Followers

Wednesday, August 31, 2011

இந்த AD எல்லாம் பார்த்து இருக்கீங்களா...!

வணக்கம் நண்பர்களே.....


இந்த விளம்பரங்களை பார்த்து இருக்கீங்களா.....

இறுதியாக.....


கொசுறு: சந்தோசமா மக்களே...ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஞாபகம் இருக்கா நண்பர்களே....Non Stop Non Sense!

வணக்கம் நண்பர்களே...

இந்த காமடிகள் ஒரு காலத்தில் DD சானலில் கலக்கிக்கொண்டு இருந்தன...அவற்றில் சிறு துளி உங்கள் பார்வைக்கு...


இதையும் பாருங்க.....


கொசுறு: என்ன நண்பர்களே பழைய ஞாபகங்கள் வந்ததா ஹிஹி....வர்ட்டா...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

குட்டிச்சுவர் பாகம் - 6

வணக்கம் நண்பர்களே...


முந்தய பாகங்களுக்கு...சுவர் புராணம் (5)

குட்டிச்சுவர் தொடர்கிறது....

அப்பா: என்ன சார் என்ன தான் ஆச்சி....

போலீஸ் Head: அய்யா கூட்டி வர சொன்னாருங்க....விஷயம் எதுவும் சொல்லல....

அப்பா: டேய் உன்ன தேடி போலீஸ் வந்து இருக்கு...என் வாழ்கைல இன்னும் என்னல்லாம் பாக்க வேண்டி இருக்கோ தெரியல....

டிங்கு: ஒன்னும் பிரச்சனையில்ல போய் என்னன்னு கேட்டுட்டு வர்றேன்...இருங்க....

அப்பா: நான் வேணா வரட்டுங்களா ஏட்டய்யா....

போலீஸ் Head: வேணாமுங்க....அவரு தம்பிய மட்டும் தான் கூட்டி வர சொன்னாரு....

அப்பா: சரிங்க....

(போலீஸ் ஸ்டேஷனில்...இன்ஸ்பெக்டர் பேச ஆரம்பித்தார்)


போலீஸ்: டிங்கு நீங்க கொடுத்த information கரெக்ட் தான்...அந்த இடத்துல யாரையோ அடைச்சி வச்சிருந்தாங்க போல....நான் போறதுக்குள்ள தப்பிட்டாங்க...இன்னொரு விஷயம் என்னை Transfer பண்ணி இருக்காங்க...இனி நீங்க ஜாக்கரதையா இருங்க...நீங்க ஒரு போலீஸ் informer அப்படிங்கற விஷயம் வெளிய தெரிஞ்சா உங்களுக்கு நல்லது இல்ல...

டிங்கு: நான் பாத்துக்கறேன் சார்....

போலீஸ்: இன்னொரு விஷயம் அந்த பேங்க் மேனஜர் கிட்ட ஏதாவது பிரச்சனையா....அவரு உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க ட்ரை பண்ணாரு...இரவு நேரத்துல அவர நீங்களும் உங்க நண்பர்களும் போய் மிரட்டுனதா....Any problem...ஏன்னா நான் அந்த விஷயத்த சீரியசா எடுக்காம உங்கள கூப்பிட்டு warn பண்றதா சொல்லிட்டேன்...

டிங்கு: அது ஒரு லோன் பிரச்சன சார்...அவரு ரொம்ப யோக்கியஸ்தன் ஹிஹி!


போலீஸ்: சரி நீங்க ஜாக்கரதையா இருங்க அந்த சாராய கோஷ்டி மறுபடியும் பெயில்ல வந்துட்டான்....அடுத்து எனக்கும் உங்களுக்கும் தான் குறி வைப்பான்...எதுக்கும் தயாரா இருக்கணும்....சாயந்தரதுல வெளி இடங்களுக்கு போகாதீங்க....

டிங்கு: சரி சார்....நான் வரேன்....

(வெளியே நண்பர்கள் வந்திருந்தனர்....)

பங்கு: ஏன்டா ஒன்னும் பிரச்சன இல்லையே.....நான் மீனா வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லவா....

டிங்கு: ஒன்னும் இல்ல வீட்ல பயப்படவேணாம்னு மீனுக்கு போன்ல சொல்லிடுங்க நாம போவோம்....

பங்கு: அம்மா உன்னைய அந்த சிவலிங்க சாமி கோயிலுக்கு போயிட்டு அப்புறமா வீட்டுக்கு வர சொன்னாங்க....

டிங்கு: சரி...வாங்கடா போவோம்...மனசு சரி இல்ல...அந்த அமைதியான இடம் இந்த நேரத்துல தேவைதான்....

(நேரம் மாலை 6 மணியைத்தாண்டியது...நண்பர்கள் கிளம்பினர்!)

டங்கு: மாப்ள நீயும் பங்குவும் அந்த பைக்குல வந்துருங்க...நாங்க முதல்ல கெளம்பறோம்....

டிங்கு: சர்ரா....கோயில் தர்மகர்த்தா பையன் வரான்...ஒரு தாங்க்ஸ் சொல்லிட்டு வரேன் நீங்க முன்னாடி போங்க....

(அந்த நண்பனைப்பார்த்து நன்றி தெரிவித்து விட்டு இருவர் பைக்கில் கிளம்பினர்...வரும் வழியில் திடீரென்று ஒரு வெள்ளை மாருதி வேன் வந்து நின்றது...அதில் இருந்து நாலு தடியர்கள் கையில் பட்டா கத்திகளுடன் இறங்கினர்!....அதில் ஒருவன்....)


