வணக்கம் நண்பர்களே....
சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து சிறுசா இருக்கையில் திருத்திக்கோ...தெரிஞ்சும் தெரியாமா நடந்திருந்தா அது திரும்பவும் வராம பாத்துக்கோ!...
வாய்யா மானிட்டரு...எப்படிய்யா இருக்க!
மானிட்டர்: நல்லா இருக்கேன் நண்பா...ரொம்ப நாளா குடிக்கறுது இல்ல அதனால உடம்பு இப்போ நல்லா இருக்கு.....
குவா: பாட்டெல்லாம் அமக்கலப்படுதே என்னா விஷயம்.....
மானி: இப்போ நடக்குதே அதான் விஷயம்....
குவா: அப்படி என்னய்யா பெருசா நடந்து போச்சி....அதான் கூப்பாடு போட்டு எங்க தலீவன தூக்கி புட்டீங்க இல்ல...அப்புறம் என்ன இப்போ தேனாறு ஓடுதோ!...
மானிட்டர்: அதத்தான்யா சொல்ல வந்தேன்...மாமிக்கு பெரிய அவமானமா பூடுச்சாம்...அதனால இந்த படிப்பு மேட்டர மேல் கோர்ட்டுக்கு அனுப்பி இருக்காங்க...ஆனா அங்க பாரு...முதல்ல நோட்டு புக்க கொடுத்து புட்டு வைட் பண்ணு(!) அடுத்து என்ன பண்றதுன்னு யோசிச்சி சொல்லுரோம்னுட்டாங்க....
குவா: ஆமாம்யா....மூக்கு உடஞ்சி போச்சி...இப்போ என்ன பண்ணப்போறாங்களாம்...
மானிட்டர்: அதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்க நம்ம சனம் இருக்கு இல்ல....போக்கு காட்டிகிட்டே ரொம்ப நாள் இருக்க முடியாது...பாப்போம்!..
குவா: என்னதான் அடி பட்டாலும்.....அஞ்சில வளையாதது ஐநூறுல கூட வளயாதுய்யா....சரி அப்படி என்னதான் மேட்டர்..
மானிட்டர்: அதாவது....ஒரு ஆளு என்னடான்னா மொழி விஷயத்த காட்டியே மக்களை கொலையா கொல்லுறான்....இன்னொரு பக்கம் என்னடான்னா.... நீங்க ஏன் படிச்சி பெரிய ஆளா வர்றீங்க....பணக்காரனும் நீயும் ஒண்ணா(!)....ஓட்டு போட மட்டும் தான் நீ வேணும்(!) அப்படின்னு நெனைக்கிற கூட்டம்!....நல்லது நடக்கும்னு நம்புவோம்...மத்தியிலயும் கோர்ட்டு தான் நாட்ட ஆளுது...இங்கயும் ஆரம்பிச்சாச்சி...
குவா: ஆமா, என்ன கொடுமைய்யா....நம்ம சின்ன மேடத்துக்கு பெயிலே கொடுக்க மாட்டேங்குறாங்களே....
மானி: ஒரு வேல செக்குழுத்த செம்மலின்னு ஏதாவது விருது கொடுத்த அப்புறம்தான் வெளிய விடுவாங்களோ என்னமோ....ஆனா ஒன்னுய்யா....கஷ்டப்பட்டு உழைச்சி சாபிடுற நாம பெரிய சொகுசு வாழ வாழலைன்னாலும், தலைக்கு கை வச்சி நிம்மதியா தூங்குறோம்...இதுங்கள பாரு....கோடி கணக்குல ஆட்டைய போட்டு புட்டு அங்க போய் தூக்கம் வராம கஷ்டப்படுதுங்க....
குவா: இதுல இருந்து என்ன சொல்ல வர்ற....
மானி: ஒரு புடி சோறு தின்னாலும் சொந்த உழைப்புல துன்னனும்...இந்த மாதிரி அடுத்தவங்க உழைப்ப புடுங்கி தின்ன இப்படிதான் நடக்கும்னு சொல்லறேன்...
குவா: ரொம்ப தான் அட்வைசு பண்ண ஆரம்பிச்சிட்டே....அது சரி பாண்டியார் தேடி போலிஸ் சுத்துதாமே....
