வணக்கம் நண்பர்களே....
முதல் மூர்த்தி இங்கே....சுய புராணம் (1)
குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிசய ஊரில் பிறந்த நான் எப்படி குடிபிரியம் இல்லாதவனா இருக்க முடியும்(அடுத்தவங்க மேல பழி போட்டு தப்பிக்கும் கழகத்து உறுப்பினர்!)....இந்த லட்சணத்துல பாதிப்பேர் சரக்கடிச்சிட்டு மட்டயாயிட்டு குடிப்பது தவறு அதனால் ஏற்ப்படும் பக்க, சைடு எதிர் விளைவுகள் என்னன்னு பக்க பக்கமா பதிவு போடுவாங்க(!)...நோ டென்சனு...கேட்டா ஊருக்கு உபதேசம் அப்படிம்பாங்க(!)....நீ குடிக்கிறியான்னு கேட்டா அதுக்கு பதில் வராது....எதுக்கு இந்த மொள்ள மாரித்தனம்...ஊருக்கு நான் நல்லவன்னு காட்டறதுல என்ன சொத்தா கெடைக்கப்போகுது ஹிஹி...ச்சே சொல்ல வந்தத விட்டுட்டனே...(!)
குடி.. உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள் - இதுவும் ஒரு கவிஞ்சர் சொன்னது....இதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்(கொல்கிறேன்!)....
நீ கெட்டு கீரவதையா(!) போறியா போய்த்தொலை...கூட இருக்கவனையும் சேர்த்து கெடுக்காதே....இது நான் சொல்றது.....
நீ கெட்டு கீரவதையா(!) போறியா போய்த்தொலை...கூட இருக்கவனையும் சேர்த்து கெடுக்காதே....இது நான் சொல்றது.....
இந்த பழக்கம் வந்ததே ஒரு பெண் நண்பியின் அப்பாவாலதான்னு சொல்லுவேன்...அவரு வீட்ல டின் பீர்(!) அடுக்கி வச்சி இருப்பாரு...அவங்க வீட்டுக்கு போற ஆண் நண்பர்கள் நாங்க மூணு பேர் மட்டுமே....ஒரே ஏரியாவுல குடி(குடியிருத்தல் ஹிஹி!) இருந்ததால அனுமதிச்சாங்க....போனவங்கள அவர் உபசரிக்கறதே பீராலத்தான்(விளங்கிடும்னு நீங்க சொல்றது கேக்குது!)....அவரு ஒரு ராணுவ கர்னல்(!)....
அப்போ அவரு எனக்கொரு ரோல் மாடல்(தண்ணி அடிக்கறதுல இல்லீங்க ஹிஹி!)....அவருகிட்ட ஒரு நாளு..அங்கிள்(!) இந்த பீர் எங்க கிடைக்கும்னு கேட்டேன்....அதுக்கு அவரு தம்பி எப்பவாவது குடிக்கறது தப்பு இல்ல(!)...எப்பவும் குடிக்கனும்னு நெனைக்கறது தப்புன்னாரு...But அவரோட நேர்மை எனக்கு புடிச்சிருந்தது...ஏன்னா அது எங்க கிடைக்கும்னு அட்ரசோட சொன்னாரு...
இடம் "அம்மா நானா" - அடையார் கேட் ஹோட்டல் எதிரில்..
விலை: ஞாபகமில்லை...
குடிக்க: வாரத்துக்கு ஒரு முறை!
இந்த டின் பீர்தான் நான் பீர் குடிக்க ஆரம்பிச்ச முதல் அனுபவம்...அப்புறம் கொஞ்ச கொஞ்சமா டெவலப்(!) ஆகிடுச்சி...
அப்போ எனக்கு மூன்று நெருங்கிய(1 அடி தூரதுக்கிட்டையே வருவாங்க!) நண்பர்கள்...இந்த ஆண் நண்பர்கள்(ஏன்னா நெறைய பெண் நண்பிகள்!) சேர்ந்தா என்ன செய்வோம்....இப்போ மாதிரி அப்போ டாஸ்மாக்கு பக்கத்துல கிடையாது(!)....அப்போ எவ்ளோ டீக்கட இருந்துதோ, இப்போ அவ்ளோவும் சரக்கு கடையா பூடுச்சி(!)...வீட்ல எங்க போறோம்னு சொல்லாம வாரத்துக்கு ஒரு முறை(!) மூணு பேரும் துட்டு(சொந்தமா உழைச்சி!) சேத்துக்கிட்டு கெளம்புவோம்.....
மரக்கா மரக்காவா(!) குடிக்க ஆரம்பிச்சோம் வாரத்துக்கு ஒரு முறை....ரொம்ப நாளைக்கு பீரே தொடர்ந்தது....பின் வேலை காரணமா பிரிஞ்சதுல...அதுவும் என் வேலைல ப்ரீயா(!) சரக்கு கெடச்சதால தொடர்ந்துட்டேன்....
என் கூட இருந்த க்ளாஸ்(Class அல்ல!) மேட்ஸ் எல்லாம் இப்போ பெரிய ஆளுங்க....ஒருத்தரு பெரிய அரசியல்வாதி....இன்னொருத்தரு பெரிய வியாபார புள்ளி...
திருமணம்னு வந்த உடனே...ஞாபகம் வந்தது ரெண்டு விஷயம்(!)...ஒன்னு தம்மு(அம்மு அல்ல!), ரெண்டாவது தண்ணி....இந்த ரெண்டையும் எப்படி விடுறதுன்னு யோசிச்சி முடிக்கறதுக்குள்ள திருமணம் முடிஞ்சி போச்சி....இதுக்கும் இந்த விஷயங்களை தெளிவா சொல்லிய பிறகும் அந்தப்பெண்ணுக்கு(என் மனைவி!) எப்படித்தான் விருப்பம் வந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் புரியல...
"ஒரு வேல லூசுத்தனமா உளர்ரான்னு நெனைச்சி இருப்பாங்களோ(டேய் இன்னிக்கி வரை நீ இப்படித்தானே உளர்ற!)"....இருக்காது "இம்புட்டு சொல்றானே இவன் ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருப்பாங்க"(ஹிஹி...நெனப்பு பொழப்ப கெடுக்குமாம்!)....
கொஞ்ச கொஞ்சமா குறைச்சி....இப்போத்தான் வாரத்துக்கு 3 பெக்குல(!) வந்து நிக்குது....எனக்கொரு நல்ல பழக்கம்(!) என்னன்னா நான் தப்பு செய்ஞ்சிக்கிட்டு அடுத்தவனுக்கு செய்யாதேன்னு சொல்றது இல்ல...அதுவரைக்கும் தப்பிச்சேன்....
சொல்லுங்க மக்களே....நான் சரியாத்தான் சொல்றனா(!)
கொசுறு: இவை தமாஷுக்கு எழுதப்படுபவை....எனவே யாராவது இப்படியெல்லமா பதிவு போடுறது...ஒரு பருப்புணர்ச்சி ச்சே பொறுப்புணர்ச்சி தேவையில்ல உனக்குன்னு கேட்டீங்க படுவா பிச்சி புடுவேன் பிச்சி...ஹிஹி!~
விரைவில் எதிர்பாருங்கள் - பரோட்டா மாஸ்டரும் மொராக்கோ காரியும்

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
37 comments:
me 1st?
சொல்லுங்க மக்களே....நான் சரியாத்தான் சொல்றனா(!)
இந்த எடத்துல தான் மாம்ஸ் நீங்க ஒரு நல்ல குடிமகன்னு நிருபிச்சுருக்கீங்க......
//சொல்லுங்க மக்களே....நான் சரியாத்தான் சொல்றனா(!)
//
நீங்க சொன்ன சரிங்க ..
//டேய் இன்னிக்கி வரை நீ இப்படித்தானே உளர்ற!)
//
உண்மை ..உண்மை ..
ஆஹா ...
செய்யங்கய்யா.. நான் ஒண்ணும் கேக்கல...
சீயர்ஸ் மாம்ஸ்...
இருங்க படிச்சிட்டு வாரேன்.
குடி.. உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள் - இதுவும் ஒரு கவிஞ்சர் சொன்னது....இதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்(கொல்கிறேன்!)....//
ஆமா கவியரசர் கண்ணதாசன் தான் இவ் வரிகளை அனுபவமாக சொல்லியிருக்கிறார் என்று நெனைக்கிறேன்.
மும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்? - //
விடையைப் பதிவில நீங்களே வெளக்கமாச் சொல்லிட்டீங்களே..
எப்பூடி நாம பதில் சொல்ல முடியும்?
adangkoo அடங்கோ
அதென்ன? கொசுறு“னு சொல்லி எஸ்கேப் ஆகிக்கிறீங்க??
ஆரம்பத்தில் பொது நிகழ்வுகளில் நாகரிகமாக குடிக்க வேண்டும் என்று தொடங்கும் உணர்வுகள் தான், பிற்காலத்தில் பெருங் குடிமக்களின் பிறப்பிடத்திற்கும் காரணமாக அமைகின்றது,
குடிகாரன் எப்படிப் பெருங் குடிமகனாக, குடிக்கு அடிமையாக மாறுகின்றான் என்பதனை அழகுறச் சொல்ல்யிருக்கிறீங்க
தமிழ் மணம் ஆறு
ஹி ஹி மாம்ஸ் முதல் புகைப்படம் நடமாடும் ஒய்ன்ஷாப்பா ,முகத்தை காட்டியிருந்தால் யாருன்னு பாத்திருப்பேன்ல ஹி ஹி
ஆஜர்...
மும் மூர்த்திகளும் பிரச்சனை தான்.
அய்யோ... மாம்ஸ் எப்படி உங்களை கட்டிக்கிட்டாங்க? ஹி... ஹி... உங்களுக்கே புரியல...
நல்லா குடிச்சேங்க.. சீ படிச்சேங்க
இன்று என் வலை-ல்
http://naai-nakks.blogspot.com/2011/09/blog-post.html
இத படிச்சிட்டு குடிக்கணுமா இல்லை குடிச்சிட்டு படிக்கனுமா
ஆட்சி நடப்பதே டாஸ்மார்க் வருமானத்தில் நீங்க அங்கேயே கையைக்காட்டினால் கண்மனிகள் கதறியழும் மாப்பூ!
எதுவுமே அளவோடு இருப்பது நல்லது
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
அமிர்தமே நஞ்சாகும் போது
நஞ்சை கேட்க வேண்டுமா என்ன??
செம பதிவு மாம்ஸ்....
யோவ், தம்மு வேணாம்னு சொன்ன மாதிரி இதையும் அடிச்சுச் சொல்ல வேண்டமா..
என்னால தான் முடியலை, நீங்களாவது திருந்துங்கன்னு சொல்ல வேண்டியது தானே?
விறு விறுப்பான தொடர் !
ரைட்டு!
குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிசய ஊரில் பிறந்த நான் எப்படி குடிபிரியம் இல்லாதவனா இருக்க முடியும்(அடுத்தவங்க மேல பழி போட்டு தப்பிக்கும் கழகத்து உறுப்பினர்!)...:////
வணக்கம் சார், கும்புடுறேனுங்கோ!சார், கசப்பான ஒரு உண்மையை, நகைச்சுவையாய் எடுத்து சொல்லியிருக்கீங்க!
என்ன நடக்குது இங்க. ஒ ஒ ஒ இது உங்க ஏரியாவா. நான் பிச்சுக்கரேன்பா.
....இந்த லட்சணத்துல பாதிப்பேர் சரக்கடிச்சிட்டு மட்டயாயிட்டு குடிப்பது தவறு அதனால் ஏற்ப்படும் பக்க, சைடு எதிர் விளைவுகள் என்னன்னு பக்க பக்கமா பதிவு போடுவாங்க(!)...நோ டென்சனு...கேட்டா ஊருக்கு உபதேசம் அப்படிம்பாங்க(!)....நீ குடிக்கிறியான்னு கேட்டா அதுக்கு பதில் வராது....///
ஆமா சார், பாதிப்பேர் அப்படித்தான்! ஆனா நீங்க மிகவும் தைரியமா உண்மையைச் சொல்லியிருக்கீங்க!
சார், நீங்க உங்க முகத்தை நீங்க காட்டலைன்னாலும், அகத்தைக் காட்டீட்டிங்க!
சொல்லுங்க மக்களே....நான் சரியாத்தான் சொல்றனா(!)///
ஆமா!
"திரும்ப திரும்ப பேசுற நீ" - டயலாக் ஞாபகம் வருது..
அது சரியான்னு வேற செக் பண்ணிக்கிறீங்க, இதை எழுதும் போது எப்பிடி இருந்தீங்க!!?? ஹா ஹா ஹா
சி.பி.செந்தில்குமார் said...
adangkoo அடங்கோ//
போடாங்கோ...
நான் நம்பனுமா இதை நான் நம்பனுமா, பீப்பாய் [[பீர் அல்ல]] நிறைய என்ன பிராண்டுன்னு கூட தெரியாம அடிச்சது ஒன்னும் உம்மை சும்மா விடாது ஹி ஹி நீ குடி மக்கா நல்லா குடி, யாருக்கும் தெரியாது ஹி ஹி...
மாதம் மும்மாரி போதும்!
இது நல்லதொரு கெட்டப் பழக்கம்!
வீட்டில் மட்டுமே அடி!
குடி நண்பரோடு விரோதம் வளர்!
(ஓசிக்குடி குடியைக் குறைக்கும்!)
மாம்ஸ் சியேர்ஸ்
தமிழ் மணம் 19
hii.. Nice Post Thanks for sharingFor latest stills videos visit ..More Entertainmentwww.ChiCha.in
Post a Comment