Followers

Friday, July 1, 2011

பெண்மை என்றாலே உழைப்புதானோ - வியட்நாம் (பெண் பார்வையில்!)

வணக்கம் உறவுகளே....


என்னதான் பெண்கள் உழைத்தாலும் அவர்களை மேலும் உழைக்க வைத்து பார்க்கிறது இந்த சமூகம். நான் இந்த ஊரில் கண்ட விஷயம் அதை மெய்பித்ததாக உள்ளது. 

பெண்கள் கருவுற்று இருந்தால் அதிர்வான வாகனங்களில் செல்ல வேண்டாம் என்று தடுப்பு போடும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். ஆனால் இந்த ஊர் பெண்கள் 8 மாத கர்ப்ப நிலையிலும் இரு சக்கர வண்டி ஓட்டி செல்வதை பார்த்து வியந்துவிட்டேன்.

இவர்களின் உழைப்பு சாதாரணமானதல்ல, நம் ஊரில் பெண்கள் கருவுற்ற பிறகு வேலை செய்வதை குறைத்து விடுகிறார்கள் (எல்லோரும் அல்ல!). அதிலும் குறிப்பாக உடல் பயிற்சி சிறிதேனும் தேவை என்பதை மறந்து விடுகிறார்கள்.


இங்கு 9 மாதம் வரை வேலைக்கு செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். நம் நாட்டில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல கர்ப்பிணி பெண்கள் விரும்புவதில்லை மற்றும் எவரும் அனுமதிப்பதில்லை. ஒரு புறம் குடும்ப பாரம், மறுபுறம் வயிற்றில் குழந்தை சுமந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள். 


இங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது வெகு குறைவு. என் கணவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் சகோதரி நேற்று எங்கள் வீட்டிற்கு வந்து இருந்தாள். அவள் ஒரு 7 மாத கர்பிணி மற்றும் அவள் இரு சக்கர வாகனத்தில் வந்து இருந்தது என்னை அதிர்சிக்குள்ளாக்கியது. அவளிடம் பேசும்போது பல விஷயங்களை புரிந்து கொண்டேன். அவளின் கணவருக்கு சொற்ப வருமானமாம். இருவர் இணைந்து உழைத்து கொண்டுவரும் பணமே போதவில்லை என்று கூறினாள்.


இங்கு 3 இலிருந்து 4 மாத விடுப்பே கொடுக்கப்படுமாம். எப்படி இருந்தாலும் அதிலும் பெண்கள் சுறுசுறுப்பு கலந்த ஈடுபாட்டுடன் வேலை புரிவதை கண்டு வியக்கிறேன். வேலை நேரத்தை முடிந்த வரை நேர்மையாக கழிக்கிறார்கள். ஆண்கள் பற்றி கவலை இல்லாமல் தங்களுக்கு தேவையான விஷயங்களை தங்களின் உழைப்பால் பெற்று கொள்கிறார்கள்.

என்ன இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் வாகனம் ஓட்டி செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

23 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாங்க... வாங்க...

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
என்ன இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் வாகனம் ஓட்டி செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!///////

என்ன இளகிய மனசு்....

அப்ப இன்னும் நீங்க வீட்டில்தான் இருக்கீறீர்களா..?

# கவிதை வீதி # சௌந்தர் said...

கர்ப்பிணி பெண்கள் அதிர்வு தரும் வேலைகளை செய்ய கூடாதுதான்..

இருந்தாலும் கடினமான வேலைகள் செய்தால் பிரசவம் எளிமையாக இருக்கும் என்பது கிராம வழக்கமாக இருக்கிறது...

கிராமங்களில் 9 மாதம் வரைககூட வீட்டு வேலைகளை செய்ய சொல்வார்கள்..
அதனால் தான் கிராமப்பகுதிகளில் 90 சதவீதம் சுகப்பிரசவம் ஆகிறது..

சசிகுமார் said...

//என்ன இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் வாகனம் ஓட்டி செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!//

எனக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

Mahan.Thamesh said...

என்ன இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் வாகனம் ஓட்டி செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!அதுவும் 7 மாத கர்பினியல்லவா கொஞ்சம் வருத்தம் தான்

Prabu Krishna said...

நல்ல உழைப்பாளிகள் தான். நம்ம ஊர்லயும் கிராமம்ல எல்லாம் இப்படிதானே.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Right

கந்தசாமி. said...

வறுமையின் கட்டாயத்தால் செய்கிறார்களா இல்லை ஆர்வக்கோளாறா?? ஏனெனில் கர்ப்ப காலத்திலே இது மிகவும் ஆபத்தானதாச்சே ..!!

FOOD said...

உழைப்பு என்றும் உயர்த்திடும். எனினும், கர்ப்பிணி பெண்கள்,இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

செங்கோவி said...

பாவம் அவர்களின் நிலைமை..!

குணசேகரன்... said...

ஆச்சர்யம் ஆனால் ஆபத்தும் உள்ளது

சி.பி.செந்தில்குமார் said...

தாய்க்குல திலகம் தக்காளி வாழ்க..

தமிழ்வாசி - Prakash said...

நம்ம ஊர்ல பொண்ணுகளை பொத்தி பொத்தி வளக்கறாங்க...

ஜீ... said...

ம்ம்ம்...என்ன சொல்றது?

THOPPITHOPPI said...

//என்ன இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் வாகனம் ஓட்டி செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!//

இப்படியெல்லாம் சொல்லக்கூடாது பெண்களால் முடியாதது எதுவும் இல்லை.ஹிஹி,,,,,,,

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
என்ன இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் வாகனம் ஓட்டி செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!
//

எனக்கும்தான்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான பார்வை விக்கி

♔ம.தி.சுதா♔ said...

////இங்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பது வெகு குறைவு.////

அப்ப பாசம் கூடவாக இருக்குமே....

நாய்க்குட்டி மனசு said...

என்ன இருந்தாலும் கர்ப்பிணி பெண்கள் வாகனம் ஓட்டி செல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!//unmai unmai

நிரூபன் said...

வியட்னாமியைப் புதுமைப் பெண்களைப் பற்றிய ஓர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

உண்மையில் தனி மனித உழைப்பின் மூலம் முன்னேறும் அவர்களின் முயற்சிக்கு ஒரு சல்யூட்.

Thangasivam B.Pharm,M.B.A,DPH said...

nice information

பன்னிக்குட்டி ராம்சாமி said...

9 மாசத்துல இருசக்கரவாகனம் ஓட்டுறதுன்னா கொஞ்சம் பகீர்னுதான் இருக்கு!
நான் காலேஜ் படிக்கும் போது எங்க ஸ்டாஃப் ஒருத்தர் 9 மாசம் வரைக்கும் வேலைக்கு வந்திட்டிருந்தாங்க, லீவு போடு 2 நாள்ல டெலிவரி ஆகிடுச்சு.....!

அ. வேல்முருகன் said...

நீங்களே சொல்லி விட்டீர்கள் இருவர் உழைத்தாலும் ஒன்றும் மிச்சமில்லைஎன்று, எங்கள் அலுவலகத்திலும் இதே நிலமை எட்டு மாதம் கடந்து வேலைக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆம் உழைக்க மனமிருப்பவர்கள் ஒய்வை விரும்ப மாட்டார்கள்