Followers

Monday, September 19, 2011

ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிச்சா என்ன...?
வணக்கம் நண்பர்களே....கடந்த அரைவாரத்திற்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்....

கொஞ்ச நாளைக்கு முன்னே இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்றதற்கு சில ஆயிரங்கள் பரிசுத்தொகையா அறிவிச்சது இந்திய ஹாக்கி நிர்வாகம்...அதற்க்கு அவ்வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து பரிசுத்தொகையை வாங்க மறுத்தனர்...

அதே நேரம் இந்திய கிரிக்கெட் அணிக்கு அள்ளி கொடுக்கும் நிர்வாகத்தினர்(!) தேசிய விளையாட்டுக்கு கிள்ளி கொடுக்க கூட விரும்ப வில்லை என்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது....நல்லா விளையாடினால் தலையில் தூக்கி வைத்துக்கொள்வதும், இல்லையென்றால் கீழே போட்டு மிதிப்பதும் ஒரு புறம் இருந்தாலும்...பணம் என்று வரும்போது வீடு தருவது, அள்ளி அள்ளி கரன்சிகளை தருவது போதாது என்று வரி விலக்கும் கொடுத்து இவர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கி விட்டு அவர்களை போய் குனி நிமிர் என்றால் நடக்குமா....

சாதாரண ஒரு மனிதனுக்கு ஒரு கோடி பணம் கிடைத்தால் என்ன செய்வான்...ஹாயாக வாழவே முயற்சி செய்வான்...அதை விடுத்து அவனை முன்பை போல் வேலை செய் என்றால் அவனுக்கு செய்யதோன்றுமா....அதே போலத்தான் இந்த மனிதர்களும்....அவர்தம் விளையாட்டுக்கு சம்பளமாக கொடுப்பது தவித்து விளம்பரங்கள் மூலம் அள்ளுபவை ஏராளம்....தங்களின் இந்த நிலையை நிலைத்து நிற்க வைக்கவே தொடர்ந்து அணியில் ஒட்டிகொண்டு இருக்கிறார்கள்....

தொழில் ரீதியாக விளையாடுபவர்களுக்கு அதுவே தொழில், விளையாட்டு எல்லாம்...அதே நேரத்தில் உலகத்திலேயே அதிக பணக்கார கிரிக்கெட் நிர்வாகம் இந்தியாவினுடையது தான்....அரசு நினைத்தாலும் இன்று வரை ஒரு பெரிய தாத்தாவின் ச்சே தாதாவின் பின் நின்று கொண்டு மங்காத்தா ஆடி வருகிறது....


இதை தடுப்பது முடியாத காரியமாக இருந்தாலும்(!)...முடிந்தவரை குறைக்கவாவது முயற்சிக்க வேண்டும் என்பது பலரின் அவா....அதுவும் இவர்களை வீரர்கள் என்று விளிப்பது இன்னும் கொடூரம்...ஒரு பந்தை லாவகமாக பயன் படுத்த தெரியாத இவர்களா வீரர்கள்...என்ன கொடுமைய்யா இது....எதிர் நிக்கறவன் வேகமா பந்து போட்டாலே ஓடி ஒளிந்து கொள்ள முயல்பவர்களை விளையாட்டில் மட்டுமே பார்ப்பது சிறப்பு....நல்ல வேலை இவர்களுக்கு பரம் வீர் சக்ரா கொடுக்கணும்னு இதுவரை யாரும் கேற்க்கவில்லை....


இதுவரை வெற்றிகளை குவிக்கும்போது தேவைக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு எப்படி அள்ளி கொடுக்கப்பட்டதோ...அதே போல தோற்று ஓடி வரும்போது அபராதம் விதிப்பதே சரியான அணுகுமுறை....அதுவும் கொஞ்சம் பத்தாது இவர்கள் ஒவ்வொருத்தருக்கும் "ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிச்சா என்ன...?"

கொசுறு: கொசுறு சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைக்கு கும்மி அடிக்கறவங்க அடிக்கலாம்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

32 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

நியாயமான கோவம்...

ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்தால் எல்லாம் சரியாகிவிடும்....

சி.பி.செந்தில்குமார் said...

காலங்காத்தாலயே மிரட்டல் மெயில் அனுப்பும் தம்பி விக்கியை மென்மையாக கண்டிக்கிறேன்

சேட்டைக்காரன் said...

ஹாக்கிக்கு நேர்ந்த சோதனை ஒரு புறம். பயிற்சிக்காக போன பூப்பந்தாட்ட வீரர்கள், தங்க சரியான வசதி செய்து தரப்படாததால், அவர்கள் ஒரு குருத்வாராவில் தங்க வைக்கப்பட்டார்களாம். என்ன கொடுமை இது?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு .

Real Santhanam Fanz said...

விடுங்க சார், நம்மாளுக திருந்திடவா போறாங்க?

மதுரன் said...

கிரிக்கட்டா.... அப்பிடின்னா ஓட்டு மட்டும்தான்

ஷீ-நிசி said...

இதுவும் நல்ல யோசனையாத்தான் இருக்கு....

வெளங்காதவன் said...

:)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கண்டிப்பா?
நீ எப்பவுமே கரெக்ட் மாப்ள..

தமிழ்வாசி - Prakash said...

yes sir. TM voted

FOOD said...

கோபம் நியாயம். ஆனா, இதெல்லாம் சாத்தியப்படுமோ! சாத்தியப்படத்தான் விட்டிடுவாங்களா?

அம்பாளடியாள் said...

எதிர் நிக்கறவன் வேகமா பந்து போட்டாலே ஓடி ஒளிந்து கொள்ள முயல்பவர்களை விளையாட்டில் மட்டுமே பார்ப்பது சிறப்பு....நல்ல வேலை இவர்களுக்கு பரம் வீர் சக்ரா கொடுக்கணும்னு இதுவரை யாரும் கேற்க்கவில்லை....
ஆகா இப்படிக்கூட யோசித்துவிட்டீர்களா ?....அருமை ..வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ...

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 10

♔ம.தி.சுதா♔ said...

இந்திய கிரிக்கேட் ஒரு வர்த்தக நிறுவனமாக மட்டுமே இப்போது இருக்கிறது.

வீரார்கள் ஆடுகளத்தில் அடுத்தது எந்த விளம்பரத்தில் நடிக்கலாம் எனத் தான் சிந்தித்தபடி நிற்கிறார்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

suryajeeva said...

சூதாட்டம் புகுந்து விளையாடுது சாமியோ.. உள்ளே வெளியே ஆட்டத்துக்கு எல்லாம் இப்படி புலம்பினா என்னன்னு சொல்றது..

Yoga.s.FR said...

பொறாம,பொறாம தானே இது?

MANO நாஞ்சில் மனோ said...

நானும் உன் பக்கத்து வீட்டு சைனாக்காரனும் ஒன்னு, ஹி ஹி ஒன்னுமே புரியாது...

MANO நாஞ்சில் மனோ said...

நமக்கு கிரிக்கெட்டும் தெரியாது ஒரு மண்ணும் புரியவும் செய்யாது ஆளை விடுங்கடா சாமீ.....

வைரை சதிஷ் said...

உங்கள் கோபம் நியாயமானது தான்
நாம் கோபப்பட்டு என்ன செய்ய முடியும்

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
காலங்காத்தாலயே மிரட்டல் மெயில் அனுப்பும் தம்பி விக்கியை மென்மையாக கண்டிக்கிறேன்//


ஏண்டா பரதேசி, நீ மட்டும் மிரட்டல் மெயில் அனுப்புறது இல்லையாக்கும்????

புலவர் சா இராமாநுசம் said...

நியாமான கேள்வி
ஒருகோடி என்ன பல கோடி
போடவேண்டும்
செயிவார்களா ?

புலவர் சா இராமாநுசம்

Powder Star - Dr. ஐடியாமணி said...

நியாயமான, கோபம்தான்!

ஸாதிகா said...

//
இதுவரை வெற்றிகளை குவிக்கும்போது தேவைக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு எப்படி அள்ளி கொடுக்கப்பட்டதோ...அதே போல தோற்று ஓடி வரும்போது அபராதம் விதிப்பதே சரியான அணுகுமுறை....அதுவும் கொஞ்சம் பத்தாது இவர்கள் ஒவ்வொருத்தருக்கும் "ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிச்சா என்ன...?"
// அருமையான யோசனையாக உள்ளதே!!!

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

உங்க ஆதங்கம் நியாயமானது விக்கி

ஆனா 10 பொம்பளைங்க 1 மாசத்துல ஒரு குழந்தையை பெற்று எடுக்க முடியுமா?

இல்லை ஒரு கழுதைக்கு 9 மாசம் டைம் குடுத்தாலும் மனுஷ குட்டி போடுமா?

இல்லை தானே அது மாதிரி தப்பான ஒரு டீமை தேர்ந்தெடுத்து அனுப்பிட்டு ஐயோ அம்மான்னு கத்துன எப்பிடி?

கந்தசாமி. said...

இதுவரை வெற்றிகளை குவிக்கும்போது தேவைக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு எப்படி அள்ளி கொடுக்கப்பட்டதோ...அதே போல தோற்று ஓடி வரும்போது அபராதம் விதிப்பதே சரியான அணுகுமுறை/// அப்புறம் எவனும் கிரிக்கெட் விளையாட வரமாட்டான் பாஸ் ))

gopinath said...

நியாயமான கோவம்...ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்தால் எல்லாம் சரியாகிவிடும்....

Speed Master said...

கரக்டா சொன்னீங்க

அன்பு நண்பர்களே உதவி தேவை
http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

சசிகுமார் said...

உண்மைய சொன்னா மைனஸ் ஓட்டு போடுறாங்க என்னடா உலகம் இது

இராஜராஜேஸ்வரி said...

யோசனைக்குப் பாராட்டுக்கள்.

ரம்மி said...

மாம்ஸ்! நல்ல கருத்த சொன்னீங்க!

மாய உலகம் said...

மாம்ஸ்.. கிரிக்கெட்டா மாம்ஸ் அப்படின்னா ஓட்டு மட்டுந்தான்.. வாழ்த்துக்கள்

ரெவெரி said...

நியாயமான கோவம்...