Followers

Thursday, February 24, 2011

கிரிக்கெட்டு என் பார்வையில்(!?) - முடிஞ்சிடும் வாங்க!

எல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி!

சச்சின் 

கிரிக்கெட்டின் கடவுள் என்று இந்தியால கூறப்படும்........ஒரு வாழும் கடவுள்(!). இவரு ஆட ஆரம்பிக்கும் போது இருந்த யாரும் இப்போ பீல்டுல இல்லன்னு நெனைக்கிறேன்.கடவுள் எப்பவுமே மனுசன சோதிப்பாருன்னு சொல்லுவாங்க...........அந்த விஷயம் இவர பாக்கும்போது உறுதிப்படுது. மனுசன் இன்னிக்கி எப்படியும் 100 போட்டுடனும்னு வந்தா.......எங்கிருந்தோ புத்சா எதிர் டீமுல விளையாடுற கை சூப்புற பயபுள்ள இவரோட விக்கட்ட எடுத்துக்குனு பூடும். ராசியில்லா மனுசன் ஆனா யாரு திட்டினாலும் தான் உண்டு தன் வேல உண்டுன்னு இருக்குறவரு. இவரு கொஞ்சம் பொறுப்பா ஆடுனாருன்னா இந்தியா இன்னும் கொஞ்சம் தேறும்(டவுட்டு - ஆனா இவரு எப்போ 100 போடுறாரோ அப்போ தோத்துடுத்துன்னு எதிர்கட்சிக்காரங்க சொல்றாங்க!)

யுவராஜ்

இவரு அடுத்த காம்ப்ளி ஆயிருக்கவேண்டியது........ஜஸ்டு மிஸ்ஸு.........பயபுள்ள நல்லா ஆடுதுன்னு(விளயாட்டுலதானுங்க!) டீமுல சேர்த்தா கேப்டனு பதவி குடுக்கலன்னு இன்னும் குத்தவச்சி வக்காந்து சீன் போட்டுன்னு கீது............கேப்டன்னா எவ்ளோ கஷ்டமான பொறுப்பு............நம்ம மண்ணு தின்னும் சிங்க பாத்து தெரிஞ்சிக்க வேணாம்!...........எப்ப பாரு பிகரு நெனப்பு நம்ம சிபி போல ஹி ஹி! எதோ கொஞ்சம் ஆடி, பீல்டுல நாலு பந்த புடிச்சி போட்டுச்சின்னா அணி ஜெயிக்க வாய்ப்பு இருக்கு!


பதானு

தம்பிக்கி பரிஞ்சி பேசுனா தனக்கு வாய்ப்பு கெடைக்காதுன்னு தெரியாம இத்தன நாளு உதாரு உட்டுன்னு இருந்தாப்புல!..........இப்போ தான் தல சொல்லி "கொஞ்சம் உன் வேலைய மட்டும் பாருன்னு" சொன்னதுனால எதோ பாக்குறாரு. நல்ல எதிர்காலம் இருக்குற மட்டக்காரறு(பேட்ஸ் மேனுப்பா!). நல்லா அந்த பேட்ட இன்னும் உதருன்னாருன்னா கொய்யால பந்து நாளு பக்கமும் 4 ம் 6 மா பறக்க வாய்ப்பு இருக்கு.சிங் 

வருமானவரிய சரியா கட்டலன்னாலும்.............நாட்டுக்காக பந்தயாவது ஒழுங்கா வீசுற ஒரே போலரு..........எதிராளி இவரு பந்த மட்டும் பாத்து பாத்து ஆடுவாங்க...........ஒரு வேல வரும்போதே குன்னாத்தம்மா கோயில்ல மந்திரிச்சி தாயத்து ஏதாவது கட்டிக்கினு வருவாரோ என்னவோ!............மவராசன் ஒழுங்கா இப்படியே பந்து வீசுனா டீமு பொழசிக்கும்..........எதோ நம்ம பயல கன்னத்துல அடிச்சதுனால உட்டானுங்க.....இதே வேற எங்கயாவது செய்ஞ்சி இருந்தா இந்நேரம் நறுக்கி இருப்பாங்க!(தல முடிய!)........டென்சனு மட்டும் வேணாம் சரியா!


ஜாகிர் 

டீமுல இருக்குற ஆளுங்கல்லையே பாக்க நல்லா கஸ்க்கு முஸ்க்குன்னு இருக்குற போலரு..........அடிக்கடி மனோஜ் பிரபாகர ஞாபகம் பண்ணும் போலிங்கு......நல்ல போலரு....இவரு லைன் புச்சி போட்டாருன்னா இந்தியாக்கு கவலையே வேணாம்.........கண்டிப்பா CUP வாங்கி குடுக்குற தெறம இருக்குது...........அப்படியே இந்த பேட்ஸ்மானு 4 அடிச்சா அடுத்த பால்ல எப்படி விக்கட்ட எடுக்கறதுன்னு பாக்கணுமே தவிர..........கோயில் மே! கணக்கா முறைச்சிக்கிட்டு டென்சனு ஆவக்கூடாது........சரியா கன்னு........


முனாப்

டீமுலையே கேப்டன் நம்புற ஒரே போலர்............கரீட்டா குச்சிக்கி குச்சி பந்து போடுற அழகே தனி...........மத்த போலருங்க இவரு கிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு.............கோவப்படாம பொறுமையா வீசுனா உங்க போலிங்குக்கு 5 ன்னா(!) 10 விக்கெட்டே எடுக்கலாம்...........


ஸ்ரீ சாந்த் 

இந்த பேரு எப்படி ராசா வச்சாங்க உனக்கு.........அதுல இருக்க சாந்தம் கொஞ்சம் கூட உன்கிட்ட இல்லையே!...........எதோ ஒருத்தன் தடுக்கி விழுந்ததுனால நமக்கு வாய்ப்பு கெடச்சி இருக்குதே அத சரியா பயன் படுத்திக்கனும்னு கொஞ்சம் முயற்சி பண்ணலாம்ல!...........பவுன்சர் பாத்து பயபடுற பசங்க விக்கெட்ட சுளுவா தூக்கிடலாம்..........எதோ பாத்து செய்ப்பா........உங்க ஆளுங்க எல்லாம் எங்களுக்கு நெறய செய்ஞ்சி கிறாங்க..........நீயும் இந்த பாரதத்துக்கு ஏதாவது உன்னால முடிசத செய்ஞ்சிட்டு போவேன்னு நம்புறேன்....!


இதுக்கெல்லாம் மேல 11 ஆம்பளைங்கள போட்டுட்டு ஆம்பளைக்கு ஆம்பள, பொம்பளைக்கு பொம்பள கணக்கா இருக்குறவங்கள போடாம விட்டா தெய்வக்குத்தமாகிடாது. அதேன்.......இவங்க பேசும்போது எல்லோரும் எங்க பாப்பாங்கன்னு ஊருக்கே தெரியும் அத நான் வேற சொல்லனுமா ஹி ஹி!


கொசுறு: இதோட எனக்கு குடுத்த வேலைய முடிச்சிட்டேன்......இனி யாராவது தொடருக்கு கூப்பிட்டா மானிட்டரு தான் பேசுவான் ஹி ஹி!!

முடிஞ்சா இங்க வாங்க........http://gladiatorveeran.blogspot.com/
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

30 comments:

சி.பி.செந்தில்குமார் said...

எனக்கும் உங்களுக்கும் பிரச்சனை ஓக்கே... சரி ஆகிடும். தமிழ்மணம் கூட என்ன தகராறு?

சி.பி.செந்தில்குமார் said...

போடு முத வெட்டை

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"எனக்கும் உங்களுக்கும் பிரச்சனை ஓக்கே... சரி ஆகிடும். தமிழ்மணம் கூட என்ன தகராறு?"

>>>>>>>>>>>>>>>>>

அதான் தல எனக்கும் பிரியல ஹி ஹி!

இது உள்நாட்டு சதி..........அரசியல்வாதின்னா இப்படி தானே சொல்லணும்!

மைந்தன் சிவா said...

அவருக்கும் தமிழ்மணத்துக்கும் நீண்ட காலப் பிரச்சனை பாஸ்

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"ஹிஹிஹி கீழ மந்த்ரா பேடி தானே??நல்லா இருக்காங்க ஹிஹி"

>>>>>>>>>>>>>>>

வா செல்லம் நல்லா இருக்கியா ஹி ஹி!

மைந்தன் சிவா said...

ஹிஹிஹி கீழ மந்த்ரா பேடி தானே??நல்லா இருக்காங்க ஹிஹி

செங்கோவி said...

மந்திரா பேடி இல்லாம கிரிக்கெட் பற்றிய பதிவு முழுமை பெறாது!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"மந்திரா பேடி இல்லாம கிரிக்கெட் பற்றிய பதிவு முழுமை பெறாது!"

>>>>>>>>>>>>

அதே அதே!

அஞ்சா சிங்கம் said...

ஆமாம் சுரேஷ் ரைனா என்னையா பாவம் பான்னுனாறு உங்களுக்கும் அவருக்கும் என்ன வாய்கால் தகறாரா அவரை பத்தி ஒன்னும் சொல்லவில்லை

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"ஆமாம் சுரேஷ் ரைனா என்னையா பாவம் பான்னுனாறு உங்களுக்கும் அவருக்கும் என்ன வாய்கால் தகறாரா அவரை பத்தி ஒன்னும் சொல்லவில்லை"

>>>>>>>>>>>

வாய்யா சிங்கம்...... கல்யாணத்துக்கு வந்த பய புள்ளைங்கள கேளுய்யான்னா வராத ஆளப்பத்தி கேக்குற!

அவர தான் பாவம் 12வது ஆளா வச்சி கிறாங்க தெரியாதா ஹி ஹி!

Speed Master said...

//வருமானவரிய சரியா கட்டலன்னாலும்.............நாட்டுக்காக பந்தயாவது ஒழுங்கா வீசுற ஒரே போலரு........

வார்ரதுன்னா இதுதானா?

விக்கியுலகம் said...

@Speed Master


அதே அதே!

ரஹீம் கஸாலி said...

கஷ்டப்பட்டு தமிழ்மணத்தில இணைச்சு ஓட்டும் போட்டாச்சுங்க...நண்பேண்டா

# கவிதை வீதி # சௌந்தர் said...

நானும் ஒரு பவுண்டரி அடிச்சிட்டேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

நானம் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேங்க..

விக்கியுலகம் said...

@ரஹீம் கஸாலி

நன்றி நண்பா

# கவிதை வீதி # சௌந்தர் said...

அப்பாடி முடிஞ்சது..

சங்கவி said...

நல்ல அலசல்..

வைகை said...

இந்த சீறி சாந்து எதுக்கு பாஸ் டீமுக்கு?

விக்கியுலகம் said...

@சங்கவி


வருகைக்கு நன்றி நண்பரே

விக்கியுலகம் said...

@வைகை

"இந்த சீறி சாந்து எதுக்கு பாஸ் டீமுக்கு?"
>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பரே

ஒப்புக்கு சப்பானின்னு ஊருல சொல்லுவாங்க.......
நாட்டுல யாருக்குமே கிரிக்கெட்டு ஆடத்தெரியாதிள்ள அதேன் ஹி ஹி!

Jana said...

என்னைப்பொறுத்தவரை, இன்னுமொரு ட்ராவிட்டே இந்தியாவுக்குத்தேவை. இப்போது எல்லாருமே பந்தை மேலால தூக்கி அதிரடி காட்டவே ஆர்வமாக இருக்கின்றனர்.

நல்ல அலசல்.

விக்கியுலகம் said...

@Jana


வருகைக்கு நன்றி நண்பரே

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_24.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல அலசல்...... என்ன மந்திராவைப் பத்தி இன்னும் கொஞ்சம் விளக்கமா போட்டிருக்கலாம், போட்டோ......

MANO நாஞ்சில் மனோ said...

மந்த்ரா ஹி ஹி ஹி ஹி...

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

"லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே... அப்படியே நம்ம தொகுதிக்கும் வந்துட்டு போங்க"
>>>>>>>>>>>>>>>>

உங்க தொகுதி சூப்பருங்க!

வருகைக்கு நன்றி

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

நல்ல அலசல்...... என்ன மந்திராவைப் பத்தி இன்னும் கொஞ்சம் விளக்கமா போட்டிருக்கலாம், போட்டோ......
>>>>>>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி தல

போட்டுட்டா போச்சி போட்டோ!

♔ம.தி.சுதா♔ said...

என்னவோ தெரியல சிறிசாந்தை மட்டும் எனக்கு பிடிப்பதே இல்லை...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

வசந்தா நடேசன் said...

அது யாரு சார் கடைசில?? இவுங்க எந்த மாட்சுல ஆடுனாங்க?? ஆனாலும் பாத்தேன்.