வணக்கம் நண்பர்களே..........
நேற்று ஒரு புதுவித அனுபவமாக இருந்திருக்கும் என் மனைவிக்கும், மகனுக்கும்...ஏனெனில் INS Airavat (ஐராவதம்!) - எனும் பெயர் கொண்ட இந்தியாவின் போர்க்கப்பல் வியட்நாம் வந்து இருந்தது...அழைப்பின் பேரில் சென்று இருந்தோம்...
ஹோனாயிலிருந்து துறைமுகத்திற்கு கிட்ட தட்ட 90 கிமீ தூரம் இருக்கும்...துறைமுகத்தின் பெயர் - ஹைபோங்!....அழகிய துறைமுகம் என்று சொல்ல முடியாவிட்டாலும்....முக்கிய துறைமுகம் என்று சொல்லலாம்!...2 மணி நேர பயணத்தில்(உபயம் -தூதரக பஸ்!) போய் சேர்ந்தோம்....
பெரிய போர் கப்பல் என்பதால் அனுமதி கெடுபிடிகள் அதிகம்...அதுவும் எங்களின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்த லிஸ்ட் காணாமல் போயிருந்தது குறிப்படத்தக்கது...அனைவரையும்(10 இந்தியர்கள், 15 வியட்நாமியர்!) கரையிலேயே நிற்க வைத்து விட்டார்கள் வியட்நாமிய போலீஸ்காரர்கள்!....பின் அந்த கப்பலின் கேப்டனிடம்(ப்ளாக் டைசன் அல்ல!) பேசிப்பார்த்தோம்....அவரும் இந்தியர்களை மட்டுமாவது அனுமதிக்குமாறு அந்த அதிகார்களிடம் பேசி அனுமதி வாங்கினார்......
எவ்வளவு பெரிய கப்பல்....உள்ளே டாங்கு மற்றும் ஒரு பெரிய அளவிலான லாரி நிற்கும் அளவுக்கு கீழ் தளம் இருந்தது...நல்லிணக்க காரணமாக வந்து இருந்ததால் அதனை தாங்கி வரவில்லை கப்பல்.....மேலும் மேல் தளத்தில் நவீன ரக ஹெலிகாப்டர்(ரோந்து!) நிற்க வைக்கப்பட்டு இருந்தது.....அது எவ்வாறு அந்த தளத்தில் இருந்து மேலெழும்பும் என்று விளக்கப்படுத்தினார் ஒரு அதிகாரி....
மொத்தம் 20 ஆபிசர்களும், 180 சிப்பந்திகளும் இந்த கப்பலில் பயணம் செய்கின்றனர்......அப்படியே பார்த்து கொண்டு வந்த போது ஒரு அதிகாரி என்னை பார்த்து தமிழா என்றார்...ஆமாங்க என்றேன்...நீங்க என்ற போது அவர் தான் ஆந்திரம் என்றும் தமிழ் தெரியும் என்றும் சொல்லி அவருடைய ஆபீசர்கள் தாங்கும் குளிர் அறைக்கு கூட்டி சென்றார்....மேல் தளம் அதிகமான வெப்பத்தில் தகித்தது...உள்ளே மிதமான குளிர்(A/C) வீசிக்கொண்டு இருந்தது....
நலம் விசாரித்த வண்ணம் பேசலானேன்.....உள்ளே இருந்த மிகப்பெரிய LCD டிவியில் கேம் X எனப்படும் விஷயத்தை என் மகனிடம் கொடுத்து விளையாட சொல்லி விட்டார் அந்த அதிகாரி(கார் கேம் 3D)....அந்த அதிகாரியின் முகம் என் நண்பன் ஒருவரின் முகதத்தை போல இருந்தது...அன்னியோன்யமாக பேசினார்...சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான்(HIET) கல்லூரியில் ஏரோனாடிக்ஸ் படித்ததாக கூறினார்....(இந்த கல்லூரி கிண்டி முனை - ஜோதி தியேட்டர்(ஹிஹி!) அடுத்து இருக்கிறது)....
அவர் பேசிக்கொண்டே வந்தார்....எப்படிப்பட்ட வேலை...கடல் நடுவே செல்ல வேண்டும்...தொடர்ந்து பல வாரங்களாக கடலில்(கப்பலில்!) இருப்பதாகவும்...பொதுவாக மாதத்துக்கு சில நாட்கள் குடும்பத்தை பார்க்க முடியும் என்றும்(விடுமுறை அல்ல!) என்றும் கூறினார்....இந்த கப்பல் விஷாகப்பட்டினத்தில் இருந்து வருவதாகவும் வரும் வழியில் புரூனே, கம்போடியா மற்றும் ங்காசாங் (அழகிய வியட்நாமிய துறைமுகம்!) கடந்து வந்ததாக கூறினார்!.....
பல விஷயங்களையும்...போர் நேர நடை முறைகளையும் விளக்கினார் அந்த நண்பர்(காபி மற்றும் ஸ்நாக்ஸ் உடன்!)....எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது இந்த பயணம்...இரவு வந்து சேர்ந்தோம் இனிதாக!
கொசுறு: எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..



