மானி: அந்த கதைய ஏன் கேக்குற...அந்தாளு கொஞ்ச நஞ்சமா நிலங்கள ஆட்டைய போட்டாரு...இப்போ அதான் மக்கள் அவருக்கு எதிரா புகார் கொடுத்து கிட்டு வர்றாங்க....தலை முதல் கால்வரை பிரச்சன தான்!....
குவா: ஆமாம்யா...மீனாட்சி ஊர்ல கூட....ப்ளெக்ஸ் பேனரோட ஆளுங்கள போலீஸ் சுத்தி சுத்தி புடிச்சி உள்ள போட்டு கிட்டு இருக்காமே.....
மானி: தென்னைய பெத்தா இளநீரு புள்ளைய பெத்தா கண்ணீருன்னு சும்மாவா சொன்னாங்க....நாமெல்லாம் ஒன்னு பெத்து புட்டு இவ்ளோ யோசிக்கிறோம்...அவரு ஊருக்கு ஒன்னு பெத்து வச்சி இருக்காரு எவ்ளோ யோசிக்கணும்!....
குவா: எவ்ளோ வாங்குனாலும் தாங்குறாரே.....
மானி: அடப்பாவமே உனக்கு தெரியாதாய்யா...அவரு இப்போ கைப்புள்ள மாதிரி...யாரு வேணா போட்டு தாக்குவாங்க...இதுல வேற குடும்பத்துக்குள்ள பெரிய குத்து வெட்டு நடக்குது...யாரு எப்போ யார பழி தீப்பாங்கன்னு தெரியாம...உடன் பருப்புக ச்சே உடன் பிறப்புகள் டாஸ்மாக்குல பந்தயம் கட்டிக்கிட்டு திரியிராங்கலாம்....
குவா: எங்கய்யா அந்த மானமுள்ள மனுசன காணோம்!
மானி: அவரு இப்போ அந்த டீவில குந்திகிட்டு சரியான பாதையில தான் புது இயந்திரம் போயிட்டு இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு!
குவா: ஆமா அந்த ப்ளாக் டைசன் தானே இப்போ எதிர் தலைவரு...என்னய்யா பேச்சையே காணோம்!..
மானி: எங்க பேசுனா...போனமுறை உங்க தலீவருக்கு ஆனாப்போல தூக்கிட்டு பூடுவாங்கலோன்னு பயந்திட்டாரு போல!...
குவா: இது வேறயா.....அம்புட்டு பிரச்சனையா!...சரி விடு நமக்கெதுக்கு பெரிய இடத்து பொல்லாப்பு...சரிய்யா சினிமா விஷயம் சொல்லு...........
டவுட்டு: தாண்டவக்கோனே படம் பட்டய கிளப்புமாமே!
நெசம்: ஆமாம் மக்களே...பாலா படம்போல இருக்குமாம்...(லேட்டஸ்ட் "லா" போல இல்லையாம் ஹிஹி!)
டவுட்டு : "லா" படம்னா துணி இல்லாம நடிப்பேன்னு "ஷால்" சொல்லி இருக்காராமே!
நெசம்: ஆமாமா....விட்ட இடத்த புடிசிட்டாறு இல்ல அப்படித்தான் சொல்லணும்!
டவுட்டு: சமீபத்துல சீயான் நடிப்புக்கு மத்திய அவார்டு கிடைக்குமாம்!
நெசம்: ஆனா அதுல அப்படியே அந்த வெளிநாட்டு நடிகர காப்பி அடிச்சி இருக்காராமே....அப்போ அந்த நடிகருக்கு இங்க விருது குடுப்பாங்களோ!
செய்தி: கல்வி விசயத்துல பொறுப்புடன் இருக்க வேண்டும் - மன்றம்
பன்ச்: யானை இன்னுமொரு தரம் சறுக்குமோ!
ஆரோக்கியசாமி சொல்றாரு:
செலரின்னு ஒரு கீரை வகை இருக்கு...இது ரத்த அழுத்தத்தை சரியாக்கும் கீரை...இதை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால்....உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் சிறுநீரக கற்கள் சம்மந்தப்பட்ட விஷயங்கள் அடியோடு சரியாகும்....
இந்த வார தத்துவம்:
( தேடல் இருக்கும் வரையே வாழ்கை )
இந்திய தில்லு:
வியட்நாமிய தில்லு:
கொசுறு: ஏன் என்ற கேள்வி...இங்கு கேட்காமல் வாழ்கை இல்லை!...நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை!..
