Followers

Monday, November 1, 2010

எந்திர்றா


இது பட பதிவு அல்ல ஒரு குடிமகனின் பதிவு.

அரசாங்கம் ஒன்று ஏன் ஏற்பட்டது என்று பார்த்தால் ஒரு அறிஞர்  கூறியது நினைவுக்கு வந்தது. அது என்னன்னா அரசாங்கம்னு ஒன்னு இல்லைனா மக்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் அடித்து கொண்டு செத்துடுவாங்க என்பதே!
ஆனா இங்க நடக்குறது என்ன

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களை மறைமுகமாக வேட்டையாடிக்கொண்டு இருக்கிறது. நாம என்ன அரசர் காலத்துல இருக்கோமா என்று சந்தேகமா இருக்குது. எந்த அரசாங்கம் வந்தாலும் மக்கள் பிரச்சினைகளை தீர்பதற்குப்பதுலா புதுசு புதுசா பிரைச்சினைகளை உருவாக்கி கொண்டே இருக்குது

அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை நம்ம வரிப்பணத்துல தேர்தல நடத்தி நமக்கு நாமே முட்டா பட்டம் கட்டிக்கறோம். இதுக்கு முடிவு தான் என்ன?

ஒன்னு நமக்கு எத பத்தியும் கவலைஇல்ல ராமன் ஆண்டா என்ன ராவண ஆண்டா என்ற மனநிலையா?
இல்ல நமக்கு எதுக்கு இந்த அரசியலெல்லாம் நமக்கு நம்ம புள்ள குட்டிய பார்த்தா  போதும் அப்டிங்கற மன நிலையா?

நம்மை ள்றவங்கள நாமே தேர்ந்தெடுக்குற விஷயத்த நம்ம பெரியவங்க ஏன் நம்ம கிட்ட குடுத்துட்டு போனாங்க தெரியுமா?

எப்பவுமே நாம அலர்ட்டா இருந்து ம்மளையும் நம்ம நாட்டையும் பாத்துக்கணும் அப்டிங்கரதுக்காகதான்.

ஆனா நடக்குறது என்ன டவுசர் இல்லாம வந்தவல்லாம் 1000 கோடி சேத்து வெக்கற மாதிரி ஆயிடுச்சி.

இதுக்கு யார் காரணம்?

வேற யாரு நாம்தான்!!!!!!!!!!!!

சின்ன சின்ன குட்டி நாடெல்லாம் இன்னிக்கு நமக்கு முன்னாடி போயிட்டு இருக்கு((உபயம்: அந்நியன்)

இங்க தலைவர்கள நம்புற மக்கள் இருக்காங்க. மக்களுக்காக தொண்டு செய்ற தலைவர்கள் இல்ல((உபயம்: ரமணா தி பிளாக் டைசன்)

தேர்தல் வந்தால் அரசியல் பேசறவங்க எல்லாமே என்னமோ கிரிக்கட்  மேட்ச்ல யாரு வின் பண்றா அப்டிங்கற மாதிரி பேசிகிறாங்க..

நம்ம வீட்டு குழந்த தப்பான பாதையில போனா  விட்டுருவமா? அத போல தான் நம்ம நாடு குட்டிச்சுவர் ஆனா என்னனு இருக்கறதும் ஒன்னுதான்.

மறுபடியும் மு. வருவாரா ஜெயாம்மா வருவாங்களானு பாத்துகினுகிறோம்.  என்ன கொடும இது?

இவங்கள்ல யார் வந்தாலும் ஒன்னும் நடக்க போறது இல்ல. கடந்த காலங்களே இதுக்கு சாட்சி.

இங்க ஒரு விஷயத்த கவனிக்கணும் அது என்னன்னா - அம்மா வந்தாலும் அய்யா மக்களை கொள்ளையடிச்சு சேத்த சொத்த எடுத்து மக்கள் கிட்ட கொடுக்கபோறது இல்ல.
அய்யா வந்தாலும் இத செய்யபோறது இல்ல

என்ன அவங்க டான்ஸ் ஆடுரவரைக்கும் தான் அரசியல்.
மக்கள் இது தெரியாம அம்மா என்னமா பேசுனாக தெரியுமா போராட்ட விழால அப்டின்னும், அய்யா என்னமா பதில் அறிக்கை விட்டாரு அப்டின்னும் பேசிக்கறோம்.
இவங்க ரெண்டு பேருமே நம்மள முட்டாளாக்கறதுலையே குறியா இருந்து தங்கள் தேவைகள பூர்த்தி பண்ணிக்கிறாங்க 

என்னமோ 12 மணிநேரம் உழச்சி சாப்பாடு தண்ணி இல்லாம ஊருக்கு பணம் அனுப்பறவங்க மாதிரி ரொம்ப சலிசிக்கிறாங்க .

இன்னும் நம்ம மக்கள் அடிப்படை தேவைகளுக்காக அவங்கள அவங்களே தண்டிசிக்கிறாங்க (பஸ் மறியல்)
நம்மள சேந்தவங்க பாதிகப்படும்போதுதான் நமக்கு சொரணை வருமா. இது  நம்ம நாடு இல்லையா இன்னைக்கும் ஓட்டு அப்டிங்கற விஷயம் மட்டும் இல்லைனா நம்ம மக்கள் தொகை தான் கடைசீல இருக்கும். ஆள்றவங்க நம்மள உயிரோட பொதசிடுவானுங்க அப்டிங்கற விஷயம் எத்தன பேருக்கு தெரியும்

எவன் ஆட்சிக்கு வந்தாலும் 5  வருஷத்துக்கு விலைவாசி ஏறாது அப்டின்னு சொல்ல முடியுமா

இந்த ஆட்டம்லாம் மக்கள் நான், என்னோட, என்னோட சொந்தம் பந்தம்னு மூழ்கி இருக்குறவரைக்கும் தான்.

பொறுமைக்கு கிட்டதட்ட 63 வயசாயிடுச்சி .

நாங்களும்(மக்கள்) பார்டர தாண்டமாட்டோம், நீங்களும்(அரசியல்வாதிகள்)
தாண்டகூடாது அப்டிங்கற விஷயம் சீக்கிரத்துல முடிவுக்கு வரும்.

அப்போ இருக்கு தீபாவளி.

டவுசர் இல்லாம வந்த பயலுக்கெல்லாம் நாற்காலி போட்டு உக்கார வெச்சா 1000 கோடி சுருட்டி வச்சிக்கிட்டு எங்க கிட்டே படம் காட்றானுங்க

என்ன பண்றது மத்த நாடெல்லாம் ஒரே மொழி பேசி முன்னேறி போயிட்டு இருக்கு. நாமளோ பக்கத்துக்கு ஸ்டேட்டுக்கு போகரதுக்கே பயமா இருக்கு. பல புண்ணியவானுங்க இன்னும் நம்மள ஏமாதிகினே இருகாங்க

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா அப்டின்னு சொல்றது கேக்குது.

எண்ணம் மாறனும்.மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

5 comments:

Philosophy Prabhakaran said...

விக்கி பையா... உங்கள் வலைப்பூ நன்றாக இருக்கிறது... நல்ல தொடக்கம்... இனி அடிக்கடி வருகிறேன்...

விக்கியுலகம் said...

வருகைக்கு நன்றி

மீண்டும் வருக

நன்றி

sathish777 said...

ரொம்ப சூடா இருக்கீங்க போல...நல்லாருக்கு

♔ம.தி.சுதா♔ said...

//////சின்ன சின்ன குட்டி நாடெல்லாம் இன்னிக்கு நமக்கு முன்னாடி போயிட்டு இருக்கு((உபயம்: அந்நியன்)

இங்க தலைவர்கள நம்புற மக்கள் இருக்காங்க. மக்களுக்காக தொண்டு செய்ற தலைவர்கள் இல்ல((உபயம்: ரமணா தி பிளாக் டைசன்)
//////
நல்லாயிருக்கு நல்ல எடுத்தக்காட்டுகள்...

விக்கியுலகம் said...

இல்லைங்க திரு.ஆர்.கே.சதீஷ்குமார் எல்லாம் ஒரு மனத்தாங்கல்தான்