Followers

Tuesday, May 31, 2011

புத்சா வரும் பதிவர்களே........!

வணக்கம் நண்பர்களே.........


இந்தப்பதிவு......நம்ம பதிவுலகத்தில் இணைந்து கொண்டு இருக்கும் புதிய பதிவர்களுக்கு என்னோட வாழ்த்துக்கள சொல்லிக்கிட்டு......அப்படியே கொஞ்சம் புரிய வைக்க வேண்டிய விஷயங்களுக்குமான பதிவு இது.......(ஹிஹி!)...........

நண்பர்களே........இந்த பதிவுலகம் ஒரு காட்டாறு(மோட்டாரு அல்ல!) மாதிரி........அதனால நீங்கள் வந்த உடனே சேந்துக்கலாம்(அடிமை சிக்கிட்டான் ஹிஹி!)......ஆனா உங்க கருத்துக்கள திணி திணின்னு திணிக்கனும்..........அத தான் உண்மையில கருத்து திணிப்புன்னு சொல்லுவாங்க.........(அப்பாடி கருத்து சொல்லிட்டேன்!)


நாலு கூட்டாளிகள உருவாக்கிகங்க.........அப்பத்தான் கும்ம முடியும்......இந்த கும்மி மூலமா பலரோட வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்........அப்போ தான் கண்ணு மண்ணு தெரியாம உங்களால பதிவு போட முடியும்.......

அப்புறம் கமன்ட் ரொம்ப முக்கியம்....முடிஞ்ச வரைக்கும் பதிவுக்கு சம்பந்தமில்லாம கமன்ட் போடுங்க.......அதத்தான் இப்போ இருக்க நவீன மனுசங்க ஒத்துப்பாங்க..............என்னதான் உங்க கருத்த சொல்ல வர இடமா இருந்தாலும்....புதுசா பாத்த பிகருக்கிட்ட ஒப்பிக்கிறா மாதிரி ஒப்பிக்க கூடாது.......அத வச்சே உங்களுக்கு சூனியம் வெப்பாங்க.....(சிபி உன்ன சொல்லல!)


இப்போ என்னை பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு வருது........பாருங்க...........உங்க பதிவுக்கு வந்து பாத்த உடனே ஏன் follower ஆகிடறேன் தெரியுமா.........ஏன்னா புத்சா ஒரு ஓட்டு... கூட கெடைக்காதா(மானம் கெட்ட பொழப்புன்னு சொல்லிப்பாங்க பெரியவங்க!) ........அப்படியே நாலு பேரு புத்சா வந்து நம்ம பதிவ பாக்க மாட்டாங்களான்னு ஒரு நப்பாசை.......

நீங்க என்னமோ உங்க பதிவ பாத்து impress ஆகி சேர்றேன்னு நெனசிடப்போறீங்க(அய்யோ அய்யோ!)..........அதே நேரம் நீங்க பிரதி உபகாரமா என் ப்ளோக்ல சேர்றது கட்டாயமாகுது.......ஆனா உங்களுக்கு ஏன் அது இன்னும் புரியல.........please note this points!.........நான் சரியாதான் பேசுறனா.......ரைட்டு.......


அப்புறம் நீங்க சட்டு புட்டுன்னு பெரியாளா வரணும்னா சிபின்னு ஒரு பய இருக்கான்........யாரு கொண்டு போய் அடிச்சாலும் தாங்குவான்...........அவன ஒரே கிழி..........கிழிச்சி பதிவு போடுங்க..........இல்லைன்னா இன்னொருத்தன் இருக்கான் பேரு மனோ.......இவன் பதிவு போடுறத விட கமண்ட்டு போடுறது பாவமா இருக்கும்!...........இவனையும் கிழிங்க..........அப்ப தான் ஊரே உங்கள கொண்டாடும்.........இந்த வழில நான் இல்ல.........ஏன்னா நானும் உங்கள போல ஜூனியர்........!

அப்புறம் இந்த கதை, கவிதை போடுங்க, நெறைய மொக்கை போடுங்க....தலைப்புக்கு சம்பந்தமே இல்லாம பதிவு போடணும்.....கடைசில ஏமாந்திங்கலான்னு சொல்லிக்கணும்(!)..........அப்பிடியே காப்பி அடிச்சி பதிவு போட்டீங்கன்னா............உங்க சொந்த மூலையில இருந்து சில கருத்துக்களயும் தெளிங்க........அப்போ தான் எல்லாருக்கும்.....நீங்க இருக்கறது தெரியும்........


சில பேரு சில விதம்..........பல பேரு பல விதம்...........அதனால நீங்க எந்த விதம்னு யோசிச்சிகங்க ...........இருக்குற பத்திரிகைங்க சைட்ட எல்லாம் நுனு விரல்ல இருக்கணும்.......அப்பத்தான்.......பல பதிவுகள் தேத்த முடியும்.......

நீங்க என்னதான் நல்லவரா இருந்தாலும் கெட்டவன்(நான் அவன் இல்லை!) கணக்கா கொஞ்சம் பதிவு போடணும்...அப்பத்தான் உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்குன்னு அர்த்தம் இல்லைன்னா கும்மிடுவாங்க.....

கொசுறு; மன்சூ அடிசிகிச்சிபா அதான் சொல்லிபுட்டேன்....ஹிஹி!.......
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பெண்களின் திருமண வயது என்னவாக இருக்கவேண்டும்?

வணக்கம் நண்பர்களே.......பெண் என்று சொல்லும் போதே ஒரு வித பாசம் வெளிப்படும்......ஏனெனில், ஆணின் கடமை என்பது..........பொருளாதாரம் சம்பந்தபட்ட விஷயத்தையே பெரிதும் சார்ந்து இருக்கும்......அதுவே பெண் என்பவள் தாயாய், தமக்கையாய், நண்பியாய் பல உருவங்களை கொண்டு இருக்கிறாள்.........

ஆனாலும், இன்னும் சரி நிகர் சமானமான மனப்பான்மை சமுதாய பார்வையில் வரவில்லை என்றே தோன்றுகிறது......


காரணம்...........இப்போதைய கால கட்டத்தில் பெண் கல்வி நல்ல நிலையை நோக்கி போய்கொண்டு இருக்கிறது......எல்லா வித கல்வி கேள்விகளிலும்........ஆணை விட பெண் சிறந்து வருகிறாள்...இருந்தாலும்!...அதை பற்றிய ஒரு பார்வை இந்த பதிவு...........

திருமணம்.........

இது இப்போது சடங்காக இல்லாமல் ஒரு வித புரிதலுடன் நடப்பது சந்தோசத்தை கொடுக்கிறது......இருந்தாலும் திருமணத்திட்கு பின் பெண்ணின் வாழ்கை கணவன் மற்றும் எதிர் கால சந்ததிகள் என்ற குறுகிய வட்டத்தில் நின்று விடும் அபாயம் அதிகமாக உள்ளது..........


இந்த கால பெண்கள் படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்து சொந்த காலில் நிற்கிறார்கள்.......அதே நேரத்தில் அவர்களின் வயது 29 வரை பெரிதாக அவர்களுக்கு தெரிவதில்லை.......அதுவே 30 தொட்டவுடன் தான் திருமண விஷயமே ஞாபகத்துக்கு வருகிறது..........

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் இரு பெண்கள்.......இருவரும் படிப்பை முடித்து விட்டார்கள்.....முதல் பெண் Msc...வரை படிச்சிட்டு கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டு இருந்தாங்க.....அவங்க அப்பா அந்த பெண்ணுக்கு வரன் தேடிட்டு இருந்தார்......தன்னை விட அதிகம் படித்த மற்றும் பை நிறைய சம்பளம் வாங்கும் மாப்பிள்ளைய தேடி கொண்டு இருந்தாங்க.......அந்த பெண்!


கொஞ்ச நாள் கழித்து திருமணம் ஆச்சி.......பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த அந்த குடும்பம்......3 மாதத்தில் அப்பெண் பிறந்த வீடு நோக்கி திரும்பியதை எண்ணி வருந்தியது.......விசாரித்ததில் கணவன் மனைவியிடையே பெரிய அளவில் சண்டை நடந்ததாக கூறப்பட்டது........எனினும் கஷ்டப்பட்டு இருவரையும் சேர்த்து வைத்தார்கள்.......2 வருடம் கழித்து விவாகரத்துக்கு விண்ணபிச்சி இருக்காங்க.........Ego தான் காரணம்னு சொல்லிகிட்டாங்க........நானும் போன்ல பேசிப்பாத்தேன்(படிச்சவங்களாலையே முடியல!).....ஒன்னும் நடக்கல.....(33 வயசாச்சி அந்த பொண்ணுக்கு)

ரெண்டாவது பொண்ணுக்கு இந்த நிலைமை வரக்கூடாதுன்னு இன்னும் வரன் தேடிட்டு இருக்காங்க......பொண்ணுக்கு 31 வயசாச்சி MBA (BE முடிச்சிட்டு!)படிச்சிருக்கு........ஆனா யாரு கிட்டயும் முகம் கொடுத்து பேசாது........கேட்டா அந்தம்மா அளவுக்கு அறிவுள்ளவங்க கிட்ட மட்டும் தான் பேசுமாம்...........(நான் முட்டாப்பய...அதனால பேசுறது இல்ல!)


ரெண்டு பொண்ணுகளும் வேலைக்கு போகல.......வீட்ல சீரியல் பாத்துட்டு இருக்காங்க..........இந்த ரெண்டு பேரையும் படிக்க வச்ச பெத்தவங்க விட்டத்த பாத்துட்டு இருக்காங்க..........

இந்த விஷயங்கள மேற்கோள் காட்டி நான் யோசிக்கற விஷயம்......படிப்பு வெறும் ஏட்டு சுரைக்காயா.....!....எந்த வயது......திருமணத்துக்கு ஏற்றது.....!

கொசுறு: இது என் ஆதங்கமே.......முடிந்தால் சற்று விலாவாரியாக எடுத்துரைக்கவும்!....என்னுடைய பார்வையில் தவறு இருப்பின் சொல்லித்திருத்த நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் நண்பர்களே..........உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்....!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Sunday, May 29, 2011

தான் எனும் அகந்தை இல்லா மனிதன் - ரஜினி தி கிரேட்

வணக்கம் நண்பர்களே...........

என்னதான் வாழ்கை எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அந்த அகந்தையை தலைக்கு ஏற்றாத அற்புத மனிதன் ரஜினி............

இன்று அவரின் குரலை கேட்டு அதிர்ந்து விட்டேன்..........நண்பன் சொன்னான் இன்னும் நாங்க ஆரம்பிச்ச மன்றம் பெரிதாக பெருகி இன்று பல குழந்தைகளும் நற்பணி செய்து வருவதாக......சந்தோஷப்பட்டேன்........

அந்த புகழுக்கு சொந்தமான.......மாமனிதனின் குரல் என்னை கதி கலங்க வைத்து விட்டது........சின்ன வயதில் என்னுடைய வேகத்துக்கு காரணமாக இருந்த தலைவன்.......இன்று தன் உடல் உபாதையால் தவிக்கிறான்..........

அவர் சொல்லிய வார்த்தைகளில் இருந்து.........

கொஞ்சம் சிரிப்புடன் ஆரம்பித்து........பின்பு.......


நான் ரஜினி காந்த் பேசுறேன்.......ஹாப்பியா போயிட்டு வந்துட்டு இருக்கேன்...நானு.........எவ்ளோ சீக்கிரம் முடியும் அவ்ளோ சீக்கிரம் வந்துடறேன்......ராஜாக்களா.......நீங்க கொடுக்குற ஒரு அன்புக்கு நானு என்ன திருப்பி கொடுக்கறது..........பணம் வாங்குறேன் ஆக்ட் பண்றேன்.....அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கன்னா.......உனக்கு நான் என்ன கண்ணா கொடுக்கறது......டெஃபனிட்டா நீங்கல்லாம்...நம்ம fans எல்லாம் தலை நிமிர்ந்து வாழுறா மாதிரி நான் செய்வேன் கண்ணா..........கடவுள் கிருபை எனக்கு இருக்கு.....குரு கிருபை இருக்கு........எல்லாத்துக்கும் மேல கடவுள் ரூபத்துல இருக்குற உங்க கிருபை என் மேல இருக்கு.......நான் சீக்கிரம் வந்துடறேன்........ஓகே..........bye.....good....


Envazhi - நன்றி என்வழி............இணைய தளத்திற்கு.......

தலைவர் எழுந்து வர எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.........நண்பர்களே நீங்களும் பிரார்த்திப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.........நன்றி.........

ஜெய் ஹிந்த்! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Saturday, May 28, 2011

வியட்நாம் - பொம்மலாட்டம்!

வணக்கம் நண்பர்களே...........ஹனோயிக்கு வரும் வெளி நாட்டவர்களை பெரிதும் ஈர்க்கும் இந்த பொம்மலாட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு..............இதன் பெயர் Water Puppet Show என்று சொல்றாங்க..........இந்த பொம்மைகள் மரத்தால் செய்யப்பட்டவைகள்..........


இதன் சிறப்பம்சம்..........இந்த ஷோவில் காட்டப்படும் பொம்மைகளை இயக்குபவர்கள் தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்............எவ்வளவு கஷ்டம் பாருங்க.........தண்ணிக்கு மேலே இந்த பொம்மைகள் போடும் ஆட்டம் காண்பவரை சபாஷ் போட வைக்கும்.......அதுவும் வியத்னாமியர்களின் பாரம்பரியத்தய்யும்........விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலையும் சித்தரித்து இருக்கும் இந்த ஷோ ரொம்ப நல்லா இருக்கும்............


அதே நேரத்தில்........பல வியட்நாமியர்கள் இந்த ஷோக்கு சென்றதில்லைன்னு கூறும்போது வியப்படஞ்சிருக்கேன்..........அப்போ தான் புரிஞ்சிது உள்ளூர் காரனுக்கு எப்பவுமே சொந்த விஷயத்துல ஆர்வம் கம்மின்னு.........(நம்மூரிலும் அதே கதைதானே ஹிஹி!)..........


இந்த பொம்மலாட்டம்......11 வது நூற்றாண்டுல இருந்து வந்தாலும்........90 களில் தான் உலகத்துக்கு தெரிய ஆரம்பிச்சிது.......ஏன்னா போர்களிலேயே தங்கள் வாழ்கையில் பெரும் பகுதிய கழிச்சிட்ட வியட்நாமியர்களுக்கு...........90 களில் இருந்து தான் வாழ்கையின் சந்தோசத்த அனுபவிக்க ஆரம்பிச்சாங்க........


இந்த பொம்மலாட்டத்துல இன்னொரு சிறப்பு இதில் வரும் ட்ராகன் உருவத்திலிருந்து......தீ வரும் அதுவும் ஜுவாலையாக...........அப்போ ஒரு நிமிழம் 3D படம் பாக்குறா மாதிரி இருக்கும்.........குழந்தைங்க முதல் பெரியவங்க வரை அப்போ தன்னை மறந்து பாப்பாங்க.........எவ்ளோ உழைப்பு.........தண்ணிக்கு அடியிலிருந்து இதை செய்வாங்க.............


முழு ஷோவ்வும் தண்ணிக்கு மேலதான் நடக்கும் பார்வையாளர்கள் பார்க்கும்போது.........பொம்மைகள் மனிதர்களின் உருவங்கள் போலவே தெரியும்...........


இந்த ஷோ பல நாடுகள்ல நடத்தி பேமஸ் ஆயிடுச்சி.........அதனால அந்த நாடுகளின் பெயர்களையும் சொல்லுவாங்க..........அப்படி இருந்தும் முதலில் இந்த ஷோவுக்காக இந்தியாவுக்கு போக விரும்பினாங்க கலைஞ்சர்கள்..........அதுக்காக இந்தியா சலுகை கொடுத்து இலவசமா இந்த கலைஞ்சர்கள வரவேற்றது...........இதுல நாம ஞாபகம் வச்சிக்க வேண்டியது(!)..............


கொசுறு: இந்த ஆட்டம் ஆரம்பிக்கும் போது இந்த ஷோவின் வரலாறு சொல்லுவாங்க.........நம்மூரு பொம்மலாட்டதுக்கு..நம்மாளுங்க எப்போ உயிர் கொடுக்கப்போறாங்கன்னு தெரியல(!).........படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி..........

கொசுறு: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......தாங்கள் தங்களின் கருத்துகள் சொல்லும்போது தங்களின் தற்போதைய பதிவின் லிங்கை அளித்து விட்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.....ஏனெனில், என்னுடைய ரீடரில் சரியாக வருவதில்லை..........நன்றி....... 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, May 27, 2011

பொலிஸ் பொலிஸ்!!!!!!!!!!!!!!!

வணக்கம் நண்பர்களே.......

இந்த படங்களுக்கு கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன............

கொசுறு: இவர்கள் யாவரும் காவலர்களே..........................................................................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

ஹனாய் மாலை நேரம்!

வணக்கம் நண்பர்களே.............


இந்த பதிவின் மூலம் ஹனாய் சாமான்ய மக்களின் மாலை நேரத்தை பகிர்கிறேன்.......அண்ணே பீர் பார்டிகளுக்கும், சாப்பாடு விரும்பிகளுக்குமான பதிவு.......படிச்சிபுட்டு திட்டப்படாது..........ஹிஹி/!

இங்கு இரு பாலாரும் வேலைக்கு சென்று விடுவார்கள்...........இதில் ஆண்களை விட பெண்களே அதிக வேலை பார்ப்பதாக எனக்கு தோன்றுகிறது..........ஏனெனில், இங்கு ஒரு வேலை தான் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது(!)..........ஒரே நேரத்தில் மூன்று கம்பெனிகளில் வேலை செய்யும் நபர்களை எனக்கு தெரியும்..........

இவர்களை பார்த்து வியந்திருக்கிறேன்......நமக்கு ஒரு வேலை பாக்குறதுக்கே முழி பிதுங்குது..........(ஒழுங்கா பாத்தாதானே!)..........இவங்க எப்படி இப்பிடி என்று நினைக்கும்போது ஆச்சர்யம்...........சரி விஷயத்துக்கு வர்றேன்.........

சரியா 5 இலிருந்து 5.30 பல நிறுவனங்கள் தங்கள் பணி நேரத்தை முடித்துக்கொள்ளும்.....அப்புறமென்ன பெரும்பாலான ஆண்கள் பீர் கடைகளில் ஆஜர்.....நம்மூரு டீக்கடைகள் போல இங்கு பீர் கடைகள்...........அதுவும் எப்படின்னு பாருங்க........


பாத்திங்களா..........இந்த முறையில் தான் பீர் விநியோகம்.........


பய புள்ளைங்க எப்படி இந்த தம்மாத்தூண்டு சேர்ல உக்கார்ராங்கன்னு நெனைப்பேன்........இந்த மக்களுக்கு தொப்பைங்கர விஷயம் ரொம்ப கம்மி......எல்லோருக்கும் வவுறு ஒட்டியே இருக்குது..........ஒரு முறைக்கு கிட்ட தட்ட 5 - 10 கிளாஸ் பீர் குடிக்கிறாங்க........இவங்க எடுத்துக்கற உணவ பாருங்க...........


தவ் பூ - அதாவது சோயா உடன் காய்கறி சேர்த்து...........இது உடல் எடைய கூட்டுவதில்லை..........


சுட்ட மாமிச ரோல்.......இது சூப்பரா இருக்குமுங்க..........ஹிஹி!


பறவை முட்டை...........ஹிஹி!


உக்கா...........அதாவது நம்மூரு புகை மண்டலம்(!)..................


எறா, நண்டு எல்லாம் உண்டு..............


வேக வச்ச காய்கறிகளுடன் கொஞ்சம் அரிசி உணவும்...............இவைகள் அதிகமானவை வேக வைத்தவைகளே.......வறுத்து எடுக்கும் உணவுகள் மிக குறைவு.............


எனக்கு இங்க இருக்கும் நண்பர்கள்..........வீட்டுக்குள்ள நுழையறதுக்கு முன்னாடியே கேட் போட்டு நிப்பாங்க ஹிஹி...........

எங்க போற...........

வீட்டுக்கு தான்............

உக்காருய்யான்னு சொல்லி...........ஹிஹி! (அடுத்த வாரத்திலிருந்து தப்பிச்சிடுவேன் ஹிஹி!)

கொசுறு: இதெல்லாம் ஏன் சொல்றேன்னா.............இருக்கும் ஊரை பற்றி உங்களுக்கு ஒரு பகிர்வா புரிய வைக்கிறேன்....! படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பொய் நல்லதா....!

வணக்கம் நண்பர்களே...........வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது.......அதுவும் உண்மை மட்டுமே பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்த முன்னோர்கள்...........காலம் மாறும், காட்சி மாறும்........உலக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு உண்மை பொய்யாகும் என்பதை சொல்லவில்லையோ என்று ஒரு சிந்தனை அதுதான் இந்த பதிவுக்கு காரணம்.......

நம்மில் பலர் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்........உதாரணமாக.......உண்மை பேசுபவனிடம் "தான்" என்ற சிறு அகந்தை இருக்கும்.......அவனுக்கு நடிக்க தெரியாது..........அதனால் பார்ப்பவர்கள் இவனுக்கு என்ன ஒரு திமிர் என்று கூற வாய்ப்பு அதிகம்.......ஏனெனில், உண்மைக்கு ஒரு பழக்கமுண்டு அது வீரம்............


அதாவது யாருக்கும் பயப்படாமலும் தன் மனசாட்சிக்கு மட்டும் நேர்மையாக வாழ்பவரில் நிறய பேர் அவப்பெயர் மட்டுமே கிடைக்கபெறுகிறார்கள்..........

உதாரணமாக...........

ஒரு கம்பனில வேலை செய்யுரவங்கல்ல யாரு உண்மை பேசுவாங்கன்னு மேலதிகாரிக்கு தெரியும். அந்த நல்லவன மட்டுமே பல துட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கூடவே வச்சி இருப்பாங்க.......அதே நேரம் வியாபார விஷயம் பேசும் போது கிட்ட சேக்கறது அதிகமா இருக்காது.....அப்படியே சேத்தாலும்.....அவர்கிட்ட சொல்லி இருப்பாங்க........ஏதும் பேசக்கூடாதுன்னு..........


என் நண்பர் ஒருவர் உண்மை மட்டுமே பேசுவேன்னு தீர்க்கமா இருந்து வர்றார்......இது வரை 27 வேலை மாத்தி உள்ளார்.......என்னிடம் கடந்த வாரம் வேலை நிமித்தமாக உதவி கேட்டார்..........

மாப்ள.......உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆளு கிடையாது.......

இல்ல சொல்லுடா கேட்டுக்கறேன்.......

இப்போ உன்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு...........

அதனால............

மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

அப்போ என்னை விளங்காதவன்னு சொல்ற.....இத நீ சொல்றது தான்டா கஷ்டமா இருக்கு............

இல்லடா.......என்ன பண்றது சில நேரத்துல........எனக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்......பல மொள்ளமாரிகள் கூட வேல செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும்..........அப்போ நான் அமைதியா இருந்திடுவேன்.....நீ என்னை சந்தர்ப்பவாதின்னு கூட நெனச்சிக்க..........

நான் பொய் சொல்ல மாட்டேன்......எந்த நிலைமையிலும்.......!..எனக்கு உன்னால வேலை வங்கி தர முடியுமா முடியாதா................

என்னால முடியும்..........ஆனா..அது வியாபாரம்........அதுவும் பெரிய அளவுல நடக்குற தொழிலுக்கு ஆள் தேவை..........நீ அங்க சில நேரம் வளைந்து கொடுத்து ஆகணும்.......

அது முடியாது.............

டேய்..........உன் பொண்டாட்டி ரொம்ப கஷ்டப்படுராடா...........பாவம்டா உன்ன நம்பி வந்ததுக்கு அவ வேலைக்கு போயி உனக்கு சாப்பாடு போட்டுட்டு இருக்கா.....ஏன்டா இப்படி இருக்க.......கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து போ......அதுதான் வாழ்க்க..........

நான் படிச்ச படிப்புக்கு........என் உண்மைக்கு கெடைக்காத வேலை.......வளைஞ்சி கொடுத்தாத்தான் கெடைக்கும்னு இருந்தா அது வேணாம்..........

எலேய்....இதெல்லாம் நீ தனியா இருந்தா ஓகே..........இப்போ உன்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கு........ஒரு குழந்த இருக்கு..........மவனே இப்படி பேசிட்டு இருந்தா......இதுக்கு பேரு விதண்டா வாதம்...........

என் நல்ல குணங்களை பார்த்து தான் என் பொண்டாட்டி என்னை கல்யாணம் பண்ணிகிட்டா.......இன்னிக்கி வரைக்கும் அவள் எதுவும் சொல்லல.......


அடங்கோ.......அதான்டா நீ இப்படி இருக்க.....காதலிக்கும்போது நீ நல்ல ஆண்மகனா இருந்தா போதும்.......ஆனா திருமணம் ஆனா நல்ல குடும்பஸ்தனா இருக்கணும்.......உன்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..........அதான் உன் பொண்டாட்டி அமைதியா இருக்கா.........அவ சம்பாதிக்கற துட்டுல எத்தன நாளு இப்படியே ஓட்டுவ வாழ்கைய......நமக்காக இல்லாட்டியும் குடும்பத்துக்காக சில நேரங்களில் வளைஞ்சி போகுறது தப்பு இல்லடா மாப்ள..........

சரி முடிவா என்னை என்ன செய்ய சொல்ற..........

கொசுறு: நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, May 26, 2011

ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 7)

வணக்கம் நண்பர்களே.......அவராக தேடி வரட்டும்........நீ ஏன் அங்க போய் அவர அவமானப்படுத்துன.....?

தப்புத்தான் மன்னிச்சிடு...........

அவள் எப்படி மிகப்பெரிய விஷயங்களை கூட மன்னித்து விடுகிறாள்.....புரியவில்லை.......வாழ்கை எடுத்துக்கொள்ளும் மனத்திற்கு ஏற்றவாறு அமைந்து விட்டால் நன்றாக இருந்திருக்குமே......

நான் எதிர் பார்த்த மாதிரியே......மாலையில் மாமா வந்து மன்னிப்பு கேட்டு விட்டார்....

(கொஞ்ச காலம் கழித்து......ஓரளவு குணம் ஆகி தகுதி பெற மீண்டும் என் சேவை மையத்துக்கு சென்றேன்.......அங்கே!)

என்ன நண்பா எப்படி இருக்க.........

இன்னைக்கு வர சொல்லி இருந்தாங்க.......அதான் வந்தேன்....

(அதிகாரி கூப்பிட்டார்.....)

நான் உன்னை பார்த்து பெருமைப்படறேன்யா.........

பரவா இல்லைங்க......இது நான் விரும்பி ஏற்கும் பணி......

என்னை மன்னிச்சிடு..........

ஏன் சார்..........

உன்னோட உடல் தகுதி அறிக்கை வந்துச்சி.....அதுல நீ தகுதி பெறவில்லை......

(அப்படியே கண்ணு கலங்கியது எனக்கு!)


என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க......கடந்த ஒரு வருசமா உடம்ப பின்னி எடுத்து ரெடி பண்ணினேனே........அதுவும் ராடு எடுத்த எடமெல்லாம் வலி தாங்க முடியாம இருந்தப்போ கூட என் கூட இருந்து இறந்து போய் என்னை காப்பதுன அந்த முகங்களின் நினைவு மட்டும் தானே எனக்கு நினைவு வந்துது....இப்போ நீங்க இப்படி சொல்லிட்டா எப்படி......

(மீண்டும் அந்த மருத்தவரை அணுகினேன்.....அவர் சொன்னது.....)


என்னை என்ன செய்ய சொல்றே.....உன்னோட விஷயத்துல எதிர்காலத்துல என்னா வேணா நடக்கலாம்.....மூளை பாதிப்பு ஏற்படலாம்.....அதன் மூலமா நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம்.......உடல் எடை ஒரே நிலையில் இருக்காது.....அதிகப்படியா ஏறும்.......திடீர்னு இறங்கவும் வாய்ப்பு இருக்கு......உன்கிட்ட பலமா இருக்கறது இதயம் மட்டும்தான்......இப்போ சொல்லு!

சோகம் தோய்ந்த முகத்துடன் திரும்பி நடக்கலானேன்......

தம்பி ஒன்னு செய்யுறேன்......உங்களுக்கு இந்த முன்னாள் ராணுவத்தினர் பத்திரம் கிடைக்கும்......அதை வச்சி அரசாங்கத்துல....எழுத்தர் மற்றும் பல பணில வாய்ப்பு கிடைக்கும்...........

இல்லங்க......நான் இங்க சேரும்போது சலுகைக்காக சேரலைங்க......எனக்கு சின்ன வயசுல இருந்து ஆர்வம்.....இப்போ நீங்க சொல்ற வேலையில போய் உக்காந்து கிட்டு.......என் கொள்கைய காத்துல பறக்க விட்ட கோழையாகி போயிடுவேனுங்க......வேண்டாமுங்க......நான் பாத்துக்கறேன்........

(வீட்டில் நுழைந்தேன்.......)

என்னடா என்ன ஆச்சி...........அது வந்து இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு நெனைக்கிறேன்.........

சரி அது பாட்டு நடக்கட்டும்.......அடுத்து என்ன பண்றதா இருக்க.......

அதான் தெரியல..........

ஒரு வேலையில போய் உக்காரு......நெறய வரன் வருது....நல்ல பொண்ணா பாக்க வேணாமா.........

இல்லக்கா எனக்கு கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இல்ல........என்ன விட்ரு.........

இத தான்யா எல்லாரும் சொல்லுவாங்க......வீட்ல இருக்க பெரியவங்க அப்படியே விட்ற முடியுமா...............


அப்படியில்ல.........இன்னைக்கு என் Medical ரிப்போர்ட் வந்துது......அதுல பல விஷயங்கள் என் எதிர்காலத்துக்கு எதிரா இருக்கு என்ன பண்றது........அப்புறம் அந்த டாக்டரையும் சந்திச்சி கேட்டேன்......(அவர் சொல்லிய விஷயங்களை...சொல்லி முடித்தேன்!)...........

அத விடுடா..........நாளைக்கு பொண்ணு பாக்க போறோம்............

??

தொடரும்...........

கொசுறு: ஒரு மனிதனின் (வாழ்வில் விழுந்த)அடிகளின் தொடர்ச்சியே இந்த தொடர்.....இந்த தொடர் மூலம்.....தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்...........
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment