Followers

Showing posts with label சமூக அக்கறை. Show all posts
Showing posts with label சமூக அக்கறை. Show all posts

Monday, April 25, 2011

காணவில்லை உதவவும்!

வணக்கம் நண்பர்களே........

பன்னிக்குட்டி ராமசாமியை காணவில்லை தயவு செய்து உதவவும்....கடந்த 15 நாட்களாக தேடியும் கிடைக்க வில்லை எந்த சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்பதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு இனாம் வழங்கப்படும்....

இப்படிக்கு இடிச்சபுளி சங்கம்.................

Post Comment

Thursday, March 3, 2011

தெய்வங்கள் வாழ வழி செய்வோம்(!?)

இதுவரை மனிதன்தான் தெய்வங்களை தொழுது வருகிறான்..........................நான் சொல்ல வருவது நம் கண் முன் வாழும் தெய்வங்களான விவசாயிகளைப்பற்றியது..........நேற்று நான் போட்ட பதிவர்களுக்கான கெட்ட செய்தியின் உட்கருத்து வேறு.................


அந்த விஷயத்தை இப்போது தெளிவு படுத்துகிறேன்...........முதல் விஷயம் சமஉ என்றால் என்ன?

சகோதர மக்கள் உலகம் - இப்படி ஓர் அமைப்பு வட மாநிலத்தில் வேரூன்றி இருக்கிறது. இது அரசியல் சார்ந்த அமைப்பல்ல..........நம் நாட்டு மக்கள் வெளி நாடுகளில் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை தாய் நாட்டு முன்னேற்றத்திட்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர்.................


அதாவது சிறு மற்றும் குறு விவசாயிகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை செய்து வருவது தொடர்ந்து கொண்டு வருகிறது..............இதை தடுக்க அரசு என்ன செய்கிறது என்பது வேறு விஷயம்................ஆனால் ஒரு குடிமகனாக நாம் என்ன செய்ய நினைப்போமோ அதை செய்து வரும் மக்கள் தான் இதன் உறுப்பினர்கள்.

அவர்கள் இந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பண உதவி செய்து அந்த நிலங்களின் விளை பொருள்களை பாது காக்கின்றனர். அது மட்டுமல்லாது நகரங்களில் வாழும் நண்பர்களை வாரத்திற்க்கு ஒரு முறை அதாவது.........ஞாயிற்று கிழமைகளில் குறைந்த பட்சம் 50 கிமி தூரம் சென்று அங்கு அந்த விவசாயிகளுக்கு உதவி புரியுமாறும் பணித்துள்ளனர்.


அரசாங்கத்தை மட்டும் குறை கூறாமல் தங்களால் முயன்ற உதவிகளை சத்தமில்லாமல் செய்து வரும் ஒரு அமைப்பாக இது செயல் படுவதாக நண்பர் கூறினார். அது போல ஒரு விஷயம் நம் தமிழ் நாட்டில் நடந்தால் நல்லதாக இருக்கும் என்ற அவா எழுந்ததால் நேற்றைய பதிவில் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன்.

வழக்கம் போல நம்ம மக்கள் நான் நய்யாண்டி தான் எழுதி இருக்கிறேன் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் இது தொகுதி சார்ந்த அரசியல் கலக்காத சமூக சேவை என்பதே உண்மை.

கொசுறு: மேல்பட்ட விஷயங்கள் சமூக அக்கறை கொண்டவை. தங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன. 

Post Comment