Followers

Friday, April 1, 2011

மிரட்டப்பட்ட பதிவர்கள்(!?)

வணக்கம் நண்பர்களே..............புத்தன், இயேசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக தோழா பதிவர்கள் நமக்காக....................


தொலைபேசி அழைப்பு.................

ஹலோ அன்டர்வேர் பதிவரா.............

ஆமா என்னா வேணும்...............

நான் அய்யாவோட PA பேசுறேன்.............அவரும் நீங்க பேசுறத கேக்குறாரு.........

அதுக்கு என்னய்யா சொல்லு........

நீர் பதிவுகள்ல அசிங்க அசிங்கமா திட்டுறீரு அத நிப்பாட்டும் இல்லன்னா பெரிய அளவுக்கு பாதிக்கப்படுவீர்.............


எது பாதிக்கப்படுவேனா..........அடங்கோ........@#$%$#@#$#@#$$$##@$@###$#$%#$ போடாடேய்..........

யோவ் அந்த போன கட் பண்ணுய்யா அந்தாளு என்ன திட்ரான்னே புரியல.........ஆனா ஒன்னு புரியுது என் பரம்பர முழுசையும் கழுவி ஊத்திட்டான் ..........இனி நானே பேசிக்கிறேன்........

அடுத்த அழைப்பு............

ஹலோ.............

சொல்லு தக்காளி........

யோவ் நான் தக்காளி இல்ல அறிவாளி...........

ஹிஹி!.........உனக்கு எப்பவுமே தமாசுய்யா.............

யோவ் உன் பதிவுல சினிமா, கதை, காமடி போட்ட சரி அது என்ன இப்பெல்லாம் அரசியல் வாதிங்களப்பத்தி அதிகமா போடுறே..........முழுசா இருக்க மாட்டே.......நான் அரசியல் வாதிதான் பேசுறேன்..............


ஹலோ ஹலோ(பய புள்ள யாரு இது.......நம்பரே இல்லமா கால் வரும்போதே நெனச்சேன்..........பதிவுலகமா இருந்தா மன்னிப்பு கேட்டா உட்ருவாங்க......இது மிதியுலகமாச்சே சரி சமாளிப்போம்!)...........அண்ணே நீங்க பேசுறது சரியா கேக்கல என் போன்ல பேட்டரி வீக்கு(நானே வீக்கு!) அப்புறமா கூப்பிடுங்களேன்..........

யோவ் என்னய்யா தப்பிச்சிட்டான்........

அண்ணே விடுங்க அடுத்த ஆடப்புடிங்க அறுத்துடுவோம்.........

அடுத்த அழைப்பு............

ஹலோ ஜோசியரு இருக்காரா.............

நான் தான் பேசுறேன் சொல்லுங்க..........

நீர் எங்கள தாக்கி பதிவு போடுறத நிறுத்தும் இல்ல உன்ன தூக்க வேண்டி இருக்கும்...........நான் அரசியல்வாதி பேசுறேன்...........


டேய் பன்னாட அத நேர்ல வந்து பேசு அதுக்கெதுக்கு போன்ல நம்பர் வராம பதுங்கிகிட்டு பேசுற.......##############

யோவ் என்னய்யா இது இவனும் கண்ட மேனிக்கு திட்றான்...........

விடுங்கண்ணே அந்த மக்காக்கு போடுங்க..............

அடுத்த அழைப்பு............

யோவ் மக்கா நீர் என்ன எந்த அரசியல் பதிவுக்கு போனாலும் எங்கள திட்டியே பதில் போடுற முழுசா இருக்க வேணாமா.........நான் அரசியல்வாதி பேசுறேன்........

இங்க போன் பண்ண நேரத்துக்கு ஒரு புல்ல வாங்கி குடிச்சிட்டு மட்டயாயிருக்கலாம்ல பயம் போயிருக்கும்ல.........அத விட்டு புட்டு எனக்கு போன் போட்டு இன்னும் ஏன் நீர் பயப்படுறத ISD போட்டு சொல்லுறீரு ஹிஹி!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல முடியல!..............

அடுத்த அழைப்பு............

ஹலோ ரஸ்தாளி பதிவரா...............

ஆமாம் நீர் பதிவு மட்டும் எங்கள தாக்கி போட்டு புட்டு பதில் சொல்றதே இல்லையே என்ன விஷயம்..........இனிமே எங்கள தாக்கி பதிவு போடாதே சரியா..............நான் அரசியல்வாதி பேசுறேன்............

அண்ணே யாருன்னே நீங்க.......ரொம்ப நல்லவருன்னே நீங்க போய் வேற வேல இருந்தா பாருங்கண்ணே.........நான் முயற்சி பண்றேன்னே(போடா பன்னாட ஹிஹி!)............

சரியா நீயாவது மரியாதையா சொன்னியே நன்றி...........

அடுத்த அழைப்பு............

ஹலோ பக்கியா!

சொல்லுங்க.............

ஏன்டா டேய்.......என்னமோ நாங்க உன் வீட்ட கொள்ள அடிச்சா மாதிரி எங்கள எதிர்த்து பதிவு போட்டுட்டு இருக்கியே.........உசுரு போயிரும் ஜாக்கிரத...........நான் உசுரு எடுக்கும் அரசியல்வாதி தெரிஞ்சிக்க.............

அண்ணே நீங்கலான்னே.........சரிங்கண்ணே தெரியாம எழுதிப்புட்டேன்னே.......இனி தெரிஞ்சே எழுதறேன்னே ஹிஹி!.........போயா போயி உன்ன சேர்ந்தவளுக்கும் உன் கட்சி அல்லக்கைங்களுக்கும் சீன் காட்டு......நான் மாச சம்பளக்காரந்தான்........ஆனா எவன் வயித்திலையும் அடிச்சி புடுங்குற ஜாதி இல்ல உன்னைப்போல.........இனி இன்னொரு ஆளுக்கு போன் பண்ணா..........இதுவரைக்கும் மேலாக்க திட்டிட்டு இருக்காங்க அப்புறம் நிர்வாணப்படுத்தி திட்டுவாங்க ஜாக்கிரத...........

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது............

பய புள்ளைங்க கொஞ்சம் கூட பயப்பட மாட்டேன்குதேய்யா PA!


அண்ணே இவங்களால நமக்கு பாதிப்பு வராதுன்னே...........மிஞ்சி போனா ஒரு லட்சம் பேரு இந்தப்பதிவுகள பாப்பாங்களா..........நம்ம போய் மீதி இருக்க ஜனங்கள மிரட்டுவோம் ஹிஹி!...............

கொசுறு: தலைப்பு படி இல்லைன்னு சொல்ல வந்தேங்க ஹிஹி!...........

Post Comment