Followers

Monday, August 1, 2011

அடடா மழைடா அடை மழைடா! - வியட்நாம்

வணக்கம் நண்பர்களே....



மழை எனக்கு பிடித்த ஒன்று(!)....அதுவும் சும்மா பின்னி பெடலேடுக்கும் மழையில குத்தாட்டம் போடுறது ரொம்ப பிடிக்கும்.....(மழை மழை என் மனசுக்குள்...!)

கடந்த ரெண்டு நாளா முடியல சாமி முடியல!.....பின்னி எடுத்தது சூறாவளியுடன் கூடிய மழை....மக்கள் வெளிய செல்லவே முடியாமல் தவித்ததை டீவில காமிச்சிட்டு இருந்தாங்க(!). சரி நம்மூரு சானல்கள் வருதான்னு பாத்தா..நல்ல நாட்கள்லேயே வராது, இந்த நேரத்துல வருமா(!)...ஸ் ஸ் என்னத்த பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்...சரி இருக்கவே இருக்கு கம்ப்யூட்டர்ன்னு உக்காந்தா பொசுக்குன்னு கரண்டு போயிருச்சி....


கடந்த இரண்டு வருடங்களில் முதல் முறையா கரண்டு போயிருக்கு(!)...அதுவும் 3 மணி நேரம் தொடர்ந்து இல்லாம போயிருச்சி...சரி மழை கொஞ்சம் விட்டு இருக்கேன்னு வெளிய போய் பாத்தா....வெளிய(ரோட்டில்!) இருந்த பெரிய transformer அந்த இடத்துல இல்ல கிட்ட தட்ட 10 அடிதூரம் நகர்ந்து போய் விழுந்து கெடக்குது....ஓடோடி வந்த மின்சாரத்துறை ஆளுங்க சும்மா சுத்தி சுத்தி வேல பாத்தாங்க(3 மணி கழிச்சி கரண்ட் வந்துடுச்சி!).....அப்போ தான் ஞாபகம் வந்தது இந்த ஊர்ல மழைன்னா சூறாவளியும் சேந்து தான் வரும்கிறது!....



இந்த மழை விடாம பெஞ்சிட்டு இருந்துது....அப்படியே சாயந்திரம் அந்த மிதமான மழையில என் பையனின் விருப்பத்தால(!) கெளம்பி பொம்மலாட்டம் (water puppet show!) பாக்க போனோம்....நீங்களும் பாருங்க...இந்த ஷோ அழகாக இருக்கும்...கவனித்து பார்த்தீர்கள் என்றால் புரியும்....அனைத்தும் தண்ணீர்க்கடியில் இருந்து இதனை கையாளுகிறார்கள்....


 அதன் பிறகு ஏரி ரெஸ்டாரென்ட் போனேன்...அந்த இடத்துல இருந்து அந்த ஏரிய ரசிச்சி பாத்துட்டு இருந்தோம் ஒரு ரெண்டு மணி நேரம்...

இந்த லிங்குல போய் ஸ்க்ரோல் பண்ணிட்டே வந்தீங்கன்னா வீடியோன்னு ஒன்னு வலது பக்கமா வரும் அதுல பாருங்க வேடிக்கைய...ஒரு காவல் காரர் படும் பாட்டை!

http://vnexpress.net/

கொசுறு: சும்மா இருந்தாலும் ஏதாவது கிறுக்க நினைக்கும் சங்கத்து ஆள்(!) பதிவு இது ஹிஹி!...


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

22 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Here always power cut

கோகுல் said...

வட போச்சே....

கோகுல் said...

கடந்த இரண்டு வருடங்களில் முதல் முறையா கரண்டு போயிருக்கு(!)...அதுவும் 3 மணி நேரம் தொடர்ந்து இல்லாம போயிருச்சி..\\

வயித்தெரிச்சலை கொட்டிக்காதீங்க
தமிழ்நாட்டில் தினமும் 3மணிநேரம் கரண்டு கிடையாது ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Vadai

FOOD said...

வாழ்க்கையை நன்றாய் ரசிக்கின்றீர்கள்.

koodal bala said...

அந்த பையன் சில நேரம் நல்லா ஆடுறான் ...சில நேரம் கவுண்டமணியை நியாபகப் படுத்துகிறான் ...பரவாயில்லை !

சங்கவி said...

மாப்ள கலக்கறீங்க...

சி.பி.செந்தில்குமார் said...

>>சும்மா பின்னி பெடலேடுக்கும் மழையில குத்தாட்டம் போடுறது ரொம்ப பிடிக்கும்.


யார் கூட என்பதை தெளிவாக விளக்கவும்

தமிழ்வாசி - Prakash said...

நீங்க மழையில் நனைஞ்சிங்களா... யார் கூட சேர்ந்து????

செங்கோவி said...

இன்னைக்கு உதவியாளர்கள் வீடியோ கிடையாதா மாப்ள?

இந்திரா said...

//கொசுறு: சும்மா இருந்தாலும் ஏதாவது கிறுக்க நினைக்கும் சங்கத்து ஆள்(!) பதிவு இது ஹிஹி!...
//


நம்ம சங்கம்ல... சும்மாவா????
கலக்குங்க.

Chitra said...

Water Puppet Show.... Totally new to me. Thank you for sharing the news about this, through your blog post. :-)

Unknown said...

அசல் இந்த நட்சத்திர அனைத்து முக்கியம் போது, அது அவரது எதிர்கால அசல் வண்ணங்களுடைய வகுத்தன என்பதை ஆச்சரியம் இல்லை. எப்படி அசல் பற்றி ரஜினி பேச்சு அனைத்து வேறு மேல் உள்ளன மற்றும் ஒரு வெற்றி ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

சசிகுமார் said...

மாப்ள மழை பெஞ்சா கூட ஒரு பதிவு போட்டுராருடா பெரிய ஆளுதாம்பா ஹீ ஹீ

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள .. கரன்ட் கட் பத்தி பேசி வேருப்பெத்தாத ... இங்க தினமும் மூணு மணிநேரம் கட் ஆகுது..

MANO நாஞ்சில் மனோ said...

மழைன்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும், ஹி ஹி மும்பையில் சரியான தொடர் மழை பெய்யுது, வெளியே மழை ஹி ஹி அண்ணே, உள்ளே வோட்கா வோட்கா வோட்கா வோட்கா யாருகிட்டேயும் சொல்லாதீக ஹி ஹி....

ஈரோடு தங்கதுரை said...

அருமை அருமை ....!

ஜீ... said...

///செங்கோவி
August 1, 2011 12:04 PM
இன்னைக்கு உதவியாளர்கள் வீடியோ கிடையாதா மாப்ள?//

எப்புடீண்ணே? அதத்தான் நானும் தேடினேன்! :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் தக்காளி இதெல்லாம் ஞாயமா? பாவம் செங்கோவி, ஜீ (நானும்தான்!)

மாய உலகம் said...

வரிசையாக ஆடும் பொம்மைகள் நடனம் தண்ணீரில் அருமை

ஷர்புதீன் said...

வியட்னாம பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் இல்லை என்றால் அவ்வளவுதான், காரணம் அங்கே எது நடந்தாலும் இங்கே கூவ ஆளில்லை!

நிரூபன் said...

அடை மழையில் நனைந்து கொண்டே பதிவிட்டிருக்கிறீங்க.
பாதுகாப்பாக இருங்க பாஸ்.