Followers

Monday, January 31, 2011

சி சைடு(see side!) சூ சைடு(suicide) ஆகிப்போனதே-!?

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே -


நான் பிழைக்க வந்த நாட்டில் நான் ஒரு இந்தியன் என்பதாலேயே அதிகமாக மதிக்கப்படுகிறேன். அதற்க்கு காரணம் இந்தியர்கள் உதவும் குணம் அதிகமாக கொண்டவர்கள் என்றும் எதிரிக்கும் உணவு படைக்கும் குணம் கொண்டவர்கள் என்றும் இந்த மக்கள் என் இந்தியாவை நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

நான் எவ்வாறு இவர்களிடம் என் மனக்குறையை எடுத்து சொல்லுவேன்............என் நாடு என் மக்கள் மீதே மறைமுக போர் தொடுத்துக்கொண்டு இருக்கிறது. என்பதை. இந்தியனாகப்பிறந்ததை நினைத்து பெருமைப்படுவதா அன்றி தமிழனாக இந்தியாவில் பிறந்ததை எண்ணி வருந்துவதா!?

எதிரி நாடு எனும் பக்கத்து நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாலும் அவருக்கும் பல சுவை உணவு அளித்து அவர்களை பத்திரமாக திருப்பியனுப்பும் இந்தியாவா இது...............நம்ப முடியவில்லை...............என்றோ எவனோ தவறாக எடுத்த முடிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறதே................


குட்டித்தீவு ஆதி வாசிகள் என் மீனவ மக்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் போது எதிர்த்து குரல் கொடுக்க துப்பில்லாமல் இருக்கும் என் இக்கால முதல்வனை நினைத்து பெருமைப்படுவதா...........அல்லது ஒன்னுத்துக்கும் உதவாமல் தலையாட்டி பொம்மை கணக்கா ஆமாம் சாமி போடும் என் பிரதமனை நினைத்து கவலைப்படுவதா..............

ஒரு காலத்தில் நிலமும் நிலம் சார்ந்த இடத்தையும் நினைத்து பெருமைப்பட்ட நான் இன்று அம்மக்களின் வாழ்க்கை நிலையை நினைத்து வருத்தப்பட வைத்தது யார் குற்றம்.........விதியின் குற்றமா..........அல்லது அந்த விதியை தன் மதியால் அரசியலாக்கிகொண்டு இருக்கும் வீணர்கள் குற்றமா...........சொல் என் இந்தியத்தாயே.............உன் தங்கை என்தமிழ் தாய் கையேந்தி நிற்கிறாள் காப்பாற்று என் பிள்ளைகளை என்று...........உன் மனம் இளக வில்லையா..........இன்னும் நாங்கள் என்ன செய்தால் நீ மனம் குளிர்வாய்.........


வெறும் சில தொலைவு தூரத்தில் இருக்கும் போதே எம் தொப்புள் கொடி உறவுகள் அலறல்களை கேட்க்காமல் மானாட மார்பாட பார்த்துகொண்டு இருந்த எங்கள் தவறுக்காக நீ என் சகோதரிகளின் தாலிகளை பலியாகக்கேட்க்கிறாயா....

கடலுக்கு மீன் பிடிக்கப்போன கணவன் திரும்பி வரும்வரை என் சகோதரி என்ன கோலத்தில் பொறுத்து இருக்கவேண்டும் என்று நீ எதிர் பார்க்கிறாய் தாலியுடனா அன்றி கைம்பெண் கோலத்திலா............முடிவை நீ எடுக்க தவறினால் காலம் உன்னையும் கைம்பெண்ணாக்கும்...........

கொசுறு: மனப்பாரம் முடியாமல் கொட்டிய சிறு துளியே இது......  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Sunday, January 30, 2011

அன்பில்லா ஒருவருக்கு கோடியில் ஒருவன் எழுதுவது......!?

தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்.........................நண்பர் திரு.  Philosophy பிரபாகரன் அவர்களின் அன்புக்கு இணங்க இந்தப்பதிவு.

நான் இப்படி எழுதலாமான்னு முதல்ல நெனச்சேன்............ஏன்னா உள்ளூருல இருக்கவங்களுக்கு தான் நிலைமை சரியா தெரியும்னு யோசிக்கும்போது தான் ........ஒவ்வொரு நிமிஷமும் என் தாய் மண்ணை நினைத்துக்கொண்டு இருக்கும் என்னைப்போல பல நண்பர்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.


என்னதான் வாழ்க்கைப்பயணம் பலருக்கு மாறினாலும் என் தமிழ் மீனவனின் வாழ்கை என்று நல்ல விதமாக மாறும்!? - இந்தக்கேள்வியை யாரை நாம் கேட்பது?..................

எனக்கு தெரிந்து ஆட்சியாளர்கள் இன்று இருக்கும் நிலை - "அய்யா அம்மா ஓட்டு போடுங்க சாமி" - என்று இருந்த அரசியல்வாதிகள், இன்று மக்கள் இவர்களைப்பார்த்து "அய்யா அம்மா நோட்டு குடுங்கன்னு" கேக்க வச்சுட்டாங்க..........இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் சூடு, சொறன இதெல்லாம் இருக்கு அதனால இப்போ ஆளும் அய்யா நீங்க ஒன்னும் செய்ய வேணாம் சாமி. முடிஞ்சா இந்த பாவப்பட்ட மீனவங்க வாழ்கைல ஏதாவது மாற்றம் செய்யலன்னாலும் தினமும் அவங்கள வேட்டயாடுற இலங்கை கடல்படைய தடுத்து நிறுத்த பாருங்க.............எத்தன காலம் தான் கடிதம் எழுதுவீங்க.......அந்தப்பேனாவ கேட்டுப்பாருங்க அது சொல்லும்...........நீங்க எவ்ளோ பொய்யும் புரட்டும் அதன் மூலமா இந்த அப்பவிங்கள ஏமாத்த எழுதினீங்கன்னு...........அன்னிக்கு ரயிலு வர்ற பாதைல படுத்து எங்க முன்னோர்கள எமாற்றுனீங்க................அந்த அப்பாவிகளுக்கு தெரியுமா நாளைக்கு அவங்க மேல ரயில ஏத்த தான் அந்த மாதிரி நீங்க சென்சீங்கன்னு................


நாங்க கேட்டுக்கறது ஒன்னு மட்டும்தான் இப்போதைக்கு தயவு செஞ்சி மத்தில பேசி இப்போ "நிருபமா அம்மா" அந்தூருக்கு போயிருக்காங்களே இப்பவாவது உறுதியான முடிவெடுத்து இந்த கொலைகள தடுத்து நிறுத்தப்பாருங்க...........


ஏதோ சொல்லணும் போல தோணிச்சி சொல்லிட்டேங்க........

கொசுறு: நீயெல்லாம் யாருடான்னு கேட்டுடாதிங்க.......எவ்ளோ கஷ்டப்பட்டாலும், எந்த நாட்டுல இருந்தாலும் தேர்தல் நேரத்துல வந்து ஓட்டு போடும் சாதாரண குடிமகனுங்க.........அம்புட்டுதேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Saturday, January 29, 2011

சோதனை மேல் சோதனை-30+(ஒன்லி சரக்கர்களுக்கு மட்டும்!?)

முதல்ல மைதிலி மேட்டரத்தான் பதியலாம்னு வந்தேனுங்க,,,,,,,,,,,,,ஆனா கொஞ்சம் என் விஷயத்தையும் இறக்கி வைக்கலாமுன்னு....மைதிலி நாளைக்கு வருவா........சரியா....ஹிஹி(யாரு கேட்டா!!)
ஏதோ ஒரு ஊருக்கு வந்தமா பொழச்சமான்னு இருக்கணும் அத விட்டுட்டு சின்சியறு சிகாமணிக்கனக்கா வேலை செய்யறத பாத்து(ஹிஹி!) என் தல எனக்கு விடுமுறையே கொடுக்கறது இல்ல. இதுலவேற என் மனைவி மட்டும் வருசத்துக்கு ஒரு முறை சென்னைக்கு போயிட்டு வந்து என்ன வெறுப்பேத்துவாங்க. ஆனா இந்த முறை பல பெரிய தலைவர்களை என் குடும்பம் இழந்துவிட்டது...அதனால என் மனைவி வியட்நாம் வந்த சில தினங்களில் மீண்டும் சென்னை திரும்ப வேண்டியதாகியது............இன்னும் வியட்நாம் வர அவங்களுக்கு முடியல................

