Followers

Monday, July 4, 2011

ஆத்தா மீண்டும் நீ பெய்லாக போறியா!

வணக்கம் நண்பர்களே.....



ஆத்தாவுக்கு வணக்கமுங்க....ஒரு பக்கியின் கடிதாசி இது...டைம் இருந்தா புடிங்க ச்சே படிங்க....

தாத்தாவும் அவரு பசங்களும் பண்ண ரவுசு தாங்க முடியாமத்தான் உங்கள கொண்டாந்து நாட்டாமையா உக்கார வச்சிருக்கோம்....கொஞ்சம் ஞாபம் வச்சிக்கோங்க...ஆத்தா!

இந்த முறையாவது கொஞ்சம் யோசிச்சி செயல் படுவீங்கன்னு நம்பித்தான் தூங்கிட்டு இருந்த உங்கள தண்ணிக்கு பதிலா பன்னீர் தெளிச்சி எழுப்பி கூப்பிட்டு வந்து உக்கார வச்சிருக்கோம்!


வந்ததுல இருந்து இன்னும் மின்சார பிரச்சனைய என்னான்னு கேட்டாபோல தெரியல...என்னாச்சி உங்களுக்கு எம்மாம் பெரிய தைரியசாலி நீங்க...அப்பேற்பட்ட அப்பா டக்கர எதிர்த்து சபையிலே தீர்மானம் ஏற்றவசீங்களே...பெருமையா இருந்தது...எங்க கிட்ட தமிழ் குமிழ்னு சொல்லி அரை நூற்றாண்டா கும்மியடிச்சிட்டு இருந்தவரோட உண்மையான முகம் தெரிய ஆர்ம்பிச்சதினாலதான் நீங்க மீண்டும்(மீண்டு!) வந்து இருக்கீங்க......

எதோ பாத்து செய்யுங்க...குயந்தைங்க படிப்பு வீணாப்போயிட்டு இருக்குது பாத்து செய்யுங்க...இங்க இருக்குறவங்க எல்லாம் உங்கள நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க...அதுவும் இல்லாம என்னை மாதிரி முட்டாப்பயலும் ஓட்டு போட்டு இருக்கேன்....


ரவுடிகள ஒழிக்கிறேன்னு இருக்குற மக்களை எல்லாம் ஒழிசிடப்போறீங்க பாத்து...உங்க முன்னாடி பம்முற மாதிரி நடிக்கிற வங்க எல்லாம் என்ன பண்றாங்கன்னு தனியார் ஆளுங்கள வச்சி பாக்குறீங்கன்னு தெரியுது...

அப்படியே இங்க குயந்தைங்க படிப்பையும் பாருங்க ஆத்தா...அதோ தெரியிது பாருங்க கோர்ட்டு...அங்க கூட கரண்ட்டு இல்லையாம்..பாத்து செய்யுங்க...எதோ தோணிச்சி சொல்லி புட்டேன்...


இப்படியே போனா நெறய மார்க்கெடுத்த ஆளு திடு திப்புன்னு தோத்தாப்போல இருக்கும்...பாத்துக்கங்க..

கொசுறு: அய்யாமாரே அம்மாமாரே...நல்ல புள்ளைங்களா வந்து பழைய பதிவுகளுக்கு தமிழ்மணத்துல ஓட்ட குத்திட்டு போங்க...இதையாவது முழு மனசோட செய்யுங்கப்பா..! 

Post Comment