Followers

Monday, December 13, 2010

கடைப்பக்கம் வந்தவரெல்லாம்........!?

இந்தப்பதிவு யாரையாவது புண்படுத்துமானால் அதற்க்கு அவரவர் மனசாட்சியே காரணம் - நான் இல்லிங்கோ.





நான் கடந்த பல வருடங்களாக இந்த பதிவுலகத்தின் வாசகனாக இருக்கிறேன். சமீப காலமாக சிறு மூளைக்கு கொழுப்பு வரத்து அதிகமானதால் நாமும் பதிவு போடுவோமே என்று ஆரம்பித்தேன்

பொதுவாக எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது - அதாவது - ஸ்டார் பதிவர்களே 100 ஓட்டுக்களை வாங்க முடிவதில்லை - இதற்க்கு காரணம் என்ன?


எனக்கு தெரிந்து ஒரு பதிவரின் பதிவு ஹிட் ஆகிவிட்டாலே குறைந்த பட்சம் அவருக்கு தொடர்ந்து படிக்கும் மனிதர்கள் அதிகமாகிறார்கள். ஒரு நாளைக்கு 300 முதல் 500 வரை வந்து போகும் மக்கள் அந்த பதிவை படிக்கிறார்களா அல்லது மேலோட்டமாக பார்க்கிறார்களா என்று தெரியவில்லை.

என்னதான் மேலோட்டமாக பார்த்தாலும் அந்த பதிவை திரட்ட அந்த மனிதன் எந்த அளவு காலத்தையும் அவனுடைய அறிவையும் துவைத்து எடுத்திருப்பான். அந்த கரிசனதுக்காவது ஓட்டு போட்டு செல்லவேண்டும் என்று ஏன் தோன்றுவதில்லை


சில பதிவர்கள் வெறும் செய்திகளை மட்டும் போட்டாலும் அதுவும் ஒரு திரட்டப்பட்ட பதிவே, அப்படியிருக்கையில் அப்படியென்ன குறை அல்லது என்ன ஒரு வருத்தம் இருந்தால் நாம் ஒருவனின் உழைப்பை மேய்ந்து (மன்னிக்கவும்)விட்டு, அது சரியா அல்லது எனது கருத்து இது என்று கூறக்கூட நமக்கு நேரம் இல்லையா. அல்லது இவருக்கு ஓட்டு போட்டால் என்ன போடவில்லை என்றால் என்ன எனும் மனத்தாங்கலா! சரியாகப்புரியவில்லை எனக்கு!?

மேலும் பல பதிவர்கள் ஓட்டு போடுங்கள்ஓட்டு போடுங்கள் என்று கூவிகூவி கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்(நானும் இரு பதிவில்). என்னைப்பொறுத்தவரை என் கருத்துக்களையும், என் மன அழுத்தத்தையும் இறக்கி வைக்க கிடைக்கப்பெற்ற பெரும் ஊடக சாதனம் இந்த பதிவுலகம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன்..
.


பல பேர் கடை விரித்து தன் கருத்துக்கள் எனும் விலை மதிக்க முடியாத வைரங்களைக்கொட்டிக்கொண்டு இருக்கின்றனர் (சில பல மொக்கை எனும் குப்பைகளாகவும் இருக்கலாம்). முடித்தவரை அவற்றை ஆராதிக்க வேண்டாம் முடிந்தால் அனுமதியுங்கள் பலர் பயன் பெற.

நம்மில் பல பேர் அரசியல்வாதிகளையும், ஓட்டு போடாத மக்களையும், காசு வாங்கிகொண்டு ஓட்டு போடுபவர்களையும் திட்டும் போது ஒரு நிமிடம் நமது தவறான - ஓட்டளிக்காமல் அல்லது கருத்துக்களைசொல்லாமல் செல்வதை எண்ணிப்பார்ப்போமா!?

முடிந்தால் சிந்தியுங்கள் - இது ஒரு ஆதங்கமே! குற்றச்சாட்டு அல்ல......

கொசுறு: தனியா இருந்தாலே பைத்தியம் புடிக்கும்னு சொன்னாங்க! அய்யோ அய்யோ(நீ எல்லாம் அரசியல்வாதி ஆகி - விளங்கிடும்)! 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

6 comments:

வைகை said...

உண்மைதான் விக்கி! நானும் இதை யோசிப்பதுண்டு, ஆனால் பொருட்படுத்துவதில்லை!

எப்பூடி.. said...

உங்கள் கருத்தில் நியாயம் உள்ளது, ஆனால் நேரப்பிரச்சினை என்று ஒன்றும் உள்ளது, அதுதான் பலருக்கும் எதிரி :-)

முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

விக்கியுலகம் said...

நன்றி திரு. வைகை அவர்களே,

உணர்ச்சி வசப்படாமல் இந்த விஷயத்தை கொண்டு சேர்க்க முயற்சிப்போம்.

விக்கியுலகம் said...

நன்றி திரு. எப்பூடி..அவர்களே,

ஒவ்வொரு பதிவரும் எதிர் பார்ப்பது நம்மிடம் இருந்து அன்பையே. நாம் கண்ணுக்கு தெரியாது இருந்தபோதிலும் அந்த அன்பே உங்களின் கருத்துக்களாக அவர்களுக்கு சென்று சேர்கிறது.
உங்களால் முடியும் முயற்சி செய்யுங்கள்,

நன்றி

Philosophy Prabhakaran said...

நான் எப்போதும் எல்லாத் திரட்டிகளிலும் (login ID, password) remember செய்துவைத்திருப்பேன்... இதனால் ஒருமுறை க்ளிக் செய்தாலே... ஓட்டு சேர்ந்துவிடும்... பலர் அதுபோல remember செய்த்துவைக்காமல் இருந்து ஓட்டு போட முயலும் பொது பயனர் பெயர் கடவுச்சொல் எல்லாம் கேட்டு கடுப்பேற்றும்...

விக்கியுலகம் said...

தங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

தன்னை போன்று பிறரை என்னும் தன்மை வேண்டுமே!

இது எல்லோருக்கும் வரவேண்டும் நண்பரே!