Followers

Wednesday, March 9, 2011

ஆமை புகுந்த இடம்! - வியத்னாம்

வணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூகோளம் சொல்லத்தேவயில்ல விடுங்க..............


விஷயம் என்னன்னா இந்த வாரம் இங்க ஆமை வாரம்.............அதாவது இங்க இருக்க ஏரில இருக்க ஆமைக்கு உடல் நலத்துக்காக மருந்து கொடுத்து காப்பாற்றும் வாரம் இது...............இந்த ஊருக்கு இன்னொரு பேரு ஏரி நகரம்(தக்காளி நம்ம ஊருல இருந்த ஏரிகள் எல்லாம் இப்போ எங்கப்பா ஹி ஹி!)

                                               ஏரிக்கு நடுவில் இருக்கும் புனித இடம்


இன்னைக்கு அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன்(உதவியாளினி கூட்டிக்கிட்டுதான்!)....................சும்மா சொல்லக்கூடாது.......என்னமா உதவி பண்றாங்க அந்த வாயிருந்தும் பேசாத ஜீவனுக்கு...........


இந்த ஆமைக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு..............ரொம்ப வருசத்துக்கு முன்னால(கோட்டுவால்லாம் விடக்கூடாது சரியா ஹி ஹி!) லீ லோய் ன்னு ஒரு ராசா இந்த நாட்ட ஆண்டுக்கிட்டு இருந்திருக்காரு..............பல நூற்றாண்டுகள் போராடியும் சீனா கிட்ட இருந்து இவங்களுக்கு சுதந்திரம் கிடைக்கல...............அப்போ ஒரு நாளு இந்த ஏரில அவரு குளிச்சிட்டு இருக்கும் போது ஒரு வாள் அவர நோக்கி வந்துதாம்..............அந்த வாள ஒரு ஆமை வாயில கவ்விட்டு வந்து இவரு கிட்ட கொடுத்துதாம்...........


அந்த வாள கொடுத்துட்டு ஆமையார் ஏரிக்குள்ள போயிட்டாராம்..........அந்த வாள எடுத்துக்கிட்டு போருக்கு போன போது அரசர் போர்ல ஜெயிசிட்டாராம்.........சீனாவும் இவங்களோட அரசாங்கத்த அறிவிச்சிடுசாம்...........


திரும்பி வந்த ராசா மறுபடியும் இந்த ஏரிக்குள்ள போயிருக்காரு...........அவருடைய வாள் காணாம போயிருச்சாம்........எவ்ளோவோ தேடிப்பாத்தும் கெடைக்கல..........அதிலிருந்து இந்த ஏரி புனித ஏரியா அறிவிக்கப்பட்டது.............அந்த ஆமை 1967 இறந்துட்டதாகவும், அத இந்த இடத்துல பாடம் செய்ஞ்சி வச்சி இருக்காங்க(200 கிலோவாம் மற்றும் இதன் அகலம் 6 அடி 3 அங்குலம்)....

ஆனா அதுக்கப்புறம் இன்னொரு ஆமை இங்க வாழ்ந்து வருது அதே ஏரில அதத்தான் நீங்க பாக்குறீங்க..............


இந்த ஆமைக்கு உடல்ல பல இடங்கள்ள காயங்கள் காணப்படுது(வயசானாலே பிரச்னைதான்!)...........அந்த காயங்கள குணப்படுத்தும் மருந்துகள் தடவி விடுறாங்க...........


கொசுறு: ஆமை புகுந்த நாடு நல்லா இருக்கு ஆனா நாம பிறந்த நாடு மட்டும்...............
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

32 comments:

டக்கால்டி said...

படிச்சுட்டு வரேன் இருங்க

டக்கால்டி said...

வடை, தக்காளி, பப்பாளி, ரஸ்தாளி அனைத்தும் எமக்கே...

டக்கால்டி said...

நம்ம ஊருல இருந்த ஏரிகள் எல்லாம் இப்போ எங்கப்பா ஹி //

ஏரி இருந்த இடம் தான் இப்போ நம்ம ஊரே...அது தெரியாத மாதிரியே கேள்வி கேக்க வேண்டியது..

டக்கால்டி said...

இந்த ஆமைக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு...//

அப்போ முன்னாடி என்ன சதை இருக்கா?

டக்கால்டி said...

இன்னைக்கு அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன்(உதவியாளினி கூட்டிக்கிட்டுதான்!)....................சும்மா சொல்லக்கூடாது.......என்னமா உதவி பண்றாங்க அந்த வாயிருந்தும் பேசாத ஜீவனுக்கு...........//

வர வர உங்க நடவடிக்கை மேலே எனக்கு சந்தேகம் வருது...
அந்த வாயிலா ஜீவன் நீங்க தான...

டக்கால்டி said...

ஒரு நாளு இந்த ஏரில அவரு குளிச்சிட்டு இருக்கும் போது ஒரு வாள் அவர நோக்கி வந்துதாம்//

நான் கூட லேக் ஸ்லிப் ஆகி ஏரில குளிக்கும் போது?! எனக்கு வாள் எல்லாம் வரலை. துன்பத்திலும் இன்பம் ஆஹ் வரட்டும் என்று இருந்திருக்கிறேன்

டக்கால்டி said...

கொசுறு: ஆமை புகுந்த நாடு நல்லா இருக்கு ஆனா நாம பிறந்த நாடு மட்டும்.....//

நீங்க இந்தியாவுல இல்லை என்பதற்காக ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆமை என்று சொல்கிறீர்களா?
இதை நான் வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்...

தமிழ் 007 said...

நண்பரே!

இப்ப உங்க தளத்திலும் ஆமை படமா போட்டிருக்கீங்க.

ஆமை புகுந்த உங்க தளமும் சீக்கிரம் விளங்கிவிடும்.(ஹிஹி...ஹிஹி...)

சி.பி.செந்தில்குமார் said...

ஆமை பதிவு போட்டதுக்கும் , தமிழ்மணம் 2 மணி நேரம் வேலை செய்யாமல் போனதுக்கும் சம்பந்தம் இல்லை.. பயப்படாதீங்க.. ஹி ஹி

வைகை said...

இங்கும் அப்படித்தான்.. ஆமையை பலபேர் வீட்டிலேயே வளர்க்கிறார்கள்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்க ஆதங்கம் புரிகிரது நண்பரே..

செங்கோவி said...

//உதவியாளினி கூட்டிக்கிட்டுதான்!).// நடக்கட்டும்..நடக்கட்டும்..எனக்கும் தான் இருக்கானுகளே..

செங்கோவி said...

போன பதிவுல ஒரு டவுட் கேட்ருக்கேன்..பதில் சொல்லுங்க..பழசை திரும்பிப் பார்க்க மாட்டீங்களோ...

நா.மணிவண்ணன் said...

சார் எனக்கு ஆமை வடைனா ரொம்ப புடிக்கும் அப்ப அந்த ஊருல அந்த வடை கிடைக்காதா

மாணவன் said...

ஒரு ஆமைக்கு பின்னால் இப்படி ஒரு கதை உள்ளதா..!!

ரொம்ப சுவாரசியமா இருந்தது பகிர்வுக்கு நன்றி நண்பரே :)

விக்கியுலகம் said...

@தமிழ்வாசி - Prakash

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@டக்கால்டி

"வடை, தக்காளி, பப்பாளி, ரஸ்தாளி அனைத்தும் எமக்கே"

>>>>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி நண்பா எடுத்துக்கங்க உங்களுக்கு இல்லாததா ஹி ஹி!
..................................

ஏரி இருந்த இடம் தான் இப்போ நம்ம ஊரே...அது தெரியாத மாதிரியே கேள்வி கேக்க வேண்டியது..

>>>>>>>>>>>>

ஏரிக்குள்ள ஊரு, ஊருக்குள்ள ஏரி ஹி ஹி!
.............................

நீங்க இந்தியாவுல இல்லை என்பதற்காக ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆமை என்று சொல்கிறீர்களா?
இதை நான் வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன்...

>>>>>>>>>>>>>

நான் இறையாண்மைக்கு எதிரானவன் அல்ல என்ன விட்டுருங்க.......... அம்மா....அய்யா நான் இல்ல ஹி ஹி!

விக்கியுலகம் said...

@தமிழ் 007

"நண்பரே!

இப்ப உங்க தளத்திலும் ஆமை படமா போட்டிருக்கீங்க.

ஆமை புகுந்த உங்க தளமும் சீக்கிரம் விளங்கிவிடும்.(ஹிஹி...ஹிஹி...)"

>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா
ஆமை என்றால் அதிர்ஷ்டம் என்று இங்க சொல்றாங்க நண்பா!

மைந்தன் சிவா said...

என்னப்பா பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு

விக்கியுலகம் said...

@வைகை
"இங்கும் அப்படித்தான்.. ஆமையை பலபேர் வீட்டிலேயே வளர்க்கிறார்கள்!"

>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

அங்கேயுமா ஹிஹி!

அப்போ நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா(ஆமை கறி ஹிஹி!)

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"ஆமை பதிவு போட்டதுக்கும் , தமிழ்மணம் 2 மணி நேரம் வேலை செய்யாமல் போனதுக்கும் சம்பந்தம் இல்லை.. பயப்படாதீங்க.. ஹி ஹி
>>>>>>>>>>>>>

குசும்பு....நடத்துங்க தலைவரே"

விக்கியுலகம் said...

@வேடந்தாங்கல் - கருன்

வருகைக்கு நன்றி நண்பா

விக்கியுலகம் said...

@செங்கோவி

"//உதவியாளினி கூட்டிக்கிட்டுதான்!).// நடக்கட்டும்..நடக்கட்டும்..எனக்கும் தான் இருக்கானுகளே.."

>>>>>>

இங்க பெண்கள் வேலை செய்வது தான் அதிகமுங்க........
நிறுவனத்துக்கும் பெரிய அளவுல சம்பளம் குடுக்க வேண்டியதில்ல ஹிஹி!

விக்கியுலகம் said...

@செங்கோவி

"போன பதிவுல ஒரு டவுட் கேட்ருக்கேன்..பதில் சொல்லுங்க..பழசை திரும்பிப் பார்க்க மாட்டீங்களோ..."

>>>>>>>>

பதில் லேட்டா சொன்னதுக்கு சாரிபா ஹிஹி!

பழச திரும்பி பாக்குரதுனால தான் நான் கொஞ்சம் வாழ்கைல வளந்து இருக்கேன்னு நெனைக்கிறேன் ஹிஹி!

விக்கியுலகம் said...

@நா.மணிவண்ணன்

"சார் எனக்கு ஆமை வடைனா ரொம்ப புடிக்கும் அப்ப அந்த ஊருல அந்த வடை கிடைக்காதா"

>>>>>>>>>>>

நண்பா இங்க எல்லாத்துலயும் இனிப்பு சேர்த்து இருப்பாங்க பெரும்பான்மையான உணவுகல்ல...நம்மூரு உணவு கண்ணுல பாக்க முடியாது ஹிஹி!

இந்திய உணவு விடுத்திக்கு போனா மட்டும்தான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@மாணவன்

"ஒரு ஆமைக்கு பின்னால் இப்படி ஒரு கதை உள்ளதா..!!"

>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி நண்பா

அதே அதே!

விக்கியுலகம் said...

@மைந்தன் சிவா

"என்னப்பா பார்க்கவே ஒரு மாதிரி இருக்கு"

>>>>
நண்பா பாக்க மட்டும் தான் அப்படி பழக அப்படியில்ல ஹிஹி!

அஞ்சா சிங்கம் said...

என்ன ஒரு செண்டிமெண்ட் கதை ....//////////நான் ஆமை கறி மும்பையில் இருக்கும் போது சாப்டிருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும் ..........

விக்கியுலகம் said...

@அஞ்சா சிங்கம்

"என்ன ஒரு செண்டிமெண்ட் கதை ....//////////நான் ஆமை கறி மும்பையில் இருக்கும் போது சாப்டிருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும்"
......"

>>>>>>>>>

கறி சூப்பரு இங்க இருக்க பெரிய தலைங்களோட மீட்டிங்கு போன விருந்துல முக்கியமான அயிட்டமே இது தான் ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெளங்கிருச்சு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமைக்கறி சாப்பிடறதை ஊர்ல பாத்திருக்கிறேன்....... காட்ல வர்ரதை புடிச்சு சாப்புடுவாங்க....!

விக்கியுலகம் said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஆமைக்கறி சாப்பிடறதை ஊர்ல பாத்திருக்கிறேன்....... காட்ல வர்ரதை புடிச்சு சாப்புடுவாங்க....!"

>>>>>>>>>>>>>>>

நண்பா இங்க ரொம்ப பேமசு ஹி ஹி !