Followers

Wednesday, December 1, 2010

என்ன எழுதலாம் - மனசாட்சி

நேரம் கிடைக்கும் போது என்ன செய்யலாம்னு யோசித்தபோது அறிமுகம் ஆகியது பதிவுலகம் எனும் களஞ்சியம். அந்த அறிவுக்குவியலின் ஊடே 2 வருடம் வெறும் பார்வையாளனாக பயணித்து கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு உந்துதல் காரணமாக நாமும் ஏன் பதிவெழுதக்கூடாது என்று ஆரம்பித்து நல்ல விதமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.



விஷயத்துக்கு வருகிறேன் - இப்போ என்ன எழுதலாம் என்று நினைக்கும் போது தோன்றியவைகள்:


. எதாவது நடிகர்களை பற்றி எழுதலாமா:

என்ன எழுதுவது இவர்களை பற்றி - இவர் இன்று எந்த நாடு சென்றார், இவருடைய வாரிசின் திருமணம் எப்படி நிகழ்ந்தது, இவருக்கு எவ்வளவு பெரிய மனது, இவர் நினைத்தால் இந்த நாடே பின்னாடி வரும், இவரின் அறிவாளித்தனமான கருத்துக்களால் ஜாதி மதத்தை தூக்கிப்போட்டு விட்டு எவ்வளவு பேர் கலப்பு வாழ்க்கை திருமணம் செய்யாமல் வாழக்கற்றுகொண்டனர், இவர் எந்த அளவுக்கு தன் கருத்துக்கள் மூலம் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார், இவர் எந்த முட்டு சந்தில் அடி வாங்கினார், இவர் எப்படி அரசியலில் புகுந்தார், இவரின் வாரிசு எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது, இவருக்கு எத்தணை மனைவிகள் நிற்க இவர் இன்று யாருடன் இருக்கிறார். இவ்வாறான நாட்டுக்கும், என் அறிவுக்கும் உகந்த கருத்துக்களை பதியலாமா இல்லை ..........................


. திரைப்பட விமர்சனம்:

இந்த படம் அருமை, இந்த படம் அந்த படத்திலுருந்து சுட்டது, இந்த படத்தின் காட்சிகள் அந்த மொழி படத்தின் காட்சிகளோடு ஒத்துப்போகின்றன, இந்த படம் இவ்வளவு செலவில் தயாரிக்கப்பட்ட குப்பை, இந்த படம் உலக வரலாற்றில் (நான் பிறந்து 30 வருடம் ஆனாலும்) பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்று, இந்த இயக்குனருக்கு அறிவே இல்லை (என்னிடம் கேட்டு இருந்தால் ஒரு கிலோ கொடுத்திருப்பேன்), இவர் அப்படி பேசி இருக்கக்கூடாது, இவர் அந்த நடிகையுடன் வாழ்கிறார், இந்த தயாரிப்பாளர் பெரிய கருப்பு பண முதலை, இந்த படம் ஓடும், இது ஓடாது, இது மகா மட்டம், இது ஒன்னுத்துக்கு லாயக்கில்லை இப்படி எதாவது எழுதலாமா .....................


. அரசியல்:

இவரு இவ்வளவு கொள்ளை அடிச்சுட்டாரு, இவரு அவரோட 5 வது மனைவியோட 4 வது பிள்ளை, இவரு தைரியசாலி, இவங்க பெரிய பேச்சு பீரங்கி, இவரு பாவம் ஒண்ணுமே பேச மாட்டாரு , இவரு ஸீன் நல்லா போடுவாரு, இவங்க அவங்களோட கூட்டு வச்சிபபாங்க, மாட்டாங்க, உருப்படாம போயிடுவாங்க இப்படியாவது எழுதலாமா..................


. அறிவியல் கண்டு பிடிப்புகள்:

இத இவரு இந்த வருஷம் கண்டு பிடிச்சாரு(பிடிக்கலைன்னா நான் கண்டு பிடிச்சிருப்பேன்), இந்த விஷயம் இந்த வருசத்துல இருந்து உலகுக்கு தெரிந்தது(எங்க ஊர்லதான் முதல்ல தெரிய வேண்டியது), இந்த அறிவு சார்ந்த விஷயம் உங்களுக்கு தெரியவைக்க வேண்டிய சமுதாய கடமை என்னோடது இந்த மாதிரியாவது ......................


. பொது நிகழ்சிகள் :

எங்க ஊருல பொங்க வச்சாங்க (முதல் வடைஎனக்குதான்), எங்க பக்கத்துக்கு வீட்டு பொண்ணு என்னை பாத்து கண்ணடிசுது (அது எதிர் வீடு பையன் கூட ஓடிப்போனது ரெண்டாவது பாகம்), மழை பெஞ்சது, எரும மாடு நனஞ்சது (சத்தியமா நான் இல்ல), எப்படி எல்லாம் இருந்தது அவங்க கல்யாணம்…………………….



. கருத்துரையாவது:

உங்க பதிவு அருமை, நல்ல பதிவு, ok, nice, super 
அடப்போங்கப்பா .............................
  

ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ............................முடியல.

கொசுறு: எதாவது எழுதனும்னு வந்த என்னை என் மனசாட்சி எனும் குழப்பவாதி எழுத விடாமல் செய்து விட்டது
அய்யா, அம்மா நான் இந்த பதிவுல யாரையும் சொல்லல all credits and debits go to me only.  வரட்டுங்களா ................
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

5 comments:

♔ம.தி.சுதா♔ said...

நான் கூட இப்படி நினைத்தேன்.. அனால் கடைசியில் இவையெல்லாவற்றையும் சேர்த்தே எழுதலாமுண்ணு தோணிச்சுது.. கிறுக்க தொடங்கிவிட்டேன்...

வெறும்பய said...

அ. எதாவது நடிகர்களை பற்றி எழுதலாமா:

ஆ. திரைப்பட விமர்சனம்:

இ. அரசியல்:

ஈ. அறிவியல் கண்டு பிடிப்புகள்:

உ. பொது நிகழ்சிகள் :

ஊ. கருத்துரையாவது:


////

இதில எது வேணுமின்னாலும் எழுதலாம்.. அது உங்க விருப்பம்...

JOTHIG ஜோதிஜி said...

ஒவ்வொரு கிறுக்கலின் முடிவில் ஒரு பொக்கிஷமுண்டு. முயற்சித்தவர்கள் சொன்ன வார்த்தையிது.

கே.ஆர்.பி.செந்தில் said...

//உங்க பதிவு அருமை, நல்ல பதிவு, ok, nice, super
அடப்போங்கப்பா .............................//

இது பிடிச்சிருக்கு ...

விக்கியுலகம் said...

என்னைபோன்ற juniorகளை ஆதரிக்கும் சீனியர்களான ம.தி.சுதா, வெறும்பய,ஜோதிஜி, கே.ஆர்.பி.செந்தில் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.

அடுத்தது என்னோட சீரியஸ் பதிவான ராணுவ வீரன் பார்வையிலே மறக்காதீங்க .............நன்றி.