தடி குரல்: டேய் என்னையா ஜெயுளுக்கு அனுப்பற...உன்ன இன்னைக்கு கொல்லாம விடமாட்டேண்டா.....என்றான்...

பங்கு: மாப்ள வண்டிய திருப்பு மாந்தோப்பு வழியா போ.....

(வண்டியை அவசர கதியில் திருப்பி கொண்டு விரைவு படுத்தினர் நண்பர்கள்...சர்ரென்று...இன்னொரு சிகப்பு மாருதி வந்து நண்பர்கள் வந்த பைக்கை இடித்தது....இருவரும் சில நொடிகள் அந்தரத்தில் பறந்து பல அடிதூரம் போய் விழுந்தனர்!)

தடி குரல்: டேய் முடிஞ்சா இன்னைக்கு உசுரோட போங்கடா...பாப்போம் என்று சொல்லிக்கொண்டே அவன் வீசிய அருவா பங்குவின் கையை பதம் பார்த்தது...

(அம்மா என்று கத்திக்கொண்டே சரிந்தான் பங்கு...அதுவரை தங்களை காப்பற்றி கொள்ள ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்த டிங்கு....கீழே விழுந்த அருவாளை கையில் எடுத்தான்....தன்னையும் தன்னை நம்பி வந்திருந்த நண்பனின் உயிரும் மட்டுமே இப்போது அவனுக்கு கண்ணுக்கு முன் வந்து நின்றன....!)

டிங்கு: எலேய்...என்னைய பாத்தா உங்களுக்கு பயந்து ஓடுற நாய் போல இருக்கா....வெடக்காளி வாங்கடா இன்னிக்கி எத்தன பேரு உசுரோட திரும்ப போறீங்கன்னு பாக்குறேன்....


விசுக் விசுக்கென்று அருவாள்கள் மோத ஆரம்பித்த சில நிமிடங்களில் டிங்கு அணித்திருந்த சட்டை முழுக்க ரத்தக்கறை...அவனிடம் மோதியவர்களில் பலரும் ஓட்டமெடுத்து ஓடிக்கொண்டு இருந்தனர்..ஒருவனைத்தவிர....

தொடரும்.....

கொசுறு: உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே...உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே....!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, August 30, 2011

சீரியஸ் Vs காமடி! பதிவர்களின் கவனத்திற்கு....(!?)

வணக்கம் நண்பர்களே....

இந்தப்பதிவு எல்லா உள்குத்துகளுடன் எழுதப்படுகிறது(!) என்பதை முதலில் தெளிவாக உங்களுக்கு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன்....அதனால யாரும் நான்தானா அதுன்னு தோணிச்சின்னா சரக்கடிக்கரவங்க ஒரு கல்ப் அதிகமா அடிசிக்கவும்(!)....அந்தப்பழக்கம் இல்லாதவங்க ஒரு புடி சோறு அதிகமா சாப்பிடவும்(!) தண்ணி சேத்துக்காம...

இப்படியெல்லாம் நான் சொல்வேன் கும்மலாம்னு நெனைக்காதீங்க ஹிஹி!....இது அப்பழுக்கற்ற(!) ஒரு மனசாட்சியின் குரல் அவ்வளவே!

ஆரம்பிப்போமா.......

முதல்ல இந்த சீரியஸ் அண்ட் சிரியஸ் பதிவர்கள்னா என்ன ?


உலக அரசியல்ல இருந்து உள்ளூரு கிழவி வரை புட்டு புட்டு வச்சிட்டு அதை ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்குறது...அப்புறம் அது என்னாது அது....ஆங் ....பொறுப்பு அப்படிங்கற விஷயத்த யாருமே உணரலன்னு குய்யோ முய்யோன்னு கத்துறது...இதெல்லாம் விட....சொல்ல வந்த விஷயத்த பல எடுத்துக்காட்டுகளுடன் சொல்லுறது இப்படி பல இத்தியாதிகளை கொண்டவர்களே இந்த "சீரியஸ்"பேருக்கு சொந்த மானவங்க(!)....இவங்க சில நேரம் சீரியஸா சொல்றாங்களா காமடியா சொல்றாங்களான்னு புரியாம மண்டைய பிச்சிக்கிட்டா அதுக்கு இவங்க பொறுப்பல்ல....

காமடி பதிவர்கள்னு பேர வச்சிக்கிட்டு இவங்க பண்றது இருக்கே யம்மாடி...சீரியசான விஷயத்த டாபிக்கா போட்டுக்கிட்டு அதுல மொத்த உலகத்தையும் போட்டு கும்மிடுறாங்க...கேட்டா நாங்க உன்னைய சொல்லல போய்யா போய் பொழப்ப பாரு(!) அப்படின்னு திருப்பி வேற விடுறாங்க....


இதுக்கு நடுவுல என்னைய போல(நீ பதிவனா...நீ போடுறது பதிவா...நெஞ்சுல கைய வச்சி சொல்லு!) காமடியும் இல்லாம சீரியசும் இல்லாம தனக்கும் புரியாம(!) ஊருக்கும் புரியாம பதிவு போடுறவங்களும்(உண்மைய ஒத்துக்கனும்ல!) இங்க இருக்காங்க.....

