Followers

Friday, August 5, 2011

உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா! - Vietnam

வணக்கம் நண்பர்களே...எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே(!) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல!) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம் என்பதால்(!)...நாலு பங்கு வேலை அதிகமா போச்சி....சரி நாம சென்னையில சுத்தாத சுத்தா(!)...பாத்து புடுவோம்னு கெளம்பினேன்!....

யப்பா இந்த வாடகை இடம் பாக்குற விஷயம் இருக்கே ஸ் ஸ் ஸ் கண்ணு மட்டும் இல்ல எல்லாம் கட்டிடும்(!)....அதுவும் இங்க நம்மள பாத்தாலே "நீ foreigner" அப்படின்னு அவங்க சொல்லும் போது அது மனசுக்கு(ஹிஹி) சந்தோசமா இருந்தாலும்...என்னை எப்படி இவனுங்க சட்டுன்னு கண்டு புடிச்சிடுராங்கன்னு யோசிக்கும் போது என் நிறத்தை வச்சின்னு நெனைக்கும் போது கொஞ்சம் (டேய் தகப்பா!) கஷ்டமாத்தான் இருக்கு...சரி விஷயத்துக்கு வரேன்(இவ்ளோ நேரம்!)...

பெரிய வீடுகளை காட்டினார்கள்...சரி பாக்கலாம்னு பாத்தா எல்லா இடத்துலயும் சமையலறை கீழ் தளத்தில் இருக்கிறது...அதுவும் உள்ள நுழைஞ்ச உடனே பெரிய ஹாலும், அதனை ஒட்டி உள் புறமா சமையல் கட்டும் இருந்தது (நம்ம இடமாச்சே!)....அடப்பாவமே எப்படிய்யா வீட்டுக்கு வர்றவங்கள உக்கார வைக்கிறது. அதுவும் புகுந்த உடன் சமையலறை தானே தெரியும்னு யோசிச்சிட்டு இருந்தேன்...


பய புள்ளைங்க என்னமா கட்டி இருக்குங்க(!)....எல்லாம் அட்டகாசமான தேக்கு மரங்களில் செய்த அரச நாற்காலிகள்(!)....சும்மா தனி ஸ்டைல்ல இருக்கு....அதுவும் வீட்டுக்குள்ள மரப்படிகட்டுங்க...இதை அப்படியே தேக்குல இழச்சி இருக்காங்க(!)...யாருய்யா சொன்னது இந்த நாடு ஏழ்மையான நாடுன்னு ...நம்மூர்ல இப்படி வீடுகள் இருக்குமான்னு தெரியல...வெளிய இருந்து பாத்தா சாதாரணமா இருந்தது...


உள்ளே போனா ஒரு சிறிய அரண்மனை போல இருக்கிறது....பல வித கலை நுணுக்கத்துடன் கட்டி இருக்காங்க...அதுவும் பிரெஞ்சு நுற்ப்பம் மற்றும் சீன கலப்பு ஆங்காங்கே தெரியுது....அழகிய வண்ண ஓவியங்கள் இருக்கு பல அறைகளில்...நம்மூர்ல தாத்தா பாட்டி ஓவியங்களை இப்போ பேசன் என்கிற பேர்ல கழட்டி பெட்டில போட்டுடறாங்க(!)....ஆனா இங்கே அதையே அழகா, தனித்தானியா வச்சி இருக்காங்க(அவங்க இல்லன்னா நாங்க இல்லன்னு சொல்றாங்க போல!).....


நாலடுக்கு வீட்டுக்கு உள்ளேயே படியமைச்சி(மரத்தால்!)...ஒவ்வொரு அறையும் நேர்த்தியா அழகு படுத்தி இருக்காங்க...எல்லா வித வீட்டு உபயோக (TVs, A/C, Fridge உற்பட) பொருள்களுடன் வீட்டை வாடகைக்கு கொடுப்பது மற்றுமொரு சிறப்பு....சரி அப்படியே வீட்டுக்கு அட்வான்ஸ் விஷயம் எப்படின்னு விசாரிச்சா...அது ஆறு மாத பணம் கொடுத்துடனுமாம்....ஒவ்வொரு ஆறுமாததுக்கும் ஒரு முறை பணம் கொடுக்கணும்னு சொன்னாங்க....நம்மூர்ல அட்வான்ஸ் வாங்கிகிட்டு வாடகையும் மாதம் மாதம் கொடுக்கும் பழக்கும் ஞாபகத்துக்கு வந்து போனது(!)...

ஒரு வீட்டின் ஓனர்(!)...என்னுடன் வந்த என் உதவியாளரை பார்த்து என்னமோ கேட்டாள் நமுட்டு சிரிப்புடன்(!).....நானும் என்ன சொன்னாள் அவள்  வியட்நாமிய மொழியில்னு கேட்டேன்...

சார்..ஒண்ணுமில்லை.....

அப்போ எதோ இருக்கு...சொல்லு என்ன சொன்னா அந்த குமரி(!) என்றேன்...

நீங்க ரெண்டு பேரும்...தம்பதிகளான்னு கேட்டாள் அவ்வளவுதான்(!) என்றாள்....

(நல்ல வேல இதை என் பொண்டாட்டி முன்னாடி கேட்டு இருந்தா...என்னை இப்போ நீ போண்டா டீ யாத்தான் பாத்து இருப்பேன்னு நெனச்சிகிட்டேன் ஹிஹி!)

சரி வாடகை எவ்ளோப்பான்னு கேட்டா $500 என்று சொன்னார்கள்....சரின்னு பல வீடுகளை பார்த்து வந்து இருக்கிறேன். இன்னும் முடிவு செய்ய வில்லை....என்ன இருந்தாலும்...வீட்டு ஓனர் இல்லாம இப்படி அழகான வீட்டுக்கு போகறத நெனச்சா (ஹிஹி!) சந்தோசமா இருக்கு.....

கொசுறு: இந்தப்பதிவு ஒரு சுய தம்பட்டமே...இப்படிக்கு...இந்தப்பதிவால் யாருக்கு நன்மை என்று கேட்ப்போருக்கு பதில் சொல்ல முடியாத உங்கள் நண்பன் தக்காளி(ஹிஹி!)..தலைப்பு ஒரு சில்பான்ஸ்ஸுக்காக  ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

29 comments:

சங்கவி said...

மாப்ள.,

சுயதம்பட்டம் நல்லாயிருக்கு.... இன்னும் எதிர்பார்க்கிறேன்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள வீடு தேடுனதையும் ஒரு பதிவு ஆக்கிட்டாரு..

பேஸ்..பேஸ்.. ரொம்ப நன்னாருக்கு..

நிகழ்வுகள் said...

நல்ல அனுபவம் தான் ....)

ஷீ-நிசி said...

வீடு கிடைச்சதும் அதையும் சொல்லிடுங்க :)

உலக சினிமா ரசிகன் said...

வியட்நாம் வீட்டை உங்களோடு நாங்களும் பார்த்தோம்.
வியட்நாம் வாடகை முறை என் போன்ற மிடில் கிளாசுக்கு வரப்பிரசாதம்.
நம்மூர்ல வீடு வாடகைக்கு கிடைப்பது...பூர்வ ஜென்ம புண்ணியங்களால்.

ஜீ... said...

//நீங்க ரெண்டு பேரும்...தம்பதிகளான்னு கேட்டாள் அவ்வளவுதான்(!) என்றாள்....//
புரியுது மாம்ஸ்! இத சொல்லத்தானே இந்தப் பதிவு? :-)

! சிவகுமார் ! said...

இதுக்கு பேருதான் வீடு கட்டி அடிக்கறதா மாம்ஸ்..

சசிகுமார் said...

கலக்குற மாப்ள

Manoj said...

great, you are getting furnished house for $500 ... in paris we wont get even unfurnished house for that price.. :(

செங்கோவி said...

அப்போ நீங்க ரெண்டு வீடு பார்க்கணும் போலிருக்கே..

கார்த்தி கேயனி said...

உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையத்துள்ளேன்

பாரத்... பாரதி... said...

வழக்கமான ஜாலியோ ஜாலி நடை ரசிக்க வைக்கிறது ( டேய், தகப்பாஆஆ)

பாரத்... பாரதி... said...

வழக்கமான ஜாலியோ ஜாலி நடை ரசிக்க வைக்கிறது ( டேய், தகப்பாஆஆ)

vidivelli said...

நல்ல பகிர்வு..
அன்புடன் வாழ்த்துக்கள்..

சி.பி.செந்தில்குமார் said...

daittilla டைட்டில்ல யாருக்கோ ஏதோ சேதி சொல்லுறான் பய புள்ள.

ஷர்புதீன் said...

என்னைக்குதான் உபயோகமா எழுதி...................... ( மாமா, நீங்களே நிரப்பிகுங்க )

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அடுத்தவங்களோட சந்தோசத்தை அனுபவிக்கிறதும் ஒரு சுகம்.. அதனால ஒண்ணும் தப்பு இல்லை மாப்ள...

koodal bala said...

உதவியாளர் ...உதவியாளர்...உதவியாளர்...வெறுப்பேத்தாதீங்க மாம்ஸ் ..அப்புறமா நானும் வியட்நாமுக்கு வந்திடுவேன்

காட்டான் said...

வீடு மாறும்போதுதான் தெரியும் மாப்பிள பழைய வீட்டில இவ்வளவு சாமான்கள் வைத்திருந்தோமோன்னு...?

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்களை பாரீனரான்னு இந்தியாவுல கேப்பாங்களா.. (எப்படி என் டவுட்டு)

# கவிதை வீதி # சௌந்தர் said...

வீடு பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமான விஷயம்தான்..

தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி... !

Chitra said...

Best wishes! :-)

FOOD said...

//Chitra said...

Best wishes! :-)//

For what?

FOOD said...

//நீங்க ரெண்டு பேரும்...தம்பதிகளான்னு கேட்டாள் அவ்வளவுதான்(!) என்றாள்....//
அப்ப அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

நாய்க்குட்டி மனசு said...

daittilla டைட்டில்ல யாருக்கோ ஏதோ சேதி சொல்லுறான் பய புள்ள.//
பாம்பின் கால் பாம்புக்கு தெரியுதோ?

மாய உலகம் said...

வியட்நாம் நாடு...500 டாலர் வாடகைக்கு வீடு... நாம் அதை விட கம்மியான வாடகையா நாடு

மாய உலகம் said...

ஆஹா நேத்து டி.ர் படம் பாத்த எஃபக்டா

தமிழ்வாசி - Prakash said...

(TVs, A/C, Fridge உற்பட) ////

ஆமா மாம்ஸ் எத்தனை டிவி இருக்கும்?

சித்தாரா மகேஷ். said...

வீடு என்னமோ ரொம்ப நல்லாத்தான் இருக்கும் இப்போ.ஆனா நீங்க அங்க குடிபோனப்புறம்????lols.