Followers

Friday, September 30, 2011

மீண்டும் நான்...

வணக்கம் நண்பர்களே....

காணமல் போன உலகம் மீண்டும் உங்கள் பார்வைக்கு வந்து விட்டது.....இனி

http://www.vikkiulagam.blogspot.com/ ....உங்களுக்கு ஏற்ப்பட்ட சிரமங்களுக்கு மன்னிக்கவும்....

நன்றி 

விக்கி 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Saturday, September 24, 2011

எரிச்சலூட்டிய பதிவர்!(நீயெல்லாம்!)

வணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு!) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன ஸ்டார்ட் ஆயிரம் ச்சே ஆயிடும்...பலருக்கு அறிவுரை(அட்வைஸ்!) கொடுக்குறேன்னு தடால்னு இறங்குவாங்க...அதுவும் தங்களுக்கு புரிஞ்சிதோ இல்லையோ...எல்லாமே தெரிஞ்சாப்போலையே அடுக்கிட்டு போவாங்க....


இதுவும் அப்படிப்பட்ட ஒரு பதிவுலக மேதையின்(!) உண்மை வாழ்கையில் நடந்த காதை(கதை அல்ல!)...

சமீபத்தில் ஒரு பதிவர் தன் மனக்குமுறலை பதிவாக வெளிப்படுத்தி இருந்தார்...அதை அவர் முழுவதுமாக வெளிப்படுத்தியிருந்தால் இன்னொரு பதிவரின் டங்குவார்(!) அறுந்திருக்கும்...யாரு செய்ஞ்ச புண்ணியமோ பெயரை வெளிப்படுத்தாமல் விட்டு விட்டார்...அந்தப்பதிவை போட்டு விட்டு அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை...

உண்மையில் நடந்த்தது என்ன...விசாரணையில் இறங்கினோம்(ஹிஹி!)...


பதிவை இப்படி போடலாம்...அப்படி போடலாம்னு தான் சொல்லி கேள்வி பட்டு இருக்கோம்...ஆனா நம்ம நண்பர் சொன்னது இருக்கே யம்மாடி...இந்த நேரத்துக்கு நீங்க பதிவ போடுறதால எனக்கு வாசகர் வருகை(!) கம்மியாயிடுது(ஹிஹி!)...அதனால நீங்க இந்த நேரத்துல பதிவு போடாதிங்க....அந்த நேரத்துல(!) போடுங்க(நொந்த நேரத்திலியா டவுட்டு!)....உங்க பதிவுல ஏன் இப்படி சாதாரண போட்டோ போடுறீங்க...அசத்தலா ஸ்பெஷல்(!) போட்டோ போடுங்க...என்றாரே பார்க்கலாம்...அதுவும் இல்லாமல் பல அறிவுரைகளை அள்ளி தெளித்திருக்கிறார்...(முடியல முடியல!)..


இதில் கொடுமை என்னவென்றால் இந்த விஷயங்களை மேற்ப்படி பதிவர் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை...ஏனெனில் கிட்ட தட்ட 47(!) ஈ மெயில்களை அனுப்பி டார்ச்சர் செய்த்திருக்கிறார் நம்ம(!) நண்பர்....இதனால் தன் பொறுமையை இழந்த பாதிக்கப்பட்ட பதிவர்...

போங்கடா நீங்களும் உங்க அட்வைசும் என்று சொல்லி கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் பக்கமே வர வேண்டாம் என்று முடிவெடுத்து ஒதுங்கி விட்டார்.....இருந்தும் மனது தாங்காமல் இந்த கொடுமையை ஒரு பாவப்பட்ட பதிவரிடம்(!) சொல்லி என்ன செய்வது என்று கேட்டே விட்டார்...அதற்க்கு அந்த பாவப்பட்ட பதிவரும்...விடுங்க நான் பேசி புரிய வைக்கிறேன் என்று சொன்னதாக கள நிலவரம் சொல்கிறது....

இதிலிருந்து புலனாவது என்னவெனில் சிலருக்கு பதிவுலகம் எனும் போதை தலைக்கேறி பைத்தியக்கார நிலையில் கொண்டு விட்டிருக்கிறது...

