இந்தப்பதிவை எழுத தூண்டிய அன்பு நண்பர்களுக்கு நன்றிகள்....என்ன நண்பர்களே ஆரம்பிப்போமா...
இந்த தமிழ்மண விஷயம் ஆரம்பிச்சதுல இருந்தே...7 வது ஓட்டுக்கு ஆளா(!) பறக்கும்படி ஆயிடுச்சி(ஹிஹி நான் உற்படத்தான்!)..ஏன்னா அப்போத்தானே முதல் பக்கத்துல வர முடியும்.....
நான்(!) உற்பட எல்லா நண்பர்களுமே ஒரு வித பிடிமானத்துக்க்காகத்தான் பதிவுகளை இடுகிறோம்...இருந்தாலும் பய புள்ளைங்க ஒருத்தர் நம்ம பதிவுக்கு வந்து போய் இருக்காரே....அவருக்கு எம்புட்டு வேலை(!) மற்றும் நேர
விரயம்(!௦ )தாண்டி வந்துட்டு போயிருக்காரு அப்படின்னு அவரு பதிவுக்கு வர்ரதில்லன்னு பெரிய விவாதமே நடக்குது(எங்க!)...
இது பத்தாம சாட்ல பேசுற விஷயத்தை எல்லாம் பதிவா போட்டு கொல்றது(நானும்தேன்!)...நைசா பேசி விஷயத்த கறந்து(!) அந்த நண்பரையே போட்டு தாளிக்கறது(!) போன்ற அரும்பெரும் விஷயங்கள் வந்து போய்க்கொண்டு இருக்கின்றன(!)...
பதிவெழுத மேட்டர்(விஷயம்!) வேண்டி யோசிக்கும் மக்கள் இந்த அன்னா(அண்ணா அல்ல!) எழுதாம தவிர்த்து வந்ததையும் காண முடிஞ்சது....இந்த விஷயத்துல எதாவது போட்டு(எழுதி!) கெட்ட பெயர் வந்துருமோன்னு பயந்தவங்களையும் தெரிஞ்சிக்க நல்ல வாய்ப்பா அமைஞ்சது கடந்த 15 நாள்கள்(!).....
சரி விஷயத்துக்கு வரேன்(கொட்ட வேண்டியது கொட்டிட்டேன்!)....முடிஞ்ச வரை அடுத்தவர் பதிவுக்கு போயிட்டு அவங்க வரலன்னு அவச்தைப்படாதீங்க...அவங்களுக்கு பல இன்னல்கள் நடந்திருக்கலாம்...
நேரம் இல்லாம இருக்கலாம்
நெட் கட்டாயிட்டு இருக்கலாம்
ஒரு நாளைக்கு 100 பதிவுகளுக்கு போறதில மறந்து(!) இருக்கலாம்...
வோட்கா மண்டைக்கு அதிகமா ஏறி இருக்கலாம்....
etc..........
அதனால உங்க கடமைய(!) செய்யுங்க பலன் கண்டிப்பா எதிர் பாருங்க(!) கிடைக்கும்...என்ன கொஞ்சம் லேட்டாகும் அம்புட்டுதான்(ஹிஹி!)
கொசுறு: இவை எனக்கு நானே கொட்டிக்கொண்ட கொட்டுக்கள்(அப்படியும் வச்சிக்கலாம்!)ஹிஹி!....குட்டிச்சுவர் தொடர் திங்கள் வரும் என்று தெரிவித்துகொள்கிறேன்(கொல்கிறேன்!)










