வணக்கம் நண்பர்களே...
முதல்ல சில விஷயங்கள் சொல்லிபுடுறேன்....இந்தப்பதிவு படப்பதிவு அல்ல(!)....அதனால யாரும் எதோ பட விமர்சனத்துக்கு எதிரா பதிவு போட்டதா நெனச்சிக்க வேணாமுங்க(பய புள்ளைங்க என்னமா திட்டுதுங்க!).....இந்தப்பதிவு ஒரு சொந்தக்கத பதிவு மட்டுமே....இதுல வரும் தொலைபேசி உரையாடல்கள் உபயம் குடும்பம்(!) எனும் ஆலமரத்திலிருந்து எடுக்கப்பட்டவை....
ஹலோ... சொல்லுப்பா எப்படி இருக்க.....
நான் நல்லா இருக்கேம்மா நீங்க எப்படி இருக்கீங்க....
நல்ல இருக்கேம்பா.....அது சரி என்ன இம்புட்டு காலையில போன் பண்ற....
என்னம்மா இன்னிக்கு என்ன நாளு....
ஆமாம்யா...இன்னிக்கு விநாயக சதுர்த்தி இல்ல....ஆமாம் மருமவ பலகாரம்லாம் செய்ஞ்சிட்டாளா....
காலையில இருந்து என்னைய பாதிவேலைய பிரிச்சி கொடுத்து பெண்டு எடுத்தாச்சி....இப்போ யாரு கேட்டா இந்த கொழுக்கட்டைய(!) செய்யலேன்னு....
எலேய் சாமிய கும்பிட்டியா...
ஆங் ஒபனருக்கு(Opener!) நன்றி சொல்லிட்டேன்....
அது என்னடா ஒபனறு....
ஹிஹி...அவரு தானே நம்ம கடவுள்களில் முதன்மையானவரு அதான் அப்படி சொன்னேன்...
நீ இன்னும் திருந்தவே இல்லையா....
ஹிஹி....
சரி உம்புள்ளாண்டான் என்ன பண்றான்...
ஸ்கூலுக்கு ரெடியாயிட்டு இருக்கான்.....
ஏன்டா இன்னைக்கு லீவு இல்ல....
அம்மா இன்னைக்கு இங்க விடுமுறை விட மாட்டாங்க....இது என்ன நம்மூரா....
சரிய்யா...கோயிலுக்காவது போயிட்டு வா....
இங்க ஹிந்து கோயில் இல்லன்னு ஏற்க்கனவே சொல்லி இருந்தேனே....
அடப்பாவமே...கோயில் இல்லாத ஊருல எப்படித்தான் இருக்கியோ போ....உனக்கெல்லாம் வேல கெடைக்குது பாரு இந்தமாதிரி ஊருல...இப்பவாவது சாமி கும்புடுற பழக்கம் வந்துதா...இல்ல இப்பவும் விதண்டாவாதம் பேசிட்டு இருக்கியா மருவமவக்கிட்ட...கையெடுத்து சாமிய கும்பிட்டாவது போவியா வீட்ல....
ஹிஹி...சரி செய்யிறேன்...
என்னமோ செய்ஞ்சா சர்தான்....
நல்ல நாளு அதுவுமா குழந்தைக்கு வாழ்த்து சொல்றேன் கூப்பிடு....
கண்ணு ராசா....புள்ளையாரு சதுர்த்தி வாழ்துக்கள்யா....
சரி அப்பம்மா....எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சி நான் கெளம்பனும் சாயந்தரமா பேசுறேன்..சரியா...பை....
சரிப்பா சரி....
சரிம்மா வச்சிடறேன்....
என் அம்மாவுக்கு சொன்ன மாதிரியே உங்களுக்கும் இனிய புள்ளையாரு சதுர்த்தி வாழ்த்துக்கள்...
கொசுறு: எல்லோரும் விடுமுறையை இனிதே கொண்டாட வாழ்த்துக்கள்



