Followers

Thursday, June 30, 2011

இவங்கல்லாம் நண்பர்களா!

வணக்கம் நண்பர்களே.....


சமீபத்தில் ரெண்டு பழைய நண்பர்களிடம் பேச நேர்ந்தது...இந்த ரெண்டு நல்லவங்களும்(!) எனக்கு ஒரு காலத்துல முக்கிய(முக்காத!) நண்பர்கள்...ஒருத்தரு காலேஜ் முடிச்சப்புறம் சொந்த நிலத்த பாக்க போயிட்டாரு...இன்னொருத்தரு B.E படிச்சி முடிசிட்டதா சொல்லி ஏமாத்திட்டு திரியிறாரு(இன்னும் அரியர்ஸ் இருக்கு!)...

ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமைன்னா அது ரெண்டு பெரும் அரசியல்வாதி ஆயிட்டானுங்க(ஆயிட்டார்கள்!)....திடீர்ன்னு என் ஞாபகம் வந்து என்னோட மெயில்ல தொடர்பு கொண்டார்கள்...நானும் பம்மிகிட்டே பேசுனேன்..அரசியல் வியாதிகள் ஆச்சே சாக்கிரதையா இருக்கோனும்ல...

தொலைபேசி உரையாடல் உங்களுக்காக...... 

என்ன மாப்ள எப்படி இருக்க...

இதுவரைக்கும் நல்லாத்தான் இருக்கேன்...நீங்க....

என்னய்யா புதுசா மரியாதை எல்லாம் குடுக்கற....

நீங்க இப்போ பெரிய ஆளுங்கன்னோவ்...


அப்படியெல்லாம் இல்ல..திடீர்னு உன் ஞாபகம் வந்தது....அதான் எப்படி உன்ன புடிக்கறதுன்னு யோசிச்சேன்....நம்ம பஷீரு உன் மெயில் ஐ டி கொடுத்தான்!...எப்படியோ ரொம்ப வருஷம் கழிச்சி உன்ன புடிச்சிட்டேன்...மாப்ள!

அப்புறம் எப்படி போகுது அரசியலு...

அதான் பாக்குற இல்ல..நம்ம ஆட்சி நடக்குது...இனி பாரு எப்படி போகுதுன்னு...சரி உன் குடும்பம் எப்படி இருக்கு...

எல்லாம் நல்லா இருக்காங்க..உன் வீட்ல எப்படி இருக்காங்க...

அவங்களுக்கு என்ன சூப்பரா இருக்காங்க...

நான் ஒன்னு கேள்விப்பட்டனே...

சொல்லு மாப்ள....

இல்ல...நீ போற வண்டிக்கு முன்னாடி ஒரு Scorpio பின்னாடி ஒரு Scorpio போகுதாமே..

என்ன பண்றது ஒரு பாதுகாப்புக்குத்தான்(!)....

சரிய்யா அந்த அரியர்ஸ முடிச்சியா....

டேய் அத ஏன்டா இப்போ ஞாபகப்படுத்துரே...இங்க நான் முடிசிட்டதா தான் மெயின்டைன் பண்றேன்...

(பயபுள்ள இப்பவும் அப்படியேத்தான் இருக்கா!)

வேற என்ன விசேஷம்....

சரி எப்போ ஊருக்கு வர்ற சொல்லு...

இல்ல நண்பா இப்போதைக்கு இல்ல....


டேய் அங்க என்னத்த சம்பாதிக்கற...வந்து சேரு இங்க ராசா மாதிரி நான் பாத்துக்கறேன்(ஏற்கனவே இந்த பேருல ஒருத்தரு களி தின்றாரு!)....

அதெல்லாம் வேண்டாம்யா...

ஏன்..உன் பேச்சி ரொம்ப தள்ளியே காட்டுதே...உனக்கு அரசியல் ஆர்வம் அதிகம்னு எனக்கு தெரியும்யா...

அப்படியெல்லாம் இல்லையா....விடு!

அதெல்லாம் முடியாது நீ சீக்கிரத்துல வர்ற...என்னடா ரொம்ப பிகு பண்ற...

மாப்ள கண்டிப்பா...சீக்கிரத்துல வந்து நேர்ல பேசுறேன்...


இந்த நண்பர் இப்போது பெரிய தொழில் அதிபர்...அதுவும் கட்டிட காண்ட்ராக்ட் தொழிலில் தனக்கென்று தனி பெயர் எடுத்து இருக்கிறார்(நல்ல பேர்தாங்க!)...

இவர் இப்போதைய ஆட்சி பொறுப்பில் உள்ள புள்ளி(!)...இன்னொரு நண்பரை பற்றி நாளை சொல்கிறேன்..

கொசுறு: அரசியல் பாதை தனிப் பாதையாக இருக்க வேண்டும் என்பதே என் அவா!....காலம் என்னை எந்த வழியில் பயணிக்க சொல்லப்போகிறதோ...காத்திருக்கிறேன்...! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Tuesday, June 28, 2011

கருணாநிதி இம்புட்டு நல்லவரா!

வணக்கம் நண்பர்களே!


தொலைபேசி உரையாடல் உங்களுக்காக..........

தம்பி நல்லா இருக்கீங்களா...

அண்ணே நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க...

நல்லா இருக்கேன்....என்ன மறந்திட்டியா...!

இல்லைண்ணே வேலை அதிகம்...உங்கள மறக்க முடியுமா....தப்பா எடுத்துக்காதீங்கன்னே...

என்னப்பா பண்றது என் ஆட்சி முடிஞ்சி போசிங்கறதால யாரும் கண்டுக்கறது இல்ல...

அப்படி இல்லன்ன எப்பவுமே நீங்க பெரிய ஆளுதான்....எங்களுக்கு மூத்தவுக..

எப்பதான் என்னை பாக்க வருவ....

இதோ கெளம்பிடென்னே வந்துட்டே இருக்கேன்...

மறக்காம உன் பொஞ்சாதி புள்ள விஷயத்த கொண்டுவா....

சரிண்ணே........

சிறிது நேரத்துக்குப்பிறகு....

என்னன்னே இவ்ளோ சீக்கிரம் முடிச்சிட்டீங்க...


இந்தாப்பா உன்னோட, உன் மனைவி மற்றும் பையனோட பாஸ் போர்ட்டு...உனக்கு ஒரு வருஷம் விசா அனுமதி....உன் குடும்பத்துக்கு ஆறு மாச அனுமதி....போதுமா....

என்னன்னே இப்படி சொல்றீங்க....நீங்க இல்லாம எதுவும் நடக்காது....

ஆமாம்யா...நான் உன்னை கூப்டு பாஸ்போர்ட்ட புடுங்கி விசா வாங்கி குடுத்தாத்தான் மலேசியா வருவியா...ஏன் உனக்கு இந்த அண்ணன் மேல அவ்ளோ அலட்சியமா.............

இல்லன்னே....


இந்த மாசத்தோட என் 5 வருஷ சர்வீஸ் முடிஞ்சிடுச்சி....உன்ன மாதிரி தம்பிகள விட்டு பிரியறது தான்யா மனசு கஷ்டமா இருக்கு...என்றார் அந்த அண்ணன்.


இவர் தான் மலேசிய (தமிழர்) அதிகாரியாகிய என் நண்பர்(அண்ணன்) திரு. கருணாநிதி....முதல் முறையாக நண்பரின் பிரிவுக்காக கண்கலங்கிய கருணாநிதியை(!) பார்த்தேன்...

கொசுறு: பேருல என்னங்க இருக்கு மனசுல தான் உலகமே இருக்கு...எல்லாரும் ஒரே மாதிரியா இருப்பாங்க...

கொசுறு இன்னும்: நம்மூரு மனுசங்களும் இப்படி மாறினால் எம்புட்டு நல்லா இருக்கும்.. 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

பொழுது போக்கு நிகழ்ச்சிகள் - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே.........


பொழுது போக்கு என்பது நம் வாழ்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில்  இருக்கும் பொழுது போக்கு நிலையங்களின் எண்ணிக்கையை பார்த்தாலே இது புரியும்...இதை பற்றிய பதிவு இது...


வியட்நாம் 8.9 கோடி மக்களை கொண்ட சிறிய நாடாக இருந்தாலும்...மக்களின் பொழுது போக்குக்கு குறைவில்லை...இங்கு மக்கள் அதிகமாக டிவி நிகழ்சிகளை காண்பதில்லை...காரணம்...ஆணும் பெண்ணும் வேலைக்கு போகவேண்டிய கட்டாயம்(!). அதிலும் பெண்கள் மிக சுறு சுறுப்பானவர்கள்....ஆண்களின் நிழலில் வாழ விரும்பாதவர்கள்...இதனால் டிவி நிகழ்சிகளை மாலையில் பார்ப்பவர்களே அதிகம்...அதுவும் பெரியவர்கள் வயதாகி வீட்டில் இருந்தாலும் எதோ ஒரு கைத்தொழில் செய்து கொண்டு இருக்கிறார்கள்....பேச்சி குறைவு செயல் அதிகம்(!).......


வியட்நாமில் டிவி ஆரம்பித்தது 1960 இல்...ஹனோயில் வியட்நாமிய மொழியும்...ஹோசிமின் சிட்டியில்(சைகோன்!) ஆங்கில ஒளி பரப்பும் ஆரம்பமாகியது...தொழில் நுட்ப விஷயங்களை ஹனாய் டிவி கியூபா நாட்டிடம் இருந்து பெற்றது 1970 ல்...அதற்குப்பிறகு போரின் விளிம்பில் இருக்கும்போது ஹனாய் தொலைக்காட்சி போர்க்காட்சிகளை ஒளி பரப்பி உலகுக்கு காட்டியது...

இப்போதைக்கு கிட்ட தட்ட உள்நாட்டு சானல்கள் 20 தாண்டிவிட்டது...இதில் 3 வருடத்துக்கு முன்பு வரை இந்திய சினிமாக்களை(இந்தி!) ஒளி பரப்பிக்கொண்டு இருந்தார்கள்...மொழி மாற்றத்துடன்...ஆனால் இப்போது இல்லை...இப்போது சீன மற்றும் கொரிய நிகழ்சிகளே பெரும்பாலும் மொழி மாற்றத்துடன் வருகின்றன..


நம்ம ஊர்ல தான் வீட்டு சண்டை தொடர்கள் பிரசித்தி பெற்றது சானல்களில் என்று நினைத்து இருந்தால்...இங்கு வரும் சானல்களிலும் அதை கொஞ்ச கொஞ்சமாக விதைத்து வருகிறார்கள்...உலகம் முழுதும் ஒரு குடையில் வருமோ!

பல அருமையான விஷயங்களை தாங்கி வந்து கொண்டு இருந்தது சானல்கள்...ராமாயணம், மகாபாரதம்...மற்றும் சுல்தான் கதைகள்...போன்ற இந்தியாவில் பெரிய தொடர்களாக வந்த விஷயங்களும் வந்த வண்ணம் இருந்தன...இப்போது குறைந்து விட்டது வருத்தமே...

இனி வரும் காலங்களிலாவது வரும் என்று நம்புகிறேன்...


சினிமாக்களின் எண்ணிக்கையும் மிக குறைவு....இங்கு மக்கள் நேரிடையாக பார்க்கும் இசை நிகழ்சிகளையே பெரிதும் ரசிக்கிறார்கள்...சினிமா என்றால் அது உண்மையை அதிகமாக காட்டாத வெறும் போலி என்று நினைக்கின்றனர்.....உண்மையில்லை என்பதுதான் விஷயம் என்பதாலோ என்னவோ!...எங்கு பார்த்தாலும் கரோக்கி எனப்படும் பொழுது போக்கு மையம் இருக்கிறது...இசையை ஓட விட்டு அதற்க்கான(வியட்நாமிய!) பாடலை பாடி மகிழ்கின்றனர்....இசை பிரியர்கள் இவர்கள்...அதுவும் கிராமிய இசை மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது....

தொடரும்....

கொசுறு: நான் கண்டதை என் பதிவு மூலம் நீங்கள் காண முடியும் என்ற சின்ன நம்பிக்கையே! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Monday, June 27, 2011

எவன் உன்ன பெத்தான்...அவன் கைல கெடச்சா செத்தான்!

வணக்கம் நண்பர்களே.....


ஹாய் எப்படி இருக்கீங்க....

நான் நல்லா இருக்கேன் நீங்க.....

உங்க கிட்ட சாட் பண்றேன்னு நெனைக்கும் போதே எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...........


அப்படியா......நான் அவ்ளோ பெரிய ஆளா...

இல்லையா பின்ன...உங்க மாதிரி வெளிப்படையானவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.........

எனக்கு இப்படி ரசிகைகளா....பெருமையா இருக்கு....

என்ன இப்படி சொல்லிட்டீங்க...உங்க எழுத்துக்கு நான் அடிமை...

எனக்கு என்னமோ பண்ணுது...இந்த அளவுக்கு என்ன புகழரீங்களே..

சார்...நீங்க வேற ஏதாவது சொல்லுங்க....

நீங்க #$#@#$ பாத்து இருக்கீங்களா..........

சே...இல்லீங்களே...நீங்க எதப்பத்தி சொல்றீங்க....


புரியாத மாதிரியே பேசிறீங்களே...

இல்ல சார் எனக்கு உண்மையா புரியல..........

அதுதான்...அதே தான் நான் சொல்ல வர்றது...என்னமா இருக்கும் தெரியுமா....

அப்புறம் சார்............

அதுக்கு அப்புறம் அதுதான்............

எதுக்கு அப்புறம் சார்..........

அதாங்க அதுக்கு.......@#@##@@##


என்ன சார் இப்படி பேசுறீங்க....

ஏன் உங்களுக்கு பிடிக்கலையா.....பிடிக்கலன்னா முதல்லையே சொல்லி இருக்கலாமே..........

நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்கன்னு எனக்கு தெரியாதே...

நான் ஒரு வெளிப்படையானவன்...அப்படித்தானே இருப்பேன்.......


அய்யய்யோ என்னை அசிங்கமா பேசிட்டான்....கைய புடிச்சி இசுத்துட்டான்..........(சாட்ல எப்படி கைய புடிச்சி இழுக்க முடியும் டவுட்டு!)...

அய்யய்யோ இது சரியான ##யி.........

மலர்ந்த இரு மலர்களின் புரியாத பாஷை இது

கொசுறு: ச்சே என்னப்பா ஆச்சி இன்னிக்கி....ஒன்னும் பிரியல...ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

தமிழனை தாழ வைக்க துடிக்கும் தறுதலைகள்!

வணக்கம் நண்பர்களே....


காலையில் லபக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சி போய் கொண்டு இருந்தது....என்ன நிகழ்ச்சின்னு பாத்தா பிஞ்ச மணி பேட்டியாம்...எனக்கு வேலைக்கு செல்ல நேரம் அதிகமாக இருந்ததால்(!) அந்த பெட்டியை ச்சே பேட்டியை காணும் கண்கொள்ளாக்காட்சி காணக்கிடைத்தது....

நூறு நாள் வேலை விஷயத்தை எப்படி மாற்றி அமைப்பதுன்னு அந்த அறிவாளி சொல்லிக்கொண்டு இருந்தார்...அதுவும் பாதிப்பணத்தை மானியமாக விவசாயிகளுக்கு கொடுத்துவிடும்படியும்(!)....மீதிப்பணத்தை வேலை செய்பவர்களுக்கு நேரிடையாக அளித்துவிடும்படியும் கூறிக்கொண்டு இருந்தார்...


ஏற்கனவே இந்த பணத்தில் ஒரு பகுதி அதை செயல் படுத்துபவர்கள் எடுத்துக்கொண்டு மீதம் இருப்பதையே வேலை செய்பவர்களுக்கு கொடுத்து வருவது ஊரறிந்த விஷயம்...இது இல்லாமல் ட்ராக்டர் ரெண்டு வாங்கி ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம்...அதனை தினமும் வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன் பெறுவார்களாம்....

ஊராட்சி தலைவர்கள் உண்மையாக கொண்டு சேர்த்தால் பரவாயில்லையே...!

இத்தனை நாள் நேரடியாக மக்களை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஜாதி எனும் பீடையை காட்டியே பிச்சை எடுத்த பரதேசி...தமிழ் பற்றி சொல்லுகின்றது...எல்லோரும் தமிழ் வழிக்கல்வியை மட்டுமே பற்றிக்கொள்ள வேண்டுமாம்....தன் குழந்தைகளை உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் படிக்கவைத்துக்கொண்டு இருக்கும் ஒரு தந்தை(!)...தமிழ் மக்கள் எங்கு படிக்கவேண்டும்...என்ன படிக்க வேண்டும் என்று கூறுகிறார்..


ஏற்கனவே கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழனை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கும் சூனியக்கார கிழவரிடம்(!) இருந்தே இன்னும் மீளாத தமிழ் இனம் இன்னும் இப்படிப்பட்ட அரை(!!) அறிவாளிகளிடம் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கமே இந்தப்பதிவின் காரணம்...


தேர்தலில் தோற்ற போதும் மக்களுக்காக போராடுவதை நிறுத்தமாட்டார்களாம்(!)...என்ன கொடுமை இது...இதுவரை தான் பெற்றெடுத்த மக்களுக்காக போராடும் தலைவர்களின் வாயில் வந்து விழும் வார்த்தைகள் அவ்வளவும் உள் நோக்கத்துடன் இருக்கின்றன.........

இன்னும் இவர்களை நம்பிக்கொண்டு இருக்கும் மனிதர்களை(!) என் சொல்வது தெரியவில்லை.....எதிரிகளிடம் போராடத்தெரிந்த  நமக்கு, துரோகிகளை இனங்கானத்தெரியவில்லையே!.....

இலங்கை பிரச்சனயை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இவர்களின் தொலைகாட்சி துடித்த செயலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்!.....


இனியாவது திருந்துங்கப்பா....விடுமுறையை கடலுக்கடியில்(!) வெளிநாட்டில் கழிக்கும் செல்வசீமான்களே...இனியாவது தமிழனை வாழவிடுங்கள்....

அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!

கொசுறு: இந்தப்பதிவு ஒரு குமுறலே...நன்றி!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Saturday, June 25, 2011

பெண் நடத்தும் உணவகம் - வியட்நாம்!

வணக்கம் நண்பர்களே...........


எங்கு போனாலும் நம் முதல் விருப்பம் நாவுக்கு ஏற்ற உணவு கிடைக்குமாங்கர கவலைதான்!...அதிலும் வெளி நாடு சென்று வேலை செய்பவர்களின் நிலைமை இன்னும் மோசம்..


பல நாடுகளில் இருக்கும் இந்திய உணவகங்கள் அதிகப்படியான விலையை கேட்பதாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது...வியட்நாமிலும் இந்திய உணவகங்கள் உண்டு...மொத்தமாக 5 இந்திய வகை உணவுகளை கொடுக்கும் உணவகங்கள் இருக்கின்றன...(இந்த பகுதியில் ஹனாய் மட்டுமே சொல்லி இருக்கிறேன்!)


இதில் 4 உணவகங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன...இதை பற்றி இறுதியில் சொல்கிறேன்...ஒரு உணவகம் வியத்னாமியர்களால் நடத்தப்படுகிறது..அதுவும் இதில் இந்திய உணவுகள் மட்டுமே..என் மகனுக்கு இங்கு உணவருந்தவே பிடிக்கும் ...அதுவும் வெள்ளிக்கிழமை மாலையானால் போதும்...நான் வீட்டுக்கு வருவதற்குள் தயாராக நின்று கொண்டு இருப்பார்...


இந்த உணகத்தைப்பற்றி சொல்ல வேண்டுமானால்...இந்த உணவக முதலாளி ஒரு வியட்நாமிய பெண் பெயர் ஹுவே...இந்த சிறிய வயதில்(30) இந்த உணவகத்தை நேர்த்தியுடன் நடத்தி வருகிறார்...இவரின் குடும்பத்து அங்கத்தினர்கள் அனைவரும் இந்த உணவகத்தில் வேலை செய்கின்றனர்(6 பேர்)...இவர்கள் இல்லாமல் கவனிப்பு வேலையாட்கள்(service) தனி....என் மனைவிக்கும் எனக்கும் நல்ல தோழி...இந்திய உணவு செய்யும் முறையை இங்கிருக்கும் ஒரு இந்திய உணவகத்திடமே வேலை செய்து நன்றாக அறிந்து கொண்டு தன் சொந்த உணவகத்தை ஆரம்பித்து செவ்வனே நடத்தி கொண்டு இருக்கிறார்..(உணவு செய்பவர்களும் வியட்நாமியர்களே!)


இங்கிருக்கும் உணவு வகைகள் இந்திய உணவகங்களிலேயே மிகவும் குறைந்த விலையாக இருக்கிறது....எடுத்துக்காட்டாக ஒரு கோழி பிரியாணி மற்ற உணவகங்களில் $7 அதாவது இன்றைய இந்திய ரூபாய் விலையில் 315 ரூபாய்கள்...ஆனால் இந்த உணவகத்தில் $3.5 மட்டுமே(157.50)...இதனால் இந்தியர்கள் மொய்க்கும் இடமாக மாறிப்போய் இருக்கிறது..


மற்ற இந்திய உணவகங்கள் வரி என்று பொய் சொல்லி மேலும் 12% (கட்ட வேண்டிய இடத்துக்கு கட்டாமல்!) அதிகமாக பணம் பிடுங்கி கொண்டு இருக்கிறார்கள்...உணவுகளும் தரமாக இருப்பதில்லை அதிலும் கவனிப்பு (Service) நன்றாக இருப்பதில்லை...இதற்கும் அவர்களும் என் நண்பர்களே...கேட்டால் வருபவர்கள் வரட்டும்...ஐரோப்பியர்களுக்கு விலை ஒன்றும் பெரிய விஷயமல்ல(இந்தியர்கள் வருகை குறைவு!) என்ற மெத்தனத்துடன் இருப்பது புரிந்தது...


இந்த உணவகம் அமைந்திருப்பது ஒரு அழகான ஏரியின் ஒரு பகுதியில்(மறு பகுதியில் எங்கள் வீடு!)...அதனால் வரும் விருந்தினர்கள் அந்த ஏரியின் அழகை ரசித்துக்கொண்டே உணவருந்துவார்கள்(என் மகனும் என் குடும்பமும் கூட!)...அதுவும் மழை பெய்யும் போது இரண்டாவது தளத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டே அந்த ஏரியில் மழை நீர் விழுவதை ரசிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்(மழை விரும்பி நான்!)....


மற்ற இந்தியர்களால் நடத்தப்படும் உணவகங்களை நல்லவிதமாக சொல்லமுடியாத காரணத்தாலும் அவர்கள் என்நண்பர்கள் என்ற காரணத்தாலும் தவிர்த்து விடுகிறேன்...வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்களாக நண்பர்களே..நன்றி!  



கொசுறு தகவல்: இந்தியாவை காட்டிலும் வியட்நாமுக்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகமாம்(வருடத்திற்க்கு!)

கொசுறு: என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்(!)...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது....ஆங் ஒன்றை மறந்து விட்டேனே ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Friday, June 24, 2011

மச்சி ஒரு டீ சொல்லேன்!

வணக்கம் நண்பர்களே.....

கடன் வச்சி சாப்பிட்டு வந்த காலம்............சென்னை சூளைமேட்டில் ஒரு உணவு விடுதி இயங்கிட்டு வந்தது...............அந்த ஓனரும், அங்கே வேல செய்ஞ்சிட்டு வந்தவங்களும் அருமையானவங்க(கடன் ஹி ஹி!)................


எப்பவும் எங்க ரூம்ல இருந்த நண்பர்கள் எல்லாருக்கும் நான் தான் சமையல் அப்போது(புகழுக்கு அடிமை என்பதால்!)...........ஆனாலும் தினமும் சமைக்க முடியாது. பக்கத்தில் இருந்த ஓட்டல் ஓனரின் மகன் எங்கள் நண்பர் என்பதால் இரவு உணவு அங்கதான். 

அதுவும் 11 மணிக்கு மேல் வரும் எனக்கு நண்பன் எப்பவும் சாப்பாடு எடுத்து வச்சிருப்பான். நான் அப்போது பல நாள் பட்டினி ஆக இருக்காமல் பார்த்துக்கொண்ட கொடை வள்ளல் அவன்.

அப்போ தான் ஒரு காதல் பிரச்சனையில நண்பன் மாட்டுனான்.........ஏற்கனவே என்னை எல்லோரும் ரொம்ப நல்லவன் என்றதால்(!) வீட்டிலிருந்து ஒதுங்கி வாழ்ந்த காலம்(!) அது.....அப்பேர்ப்பட்ட சூழ்நிலை(ஹி ஹி!)..........

இந்த சூழ்நிலையில காதல் பிரச்சனைக்கு ஆளானான் நண்பன்.............

இரவு நேரம் 11.15 மணி.............

என்ன தம்பி இவ்ளோ லேட்டா வரீங்க என்றார் கடைக்கார டீ மாஸ்டர்..........

இல்லன்னே இன்னிக்கு மாமல்லபுரத்துல வேல அதான்னே என்றேன்...........

சரி தம்பி சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்...........சாப்பிடுங்க நான் ஒரு தம் போட்டு வரேன் என்றார்.................

அண்ணே ............முனியாண்டி எங்க காணோம் என்றேன்....(முனியாண்டி நண்பனின் பெயர்!)

அது வந்து..............நீங்க சாப்பிடுங்க என்றார்.............

என்னனே என்ன ஆச்சு என்றேன்................

விடுங்க தம்பி என்றார்...............

இல்ல சொல்லுங்க எங்க அவன்..............

இப்போதான் வீட்டுல கொண்டு போய் படுக்க வச்சேன்..........

அந்த முக்கு தெரு பசங்க அடிப்பின்னிட்டாங்க என்றார்..............

ஏன்..............அந்தப்பொண்ணு மேட்டரு தான் தம்பி என்றார்...............

உடனே எழுந்து கை கழுவிக்கொண்டு பக்கத்துக்கு தெருவில் இருந்த அவன் வீட்டுக்கு ஓடினேன்.............

டேய் ஒன்னுமில்லடா விடு.......என்றான்...........

வாடா இன்னிக்கி பாத்துருவோம் என்று அவனை இழுத்துக்கொண்டு அந்த தெரு நோக்கி நடந்தேன்...............

முக்கில் தம் அடித்துக்கொண்டு இருந்த இருவரும் என்னைப்பார்த்த உடன்......இன்னா தம்பி காலைல தான் அவன் வாங்குனான் என்று ஆரம்பித்து சென்னை தமிழில் குதறினார்கள்....................

அதுவரை அமைதியாக இருந்த நான்.............என் கட்டுப்பாட்டை இழந்தேன்......ஒரு அடிதான் ..................அந்த கேவலமான வார்த்தைகளை சொல்லிக்கொண்டு இருந்தவன் கீழே பேச்சு மூச்சி இன்றி விழுந்திருந்தான்............

உடனே அந்த இன்னொருவன்...............ஓடிக்கொண்டே............நீ ஆம்பளையா இருந்தா இங்கயே நில்லுடா என்று சொல்லி விட்டு...........மறைந்தான்!

சில நிமிடங்களில் அந்த ஏரியா தாத்தா அல்ல தாதா என்று கூறிக்கொள்ளும் அந்த அழகான(!) மனிதன் வாயில் பான் பராக் மணத்தோடு என்னை நெருங்கினான். 

என்னடா என் ஆளு மேல கைவச்சிருக்க என்றான்.....(அந்த அடிவாங்கியவன் பெண் இல்லையே!)

இப்போ உம் மேலயும் வெப்பேன் என்றேன்................

அவர்கள் மொழியில் சொல்லப்படும் "சாமான்" என்பதை அவன் என்னை நோக்கி குத்த முயன்றான்............சில நிமிடங்களில்.........அவன் கையிலிருந்து அது என்கைக்கு இடம் மாறியது.............


என் விறைப்பை பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போயிருக்க வேண்டும் அவன்(!)

இப்போ என்ன பண்ணனும்கிற என்றான்................

யாரு இவன அடிச்சாங்களோ அவனுங்க இங்க வந்து மன்னிப்பு கேக்கணும்............இல்ல ஒவ்வொருத்தனையும் கேக்க வெப்பேன் என்றேன்............

அந்த மூன்று துக்கடா பசங்களும் சில நிமிடங்களில் என் நண்பன் முன் ஆஜர் படுத்தப்பட்டு.......ஆளுக்கு ஒரு அறை என் நண்பன் கையால் வாங்கிக்கொண்டு விடை பெற்றார்கள்.................

கடைசியில் அந்த க்ரூபுக்கு தலைவன் சொன்னது............தம்பி இங்க நடந்தது வெளிய தெரிய வேணாம்..........இங்க எதுவுமே நடக்காத மாதிரி நாங்களும் நடந்துக்குறோம் என்றான்...................

நானும் அமைதியாக வெளிஏறினேன் அந்த இடத்திலிருந்து.......முழு மதி வீசிக்கொண்டு இருந்தது...........

கொசுறு: இன்று நினைத்தாலும் நானா அப்படி என்று நினைக்க தோன்றுகிறது. அந்த நண்பன் இன்று ஒரு ஓட்டல் நடத்துவதாக கேள்விப்பட்டேன்.......வரும் விடுமுறைக்காலத்தில் அவனைக்காண வேண்டும் அவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த சகோதரியுடன்.........

கூச்சம்: தலைப்பு ஒரு ஜாலிக்கு ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

Thursday, June 23, 2011

பானம்யா பானம்! - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே.............


இதுவரைக்கும் என்னென்னமோ பானம் அருந்தி இருப்பீங்க...இப்போ நீங்க பாக்கப்போற பானம் சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்.....



பாருங்க பாருங்க.........


சர்ருங்க...புர்ருங்க..........


என்னமா ஆட்டமா ஆடிட்டு ஒரு பாட்டில்ல அடங்கி கெடக்கறாங்க பாருங்க!


இங்க ரொம்ப பேமசு இது.....


குடிங்க குடிங்க....குடிச்சிகிட்டே இருங்க...........


இது குடிச்சா ஆயுசு கெட்டியாம்யா!....


கொசுறு: பயபுள்ளைங்க தேளு, பூரான், பாம்பு ஒன்னுத்த விட மாட்டேங்குதுங்களே...என்னத்த சொல்ல!...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment