வணக்கம் நண்பர்களே....
இந்தப்பதிவுல்கம் பல விசித்திரமான நெருடல்களுடன்(!) வேறு வழி இல்லாமல்(!) பல இடங்களில் நட்புடன்(உதவிகளால்!) சென்று கொண்டு இருக்கிறது.....எனக்கு ஏற்ப்பட்ட சில மனவருத்தங்களில் ஒன்று இந்த பின்னூட்டம் சம்பந்தப்பட்டது....அவை உங்கள் பார்வைக்கு....இது என் தனிப்பட்ட கண்ணோட்டம்...இதில் யாரையும் நான் குறிப்பிடவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....
பின்னோட்டம் அல்ல பின்னூட்டம்(!)
இது தான் ஒரு பதிவை வந்தவர் படித்ததற்கு(!) சான்று....அதுவும் என்ன தான் வோட்டு போட்டு சென்றாலும்...நான் வந்ததை அந்த தளத்தின் நடத்துனருக்கு தெரிவிக்கவே....பெரும்பாலும் நான் பின்னூட்டம் இடுவது வழக்கம்....
அதை விடுத்து பெரிய..பெரிய பின்னூட்டங்கள் என்பது அவரவர் சார்ந்த நேரத்தை பொறுத்ததே....அதுவும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால்...வேலையில் துட்டு தரும் முதலாளியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தான் இந்த ப்ளோகில் நான் சென்று வந்து கொண்டு இருக்கிறேன்.....மற்றவர் பற்றி சொல்வதை விட தன்னை திருத்துக்கொள்பவனே மனிதன்....
தக்காளி....இந்த லட்சணத்துல உனக்கெதுக்கு பொல்லாப்பு ராஸ்கல்....தனக்கு தெரிஞ்சத கொட்டுவதுக்குத்தான் இந்த பதிவுலகம்னு நெனசிக்கிட்டியா...ஹிஹி அப்படியில்ல...உண்மையில்லாத விஷயங்கள கூட நேர்ல அங்கேயே நின்னு வதைப்பட்டாப்போலையே போடுறதெல்லாம் தான் இப்போ பேஷன்....அதுவும் நேர்ல பாத்தாப்போலையே போடுவானுங்க....இதெல்லாம் ஒரு பொழப்பு.....
அடுத்தது....இந்த பதிவுகளுக்கு போய் என்னத்த பின்னூட்டம் போடுறது....போட்டா உண்மைய போடணும்....அத போட்டா பலருக்கு புடிக்காது...அப்புறம் நீ தமிழனா உனக்கு சூடு இல்லையா, சொறன இல்லையான்னு பெரிய ரணகளமே நடக்கும்...எதுக்கு வம்புன்னு நான் பாட்டுக்கு பகிர்வுக்கு நன்றி அப்படி பின்னூட்டம் போட்டா....நான் என்னமோ பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டதா நெனசிக்கிறாங்க....
எதப்பத்தியும் கவலைப்படாம தான் பாட்டுக்கு போனாலும்...இவனும்(!) சொறன கெட்டவன்னு திட்டுரானுங்க....அடப்போங்கடா வெங்காயங்களா...இந்த பதிவுகளால நாலு பேரு சிரிச்சா போதும்...அப்படியே முடிஞ்சா சிந்திக்கவும் கொஞ்சமாவது நிஜ உலகில் சஞ்சரிக்கவும்(!) என் பதிவால முடியும்னு நெனைச்சித்தான் நான் இதுவரை இங்க இருக்கேன்....
நீங்க எப்படியாவது(!) போய் தொலைங்க அதுக்கு ஏன் என்ன மாதிரி கிருக்கன உங்க தோஸ்தா நெனச்சி கூப்பிடறீங்க....வேணாம்பா வேணா....இனி உங்க சங்காத்தமே வேணா என்னைய விட்ருங்க....எனக்கு இந்த அளவுக்குத்தான் டீசென்ட்டா(!) என்னைய திட்டிக்க தெரியும்....

இப்படிக்கு ஒரு வரி கமன்ட் போடும் விக்கி....
கொசுறு: மறுபடியும் சொல்றேன்...இது எனக்கு ஏற்ப்பட்ட சிறிய சங்கடமே....
கொசுறு: மறுபடியும் சொல்றேன்...இது எனக்கு ஏற்ப்பட்ட சிறிய சங்கடமே....

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
89 comments:
மாம்ஸ் நீங்க சொல்றது சரி தான்....
உனக்கு வடை போண்டா கமென்ட் போட்டிஉ நாரடிச்சிருவேன் ஜாகுரத்தை ஹி ஹி..
இந்தப்பதிவுல்கம் பல விசித்திரமான நெருடல்களுடன்(!) வேறு வழி இல்லாமல்(!) பல இடங்களில் நட்புடன்(உதவிகளால்!) சென்று கொண்டு இருக்கிறது....///
உண்மையிலே நட்பு தான் நம்மை பலருக்கும் கொண்டு செல்கிறது
.இது என் தனிப்பட்ட கண்ணோட்டம்...இதில் யாரையும் நான் குறிப்பிடவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....///
கண்டிப்பா நீங்கள் யாரையும் குறிப்பிடவில்லை.
.நான் வந்ததை அந்த தளத்தின் நடத்துனருக்கு தெரிவிக்கவே....பெரும்பாலும் நான் பின்னூட்டம் இடுவது வழக்கம்....///
வந்ததக்கு அடையாளம் இருந்தா சரி தான்
என்னய்யா ஆச்சு தக்காளிக்கு..... ?
எவனோ தக்காளிய பின்னி பெடலெடுத்திருக்கானுகன்னு மட்டும் தெரியுது..... ஆனா பதிவுலத்துல தக்காளிய கலாய்க்கற அளவு தைரியமான ஆள் யாரு இருக்கா? ஒண்ணுமே வெளங்கலியே?
விக்கி சார்.. சத்தியமா சொல்றேன் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுவது எவ்வளவு பெரிய விஷயம்னு இந்த ஒரு வாரத்தில் தெரிஞ்சிகிட்டேன்.. இன்னைக்கு என்ன பதிவு போடுறதுன்னு யோசிக்கணும், அதுக்கு விஷயத்த தேடனும், இதுக்கு நடுவுல நம்மள பின் தொடரும் ஐம்பது தோழர்களின் பதிவை படிக்கணும், படிச்சிட்டு புரிஞ்சிகிட்டு பின்னூட்டம் போடனும்.. என்னை ஐம்பது தோழர்கள் தான் பின் தொடர்கிறார்கள் பல பெற நானூறு ஐநூறு பேர் பின் தொடர்வதை பாக்கும் போது அடேங்கப்பா, இவங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்டம்னு தான் தோணுது.. விடுங்க தலைவரே, பின்னூட்டம் போட்டால் தான் படிச்சீங்கன்னு அர்த்தம் கிடையாது.. பின்னூட்டம் போட்டதால மட்டும் கடமை தீர்ந்து விடாது.. கற்க கசடற என்ற குறளை நடைமுறைப் படுத்தும் பொழுது ஏன்டா படிச்சோம்னு நினைக்காமல் இருந்தாலே போதுமானது.. உங்கள் ஒரு வரி பின்னூட்டங்களின் ரசிகன்.. அதை விட நம்ம சி.பி. சார் மேல் இரண்டே எழுத்து தான் எனக்கு எழுதும் பின்னூட்டங்களில்.. சத்தியமாக சொல்றேன் அந்த ரெண்டுழுத்து தர மன நிம்மதி கட்டுரை போல் வரும் பின்னூட்டங்களில் இல்லை என்றே கூறுவேன்..
.போட்டா உண்மைய போடணும்....அத போட்டா பலருக்கு புடிக்காது...அப்புறம் நீ தமிழனா உனக்கு சூடு இல்லையா, சொறன இல்லையான்னு பெரிய ரணகளமே நடக்கும்...////
அய்யோ மாம்ஸ் ரொம்பவே ஆக்ரோசமா இருக்காரே
@தமிழ்வாசி - Prakash
வாய்யா வா உன்னயத்தான் தேடிட்டு இருந்தேன் ஹிஹி!
கட்டுரை மாதிரி நானே பின்னூட்டம் போட்டுட்டேனோ.
எதப்பத்தியும் கவலைப்படாம தான் பாட்டுக்கு போனாலும்...இவனும்(!) சொறன கெட்டவன்னு திட்டுரானுங்க....///
யாருப்பா விக்கியை திட்டினது? நானும் இல்லை... வேற யாரு?
@MANO நாஞ்சில் மனோ
ஏன்யா இப்ப வரைக்கும் அதைத்தானே செய்ஞ்சிட்டு இருக்கே ஹிஹி!
நம்ம பதிவ படிச்சுத்தான் தக்காளிக்கு என்னமோ ஆகிடுச்சு போல....
@பன்னிக்குட்டி ராம்சாமி
தக்காளிக்கு இன்னிக்கு சித்தம் கலங்காமபோசிய்யா மாப்ள!
இப்படிக்கு ஒரு வரி கமன்ட் போடும் விக்கி....///
ரைட்டு....
//////விக்கியுலகம் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
தக்காளிக்கு இன்னிக்கு சித்தம் கலங்காமபோசிய்யா மாப்ள!
////////
என்னய்யா தண்ணியடிச்சு வீட்ல மாட்டிக்கிட்டியா?
இந்தப் பதிவு தேவையா மாப்ள..
/////செங்கோவி said...
இந்தப் பதிவு தேவையா மாப்ள..
//////
நல்லவேள நம்மளை கேட்கல.......
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா?
@தமிழ்வாசி - Prakash
இந்த ரணகளத்துலையும் முடிவு தெரியனும்ல!
இந்தப்பதிவுல்கம் பல விசித்திரமான நெருடல்களுடன்(!) வேறு வழி இல்லாமல்(!) பல இடங்களில் நட்புடன்(உதவிகளால்!) சென்று கொண்டு இருக்கிறது....///
ஏன் சார் அப்படி ஃபீல் பண்றீங்க? நிஜமான நண்பர்கள் கிடையாதா பதிவுலகத்தில்? தேடுங்க சார்! கெடைப்பாங்க!
@suryajeeva
மாப்ள உங்க வருகைக்கும் விளக்கமான பின்னூட்டத்துக்கும் நன்றி!
..எனக்கு ஏற்ப்பட்ட சில மனவருத்தங்களில் ஒன்று இந்த பின்னூட்டம் சம்பந்தப்பட்டது....///
சார், ஃபீல் பண்ணாதீங்க! நீங்க ரொம்ப வெளிப்படையான ஆள்! நீங்க தண்ணியடிச்சதையும், தம்மடிச்சதையும் கூட மறைக்காம ஓபனா சொன்ன பதிவர்! இதுபோக, வலைச்சரம் வெப்சைட்டில் நான் படித்த ஒரு பதிவின் வாயிலாக, உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்!
உங்க மேல எங்களுக்கெல்லாம் ரொம்ப பெரிய மரியாதை சார்!
@பன்னிக்குட்டி ராம்சாமி
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////விக்கியுலகம் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
தக்காளிக்கு இன்னிக்கு சித்தம் கலங்காமபோசிய்யா மாப்ள!
////////
என்னய்யா தண்ணியடிச்சு வீட்ல மாட்டிக்கிட்டியா?"
>>>>>>>>>>>>>
மாப்ள வீட்ல மாட்ற அளவுக்குக்கு ஒன்னும் பிரச்சன இல்ல ஹிஹி!
அவை உங்கள் பார்வைக்கு....இது என் தனிப்பட்ட கண்ணோட்டம்...இதில் யாரையும் நான் குறிப்பிடவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....///
இது சும்மா ஃபார்மாலிட்டிக்கு! யாரோ உங்களக் காயப்படுத்தியிருக்காங்க சார்! ஒருவேளை அதுக்கு முன்னாடியே நீங்க, தவறுதலாகவேனும் அவங்களக் காயப்படுத்தினீங்களோ என்னவோ?
தெரியாமல் கூட நீங்க காயப்படுத்தியிருக்கலாம் இல்லையா?
இது தான் ஒரு பதிவை வந்தவர் படித்ததற்கு(!) சான்று....அதுவும் என்ன தான் வோட்டு போட்டு சென்றாலும்...நான் வந்ததை அந்த தளத்தின் நடத்துனருக்கு தெரிவிக்கவே....பெரும்பாலும் நான் பின்னூட்டம் இடுவது வழக்கம்....///
இல்லை! இதையும் தாண்டி, பின்னூட்டங்களுக்கு சில தேவைகளும், சிறப்புக்களும் உள்ளன!
அவை என்னவென்று நாளைய என்னுடைய பதிவில் எழுதுகிறேன்! அவசியம் படியுங்க சார்!
பன்னிக்குட்டி ராம்சாமி Says: September 11, 2011 10:24 PM
எவனோ தக்காளிய பின்னி பெடலெடுத்திருக்கானுகன்னு மட்டும் தெரியுது..... ஆனா பதிவுலத்துல தக்காளிய கலாய்க்கற அளவு தைரியமான ஆள் யாரு இருக்கா? ஒண்ணுமே வெளங்கலியே?//
டாக்டர், தக்காளி செம மப்புல இருக்கானோ டவுட்டு ஹி ஹி...என்னா இன்னைக்கு ஞாயிற்று கிழமை...
அதை விடுத்து பெரிய..பெரிய பின்னூட்டங்கள் என்பது அவரவர் சார்ந்த நேரத்தை பொறுத்ததே...///
நிச்சயமான உண்மை! மறுக்க முடியாது! மாற்றுக்கருத்து இல்லை!
..மற்றவர் பற்றி சொல்வதை விட தன்னை திருத்துக்கொள்பவனே மனிதன்....///
உங்களின் பெருந்தன்மை!
அதுவும் உண்மையை சொல்ல வேண்டும் என்றால்...வேலையில் துட்டு தரும் முதலாளியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தான் இந்த ப்ளோகில் நான் சென்று வந்து கொண்டு இருக்கிறேன்....///
வருத்தமான செய்தி சார்!
ஆனால் என்னைப் பொறுத்தவரை 24 மணிநேரமும் கம்பியூட்டருக்கு முன்னாடி உக்காந்திருக்கிறதுதான் வேலை சார்! ( நள்ளிரவு 2 மணிக்கும் கமெண்டு போடுகிறேன்! )
தக்காளி....இந்த லட்சணத்துல உனக்கெதுக்கு பொல்லாப்பு ராஸ்கல்....தனக்கு தெரிஞ்சத கொட்டுவதுக்குத்தான் இந்த பதிவுலகம்னு நெனசிக்கிட்டியா...///
ஹி ஹி ஹி - புரியுது சார்!
..உண்மையில்லாத விஷயங்கள கூட நேர்ல அங்கேயே நின்னு வதைப்பட்டாப்போலையே போடுறதெல்லாம் தான் இப்போ பேஷன்....அதுவும் நேர்ல பாத்தாப்போலையே போடுவானுங்க....இதெல்லாம் ஒரு பொழப்பு.....////
சார், இதுல நீங்க பதிவர் நிரூபனைத் தானே தாக்கறீங்க?
( ஹி ஹி ஹி செங்கோவி சார்தான் சில நாட்களுக்கு முன்னர் - இப்படியெல்லாம் கமெண்டு போடலாம்னு சொல்லித் தந்தாரு! - அவரும் இதைப் படிப்பாருன்னு நெனைக்கிறேன்! )
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வருகைக்கும் உங்கள் மேலான கருத்துக்களுக்கும் நன்றிங்க மணி!
@செங்கோவி
கண்டிப்பா தேவை மாப்ள!
ம் ...
..அப்புறம் நீ தமிழனா உனக்கு சூடு இல்லையா, சொறன இல்லையான்னு பெரிய ரணகளமே நடக்கும்...எதுக்கு வம்புன்னு நான் பாட்டுக்கு பகிர்வுக்கு நன்றி அப்படி பின்னூட்டம் போட்டா....நான் என்னமோ பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டதா நெனசிக்கிறாங்க....////
புரியுது சார்!
அடுத்தது....இந்த பதிவுகளுக்கு போய் என்னத்த பின்னூட்டம் போடுறது....போட்டா உண்மைய போடணும்....அத போட்டா பலருக்கு புடிக்காது...////
உண்மைதான் சார்! ஆனா மாற்றுக்கருத்துக்களை நாம் முன் வைக்கும் போது, அதை ஏத்துக்கற பக்குவமுள்ள பதிவர்களும் இருக்கத்தான் செய்யுறாங்க!
உதாரணமா, இப்ப சத்த நேரத்துக்கு முன்னாடி, ஒரு பிரபல பதிவரோட பதிவுக்கு சில பிழைகளைச் சுட்டிக்காட்டி கமெண்டு போட்டேன் சார்! அவரும் திருத்திக்கிட்டாரு!
இப்படியானவங்களும் இருக்காங்க சார்!
சார், என்னோட ப்ளாக்குல நான் எழுதுற மேட்டர் எதுனாச்சும் உங்களுக்குப் புடிக்கலைன்னா, நெத்திக்கு நேர, நச்சுன்னு அடிக்கறமாதிரி சொல்லுங்க சார்! நான் கோவிக்கவே மாட்டேன்!
கருத்துக்கள் வேறுபட்டாலும், நட்பை பாதுகாக்க முடியும் சார்!
எதப்பத்தியும் கவலைப்படாம தான் பாட்டுக்கு போனாலும்...இவனும்(!) சொறன கெட்டவன்னு திட்டுரானுங்க....அடப்போங்கடா வெங்காயங்களா...இந்த பதிவுகளால நாலு பேரு சிரிச்சா போதும்...அப்படியே முடிஞ்சா சிந்திக்கவும் கொஞ்சமாவது நிஜ உலகில் சஞ்சரிக்கவும்(!) என் பதிவால முடியும்னு நெனைச்சித்தான் நான் இதுவரை இங்க இருக்கேன்....///
தயவு செஞ்சு உங்க பாதையை மாத்திடாதீங்க சார்! உங்கள் பாதை உங்களுக்குச் சரியே!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
" ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
..உண்மையில்லாத விஷயங்கள கூட நேர்ல அங்கேயே நின்னு வதைப்பட்டாப்போலையே போடுறதெல்லாம் தான் இப்போ பேஷன்....அதுவும் நேர்ல பாத்தாப்போலையே போடுவானுங்க....இதெல்லாம் ஒரு பொழப்பு.....////
சார், இதுல நீங்க பதிவர் நிரூபனைத் தானே தாக்கறீங்க?
( ஹி ஹி ஹி செங்கோவி சார்தான் சில நாட்களுக்கு முன்னர் - இப்படியெல்லாம் கமெண்டு போடலாம்னு சொல்லித் தந்தாரு! - அவரும் இதைப் படிப்பாருன்னு நெனைக்கிறேன்! )"
>>>>>>>>>
சார் நான் நிரூபன் அவர்களை தாக்கனும்னா நேரா அவர தாக்க முடியும்...எவனுக்கும் பயந்தவன் இல்ல நான்!....புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்...எனக்கு கோத்து விட்டு பழக்கமில்ல...மன்னிக்கவும்!
மாப்ள, நீ ஒருவரி கமெண்ட்டுக்கே பொலம்புறீயே.... சரி விடு......
நீங்க எப்படியாவது(!) போய் தொலைங்க அதுக்கு ஏன் என்ன மாதிரி கிருக்கன உங்க தோஸ்தா நெனச்சி கூப்பிடறீங்க....வேணாம்பா வேணா....இனி உங்க சங்காத்தமே வேணா என்னைய விட்ருங்க....///
நீங்க ஒதுங்கினா நாங்க விட்டுடுவமா? அதெல்லாம் நடக்கது சார்! கருத்துக்கள் பிடிக்கலைனா சண்டை போடுவோம்! ஆனா, பிரிவு என்ற பேச்சுக்கே இடமில்லை! சரியா சார்!
ஹேப்பியா இருங்க சார்! ஒண்ணையும் மனசுல வச்சுக்காதீங்க சார்! நாம எல்லோருமே தமிழன் அப்டீங்கறத மறந்துடாதீங்க சார்!
உங்களைக் குறிவச்சு யாராச்சும் பதிவுபோட்டா சொல்லுங்க சார், நாமளும் உள்குத்து பதிவு போட்டு, பட்டையக் கெளப்பிடுவோம்!
சண்டை போடுறதுன்னா, நமக்கு அல்வா சாப்பைடுற மாதிரி சார்!
ஸோ, டோண்ட் வொரி! பீ ஹேப்பி!
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி Says: September 11, 2011 10:24 PM
எவனோ தக்காளிய பின்னி பெடலெடுத்திருக்கானுகன்னு மட்டும் தெரியுது..... ஆனா பதிவுலத்துல தக்காளிய கலாய்க்கற அளவு தைரியமான ஆள் யாரு இருக்கா? ஒண்ணுமே வெளங்கலியே?//
டாக்டர், தக்காளி செம மப்புல இருக்கானோ டவுட்டு ஹி ஹி...என்னா இன்னைக்கு ஞாயிற்று கிழமை...
//////
அட ஆமால்ல,தக்காளிக்கு மப்பேறிடுச்சுன்னா போன ஜன்மம் ஞாபகம்லாம் வருமாமே.... சரி சரி லூஸ்ல விடுங்கப்பா...
@பன்னிக்குட்டி ராம்சாமி
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
மாப்ள, நீ ஒருவரி கமெண்ட்டுக்கே பொலம்புறீயே.... சரி விடு......"
>>>>>>>>>
இல்லைய்யா...தப்பு என் பேர்ல இருக்காங்கறத தெளிவாக்கிக்க தான் இந்தப்பதிவு..இது யாரையும் தாக்க அல்ல மாப்ள!
பகிர்வுக்கு நன்றி... அட விட்டு தள்ளுங்க பாஸ்....
//////விக்கியுலகம் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
மாப்ள, நீ ஒருவரி கமெண்ட்டுக்கே பொலம்புறீயே.... சரி விடு......"
>>>>>>>>>
இல்லைய்யா...தப்பு என் பேர்ல இருக்காங்கறத தெளிவாக்கிக்க தான் இந்தப்பதிவு..இது யாரையும் தாக்க அல்ல மாப்ள!
////
ஓகே மாப்ள........
@பன்னிக்குட்டி ராம்சாமி
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி Says: September 11, 2011 10:24 PM
எவனோ தக்காளிய பின்னி பெடலெடுத்திருக்கானுகன்னு மட்டும் தெரியுது..... ஆனா பதிவுலத்துல தக்காளிய கலாய்க்கற அளவு தைரியமான ஆள் யாரு இருக்கா? ஒண்ணுமே வெளங்கலியே?//
டாக்டர், தக்காளி செம மப்புல இருக்கானோ டவுட்டு ஹி ஹி...என்னா இன்னைக்கு ஞாயிற்று கிழமை...
//////
அட ஆமால்ல,தக்காளிக்கு மப்பேறிடுச்சுன்னா போன ஜன்மம் ஞாபகம்லாம் வருமாமே.... சரி சரி லூஸ்ல விடுங்கப்பா...
>>>>>>>>>>>>>
இப்படி உசுப்பேத்தியே என்னைய ரத்த களத்துல பாக்குறானுங்க ராஸ்கல் பிச்சி புடுவேன் ஹிஹி!
@நண்டு @நொரண்டு -ஈரோடு
வருகைக்கு நன்றிங்க மாப்ள!
சத்தியமாக சொல்றேன் அந்த ரெண்டுழுத்து தர மன நிம்மதி கட்டுரை போல் வரும் பின்னூட்டங்களில் இல்லை என்றே கூறுவேன்..////
இந்தக் கமெண்டு போட்ட நபர் எங்க சுத்தி, எங்க வர்ராருன்னு புரியுது! இவருக்கெல்லாம் உள்குத்து போடுற நிலைமைல நான் இல்லை! காரணம் அவரு இன்னும் ஃபேமஸ் ஆகலை!
எதுக்கு ஃப்ரீ அட்வேர்டிஸ்மெண்ட் குடுக்கணும்! ஹி ஹி ஹி கஷ்டப்பட்டு முன்னேறட்டும்!
என்னைய கலாச்சுட்டாராமாம்!
@சதீஷ் மாஸ்
வருகைக்கு நன்றிங்க மாப்ள!
ரைட்டு! :-)
வருத்தப் படாதீங்க மாம்ஸ்
//.அடப்போங்கடா வெங்காயங்களா..//
வெங்காயம் ஆம்பளையா மாம்ஸ்????
யாருய்யா சிறுத்தைய சொரண்டி பாத்தது..எட்றா..எட்றா..அருவாள எட்றா..
எப்படி போட்டாலும் படித்து போடுபவரே அதிகம்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
மாப்பூ உங்களுக்கே இப்படி என்றாள் நாங்களும் சிலநேரம் பகிர்வுக்கு நன்றி /வாழ்த்துக்கள் என்று தானே போடுகின்றோம் அதற்காக தனிமரம் மீது கோபிக்கக் கூடாது மாப்பூ உரிமையுடன் வாரம் இல்ல! அவ்வ்!
என்னாச்சு மாப்பிள..
தமிழ்மணத்தில ஓட்டு போட்டாச்சு இப்பவாவது சொல்லு மாப்பிள என்ன நடந்தது.. ஹி ஹி ஹி
வரவர தக்காளி இப்பல்லாம்... பிளக்கை சொருகி சுவிட்சை போட்டுகிட்டு.... தானே மிக்சிக்குள்ளே தவ்விக்குதிச்சு ஜூஸ் புழிஞ்சிக்குது... ஏன்னுதான் ஒண்ணுமே புரியலை.
வணக்கம் மாம்ஸ்,
இருங்க படிச்சிட்டு வாரேன்,
ஒருவரி கமன்ட் போடலாமா - இப்படிக்கு பதிவர்!//
அவ்...தலைப்பே ஒரு ஹாட்டா இருக்கு,
இருங்க மேட்டர் என்னான்னு படிச்சிட்டு வாரேன்.
இந்தப்பதிவுல்கம் பல விசித்திரமான நெருடல்களுடன்(!) வேறு வழி இல்லாமல்(!) பல இடங்களில் நட்புடன்(உதவிகளால்!) சென்று கொண்டு இருக்கிறது.....எனக்கு ஏற்ப்பட்ட சில மனவருத்தங்களில் ஒன்று இந்த பின்னூட்டம் சம்பந்தப்பட்டது....அவை உங்கள் பார்வைக்கு....இது என் தனிப்பட்ட கண்ணோட்டம்...இதில் யாரையும் நான் குறிப்பிடவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....//
ஹே...ஹே..
உதவிக்காக நட்பு என்பது என்றுமே நிலைக்காது பாஸ்,
ஆனால் ஒருவரின் படைப்பினைப் புரிந்து கொண்டு நட்புப் பாராட்டுவது தான் என்றும் நின்று நிலைக்கும்,
நீங்கள் இங்கே சுட்டும் உதவிக்காக நட்பு என்பது பச்சோந்தி போன்றது,
எப்போது வேண்டுமானாலும் நிறம் மாற்றிக் கொள்ளும் இயல்பினைக் கொண்டிருக்கும்.
இது தான் ஒரு பதிவை வந்தவர் படித்ததற்கு(!) சான்று....அதுவும் என்ன தான் வோட்டு போட்டு சென்றாலும்...நான் வந்ததை அந்த தளத்தின் நடத்துனருக்கு தெரிவிக்கவே....பெரும்பாலும் நான் பின்னூட்டம் இடுவது வழக்கம்....//
அட இது நல்லா இருக்கே...
பின்னோட்டம் அல்ல பின்னூட்டம்(!)//
பின்னோட்டம் என்றால் மொய்க்கு மொய் கொடுப்பது தானே...
அவ்.........
.ஹிஹி அப்படியில்ல...உண்மையில்லாத விஷயங்கள கூட நேர்ல அங்கேயே நின்னு வதைப்பட்டாப்போலையே போடுறதெல்லாம் தான் இப்போ பேஷன்....அதுவும் நேர்ல பாத்தாப்போலையே போடுவானுங்க....இதெல்லாம் ஒரு பொழப்பு.....//
அட இது வேறையா...
யார் மாம்ஸ் உங்களைச் சீண்டிடன ஆளு?
உண்மையில்லாத விஷயங்கள கூட நேர்ல அங்கேயே நின்னு வதைப்பட்டாப்போலையே போடுறதெல்லாம் தான் இப்போ பேஷன்....அதுவும் நேர்ல பாத்தாப்போலையே போடுவானுங்க....இதெல்லாம் ஒரு பொழப்பு.....//
அப்படி உண்மையில்லாத விசயங்களை யாராச்சும் எழுதும் போது நீங்கள் சுட்டிக் காட்டலாம் தானே?
தவறுகள் இருப்பின் ஆதாரப்படுத்திக் காண்பித்தால், இப்படி உண்மையில்லாம எழுதுறவங்களை நாம விரட்டலாம் தானே பாஸ்,
இல்லையா?
அடுத்தது....இந்த பதிவுகளுக்கு போய் என்னத்த பின்னூட்டம் போடுறது....போட்டா உண்மைய போடணும்....அத போட்டா பலருக்கு புடிக்காது...அப்புறம் நீ தமிழனா உனக்கு சூடு இல்லையா, சொறன இல்லையான்னு பெரிய ரணகளமே நடக்கும்...எதுக்கு வம்புன்னு நான் பாட்டுக்கு பகிர்வுக்கு நன்றி அப்படி பின்னூட்டம் போட்டா....நான் என்னமோ பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டதா நெனசிக்கிறாங்க....//
அட இது வேறையா..
தற்காப்பிற்காக நீங்க போடும் பின்னூட்டங்களைக் கூட இப்படி நினைச்சுக்கிறாங்க போல இருக்கே...
பாவிப் பசங்க
உண்மையில்லாத விஷயங்கள கூட நேர்ல அங்கேயே நின்னு வதைப்பட்டாப்போலையே போடுறதெல்லாம் தான் இப்போ பேஷன்....அதுவும் நேர்ல பாத்தாப்போலையே போடுவானுங்க....இதெல்லாம் ஒரு பொழப்பு.....//
அப்படி உண்மையில்லாத விசயங்களை யாராச்சும் எழுதும் போது நீங்கள் சுட்டிக் காட்டலாம் தானே?
தவறுகள் இருப்பின் ஆதாரப்படுத்திக் காண்பித்தால், இப்படி உண்மையில்லாம எழுதுறவங்களை நாம விரட்டலாம் தானே பாஸ்,
இல்லையா?
நீங்க எப்படியாவது(!) போய் தொலைங்க அதுக்கு ஏன் என்ன மாதிரி கிருக்கன உங்க தோஸ்தா நெனச்சி கூப்பிடறீங்க....வேணாம்பா வேணா....இனி உங்க சங்காத்தமே வேணா என்னைய விட்ருங்க....எனக்கு இந்த அளவுக்குத்தான் டீசென்ட்டா(!) என்னைய திட்டிக்க தெரியும்....//
இது தான் பாஸ், உங்க கிட்ட எனக்குப் பிடிச்ச விசயமே..
துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று...
போறீங்க பாருங்க..போலி புரோபைலில் கமெண்ட் போடமா...வம்பிழுக்காம,
ஒரு உயர்ந்த உள்ளம் மாதிரி விட்டுக் கொடுக்கிறீங்க பாருங்க.
ஐ லைக் திஸ்...
இன்னோர் விடயம், பாஸ்,
ஒருவரிக் கமெண்ட் போடுவது தவறில்லை, ஆனால் ஒரு சில பதிவர்களிடம் பதிலுக்கு ஒரு வரிக் கமெண்டினை ஏனைய பதிவர்கள் எழுதும் போது, ஏற்றுக் கொள்ளும் பக்கும் இல்லை.
அதாவது தமது படைப்புக்களுக்கு மாத்திரம் அதிக கமெண்டுகள் கிடைக்கவில்லையே எனும் காழ்ப்புணர்வு, பொறாமை இருக்கின்றது.
இது தான் ஒரு பதிவரால் அண்மையில் பின்னூட்டம் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
ஒருவரிக் கமெண்ட் போடும் பதிவர்கள், அதிக கமெண்டுகள் எதிர்பார்ப்பதும் தவறு தானே நண்பா..
இதனையும் உங்கள் இடுகையில் சுட்டிடியிருக்கலாம் அல்லவா.
தல... இப்போல்லாம் நீங்க சப்பை மேட்டருக்கெல்லாம் கோபப்படுறீங்க... ஃப்ரீயா விடுங்க...
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நம்ம பதிவ படிச்சுத்தான் தக்காளிக்கு என்னமோ ஆகிடுச்சு போல.... //
கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்க ப.ரா... நல்லா தேடிப் பாருங்க உங்களோட இந்த பின்னூட்டத்துக்கு மட்டும் பதில் போட்டிருக்க மாட்டார்...
// போட்டா உண்மைய போடணும்....அத போட்டா பலருக்கு புடிக்காது... //
ஆனா தல... என்னுடைய ப்ளாக்ல நீங்க உண்மையான கருத்தையே சொல்லலாம்...
// போட்டா உண்மைய போடணும்....அத போட்டா பலருக்கு புடிக்காது... //
உண்மைதான்... நான் கூட உண்மையைச் சொல்லி சிலரிடம் உண்டைக்கட்டி வாங்கியிருக்கேன்...
உங்க ஒரு வரிக்கு முன்னாடி "ஹி... ஹி..." அல்லது "மாப்ள" என்ற வார்த்தையை மட்டும் சேர்த்துக்கோங்க... அப்புறம் யாரும் ஒரு வரி பின்னூட்டம்ன்னு சொல்ல மாட்டாங்க...
@M.R
வருகைக்கு நன்றிங்க மாப்ள!
@சேட்டைக்காரன்
வருகைக்கு நன்றிங்க!
@மதுரை சரவணன்
வருகைக்கு நன்றிங்க மாப்ள!
@! சிவகுமார் !
வருகைக்கு நன்றிங்க மாப்ள!
@~முஹம்மத் ஆஷிக்_citizen of world~
வருகைக்கு நன்றிங்க மாப்ள!
@காட்டான்
வருகைக்கு நன்றிங்க மாப்ள!
@Nesan
வருகைக்கு நன்றிங்க மாப்ள!
@நிரூபன்
நண்பர் நிரூபன் அவர்களே...தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்...இவை என்னுடைய தவறுகளே அன்றி நான் யாரையும் குறிப்பிடவில்லை....தாங்கள் குறிப்பிடும்படி ஏதும் நிகழ்ந்திருந்தால் வருந்துகிறேன்....நன்றி!
@Philosophy Prabhakaran
புரிஞ்சிகிட்டேன் என் தவறுகளை....நண்பரே தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...இனி முயற்சிக்கிறேன்..!
open talk-
very nice-
its true-
thank u
ராம்சாமி பதிவுக்கு எதிர்ப்பதிவு மாதிரி த்தெரியுது.. அவ்ளவ் ப்[எரிய அப்ப்பாடக்கரா நீ?
மாப்ள கவலப்படாதீங்க...
பகிர்வுக்கு நன்றி, ஹி ஹி
மாம்ஸ் நீங்க ஒரு வரி போட்டா நூறு வரி போட்ட மாதிரி
சார் உங்க வழியில நீங்க போங்க சார் . விடுங்க பாஸ்
Post a Comment