விஷயத்துக்கு வரேன்..........அய்யோ அய்யோ...........இப்போ பாருங்க 9 நாளு இந்தூரு புது வருசப்பிறப்புக்காக விடுமுறை.........நான் எங்கயும் போக முடியல.............நாளையிலிருந்து ஒரு ஈ காக்கா ரோட்டுல நடமாடாது...............கிட்டத்தட்ட 6 நாளைக்கு மார்கெட்டு கிடையாது.......ஹோட்டல் கிடையாது..........இத நினைக்கும் போதே துக்கம் தொண்டய்ள அடைக்க............என்னா பண்ணலாம் அப்படின்னு யோசிக்கும் போது......

ட்ரிங் ட்ரிங்..............(காலிங் பெல் சத்தம்).............சின் சாவ்(வணக்கம்).....ஆங் வணக்கமுங்க.........

இந்த புரியாத பாஷைல பேசி முடிஞ்சதும்..........பெரிய கிப்ட்டு பேக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க நம்ம வியட்நாமிய நண்பர்கள்......

திறந்து பாத்தா ஒன்னு shivas(scotch no 1) ரெண்டாவது(black label) அடப்பாவிங்களா நான் குடிக்க ரெடின்னு சொல்லும்போது எவனும் வரல...............இப்போ கெட்டபுள்ளயா(அதாங்க சரக்கடிக்க மாட்டாராம்!) ஆன போது இப்படி கொண்டுவந்து கொடுக்கறீங்களே ஞாயமா...........திருப்பிக்கொடுத்தா அவங்க மனசு உடைஞ்சு போயிடுவாங்களே(என்னா ஒரு காரணம்!) அப்படின்னு வாங்கி வச்சிட்டேன்................


5 மணிக்கு .........

ஹலோ குமாரா...........ஆமாங்க சொல்லுங்க..........

என்னங்க எப்படி இருக்கீங்க...........

நல்லா இருக்கேன் மேடம்.............நீங்க................

நாங்க நல்லா இருக்கோம்........இந்தியால இருந்து வந்தாச்சி.............அதான் உங்களுக்கு நேந்துரம் பழம் சிப்ஸ்....அப்புறம் ஸ்நாக்ஸ் கொண்டு வந்து இருக்கோம் எப்போ வந்து வாங்கிக்கிறீங்க............

6 மணிக்கு வரேனுங்க (என்ன கொடும இது.............சரக்கும் வந்துரிச்சி...........சைட் டிஷும் வந்துரிச்சி.................சூப்பரு..........!!!!!!!!!!!!!!!)

இனி இந்த சரக்கு முடியற வரைக்கும்.................பதிவுகளா வந்துட்டு இருக்கும்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் - சியார்ஸ்!!!!!!!!!!!!!

கொசுறு: உண்மையே மட்டுமே சொல்ல நினைக்கும் ஒரு சாதாரண குடி மகன்....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, January 27, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-27.1.11

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு..........இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்த சிரிப்பு........அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும் அப்போது...........

வாங்க மானி ஒரே சீரியஸ் பாட்டா தெரியுது...........


குடிமகன்களின் குடிலில்லிருந்து...........

மானி: என்னப்பா பண்றது அவரு பாட்டு பாடிட்டு போய் சேர்ந்துட்டாரு........இன்னா இருந்தாலும் அவர் காலம் போல வருமா..............

குவா: சரிப்பா இந்த சுவிஸ் பண மேட்டருல நீ சொன்னது தான் நடக்குது...........நீ சரியா தான் யோசிக்கிற போல.......

மானி: பாரு அந்த பண அமைச்சரு சொன்னத கவனிச்சியா........கருப்பு பண விவரங்கள வெளியிட முடியாதாம்..........விவரம் வெளிவந்தா...........முத பேரு வெளிநாட்டு அண்ணைதுதான் அப்படிங்கறது தெரிஞ்சி போச்சி.............

குவா: எப்படி சொல்ற.......


மானி: இந்த 2G மேட்டருல...........அந்தம்மா கிட்டத்தட்ட 18,000 கோடி பணத்த அவங்க ஊருல இருக்க சொந்தக்காரங்களுக்காக சுவிஸ் வங்கில போட்டுகிறாங்க..........இது தான் இப்போ டாப்பு மேட்டரு........

குவா: நம்ம தமிழ்நாட்டு கூட்டணி எந்த லெவெல்ல இருக்கு...............

மானி: அம்மாவும், கப்பல் தலைவரும் நெருங்கிட்டாங்க..........கிட்டத்தட்ட 35 - 40  கப்பலுக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன்...........ஆனா அதே நேரத்துல.......அந்தம்மா மேல இருக்க சொத்து குவிப்பு வழக்கு பிரச்சன முடிவுக்கு வரும்னு ஆளும் கட்சி நினைக்குது.........இத வச்சி அந்தம்மாவ தேர்தல்ல போட்டியிட முடியாம பண்ணமுடியும்னு நம்புராங்கப்பா..........

குவா:ஓ........இவ்ளோ விஷயம் இருக்கா இதுல..............சரி காமடி அரசியல் விஷயம் எதாவது இருக்கா.........

மானி: 1. தானைத்தலைவரு முதல்வரா இருக்கறதா விட கட்சி தலைவர இருக்கரததான் விரும்புறாராம்..............

குவா: இதுல இன்னா காமடி இருக்கு............


மானி: இன்னா இப்படி சொல்லிபுட்ட.........தேர்தலு ரிசல்ட்டு இப்பவே தெரிஞ்சிடுசின்னு நெனச்சி சிரிப்பு வருது.............அடுத்தது 2. லாடு லபக்கு சொல்லிகிறாரு அவரோட கட்சி Forrest வெட்டி வர்ற தேர்தல்ல தமிழ்நாடு பூரா சுத்தரதுனால சொந்த தொகுதில ஓட்டு கேக்க முடியாதாம்...........அதனால மக்கள் ஆட்டோமேடிக்கா வந்து அவருக்கு ஓட்டு போட்டுடனுமாம்..............ஹி ஹி 

குவா: சினிமா மேட்டரு எதுவுமில்லையா..........

மானி; இருக்கே மொத விஷயம் நம்ம செல்வா எடுக்குற படத்தோட பேர மாத்த சொல்லி 
மரம் வெட்டுற கட்சிய சேர்ந்த ஆளு மிரட்டி இருக்காரு...............

குவா: அந்த கட்சி தலைவரு சினிமாவ எதிர்க்கறாரே............

மானி: அந்த மிரட்டுன ஆளு ஒரு சினிமா எடுத்துட்டுகிராறு.............எல்லாம் நம்மள ஏமாத்துற விஷயம்தானே.................

5 தோல்வி படத்த கொடுத்த போது கூட இவ்ளோ கவலை படல அந்த நடிகரு...........லேட்டஸ்ட்டு படம் ஹிட்டுன்னு கவலப்படவேண்டியதா போச்சி..............

குவா: ஏன் மானி............

மானி: பின்ன ஆளும் கட்சி இவருமேல பெருசா கண்ணு வச்சிருக்குள்ள அதான்............

இன்றைய தத்துவம்:வியட்நாமிய ஜொள்ளு:


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, January 26, 2011

மைதிலி அவன காதலி!?-(தற்கொலைக்கு தேவை!?)

மணி கிட்ட பேசி என்னோட பிரச்சனைய புரியவைக்க முடியுமா......?நான் ட்ரை பண்றேங்க....நான் ஒரு ஜூனியரு........அவரு ஏற்கனவே தான் ஒரு மேதைங்கர மெதப்போடவே சுத்தறவரு(இந்த பிட்ட பாத்துதான் இவங்க ஏமாந்து இருப்பாங்களோ ஹி ஹி!?)...........நான் போய் அவர்கிட்ட பேசினா அவரு டென்சன் ஆயிடுவாருங்க...........

நீ எல்லாம் ஒரு ஆம்பள...........

(என்னங்கடா இது இவங்க ஏதாவது பண்ணிப்புட்டு சம்பந்தமில்லதாவன போயி பஞ்சாயத்து பேச சொல்லறது இன்னா ஞாயம்..........இந்த ஆம்பிளைன்னா இன்னா ஒன்னுத்துக்கும் உதாவாம இருக்க பிரச்சனைக்கெல்லாம் ஹீரோ கணக்கா போயி பேசி கடைசீல காமடியன் கணக்கா அடிவங்குறதா!?)

ஏங்க ஏன் உங்களுக்கு இப்படி ஒரு டவுட்டு.............(நோ டபுள் மீனிங் ஹி ஹி!!)

பின்ன இப்படி பயப்படுற.............இது பயம் இல்லைங்க ஒரு வித தயக்கம்.........அதுவும் இல்லாம "நீ யாருடா" அப்படின்னு கேட்டுபுட்டாருன்னா நான் இன்னா செய்வேன் சொல்லுங்க...

உன்ன நான் என்னமோ நெனச்சேன்...........

என்னன்னு நெனச்சீங்க யாரு இன்னா சொன்னாலும் போய் அடிவாங்கிட்டு வர்ற செந்திலுன்னா(அப்போ வடிவேலு பீல்டுல இல்லைங்க!!)

அப்போ நான் உனக்கு பிரெண்டு இல்லையா.........

நீங்க எனக்கு பிரெண்டு அப்டிங்கரதுனால தான் இவ்ளோ தூரம் உங்கள நம்பி வந்துருக்கேன்.....(ஹி ஹி!!)

சரி என்ன பண்றது சொல்லு...........

நீங்க இவ்ளோ கஷ்டப்படரதால நான் போய் அவருகிட்ட பேசுறேன்......ஆனா என்னால உறுதியா சொல்ல முடியாது அவரு ஒத்துப்பாருங்கரத...................

உன்மேல எனக்கு நம்பிக்க இருக்கு குமார்...............(யாரு பெத்த புள்ளையோ நம்மகிட்ட மாட்டிகிச்சி!)

சரிங்க...........நாளைக்கு பேசிட்டு சொல்றேன்...........

இல்ல இன்னிக்கே பேசு............இப்போ அவன் அங்க தான் இருக்கான்...........

(என்ன ஒரு மரியாத..........மவனே அவன் மாட்டுனா செத்தான்.......!!!)

சரிங்க வாங்க போவோம்.................பில்லு வந்துடுச்சி கொஞ்சம் கொடுத்துடுங்கோ..........ஹி ஹி

சரி(இருடா உனக்கு இருக்கு........)


மறுபடியும் சென்டருக்கு திரும்பினோம்...............அங்கே................

தொடரும்........

கொசுறு: அமைதிக்கு பெயர் தான் மைதிலி...............அந்த அலையினில் ஏதடி சாந்தி...........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, January 25, 2011

மைதிலி அவன காதலி!?-(தற்கொலைக்கு தேவை!?)

ரொம்ப நாளா எழுதனும்னு இருந்தது இன்னைக்கு தான் முழுசா முடிஞ்சது. மேலும் இது காதை(கதை அல்ல) என்பதால், கொஞ்சம் யோசிச்சி எழுதணும் அதாவது அப்போ நடந்ததை மறக்காமல் குறிப்பிடவேண்டும் என்பதால். சரி தோன்றத செஞ்சிடனும் ஆராஞ்சிக்கிட்டே இருந்தா அது குழப்பமான மனநிலையே தரும். நான் என்ன இளம் வயதில் துறவியாவா இருந்திருக்க முடியும்!?

ஆரம்பம் - சென்னை TTK சாலை computer சென்டரில்............

சும்மா சொல்லக்கூடாது இந்த காதல் படுத்தும் பாட்ட முடியல! முடியல! என்று சொல்லிக்கொண்டே வந்தான் மணி.

என்னங்க சீனியர் இவ்ளோ சலிச்சிகிறீங்க என்றான் குமார்.

பின்ன என்ன இப்படி பைத்தியமா அலையறாங்களே! - என்றார் மணி.

வாங்க மைதிலி எப்படி இருக்கீங்க ............

நான் நல்லா இருக்கேன் நீங்க குமார் ?.................

நல்லா இருக்கங்க .............அப்புறம் இந்த computer class சுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்ங்க........ என்ன பண்றது என் அக்கா தொல்ல தாங்க முடியாம தான் இதுல சேர்ந்திருக்கேன்.

உங்கள மாதிரி சீனியர்ஸ் கொஞ்சம் ஹெல்ப் செஞ்சாத்தான் என்னை மாதிரி தமிழ் மீடியம்ல படிச்சு வர்ற பசங்க கொஞ்சமாவது தேற முடியும் என்றான் குமார்.

அட விடுப்பா, முதல்ல இந்த சீனியர் அப்படின்னு கூபுடரத நிறுத்து நான் என்ன உனக்கு அக்கா மாதிரியா இருக்கேன்! - என்றாள் மைதிலி

அப்படியில்லங்க நீங்க இங்க கிட்டத்தட்ட 2 வருஷ கோர்ஸ் படிச்சிட்டு இருக்கீங்க ......... நான் இப்போதான் சேர்ந்து இருக்கேன்... அதான்.............

விடு எதையுமே விருப்பத்தோட கத்துகிட்டாதான் புரியும் இல்லன்ன பணம் தான் வேஸ்டு - என்றாள் மைதிலி

சரிங்க .... என்று ஆமாம்சாமி போட்டு சென்றான் குமார்.

சில மாதங்கள் கழித்து............

எனன மைதிலி..... ரொம்ப நாளாச்சி உங்கள பாத்து....சார் கூட உங்க ப்ராஜெக்டு விஷயமா கேட்டுக்கிட்டு இருந்தாரு........ என்றான் குமார்.

உடனே அவள் கண்ணில் இருந்து கண்ணீர்(whole சேலா வச்சு இருப்பாங்களோ!) எட்டிப்பார்த்தது.

குமார் ......... தயவுசெஞ்சி என் கூட கொஞ்சம் டிரைவ் இன் வரை வர முடியுமா -  என்றாள்.

இதுக்கு எதுக்குங்க பெரியவார்த்த எல்லாம் சொல்றீங்க வாடான்னா வரப்போறேன்(பொண்ணுங்க செலவு பண்றதே பெரிய விஷயம் ஹி ஹி!).....

இன்னைக்கு நம்ம instructor கூட லீவு, வேற என்னா பொழப்பு...... மழை வேற இல்லையா ...........என்றான் குமார் வெகுளியாக...........

ஜெமினி அருகே உள்ள drive in

என்னங்க கூப்பிட்டு வந்து எதுவுமே சொல்ல மாட்டேங்கிறீங்க ................

உனக்கு என்ன வேணும் ஆர்டர் பண்ணு........

மைதிலி இது self service பகுதிங்க(சுறு சுறுபானவங்களுக்கு மட்டும்!!) ........அந்தப்பக்கம் உக்காருவோம் வாங்க..........

எனக்கு ஒரு மசால் தோச..........ஒரு ஊத்தப்பம்.........அப்புறம்.......

ஏன்டா.........எவ்ளோ சீரியசான விஷயத்த பத்தி பேச வந்தா......சாப்பாட்டு ராமன் கணக்கா ஆர்டர் கொடுத்துட்டு இருக்க.........

(யக்கோவ் இப்போ கெடசாத்தான் உண்டு அப்புறம் நீங்க ஏதாவது சோக கதய சொல்லிட்டு காபி கூட குடிக்க விடாம........பில்லு கொடுக்காமா எழுந்து போயிடுவீங்க.......எத்தன சினிமா பாத்துகிறோம்....!!)


சொல்லுங்க..........

உனக்கு தெரியுமா நான் suicide  attempt பண்ணிட்டேன் அதான் 20 நாளா கிளாஸ் பக்கமா வர முடியல ............


என்னாது ..........என்னசொல்றீங்க.............(ஏதோ கிளாஸ் அட்டென்ட் பண்ணா மாதிரி சொல்றா!)

ஆமாம் ..........நேத்து தான் கொஞ்சம் உடம்பு சரியாச்சி.................

என்னங்க சொல்றீங்க ஒன்னும் புரியல..........கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்க...........

மணி இருக்கானுள்ள ...........

அவருக்கு என்னங்க..........

அவனுக்கு ஒன்னும் இல்ல .........நான் அவன தான் லவ் பண்ணேன்..........

அதனால என்னங்க..........


அவன் என்னை லவ் பண்றதா சொல்லி 6 மாசம் ஆச்சி.........இப்போ வந்து "முடியாது எங்க மாமா பொண்ணத்தான் கட்டிக்கணும்னு வீட்டுல எங்கம்மா கட்டாயப்படுதுராங்கன்னு சொல்லிட்டு போயிட்டான்" ........

இதுக்கு போயா இந்த அளவுக்கு போனீங்க...........

உன்கிட்ட போய் சொல்றேன் பாரு.............லவ்வுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு?.........

எனக்கு அதெல்லாம் தெரிஞ்சிக்கிற interest இல்லைங்க...........(எவன் கிட்ட வைட்டா பர்சு இருக்கோ அவன் தான் அந்த மாதிரி தப்பு காரியமெல்லாம் பண்ணுவான்!)


எனக்கு என்னை பத்தியே தெரிஞ்சிக்க முடியல இதுல இந்த தலவலிங்க வேறயா......

ஏன் அப்படி சொல்றே..........காதல் என்பது தெய்வீகமானது.......

(ஏன் அவன்கிட்ட நெறைய சொத்து இருக்கா! ஹி ஹி! - உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை)

சரிங்க அது எப்படியோ போகட்டும்.........விஷயத்துக்கு வாங்க.......நான் என்ன செய்யணும்.......சொல்லுங்க...........

தொடரும்.........

கொசுறு: உண்மைக்கதை - நாம எப்போவுமே பொய் சொல்லத்தெரியாத முட்டாப்பயலாச்சே இந்த உலகம் எப்படித்தான் நான் சொல்றத நம்பப்போகுதோ தெரியலையே!!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, January 24, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 24.1.11

தரை மேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்கவைத்தான்.......எங்களை கண்ணீரில் மிதக்கவைத்தான்............


இன்னா மானி வரும்போதே சோகமா பாடிட்டு வார.......குடி குடிப்போர் குடிலில் இருந்து........

மானி: ஆமாம்பா என்னா வாழ்கை இது......நம்ம மீனவருங்க அடிக்கடி இலங்கை கடற்படையால கொல்லப்படறாங்க..............கேக்க நாதி இல்ல.........கேக்க வேண்டியவங்க.........கூட்டணிவேலைல பிசியாகீரானுங்க......

குவா: என்னா கொடும இது........என்னதான் பண்றது...........இதுக்கு முடிவே இல்லையா.........

மானி: நானும் நீயும் பேசி இன்னா நடக்கபோகுதுன்னு ஜனங்க நினைக்கரதுனாலதான் இது தொடர்ந்துகிட்டே இருக்கு.......தைரியமான ஆளுங்கள ஆள்ரதுக்கு தேர்ந்தெடுத்து இருந்தா பரவாயில்ல......எல்லாம் பதவிய காப்பாத்த போராடுற வீராதி வீரர்கள தேர்ந்தெடுத்தா இப்படித்தான்..........

குவா: ஆமா நம்ம அடுத்த பிரதமரா வரப்போறவரு சொன்னத கேட்டியா.......


மானி: அத கேக்குறியா........இளைஞ்சர்கள் அரசியலுக்கு வருனுமாம்....அதே நேரத்துல ரொம்ப சிம்பிளா இருக்கனுமாம்...........ஆனா இவங்க மட்டும் சுவிஸ் பேங்குள்ள எவ்ளோ வச்சிகிறாங்க அப்படிங்கற மேட்டர மட்டும் லீக்காவ விடமாட்டங்க.......என்னங்கடா ஞாயம்.....

குவா: நம்ம மாதவன் ரொம்ப டெண்சனாயிட்டாறு போல?

மானி: ஆமாம்பா........லேட்டஸ்டா ஒரு பேட்டில.......மன்மதன் படம் ஒன்னும் இந்திரன் அளவுக்கு ஹிட்டாகப்போறதுஇல்ல...........இது ஒரு தோல்விப்படம் தான் இருந்தாலும் என்னோட கேரக்டர மக்கள் ரசிக்கறத நெனச்சி சந்தோசம் அப்படின்னு சொல்லிகீறாரு......

குவா: ஆம்மாம் எப்போதான் இந்த ட்ரைன் பிடிக்குற நடிகரு அரசியல்ல இறங்கப்போறாராம்?


மானி: அவரு அப்பா சொல்லிட்டாரு.....புள்ள 40 வயசுல அரசியலுக்கு வருமாம்.........அத தடுக்க யாராலையும் முடியாதாம்........

குவா: ஆமாம் மானி நீ எப்போவும் குருவியே குறி வைக்கறதா எல்லாம் சொல்லறாங்க.......

மானி: யாரு ஓவரா உதாரு உடுராங்களோ அவங்கள பத்தி பெருமையா சொல்றது தான் என் ஸ்டைலு.......

சரி ஏதாவது நச்சுன்னு சொல்லு பார்போம்............

லாடு லபக்கு தாஸு சொல்லி கிறாரு இனிமே சினிமால நடிக்கிறவங்கள மக்கள் ஆட்சிக்கு வரவிடக்கூடாதுன்னு...........

ஆனா என்னப்பொருத்தவரைக்கும் எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் செய்யப்போறது இல்ல,..........அவங்க அவங்க முடிஞ்சா தப்பிசுக்குங்க............

கொசுறு: இலவசம் வாங்கும் மானமுள்ள தமிழர்கள் இருக்கும் வரை ஒன்னுத்துக்கும் உதவாமல் ப்ளாக் எழுதும் சங்கம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, January 21, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-21/1/11

அந்தி சாயும் நேரம் .......குடியோ குடிலில்:

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.............

வா மானி என்னா பாட்டு ஒரே அமக்கலப்படுது..................
மானி: ஒன்னும் இல்லப்பா குடும்பத்துக்குள்ள இருந்த குத்து வெட்டல்லாம் நம்ம தலிவரு ரொம்ப நேக்கா சரிபண்ணிப்புட்டாருள்ள அதேன்!

குவா: விளக்கமா சொன்னாத்தானே புரியும்.............

மானி: அது வேற ஒன்னுமில்லப்பா நம்ம மதுர சிங்கம் கொஞ்ச நாளா இனி உங்க கூட ஓட்டும் வேணா உறவும் வேனாங்குராமாதிரி இருந்தாரு............இப்பா கலியுக சாணக்கியரு கூப்பிட்டு அவர சாந்தப்படுத்தி............இப்போ சண்ட போட நேரமில்ல.....எதிராளிங்க நெறைய சேந்துபுட்டாங்க...........தேர்தல் முடியட்டும் மாநிலமே நம்மள்து தான் வேணுமுன்னா பிரிசிக்கலாமுன்னு சொல்லிட்டாரோன்னு நெனைக்கிறேன்.............

குவா: என்னப்பா இது நம்ம நிலைமே என்னாகுறது............

மானி: நமக்கு இன்னா ஒரு சட்டில அரிசியும்.....இன்னொரு புட்டில சரக்கும் கெடைக்கும்....நேரா சுடுகாடுதான்...............டோன்ட் ஓரி நோ ஹேப்பி.....

குவா: சரிப்பா வெளிநாடு மேட்டரு ஏதாவது இருக்கா?

மானி: இல்லையா பின்ன ..........நம்ம விக்கிலீக்கு இப்போ புத்சா நம்மூரு ஆளுங்களோட சுவிஸ் பேங்கு கருப்பு பண தகவல்கள கொஞ்ச கொஞ்சமா லீக் பண்றாங்க............

குவா: நான் சொன்னேன்ல நம்ம அரசாங்கம் அடுத்து அந்த விஷயங்கள வச்சி அவங்கள புடிச்சி...........

மானி: டேய் லூசா நீ..........ஏன்டா பணம் போட்டு வசிகிரவனுங்க தான் இப்போ ஆட்சிலையே இருக்கானுவ.............அவங்க உட்டுருவான்களா.....நீ வேற.......சீகிரதுல விக்கிலீக்கு ஆகுதோ இல்லையோ........நாம வீக்காயிடுவோம்.......

குவா; இன்னா மானி நீ சீமான் மேட்டர்ல சொன்னது நடக்கலையே......

மானி: நல்லா கவனி நான் இன்னா சொன்னேன்.......அவரு எதிர் தரப்புக்கு போறது சரியான மூவு அப்படின்னுதானே...........

