Followers

Saturday, July 30, 2011

மூணு மூனா சொல்லணுமாமே!

வணக்கம் நண்பர்களே.... நண்பர் tamilvaasi  அவர்கள்(பேரு மட்டும் தான் தமிழ் வாசி ஆனா ப்ளாக் பேரு ஆங்கிலத்துல ஹிஹி!)......முன்னுக்கு பின்னாக ச்சே மூணுக்கு மூணாக(moon அல்ல!) என்ற விஷயத்த தொடர அழைத்திருந்தார்.....எதோ எனக்கு தோன்றியவைகளை டைப்பறேன்...பாத்துக்கோங்கப்பா!(எங்கப்பா அல்ல!)

1. நான் விரும்பும் மூன்று விஷயங்கள்....?

    பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எந்த வித குறை பாடு இல்லாமல் பிறக்கவேண்டும் (அதுவே பெரிய சொத்து!)
 
    முடிந்த வரை அடுத்தவரை புண் படுத்தாத வார்த்தைகள் அடங்கிய பேச்சு!
    மனசாட்சியை கொல்லாத வாழ்கை!

     முன்கோபம் எனும் அரக்கனை குறைத்து வருவதால்.....முடிந்த வரை சர்ச்சையில் சிக்க கூடாது என்ற எண்ணம்.

2. விரும்பாத மூன்று விஷயங்கள்.....?

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர்!

    சபிக்கப்பட்ட ஜனநாயகம்

    என்னால முடியாது எனும் சொல்!


3. நான் பயப்படும் விஷயங்கள்....?

    கடவுள் = மனசாட்சி!

    அக்கா = இறந்துவிட்டாலும் அவள் அதிர்வுகள் இன்றும் இறக்கவில்லை!

     நேர்மை = எந்த நேரத்திலும் கொடுத்த வேலையில் தவறி விடக்கூடாது!(எந்த அளவுக்கு நிர்பந்தம் ஏற்பட்டாலும்!)

4. நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்....?

   புதிய பாதை

   சேகுவேரா - ஆங்கிலம்!

   நான் சிகப்பு மனிதன் 

5. நான் ரசித்த மூன்று பாடல்கள்....?

    வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா....

     நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.....

     நீ நான் சிவம்.....


6. எனக்கு பிடித்த மூன்று உணவுகள்....?

     அம்மா வைக்கும் மீன் குழம்பு
   
      மனைவி வைக்கும் சாம்பார்(ஐஸ் இல்லீங்கோ!)

      சிக்கன்(சொந்த சமையல்!)
     
7. இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?

    நம்பிக்கை

    மனைவி

    தேடல்

8. கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்...?

    பொறுமை (மனைவியிடம் இருந்து!)

     கம்பியூட்டர் பற்றிய விஷயங்கள்

      மொழிகள் (பல!)

9. கேட்க்க விரும்பாத மூன்று விஷயங்கள்...?

     அழுகை

     ஆணவமான பேச்சு

      துரோகம்


10. நான் பெருமையாய் நினைக்கும் மூன்று?

      திருமணம்

      நானா இப்படி(!)

      நண்பர்கள் (என் பதிலுக்காக காத்திருப்பார்கள்!)

11. எனக்கு புரியாத மூன்று விஷயம்...?

      வாழ்கை (என்றுமே புரியாத புதிர்!)

       பணத்துக்காக தொடரும் சொந்தங்கள்(!)

       இறந்தாலும் ஈகோ பார்க்கும் மக்கள்

12. வாழ்நாள் முடிவற்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயங்கள்......?

       உலகை சுற்றி வந்து விட வேண்டும்

       நல்ல அரசியல் வாதியாய் வர வேண்டும்!

        அறிவாளியான மானிட்டர்(!) மூர்த்தியை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும்(இப்போது மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறான்!)

13. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருள்கள்....?

      செல்போன்

      பர்ஸ்

      தண்ணீர் குவளை


14. தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று விஷயங்கள்....?

      மலேசிய சுற்றுலாவுக்கான முயற்சி

      குழந்தையின் வார இறுதி சுற்றுலாவுக்கான முயற்சி

       இந்தியாவுக்கு செல்ல முயற்சி

கொசுறு: என்னையும் மதித்து(!) தொடர் பதிவுக்கு அழைத்த திரு தமிழ்வாசி அவர்களுக்கு நன்றிகள்!


கொசுறு: பிரபலங்களுடன் எனக்கு ஏற்ப்பட்ட நேர்காணல்கள் விரைவில்! ..எதிர் பாருங்கள்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

36 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>முடிந்த வரை அடுத்தவரை புண் படுத்தாத வார்த்தைகள் அடங்கிய பேச்சு!
மனசாட்சியை கொல்லாத வாழ்கை!

விதிவிலக்காய் என்னை மட்டும் நக்கல் அடிப்பே தானே? ஹா ஹா

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

நன்பேண்டா..என்னத்தபண்றது நீ கேட்டு வாங்கிக்கற ஹிஹி!

வைகை said...

தக்காளி..அது எப்பிடியா நல்லவன் மாதிரியே நடிசிருக்க?

விக்கியுலகம் said...

@வைகை

மாப்ள கம்பனி ரகசியத்த வெளிய சொல்லாதய்யா ஹிஹி!

சசிகுமார் said...

மாப்ள ரொம்ப அருமையா சொல்லி இருக்க நல்ல அரசியல் வாதியாக வர வாழ்த்துக்கள்.

விக்கியுலகம் said...

@சசிகுமார்

வாழ்த்துக்களுக்கு நன்றி மாப்ள!

மாணவன் said...

சூப்பர் தல கலக்கிட்டீங்க....

வாழ்த்துக்கள் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நெஜமாவே ரொம்ப ஃபீல் பண்ணி மனம் திறந்து எழுதி இருக்கேய்யா மாப்ள.....!

கோகுல் said...

பர்ஸ்ட் பால்லையே சிக்ஸர்
கலக்குறிங்க!

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

அருமை அருமை..

உங்களை பற்றி சில விஷயங்கள் பகிர்ந்துள்ளீர்கள் நாங்களும் தெரிஞ்சு கிட்டோம்..

koodal bala said...

மொத்தத்துல .........எல்லாமே தூக்கல் !

நா.மணிவண்ணன் said...

சூப்பர்

sathish777 said...

பயந்தரும் ஸ்வாரஸ்யமான டிட் பிட்ஸ்

ஜீ... said...

பார்ரா! எல்லாம் சூப்பரா இருக்கே மாம்ஸ்! :-)

குணசேகரன்... said...

நல்ல அரசியல்வாதியாக வர எனது வாழ்த்துக்கள்.ஏற்பாடு நடக்குதா பாஸ்???

மைந்தன் சிவா said...

ஹிஹி பதிவில அடக்கம் அதிகமா இருக்கே....??

கந்தசாமி. said...

முத்தான மூன்றுகள் ....

கந்தசாமி. said...

////நல்ல அரசியல் வாதியாய் வர வேண்டும்!
/// பார்த்து பாஸ் ...வாழ்த்துக்கள் ))

# கவிதை வீதி # சௌந்தர் said...

அத்தனையும் ஜொலிக்கிறது...

நிலாமகள் said...

அத்தனையும் ஜொலிக்கிறது:-)

Rathnavel said...

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...

அடடா உங்களையும் மாட்டி விட்டுட்டாங்களா?...
இருதாலும் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் காரணம்
உங்களையும் அருமையான முத்துக்கள் எடுக்க வைத்துவிட்டார்களே!..
வாழ்த்துக்கள் தொடர்ந்தும் எழுதுங்கள்....

FOOD said...

முத்து முத்தாய் தொகுத்துள்ளீர்கள்.

FOOD said...

முத்து முத்தாய் தொகுத்துள்ளீர்கள்.

FOOD said...

முத்து முத்தாய் தொகுத்துள்ளீர்கள்.

FOOD said...

மூன்று முறை நானும் சொல்லிட்டேனா? ஹா ஹா ஹா.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கலக்கல் மூன்று முத்துக்கள்..

ஷீ-நிசி said...

பயோடேட்டா.... கலக்கல்

செங்கோவி said...

நீங்களும் எழுதிட்டீங்களா..அப்போ நான் தான் பாக்கியா?

! சிவகுமார் ! said...

//வாழ்நாள் முடிவற்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயங்கள்......?

உலகை சுற்றி வந்து விட வேண்டும்//

வேர்ல்ட் மேப் ஒண்ணை வாங்கி உடனே அதை சுத்தி சுத்தி வாங்க மாம்ஸ்!

பாலா said...

மாப்ள எல்லாமே சூப்பர்.

இறந்தாலும் ஈகோ பார்க்கும் மக்கள்// எங்க போயி சொல்றது?

! ஸ்பார்க் கார்த்தி @ said...

அன்பு நண்பரே !!! நான் கூகுல் மற்றும் பேஸ்புக்கில் புத்திதாக இணைந்துள்ளேன், எனக்கு அதன் ஆப்பரேட்டிங் தெரியவில்லை அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஏதாவது தளங்கள் உள்ளதா ஆம் எனில் அதன் லிங்க் தரவும்

நிரூபன் said...

வித்தியாசமான ரசனையினை வெளிப்படுத்துவதாக, முத்தான மூன்று விடயங்களை, வெவ்வேறு தலைப்பின் கீழ் பகிர்ந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.

ஈரோடு தங்கதுரை said...

அனைத்து மூன்றும் முத்துக்கள் போல ..! வாழ்த்துக்கள் ...!

தமிழ்வாசி - Prakash said...

azhaippai yetru ezhuthiya vikki thanks. ellaame super.

மாய உலகம் said...

//நல்ல அரசியல் வாதியாய் வர வேண்டும்!//

என் எதிர்கட்சியிடம் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.. அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்