கொசுறு: இது பாதிக்கப்பட்ட பதிவருக்கான பதிவல்ல இனி யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற ஆற்றாமையே...முடிந்த வரை அடுத்தவரை தன் வழிக்கு கொண்டுவர முயற்சிக்காதீர்கள் என்ற சிறு தகவலுடன் விடை பெறுகிறேன் நன்றி!....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

என்றா இன்னைக்கு கிச்சளிக்காஸ்ல - 24.9.11

வணக்கம் நண்பர்களே....


சோர்ந்து இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஒரு பேட்டை ராப்....


தோனிக்கு ஒரு ஞாபகப்படுத்தல்....

ஒரு Programmer இன் வாய்ஸ்....

தள்ளு வண்டிக்கொரு கள்ளு வண்டி....

அய்யா சாமி நான் இல்லீங்கோ....இது கவுண்டர் வேலைங்கோ.....
இப்போதைய தேர்தல் ஸ்பெஷல்....

Last But not least....


கொசுறு: எப்படி கலக்கிட்டோம்ல...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வியட்நாமிய பொழுதுகள்...!

வணக்கம் நண்பர்களே.........இந்த முறை உங்களை அழகான இடத்துக்கு அழைச்சிட்டு போகப்போறேன்..........வியத்னாம் அழகுக்கு உங்களை அழைக்கிறேன்......

இந்த இடத்துக்கு பேரு ஹாலாங்............இது ஒரு அழகான சுற்றுலாத்தலம்.......இங்க 1960 திட்டுக்கள் இருக்கு..........இது பல கனிமங்கள் இருக்கும் இடம்........ஆனால் இந்த அரசாங்கம் இந்த இடத்த பத்திரமான இடமாக பாதுகாத்திட்டு வருது..........


இந்த இடம் வடக்கு வியத்நாமில் தலைநகரம் ஹனோயில் இருந்து 155 கிமீ தூரத்தில் இருக்கிறது...........அழகான இந்த இடத்திற்க்கு வெளிநாட்டை சேர்ந்த பல சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள்............


பலர் தங்கள் ஹனிமூனை இங்கு முன்கூட்டியே புக் செய்து வைத்திருக்கிறார்கள்........படகு வீடு இங்கு சிறப்பானது.........நானும் என் குடும்பமும்(ஒரு மனைவி ஒரு மகன்!) இங்கு இரு நாள் தங்கி இருந்தோம்.......


அமைதியான இந்த இடமும் சுற்றிலும் அழகான தோற்றமுடைய திட்டுக்களும் கண் கொள்ளாக்காட்சி........


ஹலோங்கில் இருக்கும் குகை மிக சிறப்பான ஒன்றாகும்.........பவழங்கள் இருக்கும் குகை இது.............பல போர் காலங்களில் இதன் உள் இருந்து கொண்டு சீனர்களை ஓட விட்டுள்ளனர்..........
இந்த படகில் வரும் வெளி நாட்டவர் இங்கு நீச்சலடிக்க மிகவும் விரும்புவர்........


பல நாட்டு மக்கள் வந்து போகும் இடம் இந்த ஹாலாங்............


படகுல வந்து வியாபாரம் பண்ணுவாங்க...............


உங்களுக்காக...


இப்படி சாப்டு இருக்கீங்களா மக்களே...


கொசுறு: என்னய்யா இது இந்த அளவுக்கு அழகா இருக்கு ஊரு(!)....உயிருடனான உணவுடன் ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, September 23, 2011

வேட்டைக்கார வேம்பு!

வணக்கம் நண்பர்களே....

இவர தெரியும்ல....


இன்னைக்கு நம்ம நடைமுறை அரசியல் சொல்லி இருக்கேன்...

இது யாரு....


இது யாரின் நிலை...நீங்களே முடிவு பண்ணுங்க....


அண்ணனின் நிலை இப்படி இருக்க காஞ்சிபுரத்தில் இருக்கும் நண்பர் குமுறினார் இப்படி...

மாப்ள...இப்பத்தான்யா அடிச்சி புடிச்சி ஒரு நிலைமைக்கு வந்தேன்...நெறைய இழந்திட்டேன்....இப்போ தனியா நிக்க போறோம்னு தலைவர் சொல்லிட்டாரு மறுபடியும் முதல்ல இருந்தா கண்ண கட்டுதுய்யா....

கொசுறு: அதுக்கு தான் சொல்றது சரக்கடிக்கரதுக்கெல்லாம் தலைவன சேத்துக்ககூடாதுன்னு ஹிஹி! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இந்த மாதிரி இருந்தா நல்லா இருக்குமே(தப்பாய்யா!)

வணக்கம் நண்பர்களே...

  

கொஞ்ச நாளைக்கு அரசியல் பக்கமா போறது குறைஞ்சி இருக்குது....சரி சொந்த புராணங்களை சொல்லலாமேன்னு தான் இன்னைக்கும்(!) முடிவு பண்ணிட்டேன்....விஷயம் என்னனா...

கொஞ்ச நாளுக்கு முன்னாடி நம்ம நாட்டுல இருந்து ஒரு அய்யா இங்க வருகை புரிஞ்சி இருந்தாரு...அதுவும் முக்கியமான விஷயங்களில் இரு நிர்வாகத்துக்கும் நல்லிணக்கத்துடன் செயல்பட விரும்பி வந்து இருந்தாரு....பக்கத்து வீட்டுக்காரன்(சைனா!) தொல்ல தாங்க முடியாத இந்த ஊரு ஆளுங்களும் நம்ம அய்யாவ விரும்பி வரவேற்றாங்க....


எப்படியெல்லாம் ஒன்றினஞ்சி நல்லுறவுடன் முன்னேற்ற பாதையில் போறதுன்னு பேசிகிட்டாங்க...நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல...


பெரிய கையேந்தி பவன்ல(!) விருந்து ஆரம்பமாச்சி....எல்லாரும் கையில ஒரு பிளேட்ட வச்சி கிட்டு லைன்ல நின்னு என்ன தேவையோ அதை எடுத்து கிட்டு நகர ஆரம்பிச்சாங்க...இந்த மாதிரி சாப்பாடு கொடுமை பிடிக்கலன்னாலும், வேற வழி இல்லாம நானும் வரிசையில போயிட்டு இருந்தேன்...பிளேட்ட எடுத்துகிட்டு...கும்பலா இருந்த இடத்த நோக்கி போயி பாத்தா....


அவர சுத்தி பலர் நின்னுகிட்டு வழிஞ்சி கிட்டு இருந்தாங்க....சரி நாம ஒரு ஓரமா நின்னு என்ன நடக்குதுன்னு பாக்கலாம்னு பாத்தேன்...வந்தவங்கள்ல பலர் அவரோட கால்ல விழுந்து கும்பிட்டு போனாங்க...எனக்கு நம்ம நித்தி அல்லது சித்தி (மம்மி!) ஞாபகமா வந்துது...என்றா இது கொடும்மன்னு பாத்தா எல்லோரும் எதோ ஒரு ஆதாயத்தோடத்தான் விழறாங்கன்னு மட்டும் புரிஞ்சிது....

என்கூட இருந்த ஒரு நண்பர் பாருய்யா இந்த வயசுல என்னமா இருக்காரு அப்படின்னு சொல்றது காதுல விழுந்துது...நானும் அடக்கி வாசிச்சிட்டு இருந்தேன்(அமைதியா இருந்தேங்க!)...ஒவ்வருதரா அவர் கிட்ட தங்கள அறிமுகம் செய்ஞ்சிகிட்டாங்க...பாவம் மனுஷன் கையில ப்ளேட்டோட வாயில உணவோட(!) அவங்களுக்கு கை கொடுக்க முடியாம திண்டாடிகிட்டே ஹாய் சொல்லிக்கிட்டு இருந்தாரு...


இவரு வர்ற நேரமா பாத்து சீனாக்காரேன் ONGC பிரச்சனைய வேற கெளப்பி விட்டுட்டான்....அதாவது வியட்நாமிய கடல் எல்லையில் இருக்கும் பெட்ரோலிய வாயுவை எடுக்க இந்தியா ஒப்பந்தம் போட்டு இருக்கு...இதனை ஆரம்பிக்கும் நேரத்தில் இது எங்க ஏரியா உள்ள வராதன்னு சீனாக்காரேன் வம்பு பண்றான்...ஆனா இது உன்னோட எல்லையில்ல பேச்சி பேச்சாத்தான் இருக்கணும் பார்டர தாண்டி நானும் வரமாட்டேன் நீயும் வரக்கூடாதுன்னு இந்தியாவும் இந்த நாடும் கூட்டறிக்கை விட்டு இருக்காங்க....  


இந்த நிலமையில தான் அய்யாவோட விசிட் முக்கியத்தும் பெற்றது...இப்படி போயிட்டு இருந்த விருந்துல ஒருத்தரு மறுபடியும் இந்த வயசுல என்னமா கலக்குறாரு அய்யான்னு சொன்னாரு...அதுக்கு இந்த பக்கி(நாந்தேன்!) 


"ஏன்யா இவருக்கே இப்படி கால்ல விழுந்து கும்புடுரீங்களே...பாக்கி லேடி மாதிரி ஆள் நம்ம நாட்ல இருந்து வந்தாங்கன்னா உங்க கும்புடு எப்படி இருக்கும்னு சொன்னேன்(ஹிஹி!)...எல்லா நாட்டுக்காரனையும் ஈசியா பேசியே சமாளிச்சிபுடலாம்...சீக்கிரத்துல எதிர்த்து பேச மாட்டாங்க அப்படின்னும் சொன்னேன்..(சரிதானுங்களே!)....நண்பர்கள் என்னைய ஒரு முறை முறைச்சாங்க பாருங்க(சர்ரா விடுங்கடா!)....

கொசுறு: நல்ல வேலை அந்த அய்யா காதுல விழல ஹிஹி!...இது ஒரு கதம்ப பதிவு அதனால இப்படி இருக்கு!  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, September 22, 2011

கிச்சிளிக்காஸ் - 22.9.11

வணக்கம் நண்பர்களே...


எப்ப பாரு பெரிய மனுசனாவே யோசிக்கனுமா.....ஹிஹி..பாட்டு எப்படி இருக்கு...


ஓல்ட் இஸ் கோல்டுன்னு சொல்லுவா....


என்னவெல்லாம் கேட்டேன் நான்.....

வாடி செல்லம் மைக்கேலு உன்னைய மட்டும் விட்ருவமா....


last but not least....கொசுறு: இவை என் சொந்த சொத்துக்கள் அல்ல....அனைத்தும் கடனே...ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இப்படியும் ஒரு தாய்!

வணக்கம் நண்பர்களே...


ஒரு குழந்தைக்கு பெற்றோர் கொடுக்கும் மிகப்பெரிய சொத்து ஆரோக்கியமான உடல் மட்டுமே என்பது என்தாழ்மையான கருத்து...அதன் பின் அந்த குழந்தையின் ஆரம்பம் முதல் நல்ல நிலைமைக்கு வரும்வரையில் அந்த பெற்றோரின் பங்கு சொல்லி மாளாது....அப்பேர்ப்பட்ட பெற்றோர்களை உதறும் பிள்ளைகள் இந்தக்காலத்தில் பெருகி வருகிறார்கள்....நடைமுறைக்கு ஏற்றாற்ப்போல தங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களை இந்த சமூகம் ஒதுக்கி வைத்து விடுகிறது...அதை பற்றிய மாறுதலான பதிவு இது...


மதி தைரியம் மிக்கவள்...சிறுவயது முதல் தன் சொந்த உழைப்பில் வாழ வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டவள்...இதனால் பலரால் அகந்தை கொண்டவள் என்று புகழாரம் சூட்டப்பட்டவள்(!)...வறுமையின் பிடியிலும் பாதை மாறாது ஓடிக்கொண்டு இருந்தாள்...அந்த நேரத்தில் அவளுக்கு வந்த ஆசிரியை உத்தியோகத்தில் அமர விரும்பினாள்...ஆனால் வீட்டில் 6 பெண்களில் இரண்டாவதான காரணத்தாலும், பண நெருக்கடியாலும் திருமணம் முடித்து அனுப்பினால் போதும் என்று அவள் தந்தை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தார்...

கணவன் 5 வது வகுப்புவரை படித்தவர்....மதியோ அந்தக்காலத்து PUC(!)...முதல் படிப்பு விஷயத்தில் சிறியதாக ஆரம்பித்த மன சஞ்சலம்...போகப்போக அதுவே  முரண்பட்ட வாழ்கையாகிப்போனது (!)... இருந்தாலும் சகித்து செல்லும் மனப்பாங்கு இருவரிடமும் இல்லை....காலம் அவர்களை கடந்து சென்று கொண்டு இருந்தது....பெற்றது இரு மகன்கள்...இருவரும் நல்ல வேலை கிடைத்து சம்பாதிக்க ஆரம்பித்து இருந்தனர்...மதியின் கணவர் சிறு சண்டையால் தன் சொந்த ஊருக்கு சென்று விட்டார்...இனி உன் முகத்தில் விழிக்க விரும்ப வில்லை என்று இருவரும் இறுமாப்புடன் இருந்தனர்...திருமணம் நடந்தது பெரியவனுக்கு தந்தை எங்கே என்று கேட்டு அசிங்கமாகக்கூடாது என்று வந்து சேர்ந்தார் அந்த மனிதர்...திருமணம் முடிந்தவுடன் சென்றுவிட்டார்...

ஆனால், கொஞ்ச நாளில் கூட்டு குடும்பத்தின் அழகை கண்டு மீண்டும் குடும்பத்துக்குள் வந்தார்...ஈகோ பெரியதாக போய் கொண்டு இருந்தது இருவருக்கும்...பேசாமல் இருந்தவர்கள் கொஞ்ச கொஞ்சமாக சண்டையிட ஆரம்பித்தனர்...மதியின் தங்கையோ(!) கூட்டு குடும்பத்தை கெடுக்க தன்னால் முயன்றதை செய்தாள்(!)...பெரிய சண்டையாகி அதனால் மதியின் மகன்களுக்கு இடையில் அடிதடி அளவுக்கு போனது....


யார் யாரை வைத்து கொள்வது என்று பஞ்சாயத்து ஆரம்பமானது...அண்ணன் தாயையும், தம்பி தந்தையையும் வைத்துக்கொள்வதாக முடிவான நேரத்தில் மதியின் தங்கை நடுவில் புகுந்து இதை கோர்ட் முடிவு செய்யட்டும் என்று சொல்லி வீட்டு விவகாரத்தை கோர்ட்டுக்கு இட்டு சென்று விட்டாள்...

கோர்ட்டில் மதி எனக்கு இரு ஆண் மகவுகள்...எனக்கு ஆண் என்றாலே வெறுப்பாக உள்ளது...என் தலையெழுத்து எனக்கு பெண் இல்லை என்று நினைக்கும் போது அழுகையை அடக்க முடியவில்லை...நான் இவர்கள் யாருடனும் இருக்க பிடிக்க வில்லை எனவே எனக்கு சரியான பாதையை நீங்களே சொல்லுங்கள் என்று சொல்லி விட்டாள்...


கோர்ட் மதிக்கு முதியோர் இல்லத்தை காட்டியது...அங்கு மாதம் 10,000 ருபாய் (5000 X 2)அளித்து பாது காக்கும்படி இரு மகன்களுக்கும் நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது...மதியின் கணவருக்கு எந்த வித சொத்தும் இல்லாத காரணத்தால் அவருக்கும் தனியே அவ்வாறே அளிக்க உத்தரவிட்டுள்ளது....மகன்கள் எவ்வளவு கெஞ்சியும் எதுவும் நடக்க வில்லை...இறுதியில் மதி ஒரு இல்லத்திலும், அவளின் கணவர் ஒரு இல்லத்திலும்...


இன்று தனிமையில் அவள் தன் தொலைந்து போன வாழ்கையை அசை போட்ட வண்ணம்...

கொசுறு: இதில் பல விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை...ஏனெனில் இந்தப்பதிவையும் வாசிப்பார்கள் அந்த நண்பனின் தாய்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

கிச்சிளிக்காஸ் - மிலிடரி 22.9.11

வணக்கம் நண்பர்களே....இந்த மாதிரி ஆனா என்ன பண்றது.....


ரிபீட்டு....


திடு திப்புன்னு இப்படி ஆனா....


அடங்க மாட்டீங்களா...


மிலிடரி பெண்கள்....


இன்றையோ ஷோ எப்படி இருந்தது மக்களே....

கொசுறு: இது ஒரு ஹியூமர் பதிவு மட்டுமே...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, September 21, 2011

பதிவுலகில் அரசியல்வாதிகளின் அணி வகுப்பு!

வணக்கம் நண்பர்களே....


இந்த பரந்த பதிவுலகில் நீங்கள் நினைப்பதை சொல்ல ஒரு சந்தர்ப்பம்....பதிவுலகில் அரசியல்வாதிகளாக நீங்க நினைப்பவர் பெயரை சொல்லலாம்...இது ஒரு ஜாலி பதிவு....எனவே மனக்கசப்புகளை தள்ளி வைத்து விட்டு ஜாலியாக குறிப்பிடவும்....

பதிவுலக ஜெ யார்...

கலைஞ்சர் ....

வைகோ....

விஜயகாந்த்...

ராமதாஸ்....

திருமா.....

சுவாமி....etc...


இதுக்கு மேலே நீங்களே யோசிங்க...நேரிடையா குறிப்பிட விரும்பாதவங்க உள்குத்தா சொல்லுவாங்கன்னு நெனைக்கிறேன் ஹிஹி...கொளுத்தி போட்டாச்சி...சீக்கிரத்தில் பதில்கள் கொடுப்பீங்கன்னு நினைக்கிறேன்.....ஹிஹி...

கொசுறு: ஜாலிலோ ஜிம்கானா....இப்போதைக்கு மாநிலம் மட்டுமே...இது ஒரு என்னவோட்டமே...(பம்முவது ஏனோ!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

விரதமிருக்கும் நண்பிகளே(நண்பர்களே!)...

வணக்கம் நண்பர்களே....


பல தொடர்களை ஆரம்பித்து(!) அதனை பாதியில் நிறுத்தி வைத்து வேதனைப்படுவதே(!) வாடிக்கையாகிப்போய் விட்டது எனக்கு....இப்படி என் கருத்து சுதந்திரத்தில் தலையிடும் பெண்ணாதிக்க வாதியை(!) என்ன செய்யலாம்(ஹிஹி!) யுவர் ஆனர்!(யம்மாடி சப்பாத்திக்கட்டை என்னை நோக்கி வருது டோய்!)....நாங்க வாங்காத அடியா...முடியல முடியல...எந்தப்பதிவு டைப்பினாலும்(!) முதல் வாசகியின் தொல்லை காரணமாக நான் ஒரு வட்டத்தில் உட்க்கார வைத்த சிங்(சிங்கம் அல்ல!) ஆனேன்....

சொந்தக்கதைய விட்டுத்தள்ளுவோம்(உள்குத்து!)....நான் சொல்ல வந்தத கேளுங்க என் சொந்தங்களே....


என்னை பொறுத்தவரை விரதம் என்பது உடலை சரியாக பாதுகாப்பதற்க்காக நம் முன்னோர்களால் நமக்கு பழக்கப்படுத்திய விஷயமாகும்...அதனை நேரடியாக சொன்னால் நாம் எங்கே செவி மடுக்காமல் போய் விடுவோமோ என்று நினைத்தே(!)...கடவுளின் துணை கொண்டு சொல்லி இருப்பார்கள்...எதோ வாரத்தில் ஒரு நாள் விரதமிருப்பவர்களை கண்டு இருக்கிறேன்...

சிலர் வாரம் முழுவதும் எதோ ஒரு காரணம் கொண்டு விரதம் இருக்கிறார்கள்(நமக்கு ஒரு வேலைக்கே ஹிஹி!)...கேட்டால் இந்த கிழமை அந்த சாமிக்கு...அந்தக்கிழமை இந்த சாமிக்கு என்று சொல்கிறார்கள்...சரிங்க யாருக்காக இந்த விரதம்னு கேட்டா...எல்லாம் என் கணவர் மற்றும் குழந்தைகளுக்காகத்தான் என்று சொல்கிறார்கள்....


ஏம்மா வாரம் முழுசும் மாவாட்டும்(ஹிஹி!) கணவருக்காக நீங்க விரதம் இருக்கறது சர்தான்னாலும்...அதுக்காக உங்க உடம்பை நீங்களே கெடுத்துக்கறது ஞாயமா....ஏன்னா காலை உணவு எடுக்காதவர்களுக்கு சீக்கிரத்தில் Low BP - குறைந்த ரத்த அழுத்தம் ஏற்ப்பட வாய்ப்பு அதிகமா இருக்கறதா மருத்துவர்கள் ஆராய்ச்சி பண்ணி சொல்றாங்க...அதுவும் முக்கியமா ஆண் நண்பர்களும் காலை உணவை தவிர்ப்பதை தொடர்ந்து காண முடிகிறது....

வீட்ல லேட்டா எழுந்து அடிச்சி பிடிச்சி கிளம்புற நேரத்துல...இந்த உணவுங்கர முக்கியமான விஷயத்த வேண்டா வெறுப்பாக தள்ளிப்போட்டு செல்லும் நண்பர்கள் பலரை நான் பார்த்து இருக்கேன்...காலையில் நேரத்தில் எழுந்து காலை உணவை தவிர்க்காமல் உண்டு செல்லுதல் நலம்...முக்கியமா பெண்கள்....

அதுவும் சில வீடுகளில்...ஆண்களின் கேள்வியே...இப்படி இருக்கும்....(நானும்தேன்!)

உனக்கென்னம்மா நான் கெளம்பி போயிட்டா ஹாயா டிவியோட செட்டில் ஆயிடுவேன்னு...

உண்மையில் ஆண்கள் கிளம்பிய பின்தான் வீட்டில் பல வேலைகள் பெண்களுக்கு ஞாபகம் வருகின்றன என்பது என் கருத்து...இருக்கும் அத்தனை சுத்தப்படுத்தும் வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பிக்கிறார்கள்....அந்த நேரத்தில் ஒரு சிறிய காப்பியை(coffee!) மட்டுமே துணைக்கு கொண்டு செயல்படும் இவர்கள் காலை உணவை மறந்தே போகின்றனர்...


வேண்டாமே இந்த நிலைமை...இதன் மூலம் ஏற்ப்படும் பல உடல் உபாதைகள் நேரத்துக்கு உணவு உண்ணாமல் வருவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்(அல்சர் உற்பட!)...நீங்களும் கஷ்டப்பட்டு யாருக்காக விரதமிருக்கிறேன் என்கிறீர்களோ அவர்களையும் மருத்துவமனைக்கு அலைய விடுதல் தேவையா என் சகோதரிகளே....முடிந்த வரை இதை மட்டுப்படுத்தப்பாருங்கள்...


நன்றி....

கொசுறு: இந்த பய புள்ள(!) வீட்ல சரியா வாங்கிபுட்டு இங்க வந்து அட்வைஸ் பண்றானான்னு நெனைக்காதீங்க(ஹிஹி!)...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, September 20, 2011

கிச்சிளிக்காஸ் - 20.9.11

வணக்கம் நண்பர்களே....அப்படிப்போடு போடு போடு.....


சாமி முடியல....


டான்ஸ்.....


கொசுறு:
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

இது ஒரு டீசன்டான பதிவு ....!

வணக்கம் நண்பர்களே....


இந்த தலைப்பை வைக்கும்போதே நிரம்ப யோசிச்சேன்...என்னடா இது ரொம்ப அழகான(அருவருப்பான!) தலைப்பா இருக்கேன்னு.....சரி விடுங்க பல நண்பர்கள் இப்படியெல்லாம் தலைப்பு வைக்கும் போது....உதாரணத்துக்கு....

கில்மா சாமியாரின் டைரி

காலையில இத புடிக்கலாமா...

உங்களுக்கு அது பெருசா இருக்குதா....

திரிசா உதடு வேணுமா....

போற போக்க பாத்தா....அடுத்த வீட்டு கிழவி ##### வந்தது எப்படின்னு கூட தலைப்பு வைப்பாங்க போல....சரி விடுங்க நண்பரா பூட்டாங்க எதுக்கு வம்பு(!) அப்புறம் இவன் வயித்தெரிச்சல் படறான்....இந்த மாதிரி தலைப்பு வைச்சாத்தான் மக்கள் படிக்க வருவாங்கன்னு சொல்லுவாங்க...விஷயத்துக்கு வர்றேன்...


கொஞ்ச நாளைக்கு முன்னாடி(!) வீட்ல இருந்த வயசான பாட்டி செத்து போயிட்டாங்கன்னு என் மனைவி எனக்கு போன் பண்ணி சொன்னாங்க....அந்த பாட்டிக்கு வயசு ஆடி வந்தா(ஓடி வந்தா மூச்சு இரைக்கும்!) 93 அப்படின்னு சொன்னாங்க...பாவம் பாட்டி குறைஞ்ச வயசுல போயிட்டாங்களேன்னு எல்லோரும் கவலைப்பட்டாங்க...நானும் சரி அந்த பாட்டிக்கு செய்ய வேண்டிய கடமைகள செய்ஞ்சிடுன்னு என் மனைவிக்கு சொன்னேன்...அந்த பாட்டி என் மனைவியின் அப்பாவின் தாய்(!).....

விஷயம் என்னன்னா....சொந்தக்காரங்களுக்கு எல்லாம் தொலைபேசி மூலமா சேதி சொல்லிட்டாங்க....அதுவும் ரெண்டு வருசமா எழுந்து உக்கார முடியாம இருந்தவங்க...எல்லா பணிவிடையும் செய்த மருமகளுக்கு பெரிய மனசுதான்(மை மாமியார்தான் அந்த மருமக!)....இந்த காலத்துல இந்த அளவுக்கு பொறுமையோட பணிவிடை செய்வாங்களா தெரியல(திட்டாதீங்க!)....


இந்த நெலமையில சொந்தக்காரங்க எல்லாம் அடிச்சி பிடிச்சி வந்து சேந்தாங்க...திடு திப்புன்னு படுத்திட்டு இருந்த பாட்டி கண்ணு முழிச்சி(!).....

"ஏன்டி என்னை சுத்தி உக்காந்து அழுகுரீங்கன்னு"...கேட்டுச்சி...

எல்லோருக்கும் தூக்கி வாரிப்போட்டுது....அப்பத்தான் இவங்களுக்கு புரிஞ்சிருக்கு பாட்டி இன்னும் கிளம்பல.....4 மணி நேரமா மயக்கத்துல இருந்திருக்குன்னு...அதுவும் உடம்பெல்லாம் சில்லிட்டு போயிருந்ததால இவங்களா முடிவு பண்ணிட்டாங்க போல.....

வந்தவங்க அதுக்கு மேல காமடி பண்ணியது தான் ஹைடெக்!....


எல்லோரும் உக்காந்து அந்த பாட்டியின் சொத்து மற்றும் பணம்(!) பிரிப்பதை பற்றி கார சாரமா விவாதம் வேறு போயிட்டிருந்திருக்கு!....தவறா செய்தி சொல்லி அநியாயத்துக்கு ஆட்டோக்காரனுக்கு செலவு பண்ண வச்சிட்டீங்க...மரியாதையா அந்த துட்ட கொடுத்திடுங்க...கொய்யாலன்னு ஒரே தள்ளு முள்ளு....அந்த பேச்சுக்களை வெளியிட முடியாது!...! 


இதை கேட்டு என்ன நெனைக்கிறீங்க நீங்க....அய்யோ அய்யோ!....அந்த பாட்டி அதுக்கு அடுத்து ரெண்டு மாசம் கழிச்சி சிவனடி சேர்ந்தாங்க...

கொசுறு: சொந்த அனுபவங்களை பகிர்வோர் சங்கம்(ஹிஹி!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment