Followers

Sunday, October 24, 2010

நடிகன் - ஒரு பொது சன பார்வையிலே

நான் ஒரு சாதாரண பொது மனுசனா இருந்து இந்த சினிமா பிரபலங்கள பாக்கலாம் அப்பிடின்னு இன்னிக்கு ஒரு சின்ன பதிவு.

ரஜினி - இவர இப்போ இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அப்படின்னு சொல்லுறாங்க. இவரு படம் வந்தா நறைய சினிமா சம்பந்தப்பட்டு வேலை செய்யறவங்க வயிறு நிரயிது. உண்மையும் இதுதான். ஆனா இவர் மேல சொல்ற பொது குற்ற சாட்டு இவரு ஏன் இன்னும் மக்களே உசுப்பேதிகினு கிறாரு அப்டின்றது தான்.
இன்னான தா பாருப்பா நான் உன் படத்த 100 ரூவா கொடுத்து பாக்கறேன் அதனால நான் சொல்றபோ நீ நிக்கணும், உக்காரணும் இப்டித்தான் பொதுவா இவர புடிச்சவங்க நினைகிரங்க. எனக்கு தெரிஞ்சு இவரு சினிமால பண்ண விஷயத்த எல்லாம் நெசத்துல நடக்கணும் அப்டின்னு நினைகிரவங்கள என்ன பண்றது.
பாவம் இவரும் என்னதான் பண்றது தெரியாம மண்டைய பிச்சி பிச்சி அதையும் மக்களுக்கே கொடுதுபுட்டாறு.
ஆனா ஒன்னு ஒரு நல்ல மனுசன ஏன் இப்டி உசுபேத்தி குளுர் காயிராங்கனு தெரியல. ஆனா அவரு தெளிவாகிறாரு நம்மாளுங்க தான் இன்னும் அப்டியேகிறாங்க.

கமல் - இவர் மாதிரி ஒரு மனுசன பார்கவே முடியாது அவ்ளோ நல்லவரு. நான் ஒருநாளு இவரோட படத்த பத்தி பேசிகினு இருக்கும்போது நம்ம நண்பன் டேய் இன்னாமா நடிகிறாரு பாரு அப்டின்னு சொனான். உண்மைதான் குடும்பத்த பத்திய இவரோட கருத்து சூபரு. இந்தியால இருக்கவேண்டிய ஆளே இல்ல அமெரிகாவுல இருகவேண்டியவரு. பொதுவா இவர பத்தி எழுதுனாலே பல அறிவாளிகள் சண்டைக்கு வந்துருவாக. என்ன போல சாமானியன் பேச்சை யார் கவனிக்க போறா. அதனால தைரியமா எழுதலாம் அப்டின்னு இத சொல்றேன்.

விஜய(ராஜ்)காந்த் - நாளைய (2011....) முதல்வரு ஆக ட்ரை பண்ணினுகிறாரு. பல பேர வட்டிக்கு வாங்க வச்சி இவரு கட்சியால ஓடவிட்டவரு. பாகிஸ்தான் திவிரவாதிகள தமிழ்ல பேச வச்சவரு. டாங்கி(donky)  பைட்ட தமிழ் நாட்டுக்கு கொண்டு வந்தவரு. ஒரு குடும்பத்த எதிர்த்து தான் குடும்பத்தோட அரசியல்ல நமக்காக சண்ட போடுகினுகிறாரு.

விஜய் - இவர நெறைய பதிவர்கள் குத்தகைக்கு எடுத்து அவங்களோட பதிவ அதிக ஒட்டு வங்கிக்க யூஸ் பண்ணிகிரங்க. எப்படியோ இவர் படம் ஓடுதோ இல்லையோ இவர் பதிவு மூலமா நறைய பேர் இந்த உலகத்துக்கு தெரிய வச்சவரு(பதிவுலகதுலங்க). தன்னுடைய படங்கள் மூலமா ரசிநியையே மிஞ்சினவரு. இவர மாதிரி ட்ரைன்ல ஏற நறைய பேரு முயற்சி
பண்ணினுகிரங்கோ.

அஜித் - ஒரு பினிக்ஸ் பறவை பாவம். எவ்வளவோ ட்ரை பண்றாரு முடியல. ரஜினிக்கு அப்புறம் "அது" டயலாக்க ரொம்ப நாளா மெய்ண்டைன் பண்றாரு. இன்னும் பீல்ட்ல தன்னை நிரூபிக்க ரொம்ப முயற்சி பண்றாரு. இவரோட ரசிகருங்க சான்சே இல்ல. வேற யாருக்குமே இல்லாத அளவுக்கு பொறுமை யானவங்க.

சூர்யா - ஒரு காலத்துல முதுக மட்டுமே ஆட்டுன(டான்ஸ்ல) மனுஷன். இப்போ சும்மா பின்றாரு அப்டின்னு பேசிகிறாங்க. ஒரு பெரிய விஷயம் இன்னும் பேருக்கு முன்னால எதுவும் போட்டுகல. ஆனா கேள்வி படர விஷயங்க நல்லா இல்ல. கொஞ்சம் மேல வந்துட்டாவே தலைக்கு கணம் ஏறிடும் அப்டிங்கிறது இவர் விஷயத்துல ஆரம்பம்.


என்னமோ போங்க எல்லோரும் நல்ல இருந்த சரி.

தொடரும் ....................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

7 comments:

Raphael Souza said...

Greetings from Brazil, congratulations on the blog!

http://raphaelsouzza.blogspot.com/

விக்கியுலகம் said...

thank you sir

மர்மயோகி said...

வாழ்த்துக்கள்...வோர்ட் வேரிபிகசனை எடுத்துடுங்களேன்.

விக்கியுலகம் said...

எடுத்துட்டேன்

♔ம.தி.சுதா♔ said...

கலக்குங்க வாத்தியாரே...

விக்கியுலகம் said...

thank you

Mr. Raphael Souza

Thank you

விக்கியுலகம் said...

நன்றி ம.தி.சுதா அவர்களே