எப்படிப்பட்ட பதிவுகள் போடலாம்...?

இந்த கேள்வியே முதல்ல தப்புன்னு சொல்லுவேன்...ஏன்னா எங்க இஷ்டத்துக்கு வாழத்தான் முடியல(!)....பதிவுங்கர இடத்துலயாவது கொட்டலாம்னு தான் இங்க வர்றோம்...இங்க வந்தா...இத போடாத இது தப்பு...அது தப்பு இத மாத்து அத மாத்துன்னு....ஓசில கொடுத்த கூகுல்காரனே சிவனேன்னு கெடக்குறான்...ஏன்யா ஏன்?

உலகத்துக்கு புரோசனமா(!) எழுத முடியுமா?

ஸ் ஸ் ஸ் முடியல, முடியல....அது என்னாது உலகத்துக்கு புரோசனமா(!) எழுதறது.....தன்னை மறந்து சிரிக்க வைக்கிற எழுத்து பலம் தான் நல்ல பல மனங்களை சந்தோஷப்படுத்தும் அப்படின்னு யாரோ சொன்னதா நெனைக்கறேன்(!)...அந்த எழுத்து முடிஞ்சவரைக்கும் ஆபாசம் இல்லாம இருந்தா அதுவே போதும்....

நீ எழுதறது எதுக்கு?

யாருக்கோ இல்ல ஒரு சாந்திக்குதான்(மன சாந்திப்பா!).....

கில்மா பதிவர்கள்ன்னா என்னா..?


உண்மையில் வீட்ல அப்புரானிங்க(!) இவங்க எதையும் ஓபனா(அங்க!) சொல்ல முடியாம இங்க வந்து கொட்றாங்க...இதுக்கு எதிர்ப்புகள் வர்றது எப்படி இருக்குன்னா....இந்தப்பதிவுகள் குப்புற படுத்து படிச்சி புட்டு குய்யோ முய்யோன்னு கத்தராப்போல இருக்கு...நமக்கு ஒருத்தரோட பதிவு புடிக்கலையா ஒதுங்கிட்டா பிரச்சினையே இல்ல..(அவங்களுக்கும்!)..

பெண் பதிவர்களுக்கு ஏதேனும் வரையறை இருக்கா?

என்னை பொறுத்தவரை....வெளிப்படையா பேசுரறது நல்லது.....யாரும் பெண், ஆண் என்ற பேதத்துடன் அணுகாம நண்பர்கள் என்று அணுகினால் மனஸ்தாபத்துக்கு ஆளாகவேண்டியதில்ல....

சொந்த கத சோகக்கத..........

இது தான் இங்க அதிகமா ஓடுது...ஏன்னா சினிமாவ விட அடுத்தவங்க வாழ்கைல நடந்த சுவாரஸ்யங்களே அதிக விருப்பத்தை உண்டாக்குகின்றன.....


இன்னும் உங்க மனசுல இருக்க கேள்விகள கொட்டுங்கப்பா...மனசு லேசாயிரும்......


தொடரும்....(@#@#@##)..இல்ல இல்ல தொடரலீங்க விட்ருங்க....

கொசுறு: இது ஒரு மனசாட்சியின் குரலே...இத வச்சிக்கிட்டு யாரவது அரசியல் செய்ய வந்தீங்க ஹிஹி ஒன்னும் சொல்றதுக்கில்ல...!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ரம்ஜான் நாளில் ஒரு இனிய அறிவிப்பு ஜெக்கு நன்றி!

வணக்கம் நண்பர்களே....


தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த குரலுக்கு இசைந்து மூவரின் தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டி மாண்பு மிகு அம்மா அவர்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்....அதற்க்கு அனைத்து வித கட்சினரும் ஆதரவு தந்தது மனதுக்கு அமைதி அளிக்கிறது.....

அம்மூவரின் குடும்பத்தாருக்கு எம் வாழ்த்துக்கள்....விரைவில் அவர்தம் உறவுகளை பற்ற ஆண்டவன் அருள் எங்கும் பொங்கும் என்ற வாழ்த்துடன்....

நண்பர்களே...நல்லது நடக்கும் என்ற நம்பிக்கைக்கு.....முதல் வெற்றி....

நல்ல நாளில் நல்ல முடிவெடுத்த முதல்வருக்கும்....இதனை எடுக்கசெய்த தமிழ் மக்களுக்கும் எம் நன்றிகள்....

ஜெய்ஹிந்த்...

இது ஒரு சந்தோஷமே...திரட்டிகளில் இணைக்க வேண்டாம் என்று நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்..நன்றி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

குட்டிச்சுவர் - பாகம் 5

வணக்கம் நண்பர்களே...


முந்தய பாகங்களுக்கு சுவர் புராணம் (5)

தொடர்கிறது....குட்டிச்சுவர்....

டிங்கு: அந்த மேனஜரு ஒரு லட்சம் கொடுங்கராறு.....அப்பத்தான் நடக்கும்னு சொல்றாரு..என்னத்த பண்றது....

அப்பா: அதான் சொன்னேன்...உன்னோட ராசிப்படி இப்போ 7 1/2 சனி நடக்குது...இப்போ நீ எடுக்குற காரியம் எல்லாம் தடைப்ப்படும்டா...அதனால நான் சொல்றத கேளு....ஒரு வேலை வந்து இருக்கு...நம்ம சொந்தக்காரரு ஒருத்தரு Scrap இருக்குல்ல அந்த கோடவுன் வச்சி இருக்காரு...அதுல எதோ நெறைய வேலைங்க நடக்குதான்....கொஞ்சம் போய் பாத்துக்க...நல்ல சம்பளம் போட்டு கொடுக்கறேன்னு சொல்றாரு....


