டியார் தேடி போலிஸ் சுத்துதாமே....

மானி: அந்த கதைய ஏன் கேக்குற...அந்தாளு கொஞ்ச நஞ்சமா நிலங்கள ஆட்டைய போட்டாரு...இப்போ அதான் மக்கள் அவருக்கு எதிரா புகார் கொடுத்து கிட்டு வர்றாங்க....தலை முதல் கால்வரை பிரச்சன தான்!....

குவா: ஆமாம்யா...மீனாட்சி ஊர்ல கூட....ப்ளெக்ஸ் பேனரோட ஆளுங்கள போலீஸ் சுத்தி சுத்தி புடிச்சி உள்ள போட்டு கிட்டு இருக்காமே.....

மானி: தென்னைய பெத்தா இளநீரு புள்ளைய பெத்தா கண்ணீருன்னு சும்மாவா சொன்னாங்க....நாமெல்லாம் ஒன்னு பெத்து புட்டு இவ்ளோ யோசிக்கிறோம்...அவரு ஊருக்கு ஒன்னு பெத்து வச்சி இருக்காரு எவ்ளோ யோசிக்கணும்!....

குவா: எவ்ளோ வாங்குனாலும் தாங்குறாரே.....

மானி: அடப்பாவமே உனக்கு தெரியாதாய்யா...அவரு இப்போ கைப்புள்ள மாதிரி...யாரு வேணா போட்டு தாக்குவாங்க...இதுல வேற குடும்பத்துக்குள்ள பெரிய குத்து வெட்டு நடக்குது...யாரு எப்போ யார பழி தீப்பாங்கன்னு தெரியாம...உடன் பருப்புக ச்சே உடன் பிறப்புகள் டாஸ்மாக்குல பந்தயம் கட்டிக்கிட்டு திரியிராங்கலாம்....

குவா: எங்கய்யா அந்த மானமுள்ள மனுசன காணோம்!

மானி: அவரு இப்போ அந்த டீவில குந்திகிட்டு சரியான பாதையில தான் புது இயந்திரம் போயிட்டு இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு!

குவா: ஆமா அந்த ப்ளாக் டைசன் தானே இப்போ எதிர் தலைவரு...என்னய்யா பேச்சையே காணோம்!..

மானி: எங்க பேசுனா...போனமுறை உங்க தலீவருக்கு ஆனாப்போல தூக்கிட்டு பூடுவாங்கலோன்னு பயந்திட்டாரு போல!...

குவா: இது வேறயா.....அம்புட்டு பிரச்சனையா!...சரி விடு நமக்கெதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு...சரிய்யா சினிமா விஷயம் சொல்லு...........

டவுட்டு: தாண்டவக்கோனே படம் பட்டய கிளப்புமாமே!

நெசம்: ஆமாம் மக்களே...பாலா படம்போல இருக்குமாம்...(லேட்டஸ்ட் "லா" போல இல்லையாம் ஹிஹி!)

டவுட்டு : "லா" படம்னா துணி இல்லாம நடிப்பேன்னு "ஷால்" சொல்லி இருக்காராமே!

நெசம்: ஆமாமா....விட்ட இடத்த புடிசிட்டாறு இல்ல அப்படித்தான் சொல்லணும்!

டவுட்டு: சமீபத்துல சீயான் நடிப்புக்கு மத்திய அவார்டு கிடைக்குமாம்!

நெசம்: ஆனா அதுல அப்படியே அந்த வெளிநாட்டு நடிகர காப்பி அடிச்சி இருக்காராமே....அப்போ அந்த நடிகருக்கு இங்க விருது குடுப்பாங்களோ!

செய்தி: கல்வி விசயத்துல பொறுப்புடன் இருக்க வேண்டும் - மன்றம்

பன்ச்: யானை இன்னுமொரு தரம் சறுக்குமோ!

ஆரோக்கியசாமி சொல்றாரு:

செலரின்னு ஒரு கீரை வகை இருக்கு...இது ரத்த அழுத்தத்தை சரியாக்கும் கீரை...இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால்....உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் சம்மந்தப்பட்ட விஷயங்கள் அடியோடு சரியாகும்....

இந்த வார தத்துவம்:

                                     ( தேடல் இருக்கும் வரையே வாழ்கை )
இந்திய தில்லு:வியட்நாமிய தில்லு:கொசுறு: ஏன் என்ற கேள்வி...இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை!...நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை!..
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment