Followers

Thursday, May 12, 2011

ரத்தக்கறை - (டைரி பேசுகிறது - பாகம் 6)

வணக்கம் நண்பர்களே..........டைரி பேசுகிறது.......தொடர்கிறது...எழ முயற்சித்தேன்..........மீண்டும் குழந்தையாக மண்ணில் விழுந்தது ஞாபகம் வந்தது...........தவறி விழுந்தேன்........எழுந்திருக்க முடியாமல் அந்த டாக்டர் மற்றும் அந்த தாதியின் தயவால் மீண்டும் அந்த சேரில் சாய்ந்தேன்...........

கவலைப்படாத தம்பி........சரி ஆயிடும்...........என்றார் அந்த டாக்டர்........

கொஞ்ச நாள் ஆயிற்று.......கொஞ்ச கொஞ்சமாக மாற்றங்கள் உடலில் வந்தது...........என் அக்கா என்னை தேடி வந்தாள்..........அவளிடம் பல மாற்றங்கள்.........நான் அவள் முகம் பார்த்து குனிந்து கொண்டேன்.........


தம்பி என்னை தவறா நெனைக்காத......எனக்கு உன் விஷயமே தெரியாது.....இடையில பல விஷயங்கள் நடந்துடுச்சி.......உனக்கு தெரிய ஞாயமில்ல.......பல மாதங்களா நானும் மாமாவும் பிரிஞ்சி இருக்கோம்......தெரியுமா...........நான் பெங்களூர்ல இருக்கேன்...அவரு சென்னையில இருக்காரு.....

என்னாச்சி......ஏன்?

வெளிப்படையா அவரு சொல்லல....ஆனாலும் எனக்கு புரிஞ்சிது....நாங்க சேர்ந்து இருக்கறது அவங்க அம்மாக்கு புடிக்கல......அதான்...எனக்கும் உன் விஷயத்த தெரியப்படுத்தல......நான் கேட்டதுக்கு நீ செய்துட்டதா சொன்னாங்க.....!

பரவாயில்லையே......என்னை அந்த உயர நிலைக்கு கொண்டு போயிட்டாங்களா....நல்லது தான்.........சரி விடு இப்ப எப்படி விஷயம் தெரியும்......சொல்லு!

பெங்களூரு ரமணி மேடம் பாத்தாங்க....அவங்க அங்கே அவங்களோட சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க.......அப்போதான் சொன்னாங்க....


"தம்பி.......தம்பின்னு உயிரை விடுவியே.....அவன் இப்ப பொணம் போல இருக்கான் தெரியுமா.......6 மாசமா எந்த முன்னேற்றமும் இல்லன்னு டாக்டருங்க கைய விரிசிட்டாங்கலாம்.......உன்ன இந்த நெலமைக்கு ஆளாக்குன குடும்பம் பாரு எப்படி தவிக்குது...."

அப்போதான் எனக்கு தெரியும் நீ உயிரோட இருக்கறது.........வீட்ல தடுத்தாங்க.......ஆனாலும் நான் உன்னை பாத்தே ஆவேன்னு வந்தேன்டா......தம்பி.....

என்னை மன்னிசிடுக்கா........நான் எப்பவுமே அவசரக்காரேன்......

சரி விடு.......இனி நடப்பத பாப்போம்.......(அன்று முதல் அந்ததாயின் அன்பினால் குணமடைய ஆரம்பித்தேன்!.............இப்போது அக்காவின் சென்னை பிளாட்டில்..........பெங்களூரில் இருந்த அவளுடைய அப்பாவிடம் சண்டை பிடித்து வாங்கி வந்த பணத்தில் அந்த ப்ளாட்டை வாங்கி இருந்தாள்...........)

இப்போ எப்படி இருக்கு..........தம்பி..........

நடக்க முடியிது.....


ஆமா, காலையில கிரி வந்து ஆட்டோல உன்ன கூட்டிட்டு போனானே.......போகும் போது எங்க போறேன்னு கேக்க வேணாம்னு கேக்கல....எங்க வெளிய போயிட்டு வந்த..........சொல்லு!

அதான் உன் மாமியாருக்கு வேப்பிலை அடிச்சிட்டு வந்தேன்......அப்படியே மாமா ஆபீசுக்கு போயி அவர ஒரு கிழி!.......ஒரே கிழி..........கிழிசாச்சி..........அவரு நல்ல ஆம்பளையா இருந்தா இன்னிக்கே ஓடியாருவாறு பாரு.............

அக்கா என்னை ஓங்கி அறைந்தாள்...........

தொடரும்..........

கொசுறு: உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல..........கதை ட்ராக் மாறுவதாக நினைக்க வேண்டாம்....வாழ்கைன்னா அப்படித்தான்....திருப்பும் ஹேண்டில் நம் கையில் இல்லை என்பது என்தாழ்மையான கருத்து.....
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

21 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

ரத்தக்கறை தடம் மாறி தற்போது குடும்பக்கதையில் பயணகிக்கிறது...

உண்மைதான்..
ராணுவத்தில் பீரங்கியை எதிர்த்து போராடும் நெஞ்சங்கள் கூட குடும்ப பந்த பாசம் கிடைக்க வில்லை என்றால் நொடிந்து போய்விடும்..

தொடரட்டும்....

# கவிதை வீதி # சௌந்தர் said...

மன்னிக்க வேண்டும் நண்பரே..
நேற்து தொடர் பணியின் காரணமாக மீண்டும் வரமுடிய வில்லை...

தமிழ்வாசி - Prakash said...

mmmm. GOOD WAY. CONTINUE

NKS.ஹாஜா மைதீன் said...

ஹைய்யா நானும் வந்துட்டேன்...

FOOD said...

இரும்பு மனிதனுக்குள்ளும் ஒரு இதயம் இருக்கிறது.

FOOD said...

திருப்பங்கள் இல்லா தொடர் தித்திக்காதே!

கந்தசாமி. said...

தொடருங்கள் தொடருங்கள் நானும் தொடர்கிறேன் ..

சி.பி.செந்தில்குமார் said...

>>வாழ்கைன்னா அப்படித்தான்....திருப்பும் ஹேண்டில் நம் கையில் இல்லை

தக்காளி வாழ்க்கைலயே நல்ல விதமா இன்னைக்குத்தான் கருத்து சொல்லி இருக்கான்.

கக்கு - மாணிக்கம் said...

//இரும்பு மனிதனுக்குள்ளும் ஒரு இதயம் இருக்கிறது.//

FOOD said...


I like this appropriate comment vikki.

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா ராஜ்கிரண் சென்டிமென்ட் மாதிரி போகுது...

MANO நாஞ்சில் மனோ said...

குடும்பம்'னா அப்பிடிதான்யா, வீட்டுக்கு வீடு வாசற்படி...

Chitra said...

உன் குத்தமா என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல..........கதை ட்ராக் மாறுவதாக நினைக்க வேண்டாம்....வாழ்கைன்னா அப்படித்தான்....திருப்பும் ஹேண்டில் நம் கையில் இல்லை என்பது என்தாழ்மையான கருத்து.....

....... well said and well written.

விக்கியுலகம் said...

வருகைக்கு நன்றி அன்பு நெஞ்சங்களே!

பாரத்... பாரதி... said...

//வாழ்கைன்னா அப்படித்தான்....திருப்பும் ஹேண்டில் நம் கையில் இல்லை //

Super...

பாரத்... பாரதி... said...

விக்கியின் ரூட் மாறுது... குணச்சித்திரத்திலும் முத்திரை, இரத்த முத்திரை...

ரஹீம் கஸாலி said...

ரைட்டு

செங்கோவி said...

குடும்பக் கதையும் டைரியில் ஒரு அங்கம் தானே..தொடருங்கள்.

மைந்தன் சிவா said...

எவனவன் தக்காளிக்கே ரைட்டு லெப்ட்டு போடுறது??

மைந்தன் சிவா said...

திரும்பினாத்தானே வாழ்க்கை...
படுத்தாத்தானே நித்திரை@@!!

மைந்தன் சிவா said...

ரத்தக்கறை...என்னே ஒரு கதை!!!

மைந்தன் சிவா said...

என்ன பாஸ் எதோ ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்குறீர்கலாமே???மனோ போட்டிருக்கார்?