Followers

Friday, September 2, 2011

ஆமை புகுந்த இடம்! - வியத்னாம்(once again!)


வணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூகோளம் சொல்லத்தேவயில்ல விடுங்க..............


விஷயம் என்னன்னா இந்த வாரம் இங்க ஆமை வாரம்.............அதாவது இங்க இருக்க ஏரில இருக்க ஆமைக்கு உடல் நலத்துக்காக மருந்து கொடுத்து காப்பாற்றும் வாரம் இது...............இந்த ஊருக்கு இன்னொரு பேரு ஏரி நகரம்(தக்காளி நம்ம ஊருல இருந்த ஏரிகள் எல்லாம் இப்போ எங்கப்பா ஹி ஹி!)

                                               ஏரிக்கு நடுவில் இருக்கும் புனித இடம்


இன்னைக்கு அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன்(உதவியாளினி கூட்டிக்கிட்டுதான்!)....................சும்மா சொல்லக்கூடாது.......என்னமா உதவி பண்றாங்க அந்த வாயிருந்தும் பேசாத ஜீவனுக்கு...........


இந்த ஆமைக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு..............ரொம்ப வருசத்துக்கு முன்னால(கோட்டுவால்லாம் விடக்கூடாது சரியா ஹி ஹி!) லீ லோய் ன்னு ஒரு ராசா இந்த நாட்ட ஆண்டுக்கிட்டு இருந்திருக்காரு..............பல நூற்றாண்டுகள் போராடியும் சீனா கிட்ட இருந்து இவங்களுக்கு சுதந்திரம் கிடைக்கல...............அப்போ ஒரு நாளு இந்த ஏரில அவரு குளிச்சிட்டு இருக்கும் போது ஒரு வாள் அவர நோக்கி வந்துதாம்..............அந்த வாள ஒரு ஆமை வாயில கவ்விட்டு வந்து இவரு கிட்ட கொடுத்துதாம்...........


அந்த வாள கொடுத்துட்டு ஆமையார் ஏரிக்குள்ள போயிட்டாராம்..........அந்த வாள எடுத்துக்கிட்டு போருக்கு போன போது அரசர் போர்ல ஜெயிசிட்டாராம்.........சீனாவும் இவங்களோட அரசாங்கத்த அறிவிச்சிடுசாம்...........


திரும்பி வந்த ராசா மறுபடியும் இந்த ஏரிக்குள்ள போயிருக்காரு...........அவருடைய வாள் காணாம போயிருச்சாம்........எவ்ளோவோ தேடிப்பாத்தும் கெடைக்கல..........அதிலிருந்து இந்த ஏரி புனித ஏரியா அறிவிக்கப்பட்டது.............அந்த ஆமை 1967 இறந்துட்டதாகவும், அத இந்த இடத்துல பாடம் செய்ஞ்சி வச்சி இருக்காங்க(200 கிலோவாம் மற்றும் இதன் அகலம் 6 அடி 3 அங்குலம்)....

ஆனா அதுக்கப்புறம் இன்னொரு ஆமை இங்க வாழ்ந்து வருது அதே ஏரில அதத்தான் நீங்க பாக்குறீங்க..............


இந்த ஆமைக்கு உடல்ல பல இடங்கள்ள காயங்கள் காணப்படுது(வயசானாலே பிரச்னைதான்!)...........அந்த காயங்கள குணப்படுத்தும் மருந்துகள் தடவி விடுறாங்க...........


கொசுறு: ஆமை புகுந்த நாடு நல்லா இருக்கு,,,

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

22 comments:

Ramani said...

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு
நம்பிக்கையூட்டும் புனைக்கதைகள்
படமும் பதிவும் அருமை
வித்தியாசமான தகவலை
படங்களுடன் சிறப்பான பதிவாகத்
தந்தமைக்கு நன்றி

கந்தசாமி. said...

நல்ல குட்டி கதை ))

மகேந்திரன் said...

அட ... இதுகூட நல்லா இருக்கே
ஆமை புகுந்த வீடு நல்லா இருக்கு (புதுமொழி)

ஆமை கதை சூப்பர் மாம்ஸ்.

மகேந்திரன் said...

தமிழ்மணம் 1

செங்கோவி said...

மாப்ள..உண்மையிலேயே உருப்படியான பதிவு..

அந்த ஏரி டூரிஸ்ட் ஸ்பாட்டா?..இல்லே இந்த ஒருவாரம் தான் கவனிக்கப்படுதா?

தனிமரம் said...

நல்ல குட்டிக்கதை மாப்பூ!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உயிர்களிடம் அன்பு வேண்டும் என உணர்த்துகிற பதிவு .

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல பதிவு விக்கி!!

ஆமைக்கெல்லாம் அங்கே உதவி பண்றாங்க ஆச்சரியம்.. மனுசாளுக்கு இன்னும் என்னென்ன உதவி எல்லாம் பண்ணுவாங்க..

அந்நியன் 2 said...

ஆமைக்கு கிடைக்கிற உதவியெல்லாம் இந்தியாவில் மனுசாளுக்கு கிடைக்கிறது இல்லை.

இதுதான் ஆமையோ?
பார்க்க முதலை மாதிரி இருக்கு!

தமிழ் மணமும் போட்டாச்சு என்பதை இங்கு சொல்லி கொள்கிறேன் காலம் கெட்டு கிடக்கிறது பாஸ் அதான் சொன்னேன்.

M.R said...

தமிழ் மணம் ஏழு

M.R said...

மாம்ஸ் அது என்னன்னா ஆமை புகுந்த வீடு என்றால்

பொறாமை இது புகுந்தால் முன்னேற்றத்தை தடுக்கும்.உறவை முறிக்கும் என்று சொன்னதுதான்

பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்

கார்த்தி கேயனி said...

நல்ல பகிர்வு

சி.பி.செந்தில்குமார் said...

உருப்பட மாதிரிதான்

மதுரன் said...

கொடுத்து வச்ச ஆமை

Lakshmi said...

இது என்ன புதுக்கதையா இருக்கே?

மாய உலகம் said...

ஆமை புகுந்த பதிவும் அருமையாகத்தான் இருக்கு மாம்ஸ்..தமிழ் மணம் 10

shanmugavel said...

ஆமை புகுந்த வீடு மட்டுமல்ல! பதிவும் நல்லாயிருக்கு!

நிரூபன் said...

வியட்னாமில் பராமரிக்கப்படும் செல்லமான ஆமை பற்றிய அசத்தலான பதிவு பாஸ்.

FOOD said...

வித்யாசமான தகவல் பகிர்வு. அசத்தல்.

FOOD said...

//இன்னைக்கு அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன்(உதவியாளினி கூட்டிக்கிட்டுதான்!)....................சும்மா சொல்லக்கூடாது.......என்னமா உதவி பண்றாங்க//
யாரு யாருக்கு?

சசிகுமார் said...

ஹா ஹா ஹா

ராஜா MVS said...

எல்லா உயிரையும் தன்னைப் போல் பாவிக்கும் மனம் வேண்டும்... மாம்ஸ்... அருமை...