இந்தப்பதிவுக்கு வந்தவங்க பொதுவா கருத்துக்களை சொல்லவும்....அதை விடுத்து தனிப்பட்ட(ஹிஹி!) விமர்சங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...(அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்...அப்புறம் உங்க இஷ்டம் மீ பாவம்!)....
திருமணம் என்பதே இருமனங்களின் சங்கமம்(மனசாட்சி - அடடே! ஸ் அபா!)...அப்பேர்ப்பட்ட வைபவத்திற்கு முன் மணமக்கள் பிடித்தது, பிடிக்காதது(ஆமாண்டா வெந்தது வேகாதது!) பற்றி தெளிவாக பேசிக்கொள்வதில்லை(!)...அல்லது திருமணம் முடிந்த பின் இந்த சின்ன விஷயத்தை பெரிது படுத்தலாமா(எது!) என்று நினைத்து....விட்டு விடுவதில்லை....(பயபுள்ள அந்த நடிகனே பரவாயில்ல போல ஒன்னும் புரியல!)
அதாவது உணவு விஷயம் - திருமணத்துக்கு முன் சைவ உணவு உண்போர், மற்றும் அசைவ உணவு உண்போர் தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்(!)....சாதாரண விஷயம் என்று எண்ணினாலும் அந்த விஷயம் தான் பூத(!) கரமாக வெளிக்கிளம்புகிறது....அதுவும் இந்த மாமிச பட்சினிகள்(சரியாதான் பேசுரனா!) தங்கள் நாவை அடக்க முடியாமல் திணறுகிறார்கள்(!)....
இதற்க்கு சைவ ஆட்கள் கொடுக்கும் கமன்ட் இருக்கிறதே யப்பா முடியல....
மூக்கை மூடிக்கொள்ளுதல்....
முகத்தை அஷ்ட கோணத்தில் காட்டுதல்....
போன ஜென்மத்துல சூரனா பொறந்திருப்பியோ(நோ நோ நோ பேடு வேர்ட்ஸ்!)
இறந்த ஜந்துக்களை(!) தின்றது எவ்வளவு பாவம் தெரியுமா....
ஒரு உசுர கொல்றது பாவம்.....
இதற்க்கு அசைவ ஆட்களின் எதிர் கருத்துக்கள்.....(ஹிஹி!)
பால்(Milk!) கூடத்தான் மாட்டின் ரத்தம்....
தாவரங்களை சாபிடுறது கூடத்தான் உசுர கொல்றது(!)....அதுக்கும் வாயிருந்தா கத்தத்தான் செய்யும்....
நாங்களே சமச்சி நாங்களே சாப்டுக்குவோம்(வேறவழி!)...அந்தப்பக்கமா வந்துராதீங்க..
இப்பேர்ப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எப்படி மட்டுபடுத்தறது.....(பதிவர்களே கமன்ட் மட்டுறுத்த வழி வச்சிருக்கீங்கல்ல!) முடிஞ்சா உங்க கருத்துக்கள சொல்லிட்டு போங்க....
கொசுறு: வீட்ல வாங்குனத என்னமா சமாளிக்கரான்னு கமன்ட் போடுதல் வீரர்களுக்கு அழகல்ல(ஹிஹி!)




