Followers

Wednesday, September 14, 2011

மும்மூர்த்திகள் - last but not least

வணக்கம் நண்பர்களே....


கடந்த பதிவுகளில் முதல் இரண்டு மூர்த்திகளை சொல்லி இருந்தேன்...நேரமிருந்தால் பாருங்கள்...சுய புராணம் (2)

மற்றவைகளில் இருந்து தப்பியவர்கள்(!) உண்டு எனலாம்...ஆனால், மூன்றாவது மாது...இந்த விஷயத்தில் தப்பியவர்கள் குறைவு....

என்னை பொறுத்த வரை...யாராவது சின்ன வயதில் ஒருவரை கூட காதலிக்க வில்லை என்று சொன்னால்...அது ஒரு மேம்போக்கான மற்றும் தன்னை காத்துக்கொள்ளும் பேச்சு என்று நினைப்பேன்....

என்னை சுற்றி இருந்த நண்பர்களில் பலர் பெண்கள் என்பதாலும் அவர்களின் தூய நட்பு என்னை அடுத்த கட்டத்திற்கு இட்டுசெல்லவே இல்லை....ஆனாலும் என்னுடைய கல்லூரி காலங்களில் எனக்கு இருந்த முரட்டுத்தனம் என்னை யாருக்கும் பிடிக்காத அளவுக்கு பிரித்தே வைத்திருந்தது.....


அதுவும் ஏன் நான் அவ்வாறு நடந்து கொண்டேன் என்று எனக்கே பல நேரங்களில் சங்கடங்களை உருவாக்கி கொடுத்தது என்னுடைய முரட்டுத்தனம்(!)...அதையும் தாண்டி ஒருவள் என்னை நல்வழிப்படுத்த முயன்றாள்....உண்மையில் அதுவரை நண்பர்களின் வட்டத்தில் காதல் என்ற வார்த்தையை காமடிக்காக மட்டுமே பயன் படுத்திய என்னை(!) கொஞ்ச கொஞ்சமாக அவளின் அன்பு இழுக்க ஆரம்பித்தது.....

அதுவும் அவளின் அழகுக்கு முன் நான் ஒரு பூச்சி(!)....என் ஆணவத்துக்கு முன் அவள் ஒரு பூச்சி(!)...ஏன்னெனில், ஆத்திரப்பட்டு பேசத்தெரியாத அவளும்...எதற்கும் மூக்கின் மேல் கோவம் வரும் நானும் எதிர் பாராத விதமாக நண்பர்கள்(!) ஆனோம்...என் தனிப்பட்ட வாழ்கையில் என் பெற்றோர்களின் சண்டைகள் என்னை ஒரு தனி தீவாக மாற்றி இருந்தது....

அந்த நேரத்தில் என் நண்பர்களே எனக்கு மருந்து போடும் மருத்துவர்கள்...அவர்களையும் தாண்டி இவள் என் வாழ்கையில் புகுந்தாள்...அதுவரை காட்டாறு கணக்காக ஓடிக்கொண்டு இருந்த நான்(!)...கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக ஆரம்பித்தேன்...அதுவரை உடுத்தும் உடையில் கூட நேர்த்தி இல்லாமல் அலையும் முடியுடன் திரிந்து கொண்டிருந்தவன் உடையை நேர்த்தி செய்கிறான் என்றால்(!)...அவன் எங்கேயோ சிக்கி விட்டான் என்பதை எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் நண்பர்கள்....அப்படியே நடந்தது....


ஒரு நாள் அவளை தனியே சந்திக்க அழைத்து இருந்தாள்....Drive In (Chennai)...அதுவரை அப்படி தனியே சந்தித்ததில்லை.....என் ஈகோ(!) அதற்க்கு என்றுமே இடம் கொடுத்ததில்லை...என் நண்பர்கள் சொல்லியே அனுப்பினார்கள்....நீயே முதலில் கேள் அவளிடம் என்று(!)....என்னத்த கேட்பது...அவள் "ச்சே நண்பியாக பழகியதை தவறாக எடுத்து கொண்டீர்களே" என்று சொல்லி விட்டால்...அதை விட கொடுமை எதுவும் இல்லை என்பதால்...நானாக எதுவும் கேட்கப்போவதில்லை என்ற முடிவுடன் சென்று இருந்தேன்...

வாங்க விக்கி எப்படி இருக்கீங்க....

நான் நல்லா இருக்கேங்க...நீங்க....

(ஒருவரை ஒருவர் இப்படி கேட்டு விட்டு அடுத்து எதுவம் பேசாமலே முதல் பத்து நிமிஷம் ஓடி விட்டது!)....நானாக ஆரம்பித்தேன்(பெண்கள் முதலில் சொன்னதாக சரித்திர பூகோளம் உண்டா தெரியல!)...

வர சொல்லி இருந்தீங்க...

என்ன எப்ப பாரு வாங்க போங்கன்னு சொல்லிட்டு இருக்கீங்க...என் பேர வச்சே கூப்பிடலாமே....

சரிங்க...(தூ!...அசடு வழியிது துடச்சிக்க!)

மறுபடியும்....

சரி..சொல்லுங்க...சாரி சொல்லு வர்ஷினி....

ஒரு விஷயம் உங்க கிட்ட கேக்கணும்...

கேளு...

நீங்க தப்பா எடுத்துக்க கூடாது....

ச்சே ச்சே(அத கேக்க தானே 30 கீமீ தாண்டி ஓசி பைக் எடுத்து கிட்டு வந்து இருக்கேன்!)

நீங்க யாரையாவது காதலிச்சது உண்டா.....

இது வரைக்கும் என்னை காதலிக்க யாருக்கும் கொடுத்து வைக்கலன்னு நெனைக்கிறேன்...ஏன் கேக்குற....

(இவன் ஒரு மனுஷன்...ச்சே!)...

இல்ல கேட்டேன்...

அது ஏன் திடீர்ன்னு அப்படி கேட்ட....

இல்ல உங்களுக்கு நெறைய பெண் நண்பிகள் இருக்காங்களேன்னு கேட்டேன்....

அதான் நீயே சொல்லிட்டியே....பெண் நண்பிகள்ன்னு...அப்புறம் அவங்க எப்படி என்னைய போயி..ஹிஹி....அவங்களுக்கு தெரியாதா நான் எவ்ளோ(!) நல்லவன்...அமைதியானவன்னு....

ஓ இதுவேறயா....

ஆமா....நான் ஜாலியா இருக்க நெனைக்கிற சீரியசான ஆளுன்னு என் நண்பர்கள் சொல்லுவாங்க....ஹிஹி!..சரி நானே கேக்குறேன்...நீ என்னை விரும்பிறியா...(அப்ப கூட நான் உன்னை விரும்புறேன்னு சொல்ல வராத ஈகோவில் இடி விழ!)

நீங்க....

ஹிஹி....நான் அப்படித்தான் நெனைக்கிறேன்...அதாவது நீ என்னை விரும்பறதா.....நானும்...ஹிஹி!

அப்படி என்ன உங்களுக்கு ஒரு ஈகோ அதை நான் சொல்லனும்னு எதிர் பாத்தீங்க இத்தன நாளா.....

அது கூடவே பொறந்தது...மாத்திக்க முடியல.....

அவள் முகம் சிவந்தாள்....இப்போ என்னதான் சொல்ல வரீங்க...yes or no...

எஸ்ஸு..எஸ்ஸு

(அப்படா ஒரு பெரிய பாரம் இறங்கினா மாதிரி இருந்தது எனக்கு....இப்படி ஆரம்பிச்ச காதல்...ஒருவரை ஒருவர் தொடாமலேயே அடுத்த இரண்டு வருட கல்லூரி வாழ்கையில் ஓடியது...களிமண்ணாக இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக உருவமாக மாறிக்கொண்டு இருந்தேன்!).....

அப்படி ஒரு நாள் அவளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது....

எங்க அப்பா உங்கள பாக்கனும்னு சொன்னாரு...

அடப்பாவமே...ஏன் அவருக்கு இப்படி ஒரு விபரீத ஆசை...

நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்...

சரி எப்போ...

இதோ இங்க நாம வந்து இருக்கறதே அதுக்குத்தான்....(அதே Drive In!)

பத்து நிமிஷத்தில் அந்த மேளக்காரர்(இருக்குற பத்து விரல்லயும் மோதிரம் போட்டு இருக்கவங்கள வேற எப்படி சொல்ல!).....வந்து நின்றார்....

இவரு தான் விக்கி....

வணக்கம் நான் தான் வர்ஷினி அப்பா கணேச மூர்த்தி...உங்கள சந்த்திக்கரதுல சந்தோசம்...

எனக்கும்ங்க....(வடை காபியுடன் பேச்சு வார்த்தை தொடங்கியது!)

வர்ஷினி நீ போம்மா நான் தம்பி கிட்ட பேசிட்டு வரேன்....

சரிப்பா...

அப்புறம்...தம்பி அப்ப இந்த வருஷம் final year தானே...

ஆமாங்க...

அடுத்து என்ன பண்றதா உத்தேசம்....

ஒரு வேலைய புடிக்கணும்....அப்புறம் தாங்க அடுத்தது யோசிக்கணும்...


அப்படியா...சரி....எனக்கு ஒரே பொண்ணு...நான் சுத்தி வளச்சி பேச விரும்பல நீங்க இப்படி சுத்துறது எனக்கு புடிக்கல...இருந்தாலும் நான் சொல்றது என்னன்னா...நீங்க நல்ல வேலையா சேந்துட்டு வீட்ல பெரியவங்க அனுமதியோட வந்து பொண்ணு கேளுங்க....நல்லதே நடக்கும்...இந்த மாதிரி திரியிறது நல்லா இல்ல...முதல்ல நல்ல உத்தியோகம் தான் புருஷ லட்சணம்...என்ன நான் சொல்றது....

சார்...நீங்க சொல்ற படியே நான் நல்ல வேலைல சேர்ந்துட்டு உங்க பொண்ண பாக்கறேன்...நன்றி...இதுவே எங்க கடைசி சந்திப்பு.....

good....

வரேனுங்க....


அடுத்த சில நாட்களில் அவளிடம் இருந்து கடிதம் வந்தது என் நண்பி வீட்டுக்கு.....நான் எவ்ளோ சொல்லியும் என்னை சந்திக்க மறுத்துட்டான் விக்கி....எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு...இப்போ விடுமுறைக்காக பெங்களூர் போறேன் அம்மாவோட... நான் திரும்பி வந்த உடனாவது எங்கிட்ட பேச சொல்லுங்க...

ம்ம்ம்........

(அடுத்த ரெண்டு நாள் கழித்து நண்பன் ஓடி வந்து விஷயம் சொன்னான்...அவள் வீடு இருந்த புரசை வாக்கத்துக்கு ஓடினேன் நண்பர்களுடன்...அங்கே...சவமாக உருக்குலைந்து கிடந்தது அந்த பெண் பூ....ஓசூர் அருகே இவள் குடும்பம் சென்ற காருடன் லாரி மோதியதால்...அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனாள் தாயுடன்...அந்த தந்தை பித்து புடித்து உர்க்காந்து இருந்தார் அந்த வீட்டில்!)...அதோடு என் பாதை மாறியது.....


மூணாவது மூர்த்தியாக மாயையாகி நின்றாள்..........

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

36 comments:

சி.பி.செந்தில்குமார் said...

என்னது? தக்காளி சின்சியரா லவ் பண்ணீ இருக்கானா? அம்புட்டு நல்லவனா அவன்?

சசிகுமார் said...

மாப்ள உன் கிட்ட புடிக்காததே இது தான் ஜாலிய சொல்லிகிட்டே வந்து கடைசியில அழ வச்சிடுற கடைய விட்டு போகும் பொழுது கணத்த மனதோடு போக வேண்டியதா இருக்கு...

தமிழ்வாசி - Prakash said...

அவர்களையும் தாண்டி இவள் என் வாழ்கையில் புகுந்தாள்...அதுவரை காட்டாறு கணக்காக ஓடிக்கொண்டு இருந்த நான்(!)...கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக ஆரம்பித்தேன்...அதுவரை உடுத்தும் உடையில் கூட நேர்த்தி இல்லாமல் அலையும் முடியுடன் திரிந்து கொண்டிருந்தவன் உடையை நேர்த்தி செய்கிறான் ///

ஆகா.. காதல் வந்தாலே மாம்ஸ்க்கு தமிழ் விளையாடுதே...

தமிழ்வாசி - Prakash said...

ச்சே ச்சே(அத கேக்க தானே 30 கீமீ தாண்டி ஓசி பைக் எடுத்து கிட்டு வந்து இருக்கேன்!)///

அப்பவும் விக்கி பிராக்கெட் போடறாரே...

தமிழ்வாசி - Prakash said...

(அப்ப கூட நான் உன்னை விரும்புறேன்னு சொல்ல வராத ஈகோவில் இடி விழ!)///

காதல்ல ஈகோ இருக்க கூடாதே

தமிழ்வாசி - Prakash said...

இதோ இங்க நாம வந்து இருக்கறதே அதுக்குத்தான்....(அதே Drive In!)//

ராசியான drive in

தமிழ்வாசி - Prakash said...

அவள் முகம் சிவந்தாள்....இப்போ என்னதான் சொல்ல வரீங்க...yes or no...

எஸ்ஸு..எஸ்ஸு////

பட்சி சிக்கிடுச்சு...

தமிழ்வாசி - Prakash said...

முதல்ல நல்ல உத்தியோகம் தான் புருஷ லட்சணம்...என்ன நான் சொல்றது....///

அச்சச்சோ...

தமிழ்வாசி - Prakash said...

மிகவும் மனது கனக்கிறது....

தமிழ்வாசி - Prakash said...

அவள் வீடு இருந்த புரசை வாக்கத்துக்கு ஓடினேன் நண்பர்களுடன்...அங்கே...சவமாக உருக்குலைந்து கிடந்தது அந்த பெண் பூ....///

மாம்ஸ்... அதிர்ந்தேன்... கடைசில இப்படி....

செங்கோவி said...

அடப்பாவமே!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள பதிவின் கடைசி மனதை நெகிழ வைக்குது மாப்ள..

MANO நாஞ்சில் மனோ said...

என்னை நாரடிச்சிருவியோன்னு பயந்து போனேன் ஹி ஹி தப்பிச்சிட்டேன்....

MANO நாஞ்சில் மனோ said...

அட காமடியா சொல்றான்னு நினச்சா, நெஞ்சை கசக்கிட்டியே மக்கா.....

MANO நாஞ்சில் மனோ said...

இந்த காதல் மட்டும் ஜெயிச்சி இருந்தா தக்காளி குண்டடியும் பட்டுருக்கமாட்டான், வியட்னாமும் சந்தோசமா இருந்திருக்கும் ம்ஹும்...

கும்மாச்சி said...

ஐயோ பாவம், வர்ஷினி மறைவு கலங்கடிக்கிறது.

NAAI-NAKKS said...

ITHU NADANTHATHAL THAN IPPA NEENGA IPPADI IRUKKEEINGA !!!ATHAIUM YOCIKKAVUM !!!

நிரூபன் said...

மனசைக் கனக்க வைக்கும் பதிவு.

நெஞ்சை நெருடுகின்றது.

suryajeeva said...

சார், சூப்பர்.. கதை தானே... உண்மை சம்பவம் இல்லையே..

சென்னை பித்தன் said...

கதையோ.நிஜமோ,எதுவாயினும் மனத்தை வலிக்க வைத்தது நிஜம்!

Powder Star - Dr. ஐடியாமணி said...

சார், ரொம்ப ஃபீலிங்கா இருக்குது சார்!

அம்பாளடியாள் said...

(அடுத்த ரெண்டு நாள் கழித்து நண்பன் ஓடி வந்து விஷயம் சொன்னான்...அவள் வீடு இருந்த புரசை வாக்கத்துக்கு ஓடினேன் நண்பர்களுடன்...அங்கே...சவமாக உருக்குலைந்து கிடந்தது அந்த பெண் பூ....ஓசூர் அருகே இவள் குடும்பம் சென்ற காருடன் லாரி மோதியதால்...அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனாள் தாயுடன்...அந்த தந்தை பித்து புடித்து உர்க்காந்து இருந்தார் அந்த வீட்டில்!)...அதோடு என் பாதை மாறியது.....

மனசு வலிக்குதே ......மிகுதியையும் விரைவில் சொல்லுங்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ........

ரம்மி said...

ஒவ்வொரு நிறைவேறாக் காதலின் பின்னும் ஏதோ சோகம் ஒளிந்திருக்கிறது!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

கார்த்தி கேயனி said...

நிஜமா தான் சொல்றீங்களா

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

பாலா படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு..

இது நிஜம்ன்னா என்னுடைய அனுதாபங்கள்...

ஜீ... said...

என்ன மாம்ஸ்! ஜாலியா சொல்லிட்டு வந்து கடைசில இப்பிடி தலைல 'ணங்'னு போடுறீங்க!

Ramani said...

மனத்தை மிகவும் சங்கடப்படுத்திப்போகுது பதிவு
காதல் நிறைவேறவில்லை என்றால் கூட
எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்திப் போகலாம்
இதுபோன்ற சோகத்தை எப்படி தாங்கிக் கொள்வது?
த.ம 15

shanmugavel said...

நல்லாருக்கே சார்.இது மாதிரி அனுபவம் நிறைய எழுதுங்க!

மாய உலகம் said...

மாம்ஸ் ... மனம் கனக்க வைத்த பதிவு... முகம் வாடி விட்டது

காட்டான் said...

மனச கனக்க வைச்சிட்டீங்க கடைசியில..

நாய்க்குட்டி மனசு said...

உடையில் கூட நேர்த்தி இல்லாமல் அலையும் முடியுடன் திரிந்து கொண்டிருந்தவன் உடையை நேர்த்தி செய்கிறான் என்றால்(!)...அவன் எங்கேயோ சிக்கி விட்டான் என்பதை எளிதில் கண்டு பிடித்து விடுவார்கள் //
எனக்கும் என் கணவருக்கும் ஒரு காலத்தில் இது பெரிய விளையாட்டாகவே இருந்தது. உடை மாற்றத்தை வைத்து காதல் வலையில் விழுந்த பறவைகளை குறித்து வைப்போம் அதன் பின் தான் விஷயமே கசிய ஆரம்பிக்கும்.
முடிவு மலையாளப் பட ஸ்டைலில்

சீனுவாசன்.கு said...

(அலையும் முடியுடன் திரிந்து கொண்டிருந்தவன்)
உனக்கு முடி இருக்குதா பாஸ்!
போட்டோ பார்த்தா அப்பிடி தெர்ல!...

ரெவெரி said...

மனத்தை வலிக்க வைத்தது...

தனிமரம் said...

மனதை தொட்ட வலி விக்கியண்ணா!

M.R said...

சுவாரஸ்யமாக படித்து வந்தேன்

திடீரென அதிர்ச்சி ,ஜீரனிக்க முடிய வில்லை .

மனதில் கல் வந்து அடைத்தது போல் இருந்தது

பிரிந்தாலே மனம் வலியால் துடிக்கும்

நிரந்தர பிரிவு ????????????

கண்ணீருடன் ...சாரி மாம்ஸ்