Followers

Friday, July 15, 2011

கால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-3

வணக்கம் நண்பர்களே.....



கால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-1

கால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்-2  

அட அட அட அட்வைசுன்னா தோழிங்க கிட்ட தான் கேக்கணும்....கொடுத்தாங்க பாரு அட்வைசு....

"உனக்கு இது தேவையா...படிப்பை ஒழுங்கா பாரு இல்லன்னா தெருவுலதான் நிக்கணும்"

(என் குரல் மனதில் - இப்போ மட்டும் எங்க நிக்குறோம்!)


"நீ என்ன பெரிய ஆளா...உனக்கு என்ன back round  இருக்குன்னு இந்தமாதிரியெல்லாம் நடந்துக்கறே"

(என் குரல் மனதில் - இந்தப்பொண்ணுக்கு கொஞ்சம் கூட இங்கிதமே தெரியல...இத கட்டிக்கிட்டு எவன் கஷ்டப்படப்போரானோ தெரியல!)


பய புள்ளைங்க அடிச்சத விட இவங்க வார்த்தைங்க இன்னும் வலிச்சது...சரி நமக்கு எது நல்லதுன்னு படுதோ அதையே செய்ஞ்சி பழப்பட்டதை கொஞ்சம் நிறுத்தி வச்சிபுட்டு(!)...நல்லவங்க சொல்றதையும் கேப்போமேன்னு...கேக்க ஆரம்பிச்சேன்...

காலேஜ் விட்டா....அந்த கம்பியூட்டர் சென்டர்ன்னு...படிப்புங்கற பெத்த பெருமாளு(!) பின்னாடி போக ஆரம்பிச்சேன்....அவரு என்ன அம்புட்டு நல்லவரா...நான் மாறினதுக்கப்புறம் அவரும் உடனே மனச மாத்திக்கரதுக்கு(!)....வச்சாரு அடுத்த ஆப்பா!...

அந்த மருந்து கொடுத்து....அந்த பாழப்போன இரவுல உசுர காப்பாத்துன நண்பியோட தோழி இந்த சென்டர்ல வந்து சேந்தாங்க(!)....பொண்ணுக்கு....இந்த உதை கொடுத்து திரும்ப வட்டியோட வாங்குறவங்கள ரொம்ப புடிக்கும் போல(!)...நல்லாத்தான் பழகுனாங்க...நானும் என்னோட நண்பிகளின் நெனப்புலேயே நல்லவங்கன்னு ரொம்ப உரிமையோட பழக ஆரம்பிச்சேன்....


திடுதிப்புன்னு ஒரு நாளு சினிமாவுக்கு போக முடிவு பண்ணாங்க...அதுவும் ஒரு காலேஜ் சம்பந்தப்பட்ட படம்....போனது போனாங்களே படத்த மட்டும் பாத்தா பரவாயில்ல...அங்க வந்து இருந்த அடுத்த காலேஜ் பொண்ணுங்க கூட சண்டைய போட ஆரம்பிச்சாங்க....கூட போன நாலு தடியனுங்கள(நாங்கதேன்!) ஆபீஸ் ரூமுக்கு கூட்டி போய் அர்ச்சனா ச்சே அர்ச்சனை கெடச்சதுதான் மிச்சம்...திரும்ப வரும் போது கேட்டா அந்த நடிகரு மேல இவங்களுக்கு அம்மாம் பாசமாம்(பய புள்ள கலர பாத்து தப்பா முடிவு பண்ணி இருப்பாங்களோ!...அடிப்பாவி மக்கா அதுல கொஞ்சமாவது எங்க பேர்ல இருந்துதா!)

திரும்ப வந்து ஒரு ஓட்டல்ல உக்காந்து சாப்பிட ஆரம்பிச்சோம்...சாப்பிட்டுகிட்டே இருக்கும் போது சொன்னா பாருங்க ஒரு சேதி....வயுத்துல ரெண்டு புல்லட் ஒடுராப்போல தோணிச்சி எனக்கு...

friends!....sorry என்னோட பர்ஸ காணல so யாரவது பணம் பே பண்ணறீங்களா!....

(எனக்கு ஒரு கெட்ட பழக்கம் பர்ஸ் கொண்டுபோறது கிடையாது ஹிஹி துட்டு இருந்தாதானே!...பஸ் பாஸ் போதாதா நமக்கு ஹிஹி!)


உக்காந்து இருந்தது ஹைகிளாஸ் உணவகம்...என்னத்த பண்றது...வந்த நல்ல நண்பர்கள் ஷேர் பண்ணி பணத்த கொடுத்தாங்க....அப்போதான் தெரிஞ்சது அதுல ஒரு 100 ரூவா நோட்டு செல்லாதுங்கறது...!

அண்ணே நாங்க எப்படியாவது துட்ட கொடுத்துடறோம்....கொஞ்சம் வெயிட் பண்ணுங்க....பக்கத்துல இருங்க என் வீட்டுக்கு போய் துட்டு கொண்டாந்துடறேன்!....என்றான் ஒரு நண்பன்...

டேய் மாப்ள வந்துருவியா....பாத்து சீக்கிராம் வாடா (நான்!..ஹிஹி!)

எலேய் துட்டு இல்லாமத்தான் இப்படி அழிச்சாட்டியம் பண்ணீங்களா...அத கொண்டா இத கொண்டா...இது ஏன் ஊசிப்போய் இருக்கு...அது ஏன் தண்ணி விட்டு இருக்குன்னு....ராஸ்கல்ஸ்...


சார் கோபப்படாதீங்க....அவன் போய் கொண்டு வர வரை கொஞ்சம் பொறுமையா இருங்க என்றாள் பத்து(பத்மா!)....

நீங்கல்லாம் பொண்ணுங்களா...இப்படி இந்த பசங்க கூட கூத்தடிக்கிறீங்களே...உங்க வீட்ல தண்ணி தெளிச்சி விட்டுட்டாங்களா...என்றார்...

சார் மரியாத மரியாத...!

தொடரும்....

கொசுறு: அந்த கூட்டத்துல அதிகமா தின்னது நான்தான்...அதிகமா உதார் விட்டதும் நாந்தேன்...பய புள்ளைங்க இந்த மாதிரி துட்டு இல்லாம குனிய வச்சிடுசீங்களே...முடியல முடியல!..ஒரு சினம்கொண்ட சிங்கத்த சீண்டி பாக்குறாங்க யுவர் ஆனர்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

24 comments:

சி.பி.செந்தில்குமார் said...

kaaleej காலேஜ் கடல

சி.பி.செந்தில்குமார் said...

>>உக்காந்து இருந்தது ஹைகிளாஸ் உணவகம்..

ennaa என்னா பேச்சு இது ரஸ்கல்...ராஸ்கல்.. எங்க அண்ணன் உணவு உலகம் மட்டும் மிடில் க்ளாஸா?

# கவிதை வீதி # சௌந்தர் said...

ரைட்டு...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அந்த கூட்டத்துல அதிகமா தின்னது நான்தான்...அதிகமா உதார் விட்டதும் நாந்தேன்.// ஆனா உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

MANO நாஞ்சில் மனோ said...

"உனக்கு இது தேவையா...படிப்பை ஒழுங்கா பாரு இல்லன்னா தெருவுலதான் நிக்கணும்"

(என் குரல் மனதில் - இப்போ மட்டும் எங்க நிக்குறோம்!)//

டேய் அண்ணா இப்பவாவது திருந்து ராஸ்கல்.....

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார்
July 15, 2011 4:50 PM
>>உக்காந்து இருந்தது ஹைகிளாஸ் உணவகம்..

ennaa என்னா பேச்சு இது ரஸ்கல்...ராஸ்கல்.. எங்க அண்ணன் உணவு உலகம் மட்டும் மிடில் க்ளாஸா?//

டேய் நாயே இப்போ எதுக்குடா ஆபீசரை வம்புக்கு இழுக்குற மூதேவி....???

MANO நாஞ்சில் மனோ said...

மிலிட்டிரி அண்ணே காலேஜ்ல இம்புட்டு பல்பு வாங்கினதுக்கு என் வாழ்த்துக்கள் அண்ணே ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை வீதி # சௌந்தர்
July 15, 2011 5:08 PM
ரைட்டு...//

பிச்சிபுடுவேன் பிச்சி என்னா ரைட்டு....???

இதனால் விக்கி அண்ணன் தெரிந்து கொல்ல [[கொள்ள]] வேண்டியது என்னான்னா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ஹி ஹி....

தமிழ்வாசி - Prakash said...

maams antha figure,la ethu ungalukku pidicha figure

மைந்தன் சிவா said...

ஹிஹி கலக்கல் காலேஜ் பகிர்வு!!!ஹிஹி சிபி ஒரு காமெடி பண்றாராம்!!

செங்கோவி said...

இப்பவும் நீரு திருந்தின மாதிரி தெரியலியே.

ஜீ... said...

சூப்பர் மாம்ஸ்! உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! :-)

மாய உலகம் said...

பணம் எடுத்து வந்தானா...இல்ல க்ரைண்டர் அட்டுனீங்களா

நிரூபன் said...

உனக்கு என்ன back round இருக்குன்னு இந்தமாதிரியெல்லாம் நடந்துக்கறே"///

அவ்....back round இல்லேன்னா டவுசர் போட முடியாதென்று இந்த பொண்ணுங்களுக்கு தெரியாதா;-)))

நிரூபன் said...

சாப்பிடப் போய் மாட்டிக்கிட்டீங்களா இல்லையா என்பது அடுத்த அங்கத்தில் தான் தெரியும், சுவாரஸ்யமாகத் தொடரைக் கொண்டு செல்லுறீங்க. நம்மளைப் போல உங்களுக்கும் நண்பிகள் தான் நிறையப் போல இருக்கே;-))

FOOD said...

//ஒரு சினம்கொண்ட சிங்கத்த சீண்டி பாக்குறாங்க யுவர் ஆனர்!//
ரொம்பத்தான் சீண்டிட்டாங்களோ!

FOOD said...

//சி.பி.செந்தில்குமார் said...
>>உக்காந்து இருந்தது ஹைகிளாஸ் உணவகம்..

ennaa என்னா பேச்சு இது ரஸ்கல்...ராஸ்கல்.. எங்க அண்ணன் உணவு உலகம் மட்டும் மிடில் க்ளாஸா?//
நான் சொல்ல மாட்டேன், சிபி லோ கிளாஸூன்னு! ஹே ஹே.

சசிகுமார் said...

யார் அந்த சினம் கொண்ட அசிங்கம் சீ சீ சிங்கம்

காட்டான் said...

காட்டான் குழ போட்டான்..!

குணசேகரன்... said...

அட..!.. நல்ல எண்டெர்டெயின்மெண்ட் பதிவு

M.R said...

எலேய் துட்டு இல்லாமத்தான் இப்படி அழிச்சாட்டியம் பண்ணீங்களா...அத கொண்டா இத கொண்டா...இது ஏன் ஊசிப்போய் இருக்கு...அது ஏன் தண்ணி விட்டு இருக்குன்னு....ராஸ்கல்ஸ்...


உதார் உடுரதுக்கு காசு எதுக்கு , அவங்களுக்கு விவரம் பத்தல நண்பா

அம்பாளடியாள் said...

பார்த்தேன் இரசித்தேன் நல்ல படைப்பு.
பகிர்வுக்கு மிக்க நன்றி...
எனது முதற்ப்பாடல் என் வலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.உங்கள் பொன்னான
கருத்துகளையும் வாழ்த்துக்களையும் மிகவும் பணிவன்போடு எதிர்பார்க்கின்றேன்.வாருங்கள்
உங்கள் வரவுக்காக காத்திருக்கின்றேன் என்றும் அன்புடன் உங்களுள் ஒருத்தியாக இந்த அம்பாளடியாள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

காலேஜ் என்றாலே கலக்கல் தான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் ஹோட்டல்லேயும் அடிதானா?