டிங்கு: இல்லப்பா...இதுல எல்லாம் எனக்கு நம்பிக்க இல்ல...இந்த முறை கண்டிப்பா எனக்கு லோன் கெடச்சிடும்.....அத வச்சி நான் முன்னேறி காட்டுறேன்...ஒரு வாரம் டைம் கொடுங்க....இல்லன்னா நீங்க சொல்றபடி செய்யிறேன்....

அப்பா: சரி...

(வெளியில் வந்தவுடன்...அந்த குட்டிசுவற்றின் மேல் போய் உற்க்காந்தான்!....)

டங்கு: என்னடா ஆச்சி...இவ்ளோ சோகமா இருக்கே.....

டிங்கு: இல்லடா மாப்ள இன்னைக்கு அந்த மேனஜரே மீட் பண்ணி ரெண்டுல ஒன்னு கேட்ருவோம்....


மீனா: டேய் தடி தாண்டவராயா.....

டிங்கு: என்ன மீனா நீயும் கலாய்க்கற....

மீனா: இல்லடா சும்மாத்தான்....எங்க அப்பா சொன்னாரு வேணும்னா எங்க வீட்டோட document கொடுத்து பாக்கலாம்னு சொல்றாரு....

டிங்கு: அதெல்லாம் வேணாம்....

மீனா: நீ சும்மா இரு....நாங்கல்லாம் இருக்கோம்....

(மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோற்று கடைசியில் அவருடைய வீட்டில் காத்திருந்து நள்ளிரவு 1 மணிக்கு அந்த மேலாளரை சந்த்தித்து கேட்ட போது...!)


மேலாளர்: இத பாருங்கப்பா....வெளிப்படயா சொல்றேன்....துட்டு கொடுக்காம நீ என்னதான் கியாரண்டி கொண்டாந்தாலும் இது நடக்காது....வேணும்னா ஒரு கவர்மென்ட் ஆபீசர ஜவாப் கொண்டா பாக்கலாம்!)

டங்கு: மாப்ள இது ஒன்னும் நடக்கறாப்போல தெரியல...


டிங்கு: ஸ் ஸ் நான் படிச்ச படிப்புக்கில்லாத மரியாத இந்த துட்டுக்கு இருக்கேடா...அதானடா கேவலமா இருக்கு....

டங்கு: சரி விடு போலாம்....

டிங்கு: நீங்க போங்க நான் அப்பறமா வரேன்.....

டங்கு: அடச்சீ வா...நீ இங்க இருந்தா என்ன பண்ணுவேன்னு எங்களுக்கு தெரியும் வா போலாம்....

டிங்கு: இல்லடா எனக்கு மனசு சரி இல்ல...நம்ம என்ன தப்பு செஞ்சோம்....மவனே இனி இவன் வேலைக்கே போகக்கூடாதுடா.....

டங்கு: சரி வா நாளைக்கு பாத்துக்கலாம்....

(காலையில் போலீஸ் வீட்டின் வாசலில் நிற்கிறது....)


அப்பா: என்னங்க ஏட்டைய்யா...இந்தப்பக்கம்.....

போலீஸ்: உங்க பையன கூப்பிடுங்க.....அய்யா கூட்டிட்டு வர சொன்னாரு....

தொடரும்......

கொசுறு: வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளயாடப்போகும்போது சொல்லிவைப்பாங்க.....உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, August 29, 2011

இப்போ என்ன செய்வது....மக்களே...!

வணக்கம் நண்பர்களே....


தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் மனு ஏற்கனவே குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட நிலையில்....மாண்பு மிகு அம்மாவும்(!) இந்த விஷயத்தில் தம்மால் தலையிட முடியாது என்று கூறிவிட்டத்தாக செய்தி வெளியாயிருக்கிறது.....

பல பெரிய தலைகளை காப்பாற்ற கதறும் சட்டம்(!) எம் சகோதரர்களுக்கான வாயிலை ஏன் திறக்க மறுக்கிறது...என்ன செய்வது யாரிடம் புலம்புவது என்று அறியாத காரணத்தால் இடப்பட்ட பதிவு இது....

சகோதர்களே...இனி என்ன செய்வது....யாரிடம் முறையிடுவது......புரியவில்லை உங்கள் கருத்துக்களை முடிந்தால் பகிரவும்.....

யாரும் இந்தப்பதிவை எந்த பட்டையிலும் இணைக்க வேண்டாம்....நன்றி...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Vegetarian கட்டிக்கிட்டவங்க என்ன பண்றது....!

வணக்கம் நண்பர்களே....


இந்தப்பதிவுக்கு வந்தவங்க பொதுவா கருத்துக்களை சொல்லவும்....அதை விடுத்து தனிப்பட்ட(ஹிஹி!) விமர்சங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...(அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்...அப்புறம் உங்க இஷ்டம் மீ பாவம்!)....

திருமணம் என்பதே இருமனங்களின் சங்கமம்(மனசாட்சி - அடடே! ஸ் அபா!)...அப்பேர்ப்பட்ட வைபவத்திற்கு முன் மணமக்கள் பிடித்தது, பிடிக்காதது(ஆமாண்டா வெந்தது வேகாதது!) பற்றி தெளிவாக பேசிக்கொள்வதில்லை(!)...அல்லது திருமணம் முடிந்த பின் இந்த சின்ன விஷயத்தை பெரிது படுத்தலாமா(எது!) என்று நினைத்து....விட்டு விடுவதில்லை....(பயபுள்ள அந்த நடிகனே பரவாயில்ல போல ஒன்னும் புரியல!)


அதாவது உணவு விஷயம் - திருமணத்துக்கு முன் சைவ உணவு உண்போர், மற்றும் அசைவ உணவு உண்போர் தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்(!)....சாதாரண விஷயம் என்று எண்ணினாலும் அந்த விஷயம் தான் பூத(!) கரமாக வெளிக்கிளம்புகிறது....அதுவும் இந்த மாமிச பட்சினிகள்(சரியாதான் பேசுரனா!) தங்கள் நாவை அடக்க முடியாமல் திணறுகிறார்கள்(!)....


இதற்க்கு சைவ ஆட்கள் கொடுக்கும் கமன்ட் இருக்கிறதே யப்பா முடியல....

மூக்கை மூடிக்கொள்ளுதல்....

முகத்தை அஷ்ட கோணத்தில் காட்டுதல்....


போன ஜென்மத்துல சூரனா பொறந்திருப்பியோ(நோ நோ நோ பேடு வேர்ட்ஸ்!)

இறந்த ஜந்துக்களை(!) தின்றது எவ்வளவு பாவம் தெரியுமா....

ஒரு உசுர கொல்றது பாவம்.....

இதற்க்கு அசைவ ஆட்களின் எதிர் கருத்துக்கள்.....(ஹிஹி!)

பால்(Milk!) கூடத்தான் மாட்டின் ரத்தம்....

தாவரங்களை சாபிடுறது கூடத்தான் உசுர கொல்றது(!)....அதுக்கும் வாயிருந்தா கத்தத்தான் செய்யும்....

நாங்களே சமச்சி நாங்களே சாப்டுக்குவோம்(வேறவழி!)...அந்தப்பக்கமா வந்துராதீங்க..


இப்பேர்ப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எப்படி மட்டுபடுத்தறது.....(பதிவர்களே கமன்ட் மட்டுறுத்த வழி வச்சிருக்கீங்கல்ல!) முடிஞ்சா உங்க கருத்துக்கள சொல்லிட்டு போங்க....

கொசுறு: வீட்ல வாங்குனத என்னமா சமாளிக்கரான்னு கமன்ட் போடுதல் வீரர்களுக்கு அழகல்ல(ஹிஹி!) 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

குட்டிச்சுவர் - பாகம் - 4

வணக்கம் நண்பர்களே...


தொடர்கிறது........

முந்தய பாகங்களுக்கு - சுவர் புராணம் (4)


டிங்கு: போலீசுக்கு உதவரத்துக்காக இரவு நேரத்துல ரோந்து போக மன்றத்துல(!) இருந்து ஆள் கேட்டு இருந்தாங்க....அதுக்கு போறேன்....குடியிருப்போர் சங்கத்துல இருந்து பணம் கலெக்ட் பண்ணி கொடுப்பாங்க....அதுல இருந்து வேலை கிடைக்கற வரைக்கும் இந்தப்பணம் வீட்டுக்கு உதவியா இருக்கும்னு நெனச்சேன்....


அப்பா: வீட்டுக்கு உதவறது சரி....நேத்து நைட்டு எங்க தூங்குனே ஞாபகம் இருக்கா.....

டிங்கு: ஏன்?

அம்மா: என்னங்க....அப்படி எங்க போயிட்டான்....

அப்பா: சுடுகாட்டுல படுத்து தூங்குராண்டி.....வெட்டியான் சொன்னான்....அந்த கொடுமைய.......

அம்மா: ஏன்டா உம்புத்தி இப்படிப்போகுது....


டிங்கு: இதுல என்ன தப்பு கடைசில அங்க தானே போகப்போறோம்....அதான் என்னதான் இருக்குன்னு தூங்கிப்பாத்தேன்....நல்லாத்தான் இருக்கு....அமைதியா எந்த காசு தொந்தரவும் இல்லாம......

அம்மா: டேய் நீ அந்தப்படிப்ப எடுத்து படிக்கும் போதே உங்கப்பாரு பயந்தாரு ...இவன் என்ன ஆகப்போரானொன்னு......

அப்பா: நீ ஏன்டா அவன அடிச்ச...

டிங்கு: நீங்க தேர்தல்ல நிக்க போறதா என்னைய கேட்டான்...நான் அதுக்கு "எங்கிட்ட ஏன் கேக்குற எங்கப்பாரு கிட்ட கேளுய்யான்னு சொன்னேன்" இது தப்பா....அவனோட ரவுடித்தனத்த காமிக்கப்பாத்தான்....என்னைய காப்பாத்திக்க அடிச்சேன்.....

அப்பா: நான் நிக்கறேன்னு இன்னும் சொல்லவே இல்லையே!...இதுக்கெல்லாம் காரணம் அந்த வாத்தியாரு பயலும்....அந்த அடிதடி வித்தைகளும் தானடா.....பாத்தில்ல அந்த பயல போலீசு காலு நரம்ப கட் பண்ணி முடவனா ஆக்கிடுச்சி...நான் படிச்சி படிச்சி சொன்னேன் அவன் கேக்கல.....இப்போ நடக்க முடியாம திரியிறான்......அவன பாத்தாவது உனக்கு அறிவு வர வேணாம்....அத விட்டு புட்டு அவனுக்கு எடுப்பு வேல செய்ஞ்சிட்டு திரியிற....

டிங்கு: அவருக்கு உதவிக்கு யாரும் இல்ல...நீங்க தானே கஷ்டப்படுறவங்களுக்கு உதவனும்னு சொல்வீங்க...இப்போ இப்படிப்பேசுறீங்க....அப்பா: அடேய் அது நல்லவங்களுக்கு....அவன் அந்த அளவுக்கு நல்லவன் இல்ல....இன்னிக்கும் அவன் தான் செய்ஞ்ச போக்கிரித்தனங்கள நெனச்சி வருந்துராப்போல தெரியல...எனக்கென்னமோ உன்னைய தயார் பண்றான்னு தோணுது....விட்ரு வேணாம்...அந்தப்பைய சகவாசமும் வேணாம் போலீசு சகவாசமும் வேணாம்...சொல்றத கேளு..

டிங்கு: இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படி பயந்து வாழ்வீங்க...தப்பு கண்ணு எதிர்க்க நடக்கும் போது தட்டிக்கேக்குரவண(!) ரவுடிங்கறீங்க.....அரசாங்கத்தால அனுப்பட்டவங்க கூடையும் சகவாசம் வேனாம்ங்கறீங்க...

அப்பா: அடேய் இது சினிமா இல்ல நிஜம்.....ஒரு முறை உனக்கு ஏதாவது நடந்துட்டா யாரு காப்பாத்த வருவா....நீ கத்து வச்சிருக்கியே குராத்தே(!) அது காப்பாத்துமா....


டிங்கு: அது கராத்தே.....நான் குழந்தை இல்ல எனக்கு எது சரி எது தப்புன்னு புரியுது...அதுப்படித்தான் செய்யிறேன்...உங்களுக்கு என்ன குடுமபத்துக்கு கெட்ட பேரு வரக்கூடாது அதுதானே....

அப்பா: இதெல்லாம் வக்கனையா பேசு....சொல்ற பேச்சை மட்டும் கேக்காதே....ஆமா அந்த பேங்கு கடன் கொடுக்கறான்னு சொன்னியே என்னாச்சி.....

டிங்கு: நான் சொல்லலியே...உங்களுக்கு எப்படித்தெரியும்....


அப்பா: அதான்டா அப்பேங்கறது...நீ எங்க போறே எங்க வரேன்னு எனக்கு நல்லாத்தெரியும்..


தொடரும்......

கொஸுரூ: அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு.....

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Sunday, August 28, 2011

சிரிப்பதுக்கு மட்டும் ஜெயம்!

வணக்கம் நண்பர்களே...

பாருங்க இந்த பாட்ட.....


இது பாட்டு.....


கொசுறு: ஆட்டமா தேரோட்டமா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கிச்சிளிக்காஸ் பாருங்கோ! - 28.8.11

வணக்கம் நண்பர்களே....


இத பாருங்கோ...


இப்படி தானே நாமளும் பஸ்சுல ஹிஹி.........


இந்த விளம்பரம் எப்பூடி ரகம்......கொசுறு: இன்று வீட்டில் சமையல் செய்யப்படுவதால்...ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Saturday, August 27, 2011

அம்மா இந்த கடுதாசி உங்களுக்குத்தான்!

வணக்கம் மாண்பு மிகு அம்மா.......

இதுவரை உங்களுக்கு பலர் மனு எழுதி இருப்பார்கள்...தங்கள் குறைகளை நிவர்த்திக்க வேண்டி கேட்டுக்கொண்டு இருப்பார்கள்...இந்தக்கடிதம் அந்த வகையை சார்ந்தது அல்ல....

இது எம் மக்கள் மூன்று பேருக்கு தூக்கில் இருந்து பிழைக்க வைக்க தங்களின் அனுமதி வேண்டி நிற்கும் பல லட்சம் மக்களில் ஒருவனால் எழுதப்படும் ஓர் கண்ணீர் கடிதம்....

இதுவரை தமிழ் மக்களை தன் குடும்பமாக எண்ணி வாழ்வதாக தாங்கள் கூறி இருப்பது இந்த தருணத்தில் நினைவு வருகிறது...எத்தனை இடர் வந்த போதும் எம் நலன் பார்க்காத தாத்தாவை நீக்கி உங்களை நாங்கள் கொண்டுவந்ததற்கு காரணம்...அவருக்கு தமிழ் குடும்பங்களை விட தம் குடும்பம் பெரிது என்பது எங்களுக்கு நாள் கழித்து தெரிந்ததால் தான்.....

இப்போது நீங்கள் நினைத்து பார்க்காத வண்ணம் தங்களை முழு பலத்துடன் ஆட்சி அமைக்க செய்தது...தங்களிடம் ஒரு நேரடித்தன்மை இருக்கிறது என்று நம்பியே....அதனை தாங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள்...

எம் சகோதர சகோதரிகள் துடிதுடித்து சாகும் போதும், எங்களால் எதுவும் செய்ய முடியாமல் தவித்த போதும் அதை சிறிதும் கண்டு கொள்ளாமல் தன் குடும்பத்துக்காக டெல்லி ஓடியவர்களை விட நீங்கள் எவ்வளவோ மேல் என்று நினைக்க நாங்கள் தவற வில்லை....


இப்போதைய நிலையில் இம்மூவரின் கடைசி நம்பிக்கை நீங்கள் ஒருவரே.....இதை புரிந்து செவி மடுக்க வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களில் ஒருவனின் கடுதாசி...மதிப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்!

நன்றி...

ஜெய் ஹிந்த்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பதிவரே என் பதிவுக்கு வரமுடியுமா...முடியாதா!!

வணக்கம் நண்பர்களே.......
இந்தப்பதிவை எழுத தூண்டிய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்....என்ன நண்பர்களே ஆரம்பிப்போமா...

இந்த தமிழ்மண விஷயம் ஆரம்பிச்சதுல இருந்தே...7 வது ஓட்டுக்கு ஆளா(!) பறக்கும்படி ஆயிடுச்சி(ஹிஹி நான் உற்படத்தான்!)..ஏன்னா அப்போத்தானே முதல் பக்கத்துல வர முடியும்.....


நான்(!) உற்பட எல்லா நண்பர்களுமே ஒரு வித பிடிமானத்துக்க்காகத்தான் பதிவுகளை இடுகிறோம்...இருந்தாலும் பய புள்ளைங்க ஒருத்தர் நம்ம பதிவுக்கு வந்து போய் இருக்காரே....அவருக்கு எம்புட்டு வேலை(!) மற்றும் நேர 
விரயம்(!௦ )தாண்டி வந்துட்டு போயிருக்காரு அப்படின்னு அவரு பதிவுக்கு வர்ரதில்லன்னு பெரிய விவாதமே நடக்குது(எங்க!)...

இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...


பதிவெழுத மேட்டர்(விஷயம்!) வேண்டி யோசிக்கும் மக்கள் இந்த அன்னா(அண்ணா அல்ல!) எழுதாம தவிர்த்து வந்ததையும் காண முடிஞ்சது....இந்த விஷயத்துல எதாவது போட்டு(எழுதி!) கெட்ட பெயர் வந்துருமோன்னு பயந்தவங்களையும் தெரிஞ்சிக்க நல்ல வாய்ப்பா அமைஞ்சது கடந்த 15 நாள்கள்(!).....


சரி விஷயத்துக்கு வரேன்(கொட்ட வேண்டியது கொட்டிட்டேன்!)....முடிஞ்ச வரை அடுத்தவர் பதிவுக்கு போயிட்டு அவங்க வரலன்னு அவச்தைப்படாதீங்க...அவங்களுக்கு பல இன்னல்கள் நடந்திருக்கலாம்...

நேரம் இல்லாம இருக்கலாம்

நெட் கட்டாயிட்டு இருக்கலாம்

ஒரு நாளைக்கு 100 பதிவுகளுக்கு போறதில மறந்து(!) இருக்கலாம்...

வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....

etc..........அதனால உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)

கொசுறு: இவை எனக்கு நானே கொட்டிக்கொண்ட கொட்டுக்கள்(அப்படியும் வச்சிக்கலாம்!)ஹிஹி!....குட்டிச்சுவர் தொடர் திங்கள் வரும் என்று தெரிவித்துகொள்கிறேன்(கொல்கிறேன்!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, August 26, 2011

அடப்பாவி இப்படியா சொதப்பறது....!

வணக்கம் நண்பர்களே......

இந்த விஷயத்த பாத்துட்டு உங்க ரிவைண்ட் வாழ்கைக்கு போயிட்டு வாங்க....


கொசுறு: எப்படி இருக்கு சொதப்பல்ஸ்...ஹிஹி!  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

குட்டிச்சுவர் - பாகம் 3

வணக்கம் நண்பர்களே.....


டங்கு: அப்படி சொல்லாதீங்க அண்ணே...ஏதாவது வழி சொல்லுங்க.....

பியூன்: அது ஒண்ணுதான் தம்பி வழி.....

டிங்கு: என்னடா பண்றது....

டங்கு: விடு மாப்ள பாத்துக்கலாம்......

டிங்கு: ஏன்னே லோன் வந்தப்புறம் அதுல இருந்து எடுத்துப்பாரோ.....

பியூன்: இல்ல தம்பி நீங்க முதல்ல அந்தப்பணத்த கொடுத்தாத்தான் லோனே கிடைக்கும்....புரியாத ஆளுங்களா இருக்கீங்களே....

டிங்கு: சரிண்ணே....

மீனா: டேய் அவன ஏன் முரசிட்டு நிக்கிறே.....வா போய் வேற வழி பார்ப்போம்....

(மீண்டும் குட்டிச்சுவர் அவர்களை வரவேற்றது......அதில் ஏறி மூன்று நண்பர்கள் இந்த விஷயத்தில் இருந்து எப்படி வெளிவருவது என்று யோசித்து கொண்டு இருந்தார்கள்....அப்போது!)

சாந்தி: டிங்கு...மகா போன் பண்ணி இருந்தா...உன்ன பாக்கணுமாம்....நான் உன்கிட்ட சொல்றேன்னு சொன்னேன்....


டிங்கு: அவளுக்கு வேற வேலையே கிடையாது.....

மாப்ள உனக்கு காதலோட மதிப்பே தெரியல....அவ இத்தன தடவை போன் பண்றாளே....ஏன் இப்படி அவளை கஷ்டப்படுத்துற.....ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்துடறது தானே.....

டிங்கு: முயற்சி பண்றேன்....

ஏய் தம்பி இங்க வா.....(குரல் வந்த திசையை பார்த்தார்கள்!)

டிங்கு: யார்ரா இந்த ஆளு....

டங்கு: மாப்ள இவருதாண்டா நிதி நம்ம வார்டு கவுன்சிலரு......

வார்டு: ஏய் உன்னத்தான்......

டிங்கு: சொல்லுங்க....என்ன விஷயம்....

வார்டு: டேய் பிச்சிடுவேன்....இறங்கி வந்து பதில் சொல்லு....

டிங்கு: யோவ் ஊரு காச தூக்கி பேக்கட்டுல போட்டு சுத்துற உனக்கெல்லாம் என்னத்துக்கு மரியாத.....மரியாத நாங்க தானா கொடுக்கணும்.....கேட்டு கொடுக்கக்கூடாது.....

வார்டு: அடிங்....(அடிக்க தன் பைக்கிலிருந்து இறங்கி வந்தார்!).....நான் யாரு தெரியுமாடா ஆளும் கட்சில என் செல்வாக்கு தெரியுமா...உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்...

டங்கு: அண்ணே....ஏன்னே டென்சன் ஆகுறீங்க...அவன் அப்படித்தான்..என்ன விஷயம் சொல்லுங்கண்ணே.....


வார்டு: எலேய் இவங்க அப்பன இந்த தேர்தல்ல எல்லாம் நிக்க வேணாம்னு சொல்லு.....மீறி நின்னா சொல்றதுக்கில்ல....எது வேணா நடக்கும்......

டிங்கு: ஹூம்....ஏன்யா இதான் விஷயமா....போய் பொழப்ப பாரு.....அது அவரோட சொந்த விஷயம்....வேணும்னா அவர்கிட்டயே போய் அத சொல்லு....அத விட்டுட்டு.....எங்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்கா....போய்யா...போ!

வார்டு: இவனுக்கு என்ன திமிரு....டேய் இவன நாலு சாத்து சாத்துனாத்தான் அடங்குவான் போல.....

டிங்கு: ஏய் போயிரு...ஏற்கனவே நான் கொலவெறில இருக்கேன்....

வார்டு: இதோடா...காமடி பண்ணிட்டு இருக்கான்

டங்கு: மாப்ள வேணாம்டா....4 பேரு இருக்கானுங்க....அதுவும் உள்ள சாமான்(கத்தி!) வச்சிருப்பானுங்க போல....சரின்னு சொல்லிடு பின்னாடி பாத்துக்கலாம்....

(பேசிக்கொண்டு இருக்கும்போதே ஒருவன் ஓடி வந்து குத்த முயன்றான் முகத்தில்!)

சினிமா சண்டை போல இல்லாமல்...அந்த நிஜ சண்டை 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது....

வார்டு: டேய் எங்கள அடிச்சிட்ட இல்ல...உன்ன விட மாட்டோம்டா....(கூவிக்கொண்டே ஓடினான் அந்த அசிங்க வாதி(!)....

டிங்கு: எலேய்....வந்து இந்த பைக்குகள எடுத்துட்டு போங்கடா....அடப்பாவிகளா...என்னமா ஓட்றானுங்க.....

டங்கு: மாப்ள...எனக்கென்னமோ பயமா இருக்குடா....நம்ம அவசரப்பட்டுட்டமோன்னு....

டிங்கு: விட்ரா பாத்துக்கலாம்....


(வீட்டுக்குள் நிழைகிறான் டிங்கு....அப்பா அவனை பார்த்து.........)

அப்பா: டேய் தடிமாடு......உன்ன பெத்ததுக்கு ஒரு எருமைய பெத்து இருக்கலாம்..அதனலயாவது பலன் உண்டு.....இப்படி ஊரெல்லாம் ரவுடித்தனம் பண்ணி சண்ட போட்டுட்டு வர்றியே...நீயெல்லாம் என்னத்த தின்ற.....

அம்மா: ஏன்டா மரம் மாதிரி நிக்கற....கேக்குறாரு இல்ல பதில் சொல்லு....

டிங்கு: நான் இப்போ எது சொன்னாலும் நீங்க நம்ப போறது இல்ல....என் மனசாட்சிக்கு தெரியும் நான் செய்ஞ்சது தப்பு இல்லன்னு.....

அப்பா: கிழிச்சே.....உனக்கு கடவுள் மேலேயே நம்பிக்க கிடையாது....இதுல மனசாட்சிய பத்தி பேசுற....உன்னக்கு பின்னாடி ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்கேன்...அத கரை சேக்கணும்...

டிங்கு: கடவுள மனசுல நெனசிக்கிட்டா போதும்...கோயில் கோயிலா போய் கெஞ்சிட்டு இருக்க வேண்டியதில்ல....நான் என்ன பண்ணனும்.....நான்தான் என்னால இப்போதைக்கு முடிஞ்சது கொடுக்கரனே....அப்பா: நீ நைட்டானா எங்க போறே....மாசத்துக்கு 500 ரூவா எந்த வேலை செய்ஞ்சி கொடுக்கறேன்னு தெரியனும்....

தொடரும்.....

கொசுறு: தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment