Followers

Saturday, April 30, 2011

மாற்றான் தோட்டத்து மல்லிகை!(50 - - - ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே.........

முதல்ல தலைப்ப விளக்கிடறேன்.......இது 50 வயதிலிருந்து.....ஒவ்வொரு மைனசுக்குக்கும் 5 வயசு குறைசிக்கங்க ஹிஹி..............!

காலையில் நான் ரெண்டு ப்ளான் பண்ணி இருந்தேன்....(எப்பவுமே!).......ஒன்னு ஹாலாங் எனும் சுற்றுலா தலத்திற்கு.......அப்படி மிஸ்சானா(மிசஸ் ஆனா!).......கிரிக்கெட் ஆடப்போவதாக........முதல் பிளான் எந்த நாதாரி புகை விட்டுதோ(வயித்தெரிச்சல் ஹிஹி!).........நடக்கல...கார் பிரச்சனன்னு சொல்லி கழட்டிகிட்டான் அந்த நண்பன்(வடை போச்சே!)...............


சரி அடுத்த பிளான் என்னன்னு யோசிச்சி.......கிரிக்கெட் விளையாட கெளம்பினேன்......அந்த வழி ஒரு High Ways ரோடு.......ஒருத்தரும் இருக்க மாட்டாங்க............போற வழியில ஒரு புது மணதம்பதி வண்டி நிறுத்திட்டு யோசிச்சிட்டு இருந்துதுகள்.........ச்சே அந்தப்பொண்ணுக்கு அந்தப்பையன் ம்ஹூம்(!)....பொருந்தவே இல்ல(என் கல்யாணத்துல இப்படி சொல்லி இருப்பாங்களோ!)...........சரி என்னதான் பிரச்சனன்னு பாத்தா....Piagio ஸ்கூட்டர் நின்னுட்டு இருந்துது...........

நான் என் பைக்க நிறுத்திட்டு.............அவர்களிடம் நெருங்கினேன்..என்ன ஆச்சி?


ஹெல்ப் பண்ணுங்க...(வியத்நாமிய மொழியில்!..........ஒரு பொண்ணு கேட்டு இல்லன்னு சொல்றதா Never!)

தம்பி கொஞ்சம் தள்ளிக்க........(வியத்நாமிய மொழியில்!)

(டேய் இந்த டப்பா வண்டிய வச்சிக்கிட்டு உனக்கு மணம் கேக்குதா ராஸ்கல் ஹிஹி!)

அந்த பய புள்ள என்னை வில்லன் மாதிரி பாத்தான்(விடுறா! விடுறா! நம்ம அழகை பாத்து முடிவு பண்ணிட்டானோ ஹிஹி!)

உங்களுக்கு இத சரி பண்ண தெரியுமா?(கேட்டான் பாரு கேள்வி நாங்க யாரு ஹிஹி!)

நான் முயற்சி பண்றேன்(எதை!)

அந்த வண்டியின் மத்திய பகுதியை திறந்து அதனுள் இருந்த முக்கிய பகுதியை கழட்டி சுத்தம் செய்து மாட்டினேன்!)

பிறகு ஒரே உதை(வண்டியத்தான்!)..........வண்டி உறும ஆரம்பித்தது.......(அம்மா மாரியாத்தா இந்த பொண்ணு முன்னாடி மானத்த காப்பத்திட்ட.........ஹிஹி!)


அவனுக்கு ஒரே சந்தோசம்.........அண்ணே நீங்களும் வாங்க ஒரு காப்பி சாப்பிட்டு போங்க என்றான்.........

அப்புறம் அவங்க கூட போயி காப்பி சாப்பிட்டு அந்த புது மணத்தம்பதிகள வாழ்த்திட்டு கெளம்பினேன்....


இனி அவ என் தங்கச்சி.......ஹூம் ஹூம்!(மலர்ந்தும் மலராத....பாச மலர் பாட்டுங்க ஹிஹி!) 

கொசுறு: ஏன் ஏன்..........என்னை இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா உனக்கு என நன்றி......(வேற என்னத்த சொல்றது ஹிஹி!)   
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, April 29, 2011

அட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு!)

வணக்கம் நண்பர்களே...........


காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக்க நண்பனும் சேர்ந்து போவது வழக்கம்..........


காலையில் அந்த ஏரி அவ்ளோ அழகா இருக்கும்...........அழகிய ஓவியங்கள்(!)...நடந்து செல்லும் அழகே தனி(!)......அந்த ஓவியங்களை ரசித்துக்கொண்டே இப்படி 5 கிமி நடை பயிற்சிய முடிக்கறது தினமும் நடந்து கொண்டு இருக்கு.......(ஹிஹி!).......


இன்று காலை அப்படி போயிட்டு இருக்கும் போது......ஒரு பெண் என்னை பார்த்து நீங்க இந்தியரா என்று கேட்டாள்(ஆங்கிலத்தில்!)...........நான் அப்படியே ஷாக்காயிட்டேன்(வெடிவேலு பாணியில் படிக்கவும்!)..........என்னையா கேட்டிங்க...........என்றேன்.....


yes என்றாள்......

ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க........(But ஆனா Why ஏன்!)

உங்க கலர வச்சித்தான்........என்றாள்


அப்படியா ஹிஹி!(டேய் தகப்பா எல்லாம் உன்னால!)

பின்னாடி வந்த நண்பன் சிரித்துக்கொண்டே வந்தான்..........

நானும் என்ன விஷயம் என்று கேட்டதற்கு சொல்லவில்லை.......

அப்படியே கடலை போட்டுக்கொண்டு.....சென்று கொண்டு இருந்தோம்.......(ஹிஹி!)

போகும் வழி எங்கும் வெள்ளை புறாக்கள் பறந்து கொண்டு இருந்தன(!).........

நானும் ஒரு சுற்று முடித்து விட்டு விடை பெற்றேன்......

அப்போது அந்த நண்பனிடம் கேட்டேன்.......ஏன்யா சிரிச்சிட்டே வந்தே.......


டேய் அது 50 வயசு கிழவிடா என்றான்.........(அடங்கோ!)

பார்த்தா தெரியலியே என்றேன்.......(அவளா நீ!)

பாத்தா தெரியாது.........(@#@#@#@# என்றான்!)

பல்ப்பு காலையில் கெடச்சது ஹூம் ஹூம்!

கொசுறு: ஒன்னும் சொல்றதுக்கு இல்ல போங்கப்பா.........(!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பதிவனாகிய நான்! - 200 வது பதிவு!

வணக்கம் நண்பர்களே.........


உங்கள் அனைவருக்கம் என் உளமார்ந்த நன்றிகள்...........இந்த 200 வது பதிவு வரை வந்து என்னை ஊக்கப்படுத்தி இருக்கும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி....................

பதிவுலகம் எனும் தனி உலகம்........என்னையும் தன் சேயாக கருதி இன்றுவரை காத்து வருவது என்னை பெருமை கொள்ளசெய்கிறது.......இந்த தனி உலகத்தில் நான் ஆரம்ப நிலையில் எழுதிய பல விஷயங்கள் இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.........குழந்தை தவழும் வயதில் ஓட ஆசைப்பட்டது இன்றும் பசுமையாக இருக்கிறது............


அந்த காலகட்டத்தில் வெறும் சீரியஸ் பதிவனான என்னை ஊக்கப்படுத்தி சிரியஸ் பதிவனாக மாற்றிய பெருமை திரு. பிரபாகரன்(http://philosophyprabhakaran.blogspot.com/).............அவர்களை சாரும்.........வயதில் சிறியவராக இருந்தாலும் என்னை ஊக்கப்படுத்திய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது.............அதற்க்கு பிறகு பல பதிவுகளில் நான் தலைக்காட்ட ஆரம்பித்தேன்..........என்னையும் என் சாதாரண நடை எழுத்தய்யும் பலர் ஊக்குவித்தனர்........


எளிதில் உணர்ச்சிவசப்படும் நான் இந்த பதிவுலகத்தில் தொடர்ந்து இருக்க முடியுமா தெரியவில்லை......யாருடைய மனத்தையும் புண்படுத்த விரும்பாததால்.......அவர்களை கலாய்த்து பதிவிட்டு இருக்கிறேன்.....அவர்களும் அந்த பதிவில் பின்னூட்டமிட்டு என்னை நெகிழசெய்தனர்.......

இந்த பதிவுலகம் முகம் அறியா என்னை இந்த அளவுக்கு சந்தோஷப்படுத்தி இருப்பதை எண்ணி வியந்திருக்கிறேன்..........ஒவ்வொரு மனிதனின் தனிப்பார்வையை இங்கு வந்து அறிந்து கொண்டேன்........கருத்துகளின் குவியல்கள் சிந்தனைகளை வளர்க்க உறுதுணையாக இருக்கும் என்பதை நம்புகிறேன்...........

என் குறிக்கோளான நல்ல அரசியல்வாதி(கவனிக்க!)..........எனும் விஷயத்தை இங்கிருந்தே தொடர்கிறேன்.......உணர்ச்சி, கோபம், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இவைகளை கொஞ்ச கொஞ்சமாக ஒதுக்க இந்த பதிவுலகம் எனக்கு கற்று கொடுத்து வருகிறது........இதை ஒரு வகுப்பரைபோல பாவிப்பதால் என்று நினைக்கிறேன்............


என்னைப்பொறுத்தவரை பதிவர் என்பவர் துப்பாக்கியில் இருந்து புறப்படும் தோட்டாவாக இருக்க வேண்டாம்.......அதை பாதுகாக்கும் உறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்......அதே நேரத்தில ஒவ்வொரு மனிதனிடமும் பல்லாயிரம் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.......அதனை வெளிப்படுத்தும் இடமே தனி உலகமாகிய பதிவுலகம் என்பது என் தாழ்மையான கருத்து..........

"தன்னை அறிந்தவன் வெல்லத்தக்கவன்" - இது என் தனிமொழி .......

கொசுறு: உங்கள் அனைவருக்கும் முன்னமே சொல்லிக்கிறேன்....உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!....உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..........

என்றும் நட்புடன்..........
வருங்கால அரசியல்வாதி(வியாதி அல்ல ஹிஹி!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, April 28, 2011

செல்லாத்தா - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே..............


வியத்னாமிய அம்மா பத்தி தெரிஞ்சிக்க உங்களை அழைக்கிறேன்............அம்மான்னா சும்மா இல்லைங்கறது எந்த அளவுக்கு உண்மைன்னு இங்க இருக்க மாரியம்மன் கோயிலுக்கு வந்தா தெரியும்.............

சைகோன்(ஹோசிமின் நகரம்!) வியத்நாமின் வர்த்தக நகரம். இதன் மைய்யப்பகுதியில் டிஸ்ட்ரிக் 1பகுதியில் அமைந்துள்ளது இந்த மாரியம்மன் கோயில்.........தமிழ் கலாசாரக்கோயில்.....இந்தக்கோயிலின் இப்போதைய நடத்துனர் ஒரு பெண்.......அதாவது இந்த கோயிலின் பாதுகாப்பாளராக இருந்த தமிழரின் மனைவி இந்த அம்மா...........

மாலை 7 மணிக்கு பூஜை ஆரம்பிக்கும்.......இங்கு வரும் அதிகமான கூட்டத்தினை கட்டுப்படுத்த பலர் பணியில் உள்ளார்கள்........அதில் ஒரு பெண்ணும் உண்டு........அந்த பெண்ணின் கணவர் தமிழரின் வாரிசு.........அந்தப்பெண்ணும் தமிழ் பேசுவார்களாம்........


அம்மா - ரவுண்டு முகம்...........ஒரு ரூபா நாணயம் சைஸ்ல ஒரு சிகப்பு போட்டு வச்சிக்கிட்டு.......நம்ம ஊரு காளியாத்தா கணக்கா நடந்து வர்றத பாத்தாலே நமக்கு நம்மூரு கோயில் ஞாபகம் வந்திடும்..........அந்த அளவுக்கு அலப்பரயோட வருவாங்க...........யாரு கிட்டயும் பேச மாட்டாங்க.........பூஜை செய்யுறது மட்டும் அவங்க வேலை...........அப்புறம் கெளம்பிடுவாங்க...........

இந்தம்மாவுக்கு 4 பசங்க........ஒவ்வொரு மாசம் ஒருதருக்குன்னு அந்தக்கோயிலில் உள்ள உண்டியல் மற்றும் தட்டுல விழற பணம் சுற்றள்ள வரும்...........(செம துட்டு வரும்!).........அதனால ஒரு மகன் ஒரு மாசத்துக்கு அந்த வேலைகள பாத்துப்பாராம்..........இந்த துட்டு மேட்டர்ல சண்ட வந்து துப்பாக்கி எடுத்தும் சுட்டுகிட்டாங்கலாம் இந்த வாரிசுகள்(நம்ம வியாதிகளோட வாரிசுகள் கவனிக்க!)..........அதனால அம்மா இந்த மாதிரி முறை வச்சி வர்ற துட்ட எடுத்துக்க சொல்லி சமாதானப்படுத்தி இருக்காங்களாம்..........


இங்க வர்ற வியட்நாமியர்கள் ரொம்ப பக்தியோட அம்மனை வணங்குறாங்க.......நம்பிக்கையாள பல ஆயிரம் பணம் செலுத்திட்டு போறாங்க.....அத தான் அம்மாவும் அவங்க பசங்களும் வெச்சி உலகமே சுத்துறாங்க போல...(ஹிஹி!)

கொசுறு: கோயில் எப்படி எல்லாம் உதவுது இந்த (அம்மாவுடைய!) மக்களுக்கு! அம்மாவோட போட்டோ அனுமதியில்லயாம்பா(அங்கேயுமா!)..போட்டோக்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கைப்புள்ளையும் கட்ட துரைகளும் (ஹிஹி!)

வணக்கம் நண்பர்களே..............

இங்கே நடக்கும் உரையாடல்கள் எல்லோர் மனதிலும் இருப்பதே........அதனால் எதையும் சீரியசாக பார்க்காமல் சிரியஸாக பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்(ஹிஹி!)

அண்ணே அண்ணே...........

ஏன்டா இப்படி பதறி ஓடி வர்ற............

கட்ட துரை சமூகம் உங்கள அசிங்க அசிங்கமா திட்டுறாங்க.........

விடுய்யா நான் வாங்காத திட்டா............

இல்லன்னே இத பாத்துட்டு நெறைய பேரு கெளம்பிட்டாங்க...........

ஸ் ஸ் ...............

டேய் (கூட்டமா வர்றாங்க.........!)

ஏன்டா.......உனக்கு எவ்ளோ கொழுப்பிருந்தா எங்க சரக்கெல்லாம் எடுத்து உன் சரக்கு போல விப்ப!...........

நீங்களும் விக்க மாட்டிங்க நானாவது வித்துக்கரனே..........

அது எப்படி நீ விக்கலாம்.......(எங்களுக்கு போணியாவள!)


அய்யா நான் துட்டுக்கு விக்கலீங்க.......எல்லாருக்கும் போய் சேரட்டுமேன்னு தான் விக்கறேன்!

போடுங்கடா இவன(பின்னி எடுக்கிறார்கள்!)......இனி போடுவ........

யோவ்...என்னை அடிச்சிட்டேன்னு வெளிய போய் சொல்லாத.......

ஏன்!


உன்ன எவனும் மதிக்க மாட்டான்.......ஏன்டா ஒரு ஆளு எவ்ளோ தாங்குவான்னு தெரிஞ்சிக்க வேணாம்...........ஆள்லாளுக்கு கூட்டி போய் ஒரு வாரத்துக்கு அடிக்கிறீங்களே......பாருங்க அப்போ கூட உங்க முன்னேற்றத்துக்கு நான் உதவுறேன்னு கொஞ்சமாவது நன்றி இருக்கா உங்களுக்கு!

இன்னடா முன்னேற்றம்.........

அதான்.........உங்கள நாலு பேருக்கு தெரிய வைக்க இந்த கைப்புள்ளதான்யா உதவறான்..........

(கூட்டம் சென்ற பிறகு!)

ஏன்னே இந்த அடி அடிக்கிறாங்க.........கம்ம்னு இருக்கீங்க...........

அதுவந்துடா...........அந்த கும்பல்ல "சில பேரு இவன் இவ்ளோ நல்லவனா இருக்கானேன்னு சொன்னாங்கப்பா அதான் விட்டுடேன்!"


இதெல்லாம் ஒரு பொழப்பாண்ணே...........

பில்டப் பண்றமோ காப்பி அடிக்கரமோ அது இல்ல மேட்டரு.......எப்பவும் நாம டாப்புல இருக்கணும்........அது மேட்டரு!(கைத்தடிகள் ஆரவாரமாக கை தட்டுகிறார்கள்!)

கொசுறு: ஹிஹி!வர்றவங்க தங்கள் பொன்னான கருத்துக்களை கொட்டவும்.....(தலையில் அல்ல!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, April 27, 2011

தனித்திரு ஆனா!.....பழிக்காதே!

வணக்கம் நண்பர்களே,


வெளி நாடுகளில் குடும்பத்துக்காக தன்னை எரித்து உழைத்துக்கொண்டு இருக்கும் உள்ளங்களில் அடிக்கடி தோன்றும் விஷயம் "என்னா இருந்தாலும் சொந்த ஊருல இருக்காப்போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். வீடு மனைவி மக்களைப்பிரிந்து வெளி நாடுகளில் வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டு இருக்கும் நெஞ்சங்கள் சுமந்து கொண்டிருக்கும் வலிகள் ஏராளம். சரி விஷயம் என்னான்னு கேக்குறீங்களா சொல்றேன் .............


பொதுவா நான் இதுவரை மத உணர்வுகளை பற்றி பதிவிட்டதில்லை. ஆனால் அதே சமயம் யாராவது அது சம்பந்தமாக பதிவிட்டால் படிக்க தவறுவதில்லை. எனக்கு என்னா தோணுதுன்னா............இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தை தாக்குவதை பெருமையாக கருதுகிறார்களோ என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.


ஆத்திகம், நாத்திகம் - இந்த விஷயத்துக்கு என் கருத்து - எனக்கு சாமி கும்புட தோணுது கும்புடறேன், உனக்கு புடிக்கல கும்பிடாத அவ்ளோதான். இந்த பெரும் விஷயங்களில் நான் கொண்ட கருத்து. அதை விடுத்து எப்போதுமே என்னமோ சாமி கும்பிடறவன் எல்லாம் முட்டாள் மாதிரி சித்தரிப்பது எதற்க்கு என்று புரியவில்லை.

மனிதனுக்கு ஒருவித பயம் ஏதாவது ஒரு விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதாலோ அல்லது நமக்கு ஒளி, ஒலி, தண்ணீர், காற்று எனும் விஷயங்களை தரும் இயற்க்கையை வணங்குவது தவறில்லை என்பதாலோ கூட கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கலாம்(ஒரு சிந்தனை தான்!).

யாராவது நமக்கு ஒரு சிறு உதவி செய்தாலே அவருக்கு நன்றி சொல்லும் மரபு நம்மிடம் உண்டு. எவ்ளோ பெரிய உதவிகளை செய்து வரும் இயற்கையை அவரவர்க்கு பிடிக்கும் வழியில் வழி படுகிறோம். ஆனால் அதனையே தொழிலாக கொள்பவர் சிலர்(இது தனிப்பாதை!).


சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. அதை விடுத்து நம்மை நாமே தாக்கிக்கொள்வதில் என்னா பெருமை(!?). தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.


கடவுள் மறுப்பு கொள்கை உடையோர் கூட இப்படி கருத்துகள் கூறுவதில்லை. மாறாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அறிவாளிகள் மட்டுமே தான் தோன்றித்தனமாக எதிரிகளைப்போல் மோதிக்கொள்கின்றனர். வேண்டாமே, அமைதியாய் இருப்பதே பெரிய வலிமை என்று யாரோ சொன்னார்கள். தயவு செய்து இனி பதிவிடும்போது(மத விஷயங்கள்!) என் கருத்தையும் நண்பர்கள் கொஞ்சம் பரிசீலனை செய்தல் நன்று என்பது என் தாழ்மையான வேண்டுதல்.

ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!

கொசுறு: இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே. 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சாய காத்திருக்கும் பச்சோந்திகள்!

வணக்கம் நண்பர்களே........


இன்னும் 15 நாட்களே இருக்கு தேர்தல் முடிவு வர.........இதுக்குள்ளே பெட்ரோலு விளைய ஏத்தி புட்டானுங்க.........இதுக்கு மேல யாரு அதிகாரத்து வரப்போறாங்க என்கிற விஷயத்த நெனச்சி விரல்கல்ல இருக்க நகங்கள கடிச்சி கடிச்சி ரத்தம் வந்தது தான் மிச்சம்...........

இப்போ பாத்தா ஆத்தாளும், மரம் வெட்டி சித்தாளும் இலங்கை விஷயத்துல சொல்ற கருத்துக்கள பாத்தா..........ஓட்டு போட்டவங்க ஆசிட் குடிக்கிற நெலமைக்கு போவாங்க போல............எப்படியும் பச்சோந்தி பசங்க எந்தப்பக்கம் வேணுனாலும் பாய்வானுங்க.......அடுத்த குதிரை பேரம் நடக்க அதிக வாய்ப்போ!

இதுக்கு இடையில மத்தியக்கட்சி வழுக்குப்பாறை மேல அதிகமான அழுத்தம் வேற காணப்படுது.......பேரிக்காவுக்கு மாமா வேல பாக்குற ஆளு சொன்னது நடந்துட்டு இருக்கு..........முதல்ல கிங் உள்ள போட்டாங்க......அடுத்து.........வாரிசு தலைவிய சேர்க்கப் போறாங்க.........அதுக்கு அடுத்து பதியை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் அம்மணியையும் லிஸ்டுல சேர்ப்பாங்க.......கடைசில தேர்தல் ரிசெல்ட பாத்த பிறகு.........

அய்யய்யோ கொல்றாங்களே..........வசனம் ரிபீட்டு ஆகும்னு சொன்ன விஷயம் எல்லாம் சித்தப்படி நடந்துட்டு வருது..........எப்படியும்.....மக்கள் இந்த முறை துட்டு குறைச்சலா கெடச்ச டென்சன்ல ஓட்டு போட்டதால பலருக்கு மண்ட குழம்பி போயிருக்கு..............


சிலரோட விருப்பம் குளிர் ரூம்ல தண்ணிய போடுறவங்களும்.........டாஸ்மாக்ல சரக்க போடுரவரும் கூட்டணி அமைக்கரா மாதிரி வரணும்னு நெனைக்கிறேன்.........அப்போதான் ஆட்சி ஓரளவுக்கு பேலன்ஸ் ஆகும்னு தோணுது.....ஆனா விதி வழி என்னவோ தெரியல(விதியை நம்பாதோர் சங்கம் மன்னிக்க!)..........பாப்போம்!


கொசுறு: உள்ளாடை உருவும் நிகழ்ச்சி வரும் மே மாதம் 13 தேதி நடக்க இருப்பதால்..........முடிந்த வரை அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும்!) ஹிஹி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, April 26, 2011

பிரிவு தேவையா!

நண்பர்களே..........


நேற்றோடு இந்த வருடத்தில் நான் கேட்கும் மூன்றாவது விவாகரத்து விஷயம்.....என் நண்பர்களின் வாழ்கையில்!.....

நான் மன அமைதியை இழக்க காரணமானது இந்த விஷயம்............

மஞ்சு, அரவிந்த், லாவண்யா...........இந்த மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்றால்.......அது நான் இவர்கள் மூவருக்கும் நண்பன் அவ்வளவே.........படிப்பில் பண விஷயத்தில் எனக்கும் இவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசமுண்டு.......ஏனெனில் இவர்கள் அனைவருக்கும் தகப்பன் வழி பணமுண்டு.........

ஆங் விஷயத்துக்கு வருகிறேன்......நேற்று மஞ்சு அனுப்பிய மெயில் என்னால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை..........4 வயது பெண் குழந்தையுடன் தனியே நிற்கும் அவள்........கணவன் பெண் பித்தனாகி போனதால்.......இன்று கோர்ட்டு படி ஏறி இருக்கிறாள் விவாகரத்து கேட்டு......அவனிடம் கொஞ்சம் கூட அந்த குற்ற உணர்வு இல்லை என்று என் மனைவி கூறினாள்.........


அடப்பாவிகளா....அழகு என்பது அழியக்கூடியது என்பதால் தானே இயற்கை நீ வாழும் வரை உலக அழகை ரசித்துக்கொண்டு இரு என்று பல விஷயங்களை படைத்திருக்கிறது.......ரசிப்பதோடு நிற்காமல் அனுபவிக்க ஆசை கொள்வதாலேயே பல குடும்பங்கள் விவாகரத்து கேட்டு பிரிகின்றன.......பிரிவு ஒரு தொடக்கமே முடிவல்ல..........மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க இது என்ன விளையாட்டா........

அவள் கண்ணீர் மல்க பேசியதை என்னாலும் என் மனைவியாலும் ஜீரணித்து கொள்ள இயலவில்லை......

டேய் இனிமே அவரு கிட்ட பேசி பயனில்ல(அப்போதும் அந்த நாதாரிக்கு மரியாதை கொடுக்கிறாள் இவள்!)..........உன்னால எனக்கு உதவ முடியும்னா சொல்லு............என்றாள்...

என்ன இப்படி சொல்லிட்டே.........என்ன பண்ணனும் சொல்லு.......என்றேன்........

எனக்கு நல்ல வேல வாங்கி கொடு என்றாள்....

உனக்கு நல்ல வசதி அப்புறம் என்ன......என்றேன்

இப்போ அப்படியில்ல வீடு மட்டும்தான் இருக்கு........அப்பா கிட்ட இருந்து எல்லா பணத்தையும் என்னோட வாழ்கைய காட்டியே அந்த மனுஷன் வாங்கிட்டாரு.........என்றாள்.....

......(சமீபத்தில் அவளுடைய தந்தையும் இறந்து விட்டார்.....ஏற்கனவே தாய் இல்லாதவள் அவள்!)

சரி ஆனா..........நான் நாட்ட விட்டு வந்து 4 வருஷம் ஆகுது.......நண்பர்கள் கிட்ட கேட்டு பாக்குறேன் என்றேன்............

பரவாயில்ல நீங்க இருக்க நாட்டுலே வாங்கி கொடு என்றாள்......

என் மனைவியும் அதை ஆமோதித்ததால்..."வேலை என் பொறுப்பு" என்றேன்......

அரவிந்த் மற்றும் லாவண்யா இருவருக்கும் இதே போல பிரச்சனைகள் காரணமாக தங்கள் துணைகளை பிரிந்துள்ளனர்.......

என்ன உலகமடா இது.......அந்த அளவுக்கு வாழ்கையில் தோல்வியா.........

சந்தோசம் என்பதே வீட்டில் நடக்கும் ஊடலிலே தான் இருக்கிறது என்பதை ஏன் மறக்கின்றனர்.........

படிப்பும், பணமும் ஏன் இப்படி போட்டி போட்டுக்கொண்டு ஈகோ எனும் ஒண்ணுமில்லாத குமிழியை பெரிதாக்கி பல குடும்பங்களை பிரிக்கிறது......முடியல முடியல........

சில விஷயங்களை தட்டி மாற்ற வேண்டும்.........

சில விஷயங்களை வெட்டி மாற்ற வேண்டும்......

மன விஷயங்களை கட்டி(!) மாற்ற வேண்டும் என்ற சாதாரண ஆறுதல் கூட மறந்து போய் விட்டதா நமக்கு........


இதில் ஆணும் பெண்ணும் இரு பக்கமும் இந்த ஈகோ வினால் நசுக்கப்படுகிறார்கள்............இழப்பது எளிது......அடைவது கடினம்.........அதுவும் அன்பு உலகத்தில் எளிதில் கிடைக்காத விஷயம்..........அதை நம்முடன் எப்போதும் வைத்து இருப்பதே வாழ்வின் வெற்றி.....இதில் என்ன......"நான்" என்ற கொடூர புத்தி..........

கொசுறு: வீட்டில் அன்பான வாத்தைகளால்(!) சொன்னதால், என்னுடைய சென்னை என்னை போடா வெண்ணை என்ற தொடர் நிறுத்தப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்(அம்மா அய்யோ!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, April 25, 2011

காணவில்லை உதவவும்!

வணக்கம் நண்பர்களே........

பன்னிக்குட்டி ராமசாமியை காணவில்லை தயவு செய்து உதவவும்....கடந்த 15 நாட்களாக தேடியும் கிடைக்க வில்லை எந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்பதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு இனாம் வழங்கப்படும்....

இப்படிக்கு இடிச்சபுளி சங்கம்.................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

சினிமாவுக்காக அவள்.....!

வணக்கம் நண்பர்களே..........


இந்த வாக்கியம் யாருக்கு சொந்தம் என்று பார்ப்போம் நண்பர்களே...........

நெறைய பேரு அறியாத வயசுல யாருக்காவது ரசிகனா இருந்திருப்போம்.........அல்லது தொண்டனா இருந்திருப்போம்!.....அப்பேர்ப்பட்ட காலத்துல யாரும்,.... தலைவன பத்தி சொன்னாலும் நமக்கு கோவம் வரும்..........அந்த உருப்பட்டவன் அவன் துட்டு சம்பாதிக்கறதுல குறியா இருந்தாலும்.......நாம என்னமோ நமக்காக அவன் வாழுறா மாதிரி நெனச்சிக்குவோம்........

நானும் அப்படி இருந்தவன்தான்.........யார்ருக்குங்கறது வேணாமே(ஹிஹி!).....அப்படி ஒரு காலத்துல நிகழ்ந்தது.............

தலைவனோட படம் ரிலீஸ்......நமக்கு மன்றத்துல டிக்கட்டு வந்தது.......அத துட்டு கொடுத்து வாங்க பல இரவு அயர்ன் பண்ணி சம்பாதிச்ச காச கொண்டுபோய் வாங்கிட்டு வந்தாச்சி.........அடுத்தது....பல இத்தியாதிகளுக்கு துட்டு இல்ல.......

மாமாகிட்ட கேட்டா.....ரொம்ப நல்ல வார்த்தைகள்ல திட்டுவார்(காது கொடுத்து கேக்க முடியாது!)....சரி என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது.......அந்தப்பக்கமா மஞ்சு வந்துட்டு இருந்தா........(நண்பி ஹிஹி!)


ஹாய் மஞ்சு!.......எங்க போற.........

என்னடா விஷயம்.....என்ன பணம் வேணுமா(அவகிட்ட புடிச்சதே சட்டுன்னு விஷயத்துக்கு வந்துடுவா!)

அது வந்து.......தலைவர் படம் ரிலீஸ்.......அதான்!

சரி அதுக்கு என்ன.......?

வந்து......டிக்கெட் கெடச்சிடுச்சி........ஆனாலும் கொண்டாட்ட செலவுக்கு துட்டு வேணும் ஹிஹி!

ஏன்டா இப்படி கெட்டுப்போரே...எங்கிட்ட இப்போ பணம் இல்ல....

நான் ஒரு யோசனை சொல்றேன் கேக்குறியா......என்றான் நண்பன் பஷீர்!

சொல்லு...........என்றாள் மஞ்சு!

அதுவந்து....உன் செயின கொடு...ரெண்டு நாள்ல நான் திருப்பி தந்துடறேன் ...ஏன்னா எங்கப்பா ஊருல இல்ல...அவர் வந்த உடனே ஒரு பிட்ட போட்டு வீட்டுல பணம் வாங்கிடுவேன்......என்றான் பஷீர்....

வீட்டுல கேட்டா என்ன சொல்றது என்றாள்.......மஞ்சு.

உனக்கா சமாளிக்க தெரியாது......ஹெல்ப் பண்ணு என்றேன் நான்..........

அவளும் சரியென்று சொல்லி செயின் கொடுத்தாள்.........

அதை கொண்டு சென்று நம்ம சேட்டு கடையில் அண்ணன் முனி(ரிக்ஸா அண்ணன்!) மூலமாக அடகு வைத்து துட்டை எடுத்துக்கொண்டு ஓடினோம்....

அங்கே எங்களுக்கு எதிரணி நின்று கொண்டு பல விஷயங்களில் மூக்கு நுழைத்து கொண்டு இருந்தது..........இடையில் நடைபெற்ற சண்டை வேறுவிஷயம் ஹிஹி!.......

நல்ல படியாக படம் முடிந்து திரும்பியாச்சி.......சில நாட்கள் கழித்து பணத்தை எடுத்து கொண்டு வந்தான் பஷீர்.......அதை கொண்டு போய் கொடுத்து செயினை மீட்டு வந்தோம்....அவளிடம் கொடுக்க என்னிடம் கொடுத்து விட்டார்கள் நண்பர்கள்........நானும் எடுத்து கொண்டு சென்றேன்....

அன்று நல்ல மழை......நன்றாக நினைவிருக்கிறது....மாலையில் அவளை சந்தித்து அந்த செயினை கொடுத்தேன்.........அவள் வாங்க மறுத்து விட்டாள்.......

என்னாச்சி கோச்சிகிட்டியா மஞ்சு....ஒரு வாரம் ஆயிருச்சி செயின திருப்ப சாரி ஹிஹி!


இல்லடா நீ இப்படி ஏதாவது பண்ணுவேன்னு தெரியும் அது தான் வீட்ல செயின் தொலஞ்சிடுசின்னு சொல்லிட்டேன்.......

அடிப்பாவி...ஏன் அப்படிப்பன்னே......பின்ன நீ செயின கொடுன்னு கேட்டுட்ட.....அப்புறம் என்ன பண்றது....பிரெண்ட விட செயின் பெருசாடா விடு...அத நீயே வசிக்க என்று கொடுத்து விட்டு சென்றாள் அந்த நண்பி...(ரொம்ப நாள் வரை அந்த ஜெயின் சாரி செயின் எங்களை காப்பாற்றியது ஹிஹி!)

கொசுறு: அவளுடைய திருமணத்துக்கு அந்த செயினய்யே கிப்டா கொடுத்தது தணிக்கத....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Sunday, April 24, 2011

கனகம்மா சத்திரம்...........!

வணக்கம் நண்பர்களே..........

சென்னையிலிருந்து திருத்தணிக்கு சாலை வழியாக செல்லும் மக்களுக்கு இந்த ஊரை நன்கு தெரியும்.......இந்த ஊரைப்பற்றி இதுவரை யாரும் பதிவிடவில்லை என்று நினைக்கிறேன்.......அப்படி எழுதியிருந்தால் இந்த பதிவை விட்டு விடுங்கள்........(....ப்பு ஹிஹி!)

நான் ஒவ்வொரு முறையும் என் சொந்த ஊருக்கு செல்லும் போது அணைத்து(!) செல்லும் ஊர் இது.........ஹிஹி!(பீர் நல்லா இருக்கும்!)..........இந்த ஊர் மக்கள் மிக அமைதியானவர்கள்...........இந்த ஊருக்கு ஒரு பெருமை உண்டு........அது என்ன என்றால்!.........இந்த ஊரின் சாலையில் இருபக்கமுண்டு.......அதாவது ஒரு பக்கம் ஊர் ஆந்திராவுக்கும் மறு பக்க ஊர் தமிழ்நாடுக்கும் உரித்தான பெருமை இங்கு உண்டு............(அப்படித்தான் நினைக்கிறேன்!)

பொதுவாக தெலுங்கு பேசும் நண்பர்கள் மிக அன்னியோனியமானவர்கள்........
பேசிக்கொண்டு இருக்கும் போதே சாப்பாட்டு விஷயத்தை கொடுத்து தின்றே ஆகவேண்டும் என்று வற்புறுத்தும் குணம் அவர்களிடம் உண்டு.... 

அவ்வாறு அடிக்கடி அந்த ஊருப்பக்கமா போய் வரும்போது ஒரு நண்பன் கிடைத்தான்.........அவன் ஒரு விவசாயி......சும்மா 6 அடி இருப்பான்.......என்ன சொன்னாலும் சிரிப்பான்.........ஹிஹி!...........நானும் அவனும் அடிக்கடி அங்கு சந்திப்பது தொடர்ந்தது.............வாரம் ஒரு முறை என் தாய் தந்தையை பார்க்க நான் செல்வது வழக்கம்...........

அவனுக்கு கடவுள் பக்தி நிறைய அதுவும்.........சாயிபாபாவின் மேல் அதிக நம்பிக்கை உள்ளவன்.......எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றாலும்......படித்த தத்துவ படிப்பு அடிக்கடி இடையில் வந்து என் மூளையை குழப்புவதால்........அந்த விஷயத்தில் பட்டும் படாமலும் இருந்து விடுவேன்......அதனால் பல நண்பர்களின் நட்பை இழந்திருக்கிறேன்(ஹிஹி!)...


அப்படி ஒரு நாள் அந்த வழியாக போகும்போது.......காரை நிறுத்திவிட்டு அவனுடைய கயித்து கட்டிலில் உட்காந்து பேசிக்கொண்டு இருந்தோம் அப்போது........கடவுள் பற்றிய பேச்சி வந்தது.....அப்போது அவன் சாயிபாபா பற்றி புகழ்ந்து சொல்லிக்கொண்டு இருந்தான்.......(நமக்கு எப்பவுமே நாக்குல சனி ஹிஹி!).......நான் எல்லாம் தெரிந்த பரதேசி போல......

"நண்பா......அவரு உண்மையில அப்படி இல்ல......எனக்கு சீரடி சாயி பாபாத்தான் உண்மைங்கரா மாதிரி தோணுது".....என்றேன்....

"அப்படியில்ல.....அவரு உண்மையில சீரடி சாயியோட மறு பிறவி".......என்றான்

"இந்த காலத்துல போயி மறுபிறவி பத்தி நம்புறியே" என்று நகைத்தேன்......

அவனுக்கு வந்துதே கோபம்........ "எந்திர்றா"(படம் அல்ல!) என்றான்.......

எனக்கு அப்படியே அறைந்தால் போலாயிற்று..."அது வந்து" என்றேன்.......

நீ ஒன்னும் சொல்ல வேணாம் கெளம்பு என்று சொல்லி விட்டான்.........

எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் அவன் அனுமதிக்க வில்லை....


அன்றுடன் அந்த அப்பாவி நல்ல நண்பனை நான் இழந்ததாக ரொம்ப நாள் வருந்தி இருக்கிறேன்...

கொசுறு: நண்பர்களிடம் பேசும்போது அவர்களுக்கு எது பிடிக்கும் என்று அறிந்து பேசுவது நல்லது...இல்லையேல் நல்ல நட்புகளை இழக்க நேரிடும்....உங்க கருத்துகளை கொட்டுங்க(என் தலையில் அல்ல ஹிஹி!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment