Followers

Friday, December 24, 2010

மானிட்டர் மூர்த்தி!?- போடா வெங்காயம் 24/12/2010

குவாட்டர்; கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்....

மானிட்டர்: டேய் அதோட நிறுத்திக்க..குவா: ஏன் தல?

மானி: ஏன்டா நாட்டுல என்னா நடக்குதுன்னே தெரியாதா!?

குவா: சொல்லு ......சொன்னாத்தானே தெரியும்!?

மானி: வெங்காயம் வெல இப்போ ராக்கெட்டு வேகத்துல போயிட்டு இருக்கு மச்சி. நம்ம தெருமுக்கு கோவாலு டீ கடையில பெரிய வெட்டு குத்து ஆயிப்போச்சி.

குவா: அயாயோ அப்புறம் என்னதான் மேட்டரு!

மானி: நம்ம ரவி, கடையில இருந்து ஒரு பஜ்ஜி எடுத்து துன்னுபுட்டு காசு கொடுக்காம கிளம்பிட்டான். அதுக்கு நம்ம கோவாலு ஏன்டா காசு குடுக்கலன்னு கேட்டா - இது வெங்காய பஜ்ஜின்னு சொன்னியே வெங்காயம் எங்கன்னு கேட்டுப்புட்டான். கோவாலுக்கு வந்துதே கோவம். ஏன்டா துன்னியே துட்ட குடுத்தியா போயிட்டே இரு. இந்த வெங்காயத்த எல்லாம் பெரியாரு கிட்ட போயி கேளுன்னு நம்ம கலைஞர் கணக்கா சொல்லிப்புட்டாம்பா.

குவா: இதுல தலிவரு எங்கப்பா வந்தாரு!

மானி: அட கூமுட்டி .... பேப்பரு காரங்க தலிவர பேட்டி எடுக்க போயி கீறாங்க. அப்போ வெங்காயம் வெல ஏறிபோச்சே என்னதலிவா பண்ணப்போரிங்கன்னு கேட்டுகீராங்கோ. தலைவரு அதுக்கு போயி பெரியாரு கிட்ட கேளுன்னு கிண்டலா சொல்லிகிறாரு. அப்புறம் என்னொரு மேட்டரு ரெண்டு பொம்பளைங்க பேசிகிட்டு இருந்தத நாம எதுக்கு கண்டுக்கரதுன்னு வேற சொல்லிகிறாரு.

குவா: இதுலருந்து என்னா தெரியவருதுன்ற!

மானி: டேய் மக்கு....அவரு என்னா சொல்ல வராருன்னா....ஓட்டு போட்ட மக்களே அதப்பத்தி கவலைப்படாம "மானாட" பார்த்துன்னு கிறாங்க. நீங்க ஏய்யா கவலைப்படுரீங்கன்னு சொல்றாரு. அதுவும் இல்லாம ராடியாவும், சின்ன மேடமும் ஏதோ கடைல என்னா புச்சா சேல வந்துகிதுன்னு பேசிகினு இருந்ததப்போயி இவ்ளோ பெரிசாக்கிபுட்டீங்கலன்னும் சொல்ல வராரு.

குவா: நம்ம பயபுள்ள இன்னிக்கு ஒரே டார்சருப்பா?

மானி: ஏன்?

குவா: பைக்குக்கு போடற பெட்ரோலு காச விட அந்த பைக்கு போற தூரம் கம்மியாகிதாம்பா!

மானி: ஆமாம். மச்சி 3 ரூவா ஏத்தி புட்டாங்கள்ல அதான். அதுவும் இல்லாம அதப்பத்தி கொஞ்சம் கூட மத்தில கவலப்படரா மாதிரியே தெரியல....

குவா: நம்ம சூப்பர பத்தி அவா இவா ஏதோ சொன்னாராமே!

மானி: ஆமாம்பா சூப்பருக்கு அரசியல்ல பயமாம். ஆனா இந்த சுனா சானா எல்லாரும் நினைக்கிறமாதிரி காமடிப்பீசு இல்லப்பா.

குவா: பின்ன!?

மானி: இவரு முன்னால் பிரதமர பகைசிக்கிட்ட போது, அந்தம்மா இவர பார்லிமெண்டுல கூட்டம் முடிஞ்ச உடனே கைது செய்ய சொல்லிட்டாங்க!
ஆனா இந்தால புடிக்க முடியல.... ரெண்டு நாளு கழிச்சி அமெரிக்கால இருந்து அறிக்கை உட்ட பெருசுப்பா இது.

குவா: நம்ம அன்பு என்னா சொல்லிகிறாரு பாத்தியா!

மானி: நானும் பாத்தேன், மத்த கட்சி வளர்ச்சி எல்லாம் நின்னு போச்சாம். இவங்க கட்சி வளர்ச்சி தான் இப்போ மக்கள் கிட்ட பெருசா பேசப்படுதாமே.
எனக்கு தெரிஞ்சி எவ்ளோ கஷ்டம் மக்களுக்கு வந்தாலும் கிச்சி, கிச்சி மூட்டும் காமடி கச்சி இவங்க மாதிரி யாரு இருக்கா சொல்லு. இவங்க கட்சில டெய்லி ஒரு லட்சம் பேரு சேர்ராங்கலாம்பா..... அப்புறம் இவங்களுக்கு எதுக்கு கூட்டணி சீகிரதுல தமிழ் நாடே இவங்க பின்னாடின்னு வேற கைப்புள்ள கணக்கா பெசிகினுகிறாங்க.

குவா: சினி நியுசு எதுவுமில்லையா?


மானி: அதான பாத்தேன் இன்னும் கேக்கலேன்னு! நம்ம உலக அழகி கொண்டு வந்த ட்ரசு பொட்டி விமான நிலையத்துல கானாமப்போசாம்பா. அப்புறம் வேற புது மாடல் ட்ரஸ்ஸ போட்டுக்கிட்டு நிகழ்ச்சிக்கு போனாங்களாம்.

குவா: இதுல்ல என்னா பெசலு!

மானி: இந்த பய புள்ளைங்க இந்த மேட்டர என்னமோ அவங்க ட்ரஸ்சே இல்லாம நின்னா மாதிரி நியுசு போட்டுடுசிங்க. என்னா பண்றது பிரபலமுன்னாலே கஷ்டம்தான்.


கொசுறு: போடா ஜொள்ளு (நாந்தேன்). வேற என்னத்த கேக்கப்போறேன் காசா பணமா ஓட்டும், கருத்தும் மட்டும்தேன்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 comments:

ANKITHA VARMA said...

காபி, பேப்பர், வடை .... பதிவு அருமை

விக்கியுலகம் said...

@ANKITHA VARMAவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ANKITHA VARMA அவர்களே.

ஆமினா said...

நல்லா இருக்குங்க!!!

Philosophy Prabhakaran said...

சுனா சானா வா அது ஒரு காமெடி பீசாச்சே...