Followers

Tuesday, September 20, 2011

இது ஒரு டீசன்டான பதிவு ....!

வணக்கம் நண்பர்களே....


இந்த தலைப்பை வைக்கும்போதே நிரம்ப யோசிச்சேன்...என்னடா இது ரொம்ப அழகான(அருவருப்பான!) தலைப்பா இருக்கேன்னு.....சரி விடுங்க பல நண்பர்கள் இப்படியெல்லாம் தலைப்பு வைக்கும் போது....உதாரணத்துக்கு....

கில்மா சாமியாரின் டைரி

காலையில இத புடிக்கலாமா...

உங்களுக்கு அது பெருசா இருக்குதா....

திரிசா உதடு வேணுமா....

போற போக்க பாத்தா....அடுத்த வீட்டு கிழவி ##### வந்தது எப்படின்னு கூட தலைப்பு வைப்பாங்க போல....சரி விடுங்க நண்பரா பூட்டாங்க எதுக்கு வம்பு(!) அப்புறம் இவன் வயித்தெரிச்சல் படறான்....இந்த மாதிரி தலைப்பு வைச்சாத்தான் மக்கள் படிக்க வருவாங்கன்னு சொல்லுவாங்க...விஷயத்துக்கு வர்றேன்...


கொஞ்ச நாளைக்கு முன்னாடி(!) வீட்ல இருந்த வயசான பாட்டி செத்து போயிட்டாங்கன்னு என் மனைவி எனக்கு போன் பண்ணி சொன்னாங்க....அந்த பாட்டிக்கு வயசு ஆடி வந்தா(ஓடி வந்தா மூச்சு இரைக்கும்!) 93 அப்படின்னு சொன்னாங்க...பாவம் பாட்டி குறைஞ்ச வயசுல போயிட்டாங்களேன்னு எல்லோரும் கவலைப்பட்டாங்க...நானும் சரி அந்த பாட்டிக்கு செய்ய வேண்டிய கடமைகள செய்ஞ்சிடுன்னு என் மனைவிக்கு சொன்னேன்...அந்த பாட்டி என் மனைவியின் அப்பாவின் தாய்(!).....

விஷயம் என்னன்னா....சொந்தக்காரங்களுக்கு எல்லாம் தொலைபேசி மூலமா சேதி சொல்லிட்டாங்க....அதுவும் ரெண்டு வருசமா எழுந்து உக்கார முடியாம இருந்தவங்க...எல்லா பணிவிடையும் செய்த மருமகளுக்கு பெரிய மனசுதான்(மை மாமியார்தான் அந்த மருமக!)....இந்த காலத்துல இந்த அளவுக்கு பொறுமையோட பணிவிடை செய்வாங்களா தெரியல(திட்டாதீங்க!)....


இந்த நெலமையில சொந்தக்காரங்க எல்லாம் அடிச்சி பிடிச்சி வந்து சேந்தாங்க...திடு திப்புன்னு படுத்திட்டு இருந்த பாட்டி கண்ணு முழிச்சி(!).....

"ஏன்டி என்னை சுத்தி உக்காந்து அழுகுரீங்கன்னு"...கேட்டுச்சி...

எல்லோருக்கும் தூக்கி வாரிப்போட்டுது....அப்பத்தான் இவங்களுக்கு புரிஞ்சிருக்கு பாட்டி இன்னும் கிளம்பல.....4 மணி நேரமா மயக்கத்துல இருந்திருக்குன்னு...அதுவும் உடம்பெல்லாம் சில்லிட்டு போயிருந்ததால இவங்களா முடிவு பண்ணிட்டாங்க போல.....

வந்தவங்க அதுக்கு மேல காமடி பண்ணியது தான் ஹைடெக்!....


எல்லோரும் உக்காந்து அந்த பாட்டியின் சொத்து மற்றும் பணம்(!) பிரிப்பதை பற்றி கார சாரமா விவாதம் வேறு போயிட்டிருந்திருக்கு!....தவறா செய்தி சொல்லி அநியாயத்துக்கு ஆட்டோக்காரனுக்கு செலவு பண்ண வச்சிட்டீங்க...மரியாதையா அந்த துட்ட கொடுத்திடுங்க...கொய்யாலன்னு ஒரே தள்ளு முள்ளு....அந்த பேச்சுக்களை வெளியிட முடியாது!...! 


இதை கேட்டு என்ன நெனைக்கிறீங்க நீங்க....அய்யோ அய்யோ!....அந்த பாட்டி அதுக்கு அடுத்து ரெண்டு மாசம் கழிச்சி சிவனடி சேர்ந்தாங்க...

கொசுறு: சொந்த அனுபவங்களை பகிர்வோர் சங்கம்(ஹிஹி!)
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

60 comments:

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி! டைட்டிலை இன்னும் டீசண்ட்டாக வெச்சிருக்கலாம்...

சி.பி.செந்தில்குமார் said...

>>போற போக்க பாத்தா....அடுத்த வீட்டு கிழவி ##### வந்தது எப்படின்னு கூட தலைப்பு வைப்பாங்க போல....சரி விடுங்க நண்பரா பூட்டாங்க எதுக்கு வம்பு(!) அப்புறம் இவன் வயித்தெரிச்சல் படறான்....இந்த மாதிரி தலைப்பு வைச்சாத்தான் மக்கள் படிக்க வருவாங்கன்னு சொல்லுவாங்க...


தலைப்பு வைப்பது அவரவர் உரிமை தம்பி..

FOOD said...

பதிவைப்படித்து, தலைப்பைப்பற்றி நாங்க சொல்லவேண்டியதை நீங்களே சொல்லிட்டா எப்புடி?

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>போற போக்க பாத்தா....அடுத்த வீட்டு கிழவி ##### வந்தது எப்படின்னு கூட தலைப்பு வைப்பாங்க போல....சரி விடுங்க நண்பரா பூட்டாங்க எதுக்கு வம்பு(!) அப்புறம் இவன் வயித்தெரிச்சல் படறான்....இந்த மாதிரி தலைப்பு வைச்சாத்தான் மக்கள் படிக்க வருவாங்கன்னு சொல்லுவாங்க...
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தலைப்பு வைப்பது அவரவர் உரிமை தம்பி..//
இப்படி புரியும்படியா சொன்னா, சிபிக்கு கோபம் வராதா என்ன?

FOOD said...

//புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

- ஜாக்கி தி கிரேட் - கிச்சிளிக்காஸ் 19.9.11
- ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிச்சா என்ன...?
- கிச்சிளிக்காஸ் 15.9.11
- மும்மூர்த்திகள் - last but not least
- தார் பூசியவர்கள் பாவம்...(!)

சன்னலை மூடு //
மறுபடியும் தமிழ்மணம் தகராறு ஆரம்பமா?

NAAI-NAKKS said...

Talaippu

PIDIKKALA !!!!

மதுரன் said...

நல்ல காமடிதான்... உயிர் போகுமுன்பே சொத்து பிரிக்க போட்டியா..

வெளங்காதவன் said...

:)
#தமிழ் மணம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சி.பி.செந்தில்குமார் said...
தம்பி! டைட்டிலை இன்னும் டீசண்ட்டாக வெச்சிருக்கலாம்.../////

ஆமா டீசண்ட் பத்தலை.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைப்பே ஏகப்பட்ட உள்குத்து வெச்சிருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தமிழ்மணத்துல சேர்த்துட்டேம்யா....

ஷீ-நிசி said...

வழக்கமா சினிமாவில இதுபோல பார்த்ததுண்டு.. நிஜத்திலும் ஒரு காமெடி....


////கில்மா சாமியாரின் டைரி

காலையில இத புடிக்கலாமா...

உங்களுக்கு அது பெருசா இருக்குதா....

திரிசா உதடு வேணுமா....////


உண்மைதான்.. இது போன்ற தலைப்பை நிச்சயம் ரசிக்கும்படியாக இல்லை....

வைரை சதிஷ் said...

உங்ககிட்ட இருந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்

Ramani said...

உங்க பதிவு எல்லாமே
டீஸண்டான பதிவுதானே
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள .. ஒரு டைட்டிளுக்கே இவ்ளோ கதையா?

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்வாசியும், சிபி நாதாரியும் வசமா மாட்னானுங்க ஹி ஹி [[இன்னும் கொஞ்சம் கூடுதலா டவுசரை உருவி இருக்கலாம்]]

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
தம்பி! டைட்டிலை இன்னும் டீசண்ட்டாக வெச்சிருக்கலாம்...//


உன்கிட்டே கேட்டு தலைப்பு வச்சா உருப்ப்படுமாடா பரதேசி...

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பு வைப்பது அவரவர் உரிமை தம்பி.//


ஆமாமா இப்பிடி சொல்லியே தப்பிச்சிரு ஹி ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

தம்பி.. நீ உன் சம்சாரம் பேச்சை மட்டும் தானே கேப்ப?

suryajeeva said...

ஆஹா

பாலா said...

என்ன கொடுமை மாப்ள இது. ஆனா நாம செத்தா என்ன நடக்கும்னு அந்த பாட்டிக்கு டிரெய்லர் பார்த்த மாதிரி இருந்திருக்கும். அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும்.

இந்திரா said...

தலைப்பையும் வச்சுட்டு அதுக்கு விளக்கமும் குடுத்தது...
செம உள்குத்து பாஸூ..

Jana said...

பொறாமை பிச்ச பயவுக வங்கப்பா...... மாப்ளே உன் பதிவு படு டீஜன்டா ஈக்குதுர்ப்பா

# கவிதை வீதி # சௌந்தர் said...

பாட்டி.. பாட்டி...

மகேந்திரன் said...

அட.. ஆமா மாம்ஸ்
படு டீசெண்டா இருக்குது
நல்லா இருக்குது பதிவு...

சசிகுமார் said...

மாப்ள நீ கேட்ட வீடியோ இந்த பதிவுக்கு தானா

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

என்னை திட்டுறீங்கன்னு தெரியுது
என்ன பண்றது ஒரு கிளு கிளு இல்லாட்டி மக்கள் படிக்க வர மாட்டேன்குறாங்களே!!

தனிமரம் said...

மரணத்தின் வாசலில் சொத்துச் சண்டை வீட்டில் இப்படி இருக்கு உலகம் பதிவு நல்லதாக இருக்கு!

Powder Star - Dr. ஐடியாமணி said...

அண்ணே, ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே! அடிக்கடி பதிவுலகம் பற்றி குறை சொல்லிக்கிட்டு இருந்தா, உங்களுக்கு டென்சன்தான் வருமே தவிர,

பதிவுலகில் எந்த மாற்றமும் நடக்காது! தலைப்பு போடுறவங்க போட்டுக்கிட்டுத்தான் இருப்பாங்க!

உடம்பு பத்திரம் அண்ணே!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
தம்பி! டைட்டிலை இன்னும் டீசண்ட்டாக வெச்சிருக்கலாம்..."

>>>>>>>>>>

நீங்க சொன்னபடி வச்சிட்டேன் அண்ணே!
....................

"தலைப்பு வைப்பது அவரவர் உரிமை தம்பி.."

>>>>>>>>>>>

நீங்க சொன்னா சர்தான்னே!

விக்கியுலகம் said...

@NAAI-NAKKS

என்ன பண்றது!

விக்கியுலகம் said...

@FOOD

வருகைக்கு நன்றி அண்ணே....கருத்துகளுக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@வெளங்காதவன்

கோயிந்தா!

விக்கியுலகம் said...

@மதுரன்

மாப்ள அதே அதே சபா பதே!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

மாப்ள...பதிவ இப்படித்தான் போடணும்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமை இல்ல...தலைப்பயாவது கொஞ்சம் டீசண்டா வைக்க கூடாதான்னு தான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@வைரை சதிஷ்

மாப்ள...நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லப்பா!

விக்கியுலகம் said...

@Ramani
அண்ணே வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே!

விக்கியுலகம் said...

@ஷீ-நிசி

அதே அதே சபா பதே!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மனோ!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!
மாப்ள கதைக்காக டைட்டிலோ!

விக்கியுலகம் said...

@suryajeeva

ஓஹோ!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

எனக்கு ஒரு சம்சாரம்தான்னே ஹிஹி!

விக்கியுலகம் said...

@இந்திரா

வருகைக்கு நன்றிங்க சகோ!

விக்கியுலகம் said...

@பாலா

ஆமாம்யா மாப்ள....அந்த நேரத்துல அத்தன பெரும் சண்டையிட்டது எப்படி இருந்திருக்கும்!

விக்கியுலகம் said...

@Jana

மாப்ள இந்த பாட்டயும் சேத்துக்கோங்க....வா வாத்தியாரே ஊட்டாண்ட ஹிஹி!

விக்கியுலகம் said...

"# கவிதை வீதி # சௌந்தர்
September 20, 2011 2:24 PM
பாட்டி.. பாட்டி..."

>>>

மாப்ள வருகைக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@சசிகுமார்

மாப்ள வருகைக்கு நன்றி!...அது வேற இன்னொரு பதிவுக்குய்யா!

விக்கியுலகம் said...

@மகேந்திரன்

மாப்ள வருகைக்கு நன்றி!

விக்கியுலகம் said...

@Thanimaram

வருகைக்கு நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு

மாப்ள யாரையும் திட்டல....முடிஞ்ச வரை தலைப்பு கிளுகிளுப்பு இல்லாமல் இட்டால் எப்படி இருக்கும்னு கேட்டேன் அம்புட்டுதான்....நன்றி!

விக்கியுலகம் said...

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

"ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
September 20, 2011 3:29 PM
அண்ணே, ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே! அடிக்கடி பதிவுலகம் பற்றி குறை சொல்லிக்கிட்டு இருந்தா, உங்களுக்கு டென்சன்தான் வருமே தவிர,

பதிவுலகில் எந்த மாற்றமும் நடக்காது! தலைப்பு போடுறவங்க போட்டுக்கிட்டுத்தான் இருப்பாங்க!

உடம்பு பத்திரம் அண்ணே!"

>>>>>>
வருகைக்கு நன்றி தம்பி....நான் 24 மணி நேரம் கம்பியூட்டரை முறைத்து பார்க்கும் ஆளில்லை....உங்க அட்வைசுக்கு நன்றி.....உங்கள போல பெரிய ஆளுங்களுக்கு சொல்லலைங்க....ஹிஹி!

சிவா said...

இப்படி யோசிக்கிற பேரனை பார்த்து பாட்டி போயிடுச்சே....


என்ன சொல்லி என்ன பிரயோசனம்...
பாட்டி போச்சே

~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said...

ஸலாம் சகோ.விக்கி,

//இது ஒரு டீசன்டான பதிவு ....!//

அப்டீன்னா... இதுக்கு முன்னாடி நீங்க போட்ட பதிவெல்லாம்...???

நிரூபன் said...

இது ஒரு டீசன்டான பதிவு ....//

வணக்கம் அண்ணாச்சி.
இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

மயக்கத்தில இருக்கிற பாட்டிக்கே இழவு கொண்டாடிட்டாங்களா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

கில்மா சாமியாரின் டைரி

காலையில இத புடிக்கலாமா...

உங்களுக்கு அது பெருசா இருக்குதா....

திரிசா உதடு வேணுமா....//

ஆய்....நம்ம சிபி பாஸ்,
கருண் பாஸ் இன் டவுசரை உருவிட்டீங்களே...

ஆமினா said...

:-)

பாட்டி ட்ரெய்லர் பாத்து நொந்து தான் 2 மாசத்துல போய்டுச்சோ

கும்மாச்சி said...

விக்கி கலக்குங்க மாப்பிள

ரம்மி said...

93 வயசுன்னா, அந்த பாட்டி, பெரிய சீமாட்டி! 70 தாண்டுவோமா ?

கும்மாச்சி said...

தலைப்ப வுடு மாப்ள, மேட்டரை பாரு.
மேட்டர் நல்லாத்தான் சொல்லியிருக்கிங்க.