Followers

Thursday, October 28, 2010

டண்டனக்கா ஏய் டணக்குனக்கா

நாட்டு நிலைமை - தமிழ் நாடு alias தமிழை மட்டுமே நம்பிய நாடு (பெரும்பான்மையோர்) 

திமுக -  பாருங்க எவ்வளவு பாரம்பரியம் மிக்க கட்சி இப்படி ஆயிடுச்சே அப்படின்னு அவங்களே இப்போ சொல்லிகிறமாதிரி ஆயிடுச்சி. மிகபெரிய ஒரு குடும்பஸ்தரோட கட்சியா  இப்போ இருக்குது. என்னதான் போர்வையால போத்துனாலும் ம்ம்ம் ஹ்ஹும் ஒன்னும் முடியல. இப்போ இருக்கிற கட்சிகளிலேயே அதிக சினிமா வியாபாரிகளை கொண்டது. 
 
என்ன உள்ள வெடிக்கிற பட்டாசுகள் இன்னும் வெளிய தெரியாம கட்சி தலைவரு போராடிகினுகிறாரு. சீக்கிரமே தெரிஞ்சிடும் ரிசல்டு. ஆனா துட்டு இப்போ நெறைய இருக்குறதால அடுத்த ஆட்டமும் இவங்களுக்கு தான் அப்டின்னு பேச்சு பெருசா இருக்குது. அதே நேரத்துல மத்த கட்சில இருந்து இழுத்துட்டு வந்தவங்கள உக்கார வெக்க கூட இடம் இல்லாம போகபோகுது தேர்தல் சமயத்துல

பலம் -  பணம் மற்றும் இன்னும் ஒட்டிகொண்டிருக்கும் திராவிட என்ற எழுத்துக்கான மக்கள்.

பலவீனம் - குடும்ப சண்டை மற்றும் லேட்டஸ்ட் கரண்டு மேட்டரு.

லேடஸ்ட் ஸ்டண்டு மக்களுக்காக அம்மா (ஜெ)சொல்வதை பொறுத்து போவதாக சொல்வது 


அதிமுக - இப்போ கூடுற கூட்டத்த வச்சி ஏதும் சொல்ல முடியாது. மிகபெரிய அரசியல்(வியாதி)வாதி மு.க இந்நேரம் எப்படி எங்க யார வச்சி ஓட்ட பிரிக்கலாம் அப்டின்னு யோசிச்சுகினு இருப்பாரு. பாவம் அம்மாவும் ரொம்ப தான் ட்ரை பண்றாங்க. ஆனா இவங்க அடிமைங்க எண்ணிக்க கொஞ்சம் குறஞ்சிடுத்து. அதான் பாவம் இன்னா பண்ண போறாங்கன்னு தெரியலஆனா ஒரு விஷயம் நம்ம மக்க எப்பவுமே அடுத்தடுத்து தொடர்ந்து அய்யாவுக்கு வாய்ப்பு கொடுப்பாங்களா தெரியல. மறுபடியும் கொடுத்தாங்க அப்டினா என்ன ஆகும்னு இந்நேரம் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும

அம்மா பாவம் உடம்பு முடியாம நம்மளுக்காக எத்தன போராட்டம் நடத்திகினுகிறாங்க. அதுவும் லேட்டஸ்டா மதுரைல கலக்கிட்டாங்க. பார்ப்போம்  ஏதும் நடக்கலாம்.

பலம் - இன்னும் MGR  எனும் பிம்பத்தை மறக்காத தொண்டர்கள்

பலவீனம் - அரசாங்க ஊழியர்களை பகைத்து கொண்டது (முக்காவாசி ஓட்டே இவங்க போடறது தான்), இன்னும் அமைக்கபடாத கூட்டணி.

லேடஸ்ட் ஸ்டண்டு - மதுரைல கூடுன மக்கள் எண்ணிக்கையே பாத்து மு.க பயந்துட்டாறு 

கேப்டன் : இவருக்கு யார் இந்த பேர வச்சாங்களோ அவங்களுக்கு தனியா களி வாங்கி போடணும். இவரு சினிமா ஸ்டைல்லயே பேசிகினு கிறாரு, ஆனா பொழைக்க தெரிஞ்சவரு மத்த நடிகர்கல போல இல்லாம தனி ரூட்டு போட்டு கொஞ்சம் ஓட்டு சீன காமிச்சி காங்கிரசுகிட்ட இருந்து வாங்கி போட்டுகினாறு. எனக்கு  என்னமோ இந்த முறை மு.க கிட்ட பெரிய தொகை கேட்டு இருப்பாருன்னு நினைக்கிறேன். இவர நம்பி நறைய பேரு குழந்த குட்டிய விட்டுட்டு பரதேசியா போக வாய்ப்பு அதிகம். ஆனா இவரு செழிப்பா இருப்பாரு

பலம் - கட்சிகளையே ஏமாற்றி பணம் செய்யும் வித்தை தெரிந்தது.

பலவீனம் - கொள்கைனா என்னனு கேட்பது 

லேடஸ்ட் ஸ்டண்டு - நான் மட்டும் தான் Mr. உத்தமன்னு சொல்றது  (உபயம் - அன்பே சிவம்.

பாமக : நெறைய மன நல மருத்துவர்கள் நிறைந்த கட்சி. மத்த கட்சியிளையாவது தொண்டருங்க, லூசா திரிவாங்க இங்க தலைவருங்களே திரியறாங்க 

இவங்க கட்சியில இருக்குற தலைவர் முன்னாடி என்ன பேசுனாரு அப்டின்னு கேட்டா அது போன மாசம் இது இந்த மாசம் அப்டின்னு சொல்லுவாரு. எப்ப பாத்தாலும் தாதா லெவெல பேசிகினு இருந்தவரு இப்போ நானும் தாதாதான் அப்டின்னு சொல்ற நெலமைல இருக்குறாரு. இவர நம்புறவங்க எப்போ வேட்டி கட்டுவாங்க எப்போ சேலை கட்டுவாங்க தெரியாது

பலம் - ஜாதி எனும் அல்வா 

பலவீனம் - என்னடா பெசுரோம்னே மறந்து போய் சமயத்துல உண்மையல்லாம் பேசிடறது. ( நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்)

லேடஸ்ட் ஸ்டண்டு - திமுகவும் அதிமுகவும் கூபுடுது யாரு பக்கம் சொம்பு தூக்கறது

காங்கிரஸ் : கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட பெருமை வேறு இதற்கு. தமிழ் நாட்டில் நிலசுவாந்தார்கள் கட்சியாக இன்றும் இருப்பது.  எப்படியல்லாம் மக்களை கொல்லலாம் என்று யோசித்து கொண்டு இருப்பது. இன்னும் இந்து, முஸிலிம் மேட்டர  வச்சி குளூர் காயிறது. தமிழ் நாட்டுல யார் தலைவருன்னு தெரியாமையே கட்சி ஓட்டிக்கொண்டு இருப்பது. எந்த பக்கம் எப்போ போவம்னு தெரியாத தலைவர்கள் கொண்ட கட்சி

பலம் ; கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முந்தய கட்சி எனும் பேரு.

பலவீனம்; தொண்டர்கள் எண்ணிகைய விட தலைவர்கள் எண்ணிக்கை  அதிகமா இருக்குறது

லேடஸ்ட் ஸ்டண்டுமு.க ரொம்ப நல்லவரு எங்களுக்கு 100  சீட் தருவாரு.


முக்கியமானவர்கள் :

பொது சனம் - 1 - படித்தவர்கள் -  ராமன் ஆண்டால் என்ன ராவண ஆண்ட என்ன - பெட்ரோல போடும்போதும் துட்டு செலவு பண்ணும்போது வோட்டே போடாம அரசாங்கத்த திட்டுறது.

பொது சனம் 2 - எப்போ தேர்தல் வரும் எவன் கிட்ட அதிகமாக கிடைக்கும் (உபயம் மு.க

3.
உண்மையான பொது சனம் (இவங்க தான் பெரும்பான்மை)  - என்ன பண்றது எவ்ளோ குத்துனாலும் தாங்கிக்கொண்டு உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தாவனும்.

நாடு - மூச்சு முட்டி போய் இருக்குது 

உங்களுடைய திட்டுகள் வாழ்த்துகள் எதிர்பர்க்கப்படுகிறது. 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 comments:

♔ம.தி.சுதா♔ said...

////என்ன உள்ள வெடிக்கிற பட்டாசுகள் இன்னும் வெளிய தெரியாம கட்சி தலைவரு போராடிகினுகிறாரு.////
தங்கள் பதிவு நல்ல சுவாரசியமாக இருக்கிறது.. ஏன் இன்னும் தமிழ் 10 ற்கு சமர்ப்பிக்கவில்லை....
என் தள வருகைக்கு மிக்க நன்றி...

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

விக்கியுலகம் said...

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே ம.தி.சுதா

விக்கியுலகம் said...

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே அந்நியன்
அவர்களே என்ன பிரச்சனை
தயவு செய்து விளக்கபடுதுங்கள்