குவா: இன்னாபா இப்படி பல்டி அடிக்கற.......

மானி: ஏன்யா அவ்ளோ பெரிய ஆளுங்களே அடிக்கும்போது.......நான் ஒரு சராசரி ஓட்டுக்கு துட்டு வாங்குற....மானமுள்ள தமிழன்! நான் அடிக்க கூடாதா........என்னாங்கடா....

குவா: ஆமா இந்த காமடி தாஸு சாரிப்பா தாஸு அய்யா இனிமே இன்னா பண்ணப்போறாரு....

மானி: எனக்கு என்னமோ நம்ம சாணக்கியரு கூட கூட்டி வச்சிக்கிட்டு......அரசியலில் ஆயாவா இருந்தா இன்னா..........போயாவா இருந்தா இன்னா அப்படின்னு பேட்டி குடுப்பாரு போல......

குவா: சரி இப்போ மத்தில அமைச்சருங்க மாத்துனாங்களே.......நம்ம மாநில ஆளுங்களுக்கு எதுவும் ஒத்துக்கலையே!?

மானி: நீ வேற .........பெட்ரோலு, எல்லா அத்தியாவசியப்பொருளுகளோட விளையும் யேரிட்டதுனால.....அமைச்சருங்க மாறுனா அத ஒரு காரணமா காட்டி ஒட்டிடலாம் அப்படின்னு யோசிச்சிருப்பாங்க......நம்ம மாநில ஆளுங்களோட தல hair இப்போ அவங்க கைல......சும்மா விடுவாங்களா..........


குவா: இன்னாபா இந்த இளங்கோ மனுஷன் இப்படி ஜகா வாங்கிட்டாரே!!

மானி: ஆமாம்பா சீகிரதுல தானைதலீவர சந்திச்சி நாங்கல்லாம் காமடியனுங்க நீங்க ஒன்னும் பெருசா எடுத்துக்காதீங்க.....அப்படின்னு சொல்லிடுவாரு பாரு ..........கூட்டிகளவானிங்க நடுவுல இதெல்லாம் சகஜம் அப்படின்னு நாம நம்ம மனச தேத்திக்க வேண்டியது தான்.


குவா: ச்சே நம்ம குருவி நடிகரு ரொம்ப வருத்தப்பட்டு சொல்லிகிறாரு பாத்தியா.......


மானி: இன்னாபா பண்றது..........ஆச அளவோட இருக்கணும்.......ஏதோ நம்ம லெவலுக்கு ஒரு MP ஒரு MLA  அத உட்டுட்டு.......முதல்வர் லெவலுக்கு ஆசைப்பட்டா நடக்குமா......அதுவும் யார எதிர்துகினு........நம்ம தலிவரு பகலவர எதிர்துகினு நடக்குமா.........இப்போ புலம்பி இன்னா புண்ணியம்........ஏதோ நாலு பாராட்டு விழாவுக்கு போணுமா...........புகழ்ந்துமா.....கல்லாகட்டுனமான்னு இல்லமா......அப்புறம்....இருக்கவே இருக்கானுங்க.......நம்ம குயந்தப்பசங்க...........அவங்கள வச்சிக்கிட்டு ஏதோ கபடி ஆடுனோமான்னு இல்லாம.........

குவா: ரொம்ப நாளா டச்சிங்கா ஒண்ணுமே மேட்டரு இல்லையே!?


மானி: நம்ம நமி இனிமே எமி மாதிரி வரப்போறாங்களாம்.........அந்த பான வயித்த இப்ப உடுக்க மாதிரி ஆக்கிக்கிட்டு இருக்காங்க............சீக்கிரத்துல சும்மா சிக்குன்னு வரும்.......6 அடி சிக்கன்னு......

கொசுறு:அவள் மெலிந்து போனாளே...........உடல் மெலிந்து போனாலே...........நான் பார்க்கும் போதே ...........மெலிந்து போ.....னாளே..............
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, January 20, 2011

பாவப்பட்ட(friend) நண்பன்(!?)


இன்று காலையிலிருந்து ஒரு பெரிய பஞ்சாயத்து...........ஸ் ஸ் ஸ் நாம வெளி நாட்டுல இருக்கோம்னு தான் பேரு நம்மள லோக்கல் சொம்புதூக்கி நாட்டாம கணக்கா அலைய விடுறாங்க. என்னத்த பண்றது எல்லாம் வந்த வழி அப்படி...........சரி மேட்டருக்கு வருவோம்......நண்பர் காலையில கையோசில கூப்பிட்டாரு சாரிபா கைப்பேசில கூப்பிட்டு........

மச்சான்..........ஒரு பெரிய பிரச்சன...............

டேய் நான் மீடிங்குல இருக்கேன் ..........என் அப்பன்(BOSS) முருகன் முன்னாடி இருக்காரு............

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு............

சொல்லு வெளிய வந்துட்டேன் சொல்லு சீக்கிரம்...............

எங்கப்பா எம்மேல கம்ப்ளைன்ட் குடுத்து இருக்காரு...........


என்னது உம்மேலையா ..............ஏன்........எதுக்கு.............

கொஞ்ச நாளாவே அவரு நடவடிக்க சரி இல்ல.........அம்மா அண்ணன் வீட்டுல இருக்கறது உனக்கு தெரியும்?........

தெரியும் சொல்லு............

திடீர்ன்னு என் பொண்டாட்டி எங்கிட்ட வந்து..........உங்கப்பா நான் குளிக்கும் போது சாவி துவாரம் வழியா பார்த்தாரு அப்படின்னு சொன்னா......... ஆனா நான் நம்பலே...........

டேய் சீ..........அப்படியெல்லாம் இருக்காது.......உங்கப்பா அந்தமாதிரி.............சான்சே இல்ல......அவங்களுக்கு எதாவது பிரமையா இருக்கும்............

நானும் அப்படித்தான் சொல்லி அவள திட்டி விட்டுட்டேன்.........ஒரு வாரம் முன்னாடி என் முன்னாலேயே..........."இந்தாம்மா அந்த ரோஸ் கலர் புடவை கட்டிக்கோ உனக்கு எடுப்பா இருக்கும் .........எனக்கும் அது தான் புடிக்கும்" அப்படின்னு சொன்னாரு.......
எனக்கு தூக்கி வாரிப்போட்டுது..........என்னாச்சி இவருக்கு........என் இப்படி எல்லாம் ..............பேசுறாருன்னு தோனுச்சி.......நாலு நாளு முன்னாடி புடவையே புடிச்சி இழுத்து இருக்காரு...........நான் கூப்பிட்டு கண்டிச்சேன்.........

அய்யயோ அப்புறம்..........


அதுக்கு அவரு .......உன் பொண்டாட்டி ஒரு கேசு.......அவள நம்பாதே அப்படின்னாரு.........எனக்கு கோவம் வந்து ரெண்டு பேருக்கும் சண்ட பெருசாயி ...........அவரு கெளம்பி ஊருக்கு போயிட்டாரு........

நேத்து என்னடான்னா நைட்டு ஒரு மணிக்கு போலிசு வீட்டு கதவ தட்டி எங்க நானுனு என் wife கிட்ட கேட்டு இருக்காங்க.......ஏன்னா நான் நைட்டு லேட்டா வருவேன்னு நெனச்சி....... நான் ஆபீஸ் வேலை அதிகமா இருந்ததால போக முடியல.........

சரி என்னா சொல்லிட்டு போனாங்க...........

உங்க புருஷன் மேல அவரு அப்பா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு.......அதுல அவர் உயிருக்கு ஆபத்துன்னும்..........தனக்கு ஏதாவது ஏற்பட்டா உங்க புருஷன் தான் காரணம் அப்படின்னு கொடுத்து இருக்காரு.........அப்புறம் லேட்டா வந்தாருன்னா...........ஸ்டேசன்........வந்து பாக்க சொல்லுங்க என்று சொல்லிட்டு போனாங்களாம்............இப்போ இன்னா செய்யறது............

தொடரும்...........

கொசுறு: இந்த விஷயத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்று உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறோம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, January 19, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்-!?-19.01.11

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே......................

இன்னா மானி வரம்போதே தலிவரு பாட்டோட வர்ரீறு.....
மானி: ஆமாம்பா நம்மால தான் ஒன்னும் மாத்தமுடியல ......இப்படி பாடியாவது மனச தேத்திக்க வேண்டியதுதான்.........

குவா: ஏன் அப்படி சொல்றீங்க......

மானி: நம்ம நாட்டு அமைச்சரு மாதிரி ஆளுங்க இருக்க வரைக்கும் இன்னா பாடுறது.....

குவா: இன்னா விசயம்..........

மானி: அவன் அவன் விலைவாசி ஏறிப்போச்சே........குடும்பத்த எப்படி நடத்தறதுன்னு தலைல கைவச்சி உக்காந்து இருக்கான்.......இந்த பண அமைச்சரு நக்கலு ...........மக்களுக்கு வாங்கற சக்தி அதிகமாயிடுச்சி, அதுனாலதான் விலைவாசி ஏறிப்போச்சின்னு..........பேட்டி கொடுக்காறு......

குவா: இன்னாபா எவ்ளோ வருஷ அனுபவம் அவருக்கு........

மானி: எனக்கு என்னாமோ டவுட்டா கீது.......இந்த மஞ்சத்துண்டும் ...அந்த வெளிநாட்டுல இருந்து வந்த மவராணியும் சேர்ந்து இந்த தேர்தல்ல தமிழ் நாட்டுல பொங்க வைக்க ட்ரை பண்ணுறாங்கன்னு நினைக்கிறேன்.

குவா: கூட்டணி இறுதி ஆயிடுச்சா......

மானி: அத தான் சொன்னாரே தலீவரு.........எவ்ளோ கொடுத்தாலும் தாங்குவாங்க மத்தில இருக்கவங்க ..........அதனால எங்கள யாரும் பிரிக்க முடியாதுன்னு.....

குவா: ஆமா நம்ம பார்லிமெண்டு புலி என்னபன்னப்போறாரு...........

மானி: அவர சீமானு சட்டசபை தேர்தல்ல நிக்க சொல்லி கேட்டுகிட்டாரு...அவரும் கிட்ட தட்ட நிக்கிற மாதிரிதான் தெரியுது........

குவா: ஆனா சீமான் பண்ணது சரியாப்பா........இவ்ளோ நாளு எதிரி போல இருந்த அந்தம்மாவுக்கு ஆதரவு குடுத்துப்புட்டாரே.........

மானி: பின்ன என்னா அவர நம்புனவங்கள கொண்டு போய் போலீசுல வெளுப்பாங்க........யாரு வருவா,,,,,,,,அதே நேரத்துல இது சரியான காய் நகர்த்தலு........என்னோட கருத்து இன்னான்னா..........எதிரிய நம்பலாம் நம்ம நெஞ்சுலையே குத்துவான்.........ஆனா துரோகி இருக்கான் பாரு..........கூட இருந்தே முதுகுல கத்தி சொருகுவான்...........சொருகிட்டான்...........

குவா: சரிப்பா அரசியல விடுத்து ஏதாவது மேட்டரு இருக்கா.........

மானி: நம்ம மணியான டைரடக்கரும்....ராசாவும் சேர்ந்து ஆதவன் கம்பெனிக்கு பெரிய பட்ஜெட் படம் பண்ணப்போறதா வதந்தி..........


குவா: அது உண்மையில்லையா...............

மானி: எனக்கு தெரிஞ்சி...........ராசா ஒருமுறை பிரிஞ்சிட்டாருன்னா மறுபடியும் சேரமாட்டாரு..........ஏன்னா இந்த மணி தான் ராசா மேல இருந்த கோவத்துல ஆஸ்கர் நாயகன, படவுலகத்துல கொண்டு வந்தவரு.............பார்ப்போம்........படிச்சவங்களுக்கு மட்டுமே படமெடுக்குற டைரடக்கரும்.........பாமரன்களோட ரசனையே புரிஞ்சி வச்சிருக்க ராசாவும் சேர்ந்தா கொஞ்சம் வித்தியாசமாதானே இருக்கும்.......

குவா: ஆமா நம்மாளுங்க கிரிக்கெட்டுல கலக்கிபுட்டாங்க பாத்தியா.......

மானி: நாங்கூட பார்த்தேன்..........தோக்கப்போற மேட்ச செயிச்சிபுட்டாங்க சூப்பருபா.......அந்த சிங்கு கலக்கி புட்டாறு.........இந்தியா வந்த உடனே வருமான வரி பிரச்சன பெருசாகக்கூடாதுன்னு கலக்கி இருப்பாரோ கிரிகெட்டுல.........சின்ன டவுட்டு......ஹி ஹி 

குவா: ஆமா எப்படி இருக்கு புதுப்படங்களோட நிலைமே..............

மானி: வந்த படங்கள்ல goat field படம் இப்போதைக்கு மொத இடத்துல இருக்கறதா சேதி வந்துச்சி.......அப்புறம் நம்ம கார்த்தி படம் சிரிச்சி வயறு புன்னாகுற அளவுக்கு இருக்கறதா என் பொஞ்சாதி சொன்னாபா............

குவா: இன்னாபா...........எவ்ளோ தடைங்கள உடைச்சிகிட்டு வந்த படத்த பத்தி சொல்லமாட்டேன்குற..........

மானி: அத ஏன் கேக்குற..........நாம எதாவது சொல்லப்போக.......இந்த குழந்தைங்க நம்ம மேல கல்லு எரிஞ்சிதுங்கன்னா இன்னா பண்றது.......

குவா: இன்னாபா நீ பயப்படறியா.............

மானி: அப்படியில்ல..........படம் ஓரளவுக்கு நல்லா இருக்காப்பலதான் சேதி வந்துது..........முன்னாடி படங்கள பாக்கும்போது.......இந்தப்படம் 200% நல்லா இருக்கறதா பயலுங்க சொன்னாங்க..........ஆனா அதுக்காக எங்காளு எழுந்துட்டாறு .........இதோ வாராரு.......அதோ போறாரு........ஏன்டா கிட்டத்தட்ட 5 படத்துக்கு சம்பாதிச்ச காச கொண்டு போய் கரியாக்கிட்டு உக்காந்த பசங்களுக்கு அந்தாளு இன்னா பண்ணான்.........இத சொன்னா உடனே எனக்கு என்னமோ அந்தாளுமேல காண்டுன்னு சொல்லுவானுங்க........உனக்கு இப்போ சந்தோசமா..........

குவா: பன்ச்சு ஏதாவது சொல்லு........

மானி: நடிகன் நடிச்சா படம் என் பொஞ்சாதி உடைச்சா குடம்.........ஹி ஹி 

கொசுறு: தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்.........எப்போதான் தர்மம் செயுக்கும் அதுக்குள்ளே நாங்கல்லாம் போய் சேர்ந்துடுவோமா...........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, January 17, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-17.1.11

கொஞ்ச நாளா எதுவும்(!?) சரி இல்லததனால மூர்த்தியும். கோயிந்தனும் மீட் பண்ண முடியல. இனி தொடர்ந்து வருவாங்க வாரத்துல மூன்று நாளைக்கு.வா மச்சி என்ன பத்து ரொம்ப நாளாகுது.......கேட்டுக்கொண்டு இருக்கும்போதே குடி...குடிலுக்குள் நுழைந்து கொண்டு இருந்தார் திரு. மானிட்டர் மூர்த்தி அவர்கள்............

இனி :

மானி: ஏம்பா சொல்ல மாட்டே........ஒரு மாசமா நெறய பிரச்சின......ஊட்டுல ரெண்டு பேரு போய் சேர்ந்துட்டாங்க. அதுவுமில்லாம நமக்கு உடம்பு சரியில்லாம போச்சி அதான் கட பக்கம் வர முடியல.............நீ எப்டி இருக்க........


குவா: எனக்கும் தான்பா முடியல.......... சரி வந்தாச்சி சொல்லு எதாவது விஷயம் இருக்கா.....

மானி: நெறய இருக்கு தம்பி...........கேளு............நம்மாளுங்களுக்கு மறதி ஜாஸ்திப்பா!?

குவா: எத வச்சி சொல்றே!

மானி: இந்த ராசா மேட்டர காணோம் பாரு......... அவன் அவன் இப்போ பொங்கல்ல பிசியாயிட்டணுவ ...........அதான்......

குவா: இல்லப்பா.........நாம விட்டாலும் கோர்ட்டு விடாது மாமு..........

மானி: போடா இவனே............இப்பதான் கூட்டணி முறியாம கூட்டுக்களவானிங்க ஒண்ணா சேர்ந்துட்டாங்க தெரியுமில்ல.............ஆனா பாரு.........இந்த ஆளும் கட்சி டிவில பட்டிமன்றத்துல என்னமா பேசுறாங்க........அதுவும் யார் மேல புகார் இருக்கோ அவங்க பேச்சுதான் டாப்பு............எப்படித்தான் கொஞ்சம் கூட.......பேச முடியுதோ தெரிலபா.............

குவா: எல்லா அரசியலு பா.............

மானி: என்னாடா அரசியலு........சரக்கடிக்கிற தலைவரு ஒருத்தரு இன்னும் கூட்டணி முடிவு பண்ணாம திரியிறாரு............இன்னொரு பக்கம் ஏசி ரூம்ல சரக்கடிக்கிரவங்க இன்னும் மலைய விட்டு இறங்குறா மாதிரியே தெரியல............

குவா: ஆமாம்பா சாமிக்கு மாலைப்போட்டு போனவங்க கதி இப்படி ஆயிடுச்சே பா !

மானி: கொடுமையான விஷயம்டா அது...........பின்ன என்ன சொல்றது........ஜீப்பு ஒன்னு சரியா ஸ்டார்ட்டு ஆகாம போக அத கொஞ்சம் பேரு சேர்ந்து தள்ளிவிட .............அந்த நேரத்துல டிரைவரோட கட்டுப்பட்ட மீறி அந்த ஜீப்பு எகிறிப்போய் அங்க இருந்த ஒரு மினி பஸ்சு மேல போத.......அதுல என்ன நடக்குதுன்னு தெரியாம அந்த குறுகிய வழில பக்தர்கள் ஓட.......கொஞ்சம் பேரு அங்கே இருந்த சின்ன கடைங்களுக்குள்ள போக.........அவனுங்க கோவம் வந்து கட்டைங்கள வச்சி மக்களை அடிச்சி விரட்ட....எதிர் எதிரா மக்க மோதி பாதிப்பேரு பக்கத்துல இருந்த தடுப்பு வேலிய புடிக்க அது சரியா இல்லாததுனால பக்கத்துல இருந்த பள்ளத்துல விழுந்துட்டாக.......

குவா: எல்லாம் விதிப்பா..........

மானி: அடப்பாவி...........ஏன்டா 2 லட்சத்துக்கு மேல வந்த கூட்டத்த சரிப்படுத்த 5 போலிச போட்டு வச்சது விதியா.......உயிருக்கு பயந்து கடைங்களுக்குள்ள ஓடுன பக்தர்கள உருட்டுகட்டைகளால அடிச்ச விஷயம் உனக்கு விதியா.............இருக்குற தமிழ் தெய்வங்கள கும்புடுங்கன்னா யாரு கேக்குறா..............

குவா: சோ.... ஏதோ சொல்லிகிறாரு பா..........

மானி: அத ஏன் கேக்குற அவரு எந்தப்பக்கம் பேசுறாருன்னே தெரியலபா......

குவா: ஏம்பா.....உனக்கு புரியலையா............

மானி: பின்ன என்ன .............அந்தம்மாவ ஆண் அப்டிங்கறாரு.......எதிராளிய பெண் அப்டிங்கறாரு..............வோட்டு போட்ட மக்க இது கூட............தெரியாம போட்டுட்டாங்கன்னு...........சொல்லவாறாரா...........தெரியல.............

குவா: சரி பொங்க படங்கள்ல உனக்கு எது புட்சிகிது.........

மானி: நான் இன்னும் எதுவும் பாக்கல.........ஆனா ஒரு நல்லது நடந்துகிது..........அது நம்ம ட்ரைன் புடிச்ச நடிகரு படம் மக்களை கவர்ந்து இருக்கறதா வந்த ரிசல்ட்டு தான்பா அது....

கொசுறு: எப்பொருள் யார் யார் வாய் கேட்பின் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு......அய்யோ அம்மாஆஆ ......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Sunday, January 16, 2011

தனித்திரு ஆனா!?

எல்லோருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பொங்கல் நாட்களில் வெளி நாடு வாழ் தமிழர்களின் உணர்வு வித்தியாசமானது என்று நினைக்கிறேன்.
"என்னா இருந்தாலும் எங்கூருல கொண்டாடுற பொங்கல் போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இந்த முறை வந்ததால் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். வீடு மனைவி மக்களைப்பிரிந்து வெளி நாடுகளில் வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டு இருக்கும் நெஞ்சங்கள் சுமந்து கொண்டிருக்கும் வலிகள் ஏராளம். சரி விஷயம் என்னான்னு கேக்குறீங்களா சொல்றேன் .............


பொதுவா நான் இதுவரை மத உணர்வுகளை பற்றி பதிவிட்டதில்லை. ஆனால் அதே சமயம் யாராவது அது சம்பந்தமாக பதிவிட்டால் படிக்க தவறுவதில்லை. எனக்கு என்னா தோணுதுன்னா............இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தை தாக்குவதை பெருமையாக கருதுகிறார்களோ என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.


ஆத்திகம், நாத்திகம் - இந்த விஷயத்துக்கு என் கருத்து - எனக்கு சாமி கும்புட தோணுது கும்புடறேன், உனக்கு புடிக்கல கும்பிடாத அவ்ளோதான். இந்த பெரும் விஷயங்களில் நான் கொண்ட கருத்து. அதை விடுத்து எப்போதுமே என்னமோ சாமி கும்பிடறவன் எல்லாம் முட்டாள் மாதிரி சித்தரிப்பது எதற்க்கு என்று புரியவில்லை.

மனிதனுக்கு ஒருவித பயம் ஏதாவது ஒரு விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதாலோ அல்லது நமக்கு ஒளி, ஒலி, தண்ணீர், காற்று எனும் விஷயங்களை தரும் இயற்க்கையை வணங்குவது தவறில்லை எனபதலோ கூட கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கலாம்(ஒரு சிந்தனை தான்!).

யாராவது நமக்கு ஒரு சிறு உதவி செய்தாலே அவருக்கு நன்றி சொல்லும் மரபு நம்மிடம் உண்டு. எவ்ளோ பெரிய உதவிகளை செய்து வரும் இயற்கையை அவரவர்க்கு பிடிக்கும் வழியில் வழி படுகிறோம். ஆனால் அதனையே தொழிலாக கொள்பவர் சிலர்(இது தனிப்பாதை!).


சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. அதை விடுத்து நம்மை நாமே தாக்கிக்கொள்வதில் என்னா பெருமை(!?). தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.


கடவுள் மறுப்பு கொள்கை உடையோர் கூட இப்படி கருத்துகள் கூறுவதில்லை. மாறாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அறிவாளிகள் மட்டுமே தான் தோன்றித்தனமாக எதிரிகளைப்போல் மோதிக்கொள்கின்றனர். வேண்டாமே, அமைதியாய் இருப்பதே பெரிய வலிமை என்று யாரோ சொன்னார்கள். தயவு செய்து இனி பதிவிடும்போது(மத விஷயங்கள்) என் கருத்தையும் நண்பர்கள் கொஞ்சம் பரிசீலனை செய்தல் நன்று என்பது என் தாழ்மையான வேண்டுதல்.

கொசுறு: இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, January 14, 2011

திருந்துவானா மனிதன் - அலுவலக அரசியல்!?


பொங்கல் திருநாள் என்பதை நினைக்கும் போதே மனசுக்குள் பொங்கும் இன்பம் ஏராளம். என்னுடைய சிறு வயதில் இதற்க்காகவே முழு குடும்பமும் கிளம்பி ஊருக்கு சென்று விடுவோம். ஏனெனில், சென்னையில் கொண்டாடும் பொங்கல் சம்ப்ரதாயப்பொங்கலாகவே இருக்கும் என்பது குடும்ப அங்கத்தினர்களின் எண்ணம்.

நம்ம ஊர்ல போய் இறங்குன உடனே நமக்கு கெடைக்குற மரியாதையே தனி தான். பட்டணத்துல இருந்து பெரிய வீட்டுக்கு வந்து இருக்காங்க என்று பேசிக்கொண்டு போகும் மக்களை எண்ணி வியந்திருக்கிறேன். அப்போ ஏன் அப்படி சொல்றாங்கன்னு வீட்டுல கேட்டா சொல்லுவாங்க - நாம வருசத்துக்கு ஒரு முறைதானப்பா ஊருக்கு வர்றோம் அதான் என்று சொல்லுவார்கள்.

அன்று இருந்த மூதாதையர்கள் மறைந்து விட்டாலும் இன்றும் தொடருது பொங்கல் எனும் அட்டகாசமான பண்டிகை. சரி விஷயத்துக்கு வருவோம் .........

அரசியல் செய்யலாம் வாங்கன்னு ஒரு சிறு ஆரம்ப விஷயத்த போட்டுட்டு திரும்பி பாக்குறதுக்குள்ள - என் சொந்த வேலையில ரெண்டு நாளா அரசியல் பண்ணிப்புட்டாறு ஒரு புண்ணியவான். பொதுவா பல விஷயங்களில் (அலுவலக) பொறுமையான போக்க கையாளும் என்னை போட்டு பாத்துட்டாரு. அதனால கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டதனால் சரியாக எதுவும் செய்ய முடியாம போயிட்டு!?

அப்போதும் ஒரு சிறந்த எதிர்கால அரசியல்வாதிக்கு(!?) பொறுமை ரொம்ப முக்கியம்னு நெனச்சி(!), ஒவ்வொரு விஷயமா மேலிடத்துக்கு புரியவச்சேன்.


ஆனா இப்போ எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாயிடுச்சி. யாரு என்னை வச்சி அரசியல் பன்னாரோ அவருக்கு மெமோ குடுத்தது என்னை இன்னும் மனசு வருத்தப்பட வைத்தது.

"இன்னா செய்தாரை............அவர் நாண நன்னயம் செய்து விடல்" - என்ற விஷயம் அடிக்கடி என் மனசாட்சி சொல்லிக்கொண்டு இருப்பதால், அவரை அந்த விஷயத்தில் இருந்து விடுபடசெய்தேன்(நீயெல்லாம் அரசியல்வாதியாய் ஆகி..... வெளங்கிடும்!).

கடைசில அவருக்கு கொடுக்க இருந்த கல்த்தாவிளிருந்து அவரை காப்பாற்றிய பிறகு அவர் சொன்ன வார்த்தை" அண்ணே மன்னிச்சிடுங்க " தெரியாம (தெரிஞ்சே) செய்ஞ்சுட்டேன் " -  எப்படிப்பட்ட அரசியல் உலகமடா இது ஞானத்தங்கமே.

எப்படிப்பட்ட எதிரியையும் வீழ்த்துவது அன்பு மட்டுமே, பழி வாங்கல் அல்ல எனும் அரிச்சுவடி தெரியாத புண்ணாக்கு அரசியல்வாதியா நான் ஹி ஹி (இனி அவன் நம்ம ரூட்டுக்கு வருவான் -எப்படியெல்லாம் அரசியல் பண்ண வேண்டி இருக்கு)


கொசுறு: "தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலைதான், உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை".
- மொக்கையா இருந்தாலும் அரசியல் தானுங்களே நம் வாழ்கை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, January 12, 2011

திரும்பி பார்க்கிறேன்!?-(என்னா இருக்கு பாக்க!?)

சக பதிவுலக தோழர்களுக்கு வணக்கமுங்க. என்னை திரு. ஆர்.கே.சதீஷ்குமார் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி. தெரிந்து 248 என்று தொடருபவர்களையும், தெரியாமல் அவரை தொடரும் ஆயிரக்கணக்கானவர்களையும் கொண்ட ஒரு பிரபலம் என்னை அழைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

நானும் திரும்பி பார்காலாமுன்னு நினைக்கிறப்ப சில விஷயங்கள் தோணிச்சி. நான் கிட்ட தட்ட 2 வருடமாக இந்த தமிழ் களங்களை கண்டு கொண்டு இருந்த காலம். நம்ம வேலை வேற திடீர்னு ஆரம்பிக்கும் திடீர்னு 10 நாளைக்கு சும்மா இருப்போம். அப்போ இந்த தமிலிஷ் பாக்க நேர்ந்தது(2 வருடம் முன்பாக). அப்போதிலிருந்து தொடர்ந்து பதிவுகளை படிச்சிட்டு வந்தேன். திடீர்ன்னு மூளைக்கு போகுற ரத்தத்துல கொஞ்சம் கொழுப்பு அதிக மானதால, நாமும் எழுதுவோம் என்று முடிவு பண்ணினேன்.


முதல் பதிவு அக்டோபர் 22, 2010 போட்டேன். ஒன்னுமில்லேங்க ஒரு வணக்கம் தான். முதல் முறையா என்னை பதிவுலகத்தில் வரவேற்ற திருசௌந்தர் அவர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.என்னுடைய மூன்றாவது பதிவிலேயே வந்து என்னை உட்சாகப்படுத்திய மர்மயோகி மற்றும் ம.தி.சுதா அவர்களுக்கும் நன்றி. அதன் பின் கொஞ்ச கொஞ்சமாக சில முன்னேற்றங்கள் என்று போய் கொண்டு இருக்கிறேன். 
உண்மையில் "தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்(பலம் மற்றும் பலவீனம்)" - இந்த விஷயத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். அதாவது எனக்கு பேச்சு பலம் கொஞ்சம் இருக்கிறது, எழுத்து பலம் அந்தளவுக்கு இல்லை என்பதை அடிக்கடி யோசித்துக்கொண்டு இருக்கும்போது தான் இந்தப்பதிவிடும் விஷயம் என்னை அடுத்த கட்டதிட்க்கு அழைத்து சென்றது. 


என் குறிக்கோள் நல்ல அரசியல்வாதி(கவனிக்க!?) எனும் பொறுப்புக்கு வருவதே.
அவன் சரியில்லை இவன் சரியில்லை என்று சொல்வது எளிது. அந்த பொறுப்பிலிருந்து  செய்து காட்டுவதே சிறந்த ஆண்மைக்கு அழகு என்பதாக, என் தாழ்மையான கருத்து.


இந்த விஷயங்களை உலகில் எங்கோ இருந்தும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள கிடைத்த அரிய வாய்ப்பாக இதனை நான் கருதுகிறேன். 


பொதுவாக கவிதை ரசிக்க தெரிந்தால் போதும் என்று நினைக்கும் சராசரி மனிதன் நான். அதனால் அந்த விஷயத்தில் விஷப்பரீட்சை எடுப்பதில்லை. இதுவரை நான் எந்த சினிமாவுக்கும் விமர்சனமோ, நடிகர்களை புகழ்ந்தோ அல்லது இகழ்ந்தோ பதிவிட்டதில்லை. அது பலரின் மனத்தை காயப்படுத்தும் என்பதால் மற்றும் அவரவர் தொழில்களில் சிறந்து விளங்குபவர்களை விமர்சிப்பதால் மட்டுமே என்னால் உயரத்திற்க்கு செல்லமுடியும் என்ற மாய நம்பிக்கை என்னிடம் இல்லை(பதிவர்கள் மன்னிக்க).
என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் நல்ல படைப்பாளியாக இருக்கவேண்டியதில்லை. சொல்ல வந்த கருத்தை "நச்" என்று சொல்லும் சராசரி மனிதராக இருத்தல் போதும் என்று நினைக்கிறேன். என் பதிவுகள் எதுவும், இல்லாத ஒன்றை சொல்லும் விஷயங்கள் இல்லை, அதே நேரத்தில் ஒவ்வொரு மனிதரிடமும் ஆயிரம் விஷயங்கள் உள்ளன அதனை வெளிப்படுத்தும் ஒரு இடமே பதிவுலகம் - இது என்னுடைய தாழ்மையான கருத்து.


பொதுவாக ஒரு பக்கம் படிக்கவே யாருக்கும் நேரம் இல்லை. அதனால்தான் என் பதிவுகள் அனைத்தும் அரைப்பக்கதிட்க்கு இருக்குமாறு வைத்துக்கொள்கிறேன். இன்றுவரை என்னை உற்சாகப்படுத்தி ஓட வைத்துக்கொண்டு இருக்கும் சக பதிவுலக நண்பர்களுக்கு நன்றி.


என்றும் நட்புடன்....
வருங்கால அரசியல்வாதி (வியாதி அல்ல ஹி ஹி !)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment