Followers

Monday, February 28, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?) - 28.2.11

ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா..............

வாங்க மானி பாட்டு ரொம்ப அர்த்தத்தோட கீது.............

மானி: நீ வேறப்பா நான் எங்கம்மாவ நெனச்சி பாடிகின்னு வந்தேன்..........

குவா: சரிங்க மானி..........என்னதான் நிலவரம்.......!




மானி: எதிர் பார்த்தது தான் ஆனா சும்மா சொல்லக்கூடாது அம்மாவ...........யாரு ஓவரா ஆடுனாலும் கூட்டிவச்சி சீட்டு குடுக்குற மனசு பெருசு..........இப்படித்தான் அந்த விறகு வெட்டிய வளத்து விட்டாங்க.......இதயக்கனி தலைவரு இருக்குற வரைக்கும் பம்மிட்டு இருந்த அந்தாளு இந்த அளவுக்கு உதாரு விடுறதுக்கு அம்மாதானப்பா காரணம் ஹி ஹி!

குவா: சரி...........கொஞ்சம் இழுபறியா இருந்தது போல..........

மானி: இப்பவும் கொஞ்சம் அப்படித்தான் இருக்கு............ஆனா இந்த முறை மீன் பீர் மொதலாளி நான் பண விஷயத்த பாத்துக்கறேன்னு சொன்னதால அம்மாவும் சரின்னுட்டாங்க ஹி ஹி!................A/C குடியும் டாஸ்மாக்கும் சேர்ந்து ஒரே குடியா மாறிப்போச்சி...........!

குவா: அந்த மத்திய கட்சிக்கு இன்னும் பேரம் சரியா படியளியாமே.............


மானி: நம்ம தலிவரு யாரு.........சும்மாவா...........15 சீட்டுக்கு பம்மிட்டு நின்னவருக்கு இவ்ளோ வாரி வழங்கும்போதே தெரியலியா.........இந்த முறை ரிசல்ட்டு தெரிஞ்சி போச்சின்னு...........அதான் அவங்க கிட்ட இவ்ளோ தான் முடியும்னு கறாரா சொல்லிட்டாங்க.......ஹி ஹி!...........இதுல அந்த தலைவருங்க ரொம்ப டென்சன் ஆயிட்டாங்க.........எல்லாரும் ஒரு மப்பா திரியுறாங்க...........

குவா: இந்த கட்சி தாவலுக்கு ஏதாவது தடை வருமாபா..........


மானி: என்ன இப்படி கேட்டுபுட்ட...........அதுக்கு மட்டும் தடை வந்துச்சினா நம்ம நாட்டுல அரசியல் வாதிங்கள தேடித்தான் கண்டு பிடிக்கணும்...........பாரு கடந்த முறை எதிர்ல இருந்து இந்த முகாமுக்கு வந்த பல பேரு ஒரே டென்சனா கீறாங்க..........

குவா: ஏம்பா...........

மானி: அந்தம்மா மறுபடியும் வந்துட்டாங்கன்னா கொய்யால எங்க அடிப்பாங்கன்னே தெரியாதுல்ல ஹி ஹி!

குவா: நம்ம மண்ணு சொல்லிகிறாரு பாத்தியா..........மீனவங்கள கொல்றத ஏற்க முடியாதுன்னு............

மானி: டேய்.............இப்படிதான் அடிக்கடி உதாரு விட்டுக்கனும்...........இல்லன்ன நீங்க என்னதான் செய்வீங்கன்னு கேக்குறவங்களுக்கு............பாரு நான் எத்தன முறை உதாரு உட்டுகிறேன்னு சொல்லிக்கலாமுள்ள.........இந்த கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவு வராமலா போகும்........பாப்போம்.

குவா: ஆமா அந்த சினிமா நடிக கன்னட அரசியல்வாதியாள நல்லா செட்டுலாயிட்டாங்க போல........

மானி: ஆமா, அந்த இயற்க பொண்ணுதானே..........அது ரொம்ப நாளா நடக்குது அந்த தலீவரு அந்த பொண்ணுக்கு தனி சேனலு வாங்கி குடுத்து கிறாரு.......ஹி ஹி!

குவா: பாரு மானி இவ்ளோ கஷ்டப்பட்டு இப்படி ஆயிடுச்சே கிரிகெட்டுல இந்தியா நிலைமை..........!

மானி: நேத்து ஆனத சொல்றியா...........எப்பவுமே ரெண்டு ராசி உண்டு நம்ம டீமுக்கு........ ஒன்னு கிரிகெட்டு தெய்வம் செஞ்சுரி போட்டாலே அன்னிக்கி இந்தியா உதவாங்கும்னு சொல்லுவாங்க.......ரெண்டாவது அந்த யுவி அர செஞ்சுரி போட்டாலே இந்தியா ஜெயுக்கும்னு சொல்லுவாங்க...........நேத்து ரெண்டுமே நடந்ததால ட்ரா ஆயிருச்சி...........ஆனா சரியான காரணம் என்னான்னா நமக்கு சரியான பந்து வீச்சாலருங்க இல்லாததுதான்.

குவா: சினிமா மேட்டரு.......

சரக்கு 1. 3 ஷா நடிகைக்கு குயந்த கீதாமே..........

நெசம் : விசாரிச்சதுல அது உண்மை இல்லன்னு சொல்றாங்கப்பா ஹி ஹி!

சரக்கு 2. நிசி டைரடக்கரு இந்திக்கு போறாரு!

நெசம்: இல்லைங்கோ அந்தப்படம் பப்படம் ஆனதால இன்னொரு காதல் படம்  எடுக்க முடிவு பண்ணி கீறாரு.

சரக்கு 3. எம் பேரு மீனா குமாரி நடிகை சொந்தப்படம் எடுக்கப்போறாங்களாம்!


நெசம்: ஆமாங்கோ.........தெலுங்குல எடுக்குறாங்களாம்.

ஆரோக்கியசாமி சொல்றாரு:

சுறுசுறுப்பாய் வாழ பச்சை பட்டாணி சாப்பிடுங்க. தினமும் ஒரு கைப்பிடி அளவு உணவுல சேர்த்துகிட்டீங்கன்னா உங்க இதயம் பலம் பெரும். ஒல்லியாய் இருப்பவர்கள் தொடர்ந்து இதை உணவில் சேர்த்துக்கொண்டால் உடம்பு ஆரோக்கியமாக சதைப்பிடிக்கும். 

செய்தி: தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை ஆரம்பித்தது!

பன்ச்: தெய்வம்னா அம்மா, அம்மான்னா சும்மா இல்ல 

இந்த வார தத்துவம்:



முத வெட்டு: (இந்திய ஜொள்ளு!)



ரெண்டாவது வெட்டு: (வியத்நாமிய ஜொள்ளு!)


கொசுறு: பொண்ணு எப்படி ஹி ஹி!(சிபி,மனோ கவனிக்க!)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Sunday, February 27, 2011

வியாபாரி பேட்டி - (!?)

வியத்னாம் - தமிழனின் பாதம் இனி அடிமை வீரன் - திருப்பி அடிப்பவன்! 
இந்த புதிய தளத்தில் பகிர உள்ளேன்....

வியத்னாம் - வலியவன் எளியவனிடம் - புலனாய்வு தொடர் இங்கேயே தொடரும்.......ஏனெனில் இரண்டும் வெவ்வேறு பார்வையில் நான் பார்ப்பதால் ஹி ஹி!...................சிரமத்துக்கு மன்னிக்கவும்...........



வணக்கம் இந்த பேட்டி ஒரு தலை சிறந்த வியாபாரியிடம் எடுக்கப்பட்டது.............


வணக்கமுன்னேன்...................

வாங்க வணக்கம்.............பேட்டின்னு சொன்னீங்களே எனக்கு கோவம் வராத மாதிரி கேள்வி கேளுங்க சரியா....................

சரிங்கன்னேன்..........

அது சரி அது என்னா தலைப்பு வியாபாரின்னு போட்டுகிறீங்க ..............நான் ஒரு பெரிய குடும்பத்தலைவனாச்சே........

இப்போ தான் குடும்பம்னாலே வியாபாரம்னு ஆயிடுசிங்களே அதேன்..............

சரி ஓகே பாப்போம்.......கேளுங்க..........

நிருபர்: நீங்க எப்படி இந்த அளவுக்கு முன்னேறுனீங்க.............


வியா: அது ஒன்னும் பெரிசில்லப்பா.............அந்தக்காலத்துல எனக்கு வேல வெட்டி எதுவும் கிடைக்கல..........சும்மா சுத்தி வரும்போது..........என்னா பண்ணலாம்னு யோசிச்சி.........நான் அடிப்படையில ஒரு மூளைக்காரன்னு நம்ம நண்பர்கள் சொல்லுவாங்க................சரி தொழில் தெரியாதவங்க ஒரு தொழில் கத்துக்குராமாதிரி.............நான் இந்த வியாபாரத்த ஏத்துகிட்டேன் அவ்வளவு தான் ஹி ஹி!

நிருபர்: ஆமாண்ணே இந்த கடைய வாங்கும் போது எவ்ளோ குடுத்து வாங்குனீங்க?

பதில்: இந்த கடைல நான் ஒரு சாதாரண பொட்லம் சுத்துற பையனா தான் வேலைக்கு சேர்ந்தேன்........அப்போ கடை ஓனருக்கு நல்லா வியாபாரம் போயிட்டு இருந்துது............ஆனா அந்த மனுஷன் என் அளவுக்கு நெளிவு சுளிவு தெரியாதவாறு.......திடீர்ன்னு உடம்பு சரி இல்லாம இறந்துட்டாரு.........அப்போ மத்த பய புள்ளைங்க எப்படியாவது கடைய ஆட்டைய போடப்பாத்தாங்க......நான் விடுவனா இன்னொரு நண்பன் அப்போதான் கடையில சேர்ந்து இருந்தான்.......அவன கூட்டாளியா சேத்துகிட்டு.......மத்தவங்கள ஓடவிட்டுட்டு நான் முதலாளியா ஆயிட்டேன் எப்பூடி!


நிருபர்: சூப்பரு..........அப்புறம் அந்த நண்பேன்டா என்ன ஆனாரு........../

பதில்: ஏன்யா இவ்ளோ பிளான் பண்ணி கடைய கைக்கு கொண்டு வந்த நானு அவரு கிட்டயா கொடுப்பேன்.......இன்னொரு ப்ளான் பண்ணி அவர கடையில இருந்து கழட்டி விட்டுட்டேன்........ஆனா மனுஷன் என் எதிர்லயே இன்னொரு கடை போட்டு வியாபாரம் ஆரம்பிச்சிட்டாரு.......இப்போ எதிர்ல இருக்க கடை அவரோடது தான்.......அவரோட சொந்த காரங்க நடத்திட்டு வராங்க.........ஆனா நல்ல மனுஷன்.......நான் அவர எவ்ளோ கேவலமா திட்டி இருக்கேன் ....ஆனா மனுஷன் அசரவே இல்ல.......ஒரு வேல என் பிளானு அவருக்கிட்ட சரியா ஒர்க் அவுட் ஆகல்லன்னு நெனைக்கிறேன் ஹி ஹி!


நிருபர்: சரிண்ணே உங்களுக்கு உண்மையிலே எத்தன மனைவிங்க..............?

பதில்: பாத்தியா நான் பேட்டி குடுக்குறேன்னு சொன்னதும்.........இந்த மாதிரி வரலாற்று விஷயத்த எல்லாம் தோண்டுறியே.........சரி கேட்டுட்ட...........நான் எண்ணிக்கைய எல்லாம் கணக்குல வச்சிக்கறது இல்ல..........அந்த டைரி தொலைஞ்சி போச்சி..............அதான் ஹி ஹி!

நிருபர்: அடிக்கடி உங்க குடும்பத்துல பிரச்சன வரும்போது எப்படி 
சமாளிக்கிறீங்க?

பதில்: அது ஒன்னும் பெருசில்ல..........ங்கொய்யால இனி நீங்களே குடும்ப பொறுப்ப பாத்துக்கங்கன்னு சொல்லிபுடுவேன்..........

நிருபர்: என்னனே உங்க புள்ளைங்க........சரி நீங்க ஒதுங்கி கோங்கன்னு சொல்லிட்டாங்கன்னா.............!

பதில்: அதுக்கு தான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடத்துல செக் வச்சிருக்கேன் ஹி ஹி!................என்ன பண்றது தொழில்ல செய்ஞ்சி செய்ஞ்சி வீட்டுலயும் அப்படியே பழகிப்போச்சி..............பய புள்ளைங்களுக்கு அந்த அளவுக்கு புரிஞ்சிக்க தெரியாது ஹி ஹி!
நிருபர்: ஆமாண்ணே உங்க பங்காளிப்பசங்க கடை எப்படி போகுது?

வியா: அவங்களுக்கு என்ன பய புள்ளைங்க இப்போ கடைய பெருசாக்கி எங்கேயோ போயிட்டாங்க......கொஞ்சம் கூட என்ன மதிக்கறது இல்ல.....ஆனா நானும் அவங்கள பகைசிக்கறது இல்ல..........இல்லன்ன நம்மையே போட்டுபாத்துருவாங்க அதான்............(கொய்யால துருவி துருவி கேக்குறானே ஏதாவது தெரிஞ்சி போச்சா!)

நிருபர்: சரிண்ணே...........வியாபாரம் எப்படிப்போகுது...........?

பதில்: அதுக்கு என்ன.......அடிக்கடி மக்கார் பண்ணும்.............அப்போல்லாம் கடைக்கு வர்ற கஷ்டமருங்களுக்கு கொஞ்சம் உடைச்ச கடலை ப்ரீயா கொடுப்பேன்...........அந்த நாதாரிங்களும்.........அண்ணே ரொம்ப நல்லவருன்னு சொல்லி அத கொண்டு போவாங்க ஹி ஹி!

நிருபர்: உங்க எதிர் கடகாரங்க திடீர்ன்னு நல்லா கல்லா கட்டுராங்கலாமே?

பதில்: படுவா பிச்சி புடுவேன்.............யாரு இந்த மாதிரி எல்லாம் சொல்றாங்கன்னு எனக்கு தெரியும்...........அந்த எதிர் கடக்காரங்க சரியான தண்ணி கேசு...........இப்போ கூட பாருங்க.........வியாபாரம் காலி ஆகப்போகுதுன்னு நெனச்சி இன்னொரு.......தண்ணி கேச கூட சேத்துகிட்டு இருக்காங்க.....ஆனா நான் இதுக்கெல்லாம் கவலைப்படுற ஆளு இல்ல........என் கடையில வேல செய்யுற அடிமைகள் அவ்ளோ நல்லவங்க........ஹி ஹி!

நிருபர்: ஆமாண்ணே.......எப்படி இவ்ளோ விஷயங்கள தனி ஆளா இந்த வியாபார போட்டில சமாளிக்கிறீங்க...............

நிருபர்: அது வந்து தம்பி...............எவன் தன்னை அறிவாளின்னு நெனச்சி நம்மள போட்டு பாக்கலாம்னு நினைக்கிறானோ.........அவன வச்சி ஒரு பெரிய வியாபாரம் பண்ணி துட்ட எடுத்துகுனு.........ஒரு இடத்துல மாட்டி விட்டுருவேன்...........அப்புறம் அவன் பாட்டுக்கு கெஞ்சிட்டு கெடப்பான் அத எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன் ஹி ஹி!...........இதுவரைக்கும் நறைய பய புள்ளைங்க எங்கிட்ட இப்படிதான் மாட்டிகிட்டு முழிச்சிட்டு இருக்குங்க ஹி ஹி!......எல்லாத்தையும் சொல்ல முடியாது வியாபார ரகசியம் ஹி ஹி!

நிருபர்: அது என்னன்னே எப்ப பாரு ஒரு சிரிப்பு சிரிச்சிகிறீங்க..........

பதில்: பின்னே உன்ன மாதிரி நாதாரிய என்ன பண்றது அதான் என்ன நானே தேத்திக்கிறேன்......

நிருபர்: ஆமாண்ணே அரிசி பிரச்சின பெரிசா ஆன போது நீங்க ஒண்ணுமே பண்ணலியாமே...........

பதில்: ஏன்யா அதான் அரிசியெல்லாம் மொத்தமா காணாம போக வச்சிட்டேன் இல்ல...........இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேக்காத>....

நிருபர்: சரிண்ணே உங்க கடைக்கு இப்போ அந்த சண்டைக்கார கடைக்கறாரு வந்து நல்லா பேசுறாராமே...........

பதில்: அந்த மொச்ச பயறு விக்றாரே அவர சொல்றியா........அந்தாளுக்கு இப்போ சனி என் ரூபத்துல வந்து இருக்கு........என்ன என்னல்லாம் பேசுனாரு தெரியுமா...........அதான் நம்ம கட வியாபாரத்துல சேர்த்துக்கிட்டு நேரம் வரும்போது கழட்டி விட்டுடுவேன் ஹி ஹி!

நிருபர்: ஆமாம் நீங்க எப்போ தூங்க போவிங்க.....எவ்ளோ நேரம் தூங்குவீங்க.........

பதில்: அதுவா..........நான் பொதுவா 6 மணி நேரம் தூங்குவேன்..........ஆனா முதலை கணக்கா கண்ண தெறந்து வச்சி கிட்டே தூங்குவேன்...........ஏன்னா வீட்டுல யாரையும் நம்ப முடியாது...............அதான்!.....கஸ்டமருங்களே பரவாயில்ல....!

நிருபர்: சரிண்ணே நீங்க நெறைய கலப்படம் செய்யறதா சொல்றாங்க......?

பதில்: அதுவா............என்ன பிடிக்காதவங்க சொல்றது அது........பய புள்ளைங்க என் கையுல கெடச்சா பாத்துக்கறேன்!

கேள்வி: ஆமான்னேன் சாமியப்பத்தி என்ன நெனைக்கிறீங்க.......?

பதில்: எங்க எங்க ..........(அதிர்ச்சியுடன் நாலு பக்கமும் பார்க்கிறார்!)

நிருபர்: அண்ணேன் நான் கடவுளப்பத்தி கேட்டேன்.......

பதில்: ஏன்டா புரியிறாமாதிரி கேளு.......ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்..........உன் கிட்ட மட்டும் சொல்றேன் இத பேட்டில போட்டுறாத சரியா.........

சரிங்கண்ணே...........

அதாவது..........மத்தவங்களுக்கு அது கிடையாது...........ஆனா அவரு இல்லாம எப்படியா என் வியாபாரம் இவ்ளோ ஜோரா நடக்கும்............எல்லாம் நம்ம வீட்டு காரங்க..........அவரோட பங்க கொண்டு போய் சரியா உண்டியல்ல போட்ருவாங்க ஹி ஹி! அதெல்லாம் யாருக்கும் தெரியாத மாதிரி பாத்துப்பேன் ஹி ஹி!

நிருபர்: சரிண்ணே இவ்ளோ நேரம் அருமையா பதில் சொன்னீங்க நன்றி............
ஒரு டம்ளர் தண்ணி கொடுங்க குடிக்க............

பதில்: எனக்கு குடுத்து பழக்கமில்ல ஹி ஹி நீங்க கெளம்புங்க தம்பி இது எடுத்து சிவந்த கை ஹி ஹி!.

கொசுறு: மறுபடியும் சொல்றேன் இது வியாபார நிமித்தமாக எடுக்கப்பட்ட பேட்டி யாரும் வேறு ஏதாவது(!) கண்ணோட்டத்துல பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, February 25, 2011

சரக்கடித்த பிறகு (ஒன்லி ஆண்களுக்கு மட்டும்!

காலையில ஒரு வரலாற்று பதிவு போட்டேன்...........நம்ம சிபி ரொம்ப மனசு கஷ்டமாயிடுசின்னு பதில் சொல்லி இருந்தாப்புல! அதான் இன்னொரு மொக்க பதிவு ஹி ஹி!.............(எப்படியெல்லாம் காரணம் சொல்ல வேண்டி இருக்கு!)



போன வாரத்துல ஒரு நாளு நம்ம வட இந்திய நல்லவரு ஒருத்தரு போன் பண்ணி இருந்தாரு...........(நான் ஏற்கனவே ஒரு போன் கால் யாருன்னு தெரியாம மண்ட காஞ்சி இருந்த நேரம்.....ஹி ஹி!)

அவரோட கம்பெனி விழாவுக்கு என்னை கூப்பிட்டாரு...........நான் சாதரணமா இந்த மாதிரி அழைப்புகள விரும்பறது இல்ல.......(எல்லாம் வட இந்திய அறிவாளிகளா(!) வருவாங்க ஹி ஹி!)..........ஏன்னா சரக்கு கண்டிப்பா அடிக்க சொல்லி வற்புறுத்துவாங்க..................நமக்கு வேற பித்த உடம்பு வேறயா அதேன்.....

ரொம்ப அழுத்தம் குடுத்து என்னை 4 முறை அழச்சதினால போனேன்.........ஒரே இந்தி பட்டாளம்........நான் மட்டும் தான் இந்தியால இருந்து ஒதுக்கப்பட்ட தமிழன்(நமக்கு ஒன்னும் புதுசில்லையே ஹி ஹி!)..........ஒவ்வருத்தரா பாத்து நலம் விசாரிச்சாங்க........(எல்லோரும் அண்ணி எங்கண்ணே அப்படின்னு.......கேட்டாங்க அது தணிக்கத!)


ஒருத்தர ஒருத்தர் விசாரிக்கும்போது பெண்கள அண்ணி எப்படி இருக்கீங்க என்றே சொல்லுவாங்க...கொஞ்ச நேரம் கையில ஆப்பிள் ஜூஸ் வச்சிக்கிட்டு சீன் போட்டுட்டு இருந்தேன்(மானங்கெட்ட பொழப்பு!)............அப்போ போனு வந்துச்சி..........என்ன சொல்லும்மா என்றேன்...........என் மனைவி என்ன சாப்பிட்டாச்சா என்றாள்............இல்ல இன்னிக்கி ஒரு பார்ட்டி அதான்........ சரி சரி நான் இல்லன்னு சந்தோசத்துல ரெண்டுக்கு மேல போடாதீங்க(பெக்காம்!....அது எப்படி இருக்கும் ஹி ஹி!) சரியா என்றாள்...........என் மேல எவ்வளவு நம்பிக்க ச்சே..........இதுக்கு சரக்கே அடிச்சிட்டு இருக்கலாம்னு நெனச்சேன்........ஒரு நண்பர் வந்து இப்போ நீ இந்த சரக்க குடிச்சே ஆவரன்னு சொல்லி கையில கொடுத்திட்டாரு...............

சரி அடிப்போமுன்னு ஆரம்பிச்சேன்...........கொஞ்ச நேரத்துல எத்தன ரவுண்டு போச்சின்னு தெரியல.......ஒருத்தரு பேச்சு குடுத்தாரு........ஆமாம்.........அண்ணி ஊருல இல்ல போல........அடங்கொன்னியா ஏன்டா..........போடா டேய் என்றேன்.............அவன் உடனே ஏன்பா என் மனைவி கூடத்தான் ஊருல இல்ல.......நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் என்றான்.

ஆமா.......சாப்பாட்டுக்கெல்லாம் என்னா பண்றே என்றேன்........அவன் எந்த சாப்பாடு என்று வேறொரு அர்த்தத்தில் கேட்டான்......இது வேலைக்காகாது என்று நினைத்தேன்...........உனக்கொன்னு தெரியுமா இங்க ஒருவிஷயம் ஆரம்பிச்சி இருக்கோம்.........என்னாது..........6 மாச ஒப்பந்தம் போட்டுக்கலாம்...........உனக்கு வேணுமுன்னா சொல்லு என்றான்..........எனக்கு முதலில் புரியவில்லை...........பிறகுதான் புரிந்தது..........அடப்பாவிங்களா இது உங்க பொண்டாட்டிங்களுக்கு செய்யுற துரோகமில்லையா என்றேன்...........

அந்த க்ரூப் என்னை ஏற இறங்க பார்த்தது...........உன் மனைவி 6 மாசமா ஊருல இல்லையே...........நீ என்னதான் பண்றே என்றான் ஒரு *#*# .......அதற்க்கு நான்..........சரிப்பா.......இப்போ அவங்களும் இதே மாதிரி நெனச்சி சரி 6 மாசத்துக்கு யாரையாவது இந்தியால சேத்துகிட்டாங்கன்னா ........என்றேன்.......உடனே அவர்களுக்கு வந்த கோவத்தை பார்க்கணுமே...........அடித்த போதை அவர்களுக்கு இரங்கி விட்டு இருந்தது.......என்னுடன் சண்டைக்கு வந்து விட்டனர்..............


நான் சொன்னது.......ஏன்டா டேய்..........உங்க பொண்டாட்டிங்க மட்டும் கண்ணகியா இருக்கணும்............நீங்க மார்கழி மாசத்து நாய் கணக்கா சுத்தி வருவீங்க..............இந்த நாதாரி பொழப்புக்கு என்னை வேற கூப்புடுறீங்க..........இன்னொரு முறை இந்த மாதிரி பேசினீங்க...........தக்காளி எத கட் பன்னனமோ அத கட் பண்ணிபுடுவேன் என்று சொல்லிவிட்டு வேகமாய் வீடு வந்து சேர்ந்தேன்............மறு நாளில் இருந்து நான் அவர்களின் போன் அழைப்பை ஏற்பதில்லை..........ஆனாலும் மன்னிப்பு கேட்டு தினம் குறும் செய்தி அனுப்பியவண்ணம் உள்ளனர்........

கொசுறு: எங்கடா நான் அவங்க வீட்டுக்காரங்க வந்தா போட்டு உடச்சிடுவனொன்னு பயம் வேற என்னத்துக்கு மன்னிப்பு கேக்குறாங்க...............என்னைப்பொறுத்தவரை அழகை ரசிப்பது தவறில்லை அனுபவிக்க நினைப்பதே தவறு(அதுவும் மனைவி என்பவள் வாழ்வில் கலந்த பிறகு ஹி ஹி!)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

வியத்னாம் வலியவன் எளியவனிடம்(VN)-பாகம் 2


இந்த சுரங்க அமைப்பை பாருங்கள் உள்ளிருந்தே சமைத்து சாப்பிடும் அமைப்பு. காற்றுப்போக்கி உண்டு. அதிலும் வெறும் மரவல்லிகிழங்கை சாப்பிட்டு பல காலம் உயிர் வாழ்ந்து இருக்கின்றனர்.

இதுவரைக்கும் நீங்க பாத்தது டிரைலர் தான்..............


வல்லரசுக்கும், இவங்களுக்கும் சண்ட நடந்த போது..............இந்த நாட்டு மக்களை எளிதாக எங்கு ஒளிந்து இருக்கிறார்கள் என்று கண்டு பிடிக்க இயலவில்லை. அதற்க்கு ஒரு மோசமான வழிமுறையை வல்லரசு நாடு தேர்ந்தெடுத்தது..........


அதற்க்கு பேர் தான் orange குண்டு எனப்படும் அமில வாயுக்குண்டு.......இது போடும் இடத்தில் மக்கள் அகோரமாக மாறிப்போவர்கள் என்று தெரிந்தும்.......இந்த விஷ அமிலத்தை விமானம் மூலம் பாச்சியது....இந்த விஷயத்தில் கொடுமை என்னவென்றால் இவர்கள் போட்ட இடத்தில இருந்த வல்லரசு மக்களும் இதனால் கொடூரமாகிப்போனர்கள்.



நிறைய படங்கள் கிடைத்தும் பகிர மனம் வரவில்லை. அப்பேர்ப்பட்ட கொடுமையான தருணம் அது. இன்றும் அந்த இடத்தில் பிறக்கும் பல குழந்தைகள் இப்படி ஊனமாகியே பிறக்கின்றன........


கிட்ட தட்ட பல ஆயிரம் பேர்கள் அப்போது இதனால் பாதிக்கப்பட்டனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது..........இந்த மாதிரி விஷயங்களில் இருந்து தம்மை காத்துக்கொள்ளவே இந்த சுரங்கங்களை அமைத்து இருக்கிறார்கள் இம்மக்கள். இதன் மூலம் ஊடுருவி இருந்து கொண்டு எதிரி வரும்போது தாக்கி பல்லாயிரம் பேரை கொன்று குவித்து இருக்கிறார்கள்.


இந்த நாட்டுப்பெண்கள்தான் கொடிய போரில் எதிரிகள் தோற்று ஓடுவதற்க்கு முழுக்காரணம். இவர்கள் மட்டும் போரில் வல்லரசுக்கு எதிராக திரும்பி இருக்க வில்லை என்றால், முடிவு வேறாய் இருந்திருக்கும்.


இன்றும் இந்த பெண்களின் உழைப்பு வியக்க வைக்கிறது. வீட்டில் தங்கா கணவன்...........எந்நேரமும் குடி என்று இருக்கும் இவர்களைக்காக்க கடின உழைப்பை ஏற்று வாழும் பெண்களைப்பார்க்கும் போது, நம் நாட்டுப்பெண்கள் நினைவில் வருகின்றனர்.



இந்திரா காந்தி பார்க் - ஹனோய்

தொடரும்.....................


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, February 24, 2011

கிரிக்கெட்டு என் பார்வையில்(!?) - முடிஞ்சிடும் வாங்க!

எல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி!

சச்சின் 

கிரிக்கெட்டின் கடவுள் என்று இந்தியால கூறப்படும்........ஒரு வாழும் கடவுள்(!). இவரு ஆட ஆரம்பிக்கும் போது இருந்த யாரும் இப்போ பீல்டுல இல்லன்னு நெனைக்கிறேன்.



கடவுள் எப்பவுமே மனுசன சோதிப்பாருன்னு சொல்லுவாங்க...........அந்த விஷயம் இவர பாக்கும்போது உறுதிப்படுது. மனுசன் இன்னிக்கி எப்படியும் 100 போட்டுடனும்னு வந்தா.......எங்கிருந்தோ புத்சா எதிர் டீமுல விளையாடுற கை சூப்புற பயபுள்ள இவரோட விக்கட்ட எடுத்துக்குனு பூடும். ராசியில்லா மனுசன் ஆனா யாரு திட்டினாலும் தான் உண்டு தன் வேல உண்டுன்னு இருக்குறவரு. இவரு கொஞ்சம் பொறுப்பா ஆடுனாருன்னா இந்தியா இன்னும் கொஞ்சம் தேறும்(டவுட்டு - ஆனா இவரு எப்போ 100 போடுறாரோ அப்போ தோத்துடுத்துன்னு எதிர்கட்சிக்காரங்க சொல்றாங்க!)

யுவராஜ்

இவரு அடுத்த காம்ப்ளி ஆயிருக்கவேண்டியது........ஜஸ்டு மிஸ்ஸு.........பயபுள்ள நல்லா ஆடுதுன்னு(விளயாட்டுலதானுங்க!) டீமுல சேர்த்தா கேப்டனு பதவி குடுக்கலன்னு இன்னும் குத்தவச்சி வக்காந்து சீன் போட்டுன்னு கீது............கேப்டன்னா எவ்ளோ கஷ்டமான பொறுப்பு............நம்ம மண்ணு தின்னும் சிங்க பாத்து தெரிஞ்சிக்க வேணாம்!...........எப்ப பாரு பிகரு நெனப்பு நம்ம சிபி போல ஹி ஹி! எதோ கொஞ்சம் ஆடி, பீல்டுல நாலு பந்த புடிச்சி போட்டுச்சின்னா அணி ஜெயிக்க வாய்ப்பு இருக்கு!


பதானு

தம்பிக்கி பரிஞ்சி பேசுனா தனக்கு வாய்ப்பு கெடைக்காதுன்னு தெரியாம இத்தன நாளு உதாரு உட்டுன்னு இருந்தாப்புல!..........இப்போ தான் தல சொல்லி "கொஞ்சம் உன் வேலைய மட்டும் பாருன்னு" சொன்னதுனால எதோ பாக்குறாரு. நல்ல எதிர்காலம் இருக்குற மட்டக்காரறு(பேட்ஸ் மேனுப்பா!). நல்லா அந்த பேட்ட இன்னும் உதருன்னாருன்னா கொய்யால பந்து நாளு பக்கமும் 4 ம் 6 மா பறக்க வாய்ப்பு இருக்கு.



சிங் 

வருமானவரிய சரியா கட்டலன்னாலும்.............நாட்டுக்காக பந்தயாவது ஒழுங்கா வீசுற ஒரே போலரு..........எதிராளி இவரு பந்த மட்டும் பாத்து பாத்து ஆடுவாங்க...........ஒரு வேல வரும்போதே குன்னாத்தம்மா கோயில்ல மந்திரிச்சி தாயத்து ஏதாவது கட்டிக்கினு வருவாரோ என்னவோ!............மவராசன் ஒழுங்கா இப்படியே பந்து வீசுனா டீமு பொழசிக்கும்..........எதோ நம்ம பயல கன்னத்துல அடிச்சதுனால உட்டானுங்க.....இதே வேற எங்கயாவது செய்ஞ்சி இருந்தா இந்நேரம் நறுக்கி இருப்பாங்க!(தல முடிய!)........டென்சனு மட்டும் வேணாம் சரியா!


ஜாகிர் 

டீமுல இருக்குற ஆளுங்கல்லையே பாக்க நல்லா கஸ்க்கு முஸ்க்குன்னு இருக்குற போலரு..........அடிக்கடி மனோஜ் பிரபாகர ஞாபகம் பண்ணும் போலிங்கு......நல்ல போலரு....இவரு லைன் புச்சி போட்டாருன்னா இந்தியாக்கு கவலையே வேணாம்.........கண்டிப்பா CUP வாங்கி குடுக்குற தெறம இருக்குது...........அப்படியே இந்த பேட்ஸ்மானு 4 அடிச்சா அடுத்த பால்ல எப்படி விக்கட்ட எடுக்கறதுன்னு பாக்கணுமே தவிர..........கோயில் மே! கணக்கா முறைச்சிக்கிட்டு டென்சனு ஆவக்கூடாது........சரியா கன்னு........


முனாப்

டீமுலையே கேப்டன் நம்புற ஒரே போலர்............கரீட்டா குச்சிக்கி குச்சி பந்து போடுற அழகே தனி...........மத்த போலருங்க இவரு கிட்ட கத்துக்க வேண்டியது நெறைய இருக்கு.............கோவப்படாம பொறுமையா வீசுனா உங்க போலிங்குக்கு 5 ன்னா(!) 10 விக்கெட்டே எடுக்கலாம்...........


ஸ்ரீ சாந்த் 

இந்த பேரு எப்படி ராசா வச்சாங்க உனக்கு.........அதுல இருக்க சாந்தம் கொஞ்சம் கூட உன்கிட்ட இல்லையே!...........எதோ ஒருத்தன் தடுக்கி விழுந்ததுனால நமக்கு வாய்ப்பு கெடச்சி இருக்குதே அத சரியா பயன் படுத்திக்கனும்னு கொஞ்சம் முயற்சி பண்ணலாம்ல!...........பவுன்சர் பாத்து பயபடுற பசங்க விக்கெட்ட சுளுவா தூக்கிடலாம்..........எதோ பாத்து செய்ப்பா........உங்க ஆளுங்க எல்லாம் எங்களுக்கு நெறய செய்ஞ்சி கிறாங்க..........நீயும் இந்த பாரதத்துக்கு ஏதாவது உன்னால முடிசத செய்ஞ்சிட்டு போவேன்னு நம்புறேன்....!


இதுக்கெல்லாம் மேல 11 ஆம்பளைங்கள போட்டுட்டு ஆம்பளைக்கு ஆம்பள, பொம்பளைக்கு பொம்பள கணக்கா இருக்குறவங்கள போடாம விட்டா தெய்வக்குத்தமாகிடாது. அதேன்.......இவங்க பேசும்போது எல்லோரும் எங்க பாப்பாங்கன்னு ஊருக்கே தெரியும் அத நான் வேற சொல்லனுமா ஹி ஹி!


கொசுறு: இதோட எனக்கு குடுத்த வேலைய முடிச்சிட்டேன்......இனி யாராவது தொடருக்கு கூப்பிட்டா மானிட்டரு தான் பேசுவான் ஹி ஹி!!

முடிஞ்சா இங்க வாங்க........http://gladiatorveeran.blogspot.com/
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Wednesday, February 23, 2011

கிரிக்கெட்டு என் பார்வையில்(!?)

எல்லோருக்கும் வணக்கமுங்கோ.............சும்மா கெடந்த சங்க ஊதினாறு ஒருத்தரு அவரு பேரு திரு. ஆர்.கே.சதீஷ்குமார் இநத மனுஷன் சும்மா இல்லாம கிரிக்கெட்டு எனும் புனித விளையாட்டு பத்தி தொடர் பதிவுக்கு என்னை அழைச்சிருக்காரு அதுக்கு அவரு மேல எனக்கு தம்மத்தம் கோவம் இருக்கு. 

இருந்தாலும் பெரிய ஆளுங்கன்னாலே இப்படித்தான் சின்ன புள்ளைங்கள ஆட வச்சி பாப்பாங்க ஹி ஹி!(நோ பேட் வார்ட்ஸ்!! தலைவரே!)

எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு சொல்லிகிறேன். பாத்துட்டு சொல்லுங்கோ!





இநத உலகக்கோப்பையில பங்கேற்று இருக்கும் அணிகள்ள நாலு அணி தான் ரொம்ப ஸ்ட்ராங்கா(!) இருக்கறதா நெனைக்கிறேன். 

இந்தியா, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா.

இதுல மத்த நாடுகள பத்தி அவங்க அவங்க நாட்டுக்கார பதிவருங்க எழுதிக்கட்டும் ஹி ஹி!(இதுல இலங்கைய பங்காளி நாடா சேர்த்துக்கலாமா வேணாமா டவுட்டு!)

இந்தியா - மாபெரும் தேசம் ஆனா குட்டியுண்டு நாட்டுக்கிட்டல்லாம் முட்டு சந்துல அடிவாங்குரத தான் தாங்க முடியல!(நான் கிரிகெட்டுல மட்டும் தாங்க சொல்றேன் நோ பொலிடிக்ஸ்!)

11 புலிகள் சாரிபா...........விளையாட்டு வீரர்கள் களம் கானுறாங்க............அவங்களப்பத்தி கொஞ்சம் என் வழில சொல்றேன் கேளுங்கோ........

தல - தோனி 




என்ன நடந்தாலும் அசராத கேப்டன். மவனே ஒரு போலரு 25 ரன்னு ஒரே ஓவருல கொடுத்தாலும் அடுத்த போட்டிக்கு அவருக்கு சான்சு வாங்கி கொடுக்கும் அளவுக்கு நல்ல மனுஷன்..........ஆனா இவரு நம்புற பய புள்ளைங்க எல்லாமே இவர அடிக்கடி நட்டாத்துல உட்டுட்டு போறது தான் கவலையா இருக்கு. எப்படியும் இந்த முறை CUP வாங்கி காட்டி எல்லோரையும் மூக்கு மேல கை வைக்கும் படி முடிவு பண்ணி இறங்கி இருக்காரு 

ஆசை - அந்த பய புள்ள சச்சின அப்படியே இந்த கோப்பை வாங்கிட்டு டீம விட்டு துரதிடனும்.

பிடிச்ச ஷாட்டு- (பீமனோட!)கதாயுதத்துல அடிக்கிராப்புல ஆடும் ஷாட்டு

சேவாக் 


நல்ல பார்ம்ல இருக்க வீரர். ஆனா யாருக்குமே தெரியாது எப்ப எப்படி ஆடுவாருன்னு. கொஞ்ச நாளைக்கு முன்னி ஒரு முடிவெடுத்து இருக்காரு........அதாவது 50 ஓவரு வரைக்கும் அவுட்டு ஆவறது இல்லன்னு...போன போட்டில முடிஞ்ச வரைக்கும் அத செயல் படுத்தினாரு.

ஆசை: எப்படியாவது 200 அடிக்கணும்(!) ஒரு நாள் போட்டில.

பிடிச்ச ஷாட்டு- எல்லாமே (அவுட்டு ஆகுற ஷாட்ட தவிர ஹி ஹி!)

காம்பிர் 


பய புள்ள பாக்க ஹீரோ கணக்கா இருந்து கிட்டு பண்ற சேட்டஎல்லாம் வில்லன் கணக்கா பண்றாரு(!). நிலைச்சி ஆடக்கூடிய தகுதி இருந்தும் எதிர் ஆடுற பேட்ச்மானு எதாவது 4 இல்ல 6 அடிச்சிட்டா தானும் பொங்கி அவுட்டு ஆவுறத குறச்சிகிட்டா இவரும் உருப்படுவாறு டீமும் தப்பிக்கும்!

ஆசை: சீகிரதுல கேப்டனாகுறது 

பிடிச்ச ஷாட்டு: இடப்பக்க ஷாட்டு (off drive)

கோஹ்லி



இந்தியாவுக்கு கெடச்சிருக்க அடுத்த டிராவிட்டு என்பது என் எண்ணம். கொஞ்சம் நிதானத்த கட பிடிச்சா இன்னும் உச்சத்துக்கு போக எல்லா தகுதியும் கொண்ட ஆளு. சின்ன பயலா இருந்தாலும் பல அனுபவம் வாய்ந்த போலர்கல உருட்டி எடுக்கறதுல பெரிய ஆளுதான். நல்ல பீலடரும் கூட என்பது அணிக்கு பெரிய வரப்பிரசாதமே.

ஆசை: இப்போதைக்கு டீமுல தொடர்ந்து விளையாடுறது(அப்புறமா சொல்றேன் ஹி ஹி!) 

பிடிச்ச ஷாட்டு: வலப்பக்க ஷாட்டு (on drive)


கொசுறு:நானும் ஒரு முன்னால் மட்டைப்பந்து ஆட்டக்காரன் என்பது நீங்கள் அறிந்ததே (ஹி ஹி!)............பதிவின் நீள அகலம் அதிகமாயிட்டதால அடுத்த பதிவுல முடிச்சிடறேன் ஹி ஹி!........இனி யாரவது தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க.........

இன்னொரு கொசுறு: பல நல்ல நண்பர்கள் என்னை இசை(வசை!)பாடி பல அசிங்கமான வார்த்தைகளால் பூசப்பட்டு அனுப்பிய மெயில்களை நான் அழித்து விட்டாலும் திருப்பி அடிக்க ஒரு ப்ளாகு ஆரம்பிச்சி இருக்கேன்........சீகிரத்துல என்வழி கருத்துக்களோடு அடிப்பேன்(அசிங்கமாக அல்ல!)

முடிந்தால் வரவும் - http://gladiatorveeran.blogspot.com/
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, February 22, 2011

வியத்னாம் - வலியவன் எளியவனிடம்(!?) - பாகம் 1

வியத்னாம் - வலியவன் எளியவனிடம்(!?)...................இந்த வார்த்தையை நான் முடிக்க விரும்பவில்லை.


ஏன்னெனில் எளியவனுக்கு புல்லும் ஆயுதம்..........அதனை உபயோகப்படுத்த முடியுமானால்.............இது ஒரு அறிஞரின் கருத்து.


எல்லோரும் நினைப்பது போல சாதாரண மக்கள் அல்ல வியத்நாமியர்கள். போராடும் குணம், நாட்டுப்பற்று, உயிரை துச்சமாக மதித்தல், பெண்களின் வீரம் இவைகள் அனைத்தும் சேர்ந்தவர்கள். அதனால் தான் போரிட்டு கிடைத்த வெற்றியை தினமும் சந்தோஷமான நாட்களாக கழித்து கொண்டு இருக்கின்றனர்.


விஷயத்துக்கு வருகிறேன்..........வல்லரசுக்கும் இந்த சின்ன நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட போரின் போது...இவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பின்னால் இவர்களுக்கு தலைமை வகித்த திரு. ஹோசிமிங் முதன்மைபெறுகிறார். இவர் தான் இந்த கொரில்லாப்போர் முறையை இம்மக்களுக்கு புகுத்தி வழி நடத்தியிருக்கிறார்.

நீங்கள் நம்புவது சிறிது கடினமே...........ஏன்னெனில் இம்மக்கள் போர்க்காலங்களில் உருவாக்கிய சுரங்கங்கள்(Tunnels) இன்றும் காட்சிபொருளாக வைத்திருக்கிறார்கள்.


சும்மா இல்லங்க........வெறும் 2 க்கு 2 என்று சொல்வோமே அந்த அளவுதான் இந்த சுரங்கங்களோட முக அமைப்பு ஆனா கிட்ட தட்ட 100 கிமி தூரத்துக்கு இப்படி செஞ்சி வச்சி இருந்திருக்காங்க.......இல்லன்னா வலிமையான எதிரிய எப்படி எதிர் கொல்றது.......


வியத்நாமியர்கள் ரொம்ப மெலிய உடல் வாகு கொண்டவர்கள்......ரப்பர் போல உடம்ப வளச்சி இந்த சுரங்கங்கள் மூலமா உள்ள குடும்பமே நடத்தி இருக்காங்க..............இதுக்குள்ள இருந்து கிட்டு சும்மா தண்ணி காட்டி இருக்காங்க வல்லரசுக்கு.................

வல்லரசுக்காரங்க பெரிய திடக்காத்திரமான உடலமைப்பு கொண்டவங்க........இதுக்குள்ள புக முடியாது...........

தொடரும்..............................

கொசுறு: போர் மூலமா இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்த சந்தோஷமா அனுபவிக்கும் மக்களைப்பார்த்து, அஹிம்சை மூலமா சுதந்திரம் வாங்கி இன்றும் அரசியல் வாதிகளிடம் அடிமையாகக்கிடக்கும் ஒரு தமிழனின் பார்வையில் இந்த இடுகை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, February 21, 2011

மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-21.02.11

ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராசா......ஒரே ஒரு ராசா பெத்தார் ஒன்பது பிள்ள அந்த ஒன்பதுல ஒண்ணுகூட உருப்படி இல்ல.............


வாங்க மானி வரும்போதே பாட்டா................

எப்படியும் அது தான் நடக்கபோகுது...........ஹி ஹி!!


குவா: எது நடக்கப்போகுது............

மானி: அத விடு..............

குவா: என்னப்பா தேர்தல் நெருங்கிட்டு இருக்கு என்னதான் சேதி......


மானி: அதான்பா கவலையா இருக்கு..........பாரு நம்ம MP ங்கல்ல 11 பேரும், MLA ங்கல்ல 76 பேருங்க மேலயம் குற்றப்பின்னணி இருக்கறதா ஒரு புள்ளி விவரம் சொல்லுது.........பாரு சினிமால காட்டறா மாதிரி இவங்கள எதிர்த்து ஒரு நல்லவனாளையும் தேர்தல்ல நிக்க முடியாம இருக்கு........வர்ரதுங்கல்லாம் தன் சொத்த காப்பாத்த மட்டுமே வருதுங்க என்ன பண்றது...........

குவா: ஆமாம் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கிடுச்சே எப்படி போகுது....

மானி: அத ஏன் கேக்குற.......இந்த மத்திய, மாநில அரசாங்க ஆளுங்கள தான போட்டு இருக்காங்க........பாவம்பா அவங்க.........

குவா: ஏன்பா அப்படி சொல்றே......

மானி: இவங்க துட்ட ஏத்தி கேக்கும் போதெல்லாம் அரசு கொடுத்துச்சி இல்ல.....இப்போ காலைல 6 மணில இருந்து இரவு 10 மணி வரைக்கும் வேல கொடுத்து இருக்காங்களாம்...அதுவும் நம்ம மக்களுக்கு அரசாங்கம் மேல இருக்க ஆத்திரத்த இவங்க கிட்ட தீத்துக்கறாங்க போல......பதிலே சில வீட்டுல வரலையாம்..........கொடுமைய்யா.........

குவா: என்னப்பா நீ என்னமோ நம்ம தலீவர அப்படி சொன்னே.........பாரு அவங்க வாரிசே போய் போராட்டம் பண்ணி மீனவங்களுக்காக ஜெயுளுக்கு போயி கிறாங்க பாரு..........

மானி: டேய்..........உனக்கெல்லாம் கிட்னியே இல்லையா..........அதுக்கு பதிலா ஆண்டவன் கொஞ்சம் கெட்டி சட்டினி வச்சி அணிப்பிசிட்டானா............

குவா: ஏன் அப்படி சொல்றே...........

மானி: ஏற்கனவே ஒரு ஆளு கிட்ட பழம் உனக்கு பணம் எனக்குன்னு சொல்லி உள்ள அனுப்பி இருக்காங்க நீ வேற.............நடக்குறதே அவங்க ஆட்சியாம்............அவங்களே கொன்னு போடுறவனுக்கு ஜால்ரா அடிப்பாங்களாம்....... அவங்களே போராட்டமும் பண்ணி ஜெயிலுக்கும் போவாங்களாம்...............

குவா: அப்போ ஏன் இவ்ளோ கஷ்ட்டப்பட்டு போராட்டம் பண்ணி ஜெயுளுக்கெல்லாம் அவங்க போகணும்...........

மானி: தேர்தல் வருது.........போன முறை மாதிரி இல்ல..........நம்ம மக்க கொஞ்சம் முழுச்சிகிட்டா மாதிரி......ஆள்ரவங்களுக்கு ஒரு டவுட்டு அதான் இந்த ஸ்டண்டு.........

குவா:ஆனா பாருப்பா நம்மாளு டிவி ஆபீசுலையே ரெய்டாம்பா


மானி: இது தான் டைமு மாமு..........அந்தப்பக்கம் எதோ அந்த கப்பல தலைவரோட பேசிட்டு இருக்கறது மாதிரி தெரியுது.........அதனால தலிவர போட்டு பாக்குறாங்க........இவரு எவ்ளோ பேர பாத்தவரு.......ஹி ஹி!!

குவா: சரி எப்போ பாத்தாலும் எங்க தலைவரையே குற்றம் சொல்றீயே......எதிர் மேடம் பத்தி சொல்ல மாட்டேங்கிரீயே..........

மானி: அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல............பாவம் அவங்க எங்க இருந்து அரசியல் பன்றாங்கன்னே தெரியல...........இந்த நேரத்துல 2,3 தொகுதிய வாங்கிட்டு போன கட்சிங்கல்லாம் இப்போ 10 குடு 20 குடுன்னு கேக்குறாங்க அதான் அவங்க டென்சனா இருக்காங்க ஹி ஹி!...........இதுக்கு நடுவுல ரிடைர்ட்டு நடிகரு வேற காமடி பண்ணிட்டு இருக்காரு...ஹிஹி!

குவா: ஆமாம் இந்த ஊழல் ஒன்னும் உண்மையில்லைன்னு நம்ம ரப்பர் ஸ்டாம்பு சொல்லிகிறாரேபா!

மானி: அவரு என்னப்பா செய்ய முடியும்.........நம்ம நாடு இப்போ இருக்க நிலைமை அப்படி............இதுவரைக்கும் வெளி நாட்டுக்காரன் வெளிய இருந்து தான் மிரட்டிட்டு இருந்தான்..........நாம தான் வெத்தல பாக்கு வச்சி ஊருல போற ஆத்தா மேல வந்து ஏறாத்தா கதையா........நாட்டோட நாட்டாமையா உக்கார வச்சா அப்படித்தான்........இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ தெரியல........

குவா: பாத்தியா தாசு போய் கூட்டணில சேர்ந்துட்டாரு...........

மானி: நான் தான் அப்பவே சொன்னனே.........இதுவும் தலைவனோட ஒரு டெக்கினிக்கு தான்........என்னதான் மத்தில இருந்தாலும்.........தலைவரு அளவுக்கு மூளைய அவங்களுக்கு யூஸ் பண்ண தெரியல....ஹி ஹி!

குவா: சரி சினிமா மேட்டரு ஏதாவது.....

1. சரக்கு: நம்ம இடுப்பழகி அனுசு 2 கோடி கேக்குறாங்க(நடிக்கத்தான் ஹி ஹி!)

நெசம்: ஆமாங்கோ இனி வர்ற படங்களுக்கு இவ்ளோ குத்தாதான்                        நடிப்பாங்களாம். 

2. சரக்கு: சூப்பரு நடிகரின் அடுத்த படத்தில் னேகா நடிகை ஒப்பந்தம்.
  
    நெசம்: ஆமாங்கோ அடுத்து அவரு நடிக்கிற படத்துல நடிக்கப்போராங்கலாம், 10 வருசமா பீல்டுல இருந்தும் இப்போதான் அம்மனிக்கி சான்சு கெடச்சிருக்கு.

3. சில்க்கு படம் எடுத்தா தடுப்பேன் - வினு 

     நெசம்: ஆமாங்கோ தன்ன கேக்காம படம் எடுக்குறாங்கன்னு கோபப்பட்டு கிறாரு திரு. வினு அவர்கள். இவர்தான் சில்க் ஸ்மிதாவ தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்ஞ்சவரு.

ஆரோக்கியசாமி சொல்லும்:

தினமும் 100 கிராம் வெங்காயம் உணவில் சேத்து வந்தால் உடல் நலம் நன்றாக இருக்கும். முடிந்தால் பச்சையாக அதை கடித்து சாப்பிட்டீர்கள் என்றால் வாய்புண் மற்றும் கண்வலி சீக்கிரத்தில் தீரும். ஏனெனில் இதில் ரிபோபிளவின் என்னும் ‘பி’ குரூப் வைட்டமின் இருக்கிறது.

செய்தி: ஒருத்தர ஜெயில்ல போடுட்டா மட்டும் குற்றவாளி இல்ல

பன்ச் : ஒருத்தன் அரசியல்ல கொள்ளையடிச்சா அது கொள்ளயல்ல அது மக்கள் தரும் இலவசம்.

இந்த வார தத்துவம்:



முத வெட்டு (இந்திய ஜொள்ளு):


ரெண்டாவது வெட்டு (வியத்நாமிய ஜொள்ளு):



கொசுறு: எனக்கு பிடித்த பாடகரான திரு. மலேசியா வாசுதேவன் மறைவுக்கு என் அஞ்சலி. 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment