Followers

Monday, July 25, 2011

கால்+ஏஜ் = காலேஜ் கலாட்டாக்கள்- 4 Updated

வணக்கம் நண்பர்களே.....


அந்த ரெஸ்டாரென்ட் ஸ்பேனர் ச்சே ஓனர் மிரட்டிய மிரட்டலில் நண்பன் தன் பைக்கை உதைத்து கிளம்பினான்....பத்து நிமிஷத்தில் வரேன்னு சொல்லி விட்டு சென்றவன் அரைமணி கழித்து வந்து பணத்தை கொடுத்தான்....அந்த அரைமணி நேரம் ஹிட்லரின் ஞாபகமே வந்தது எனக்கு....பெண்களை விட்டு விட்டு நம்மை கொண்டு போய் கும்மி விடுவானோ....

ஏன் மகா...இம்புட்டு கஷ்டப்படனுமா...ஒரு சைன கழட்டி கொடுத்து புட்டு பணத்த கொண்டாந்து கொடுத்திட்டு வாங்கிக்கலாம்ல என்றேன்.....வந்திருந்த நண்பிகள் யாருடைய சைனும் ஒரிஜினல் இல்லையாம்...(ஹிஹி!)


 வெளியில் வரும் பெண்கள் ஒரு சைனோ (சைனா அல்ல!) மோதிரமோ போட்டு வருவதில்லை கொய்யா பூசுங்க!.....எப்ப பாரு வெறும் கழுத்தோட சுத்துங்க....இல்லன்னா ஏதாவது போலியான விஷயங்களை கழுத்தில் போட்டு இருக்கும்!...இதில் மேரி எனும் நண்பி கையில் ஒரு தடித்த வளையல் போட்டு இருப்பாள்(!)...அது அடியாள்கள் போட்டு இருக்கும் வலயம் போன்று இருக்கும்...

எப்படியோ தின்னதற்க்கு பணத்தை கட்டிவிட்டு திரும்பி நடந்தோம்....

ஏன்டா...அர்னால்டு(!)...அந்தாளு உள்ள வச்சி கும்முறேன்ன உடனே மூஞ்சி எல்லாம் வெளிரிப்போச்சி....ஏன் இப்படி பயந்து சாகுற....- கீர்த்தி

ஏன் சொல்ல மாட்டே சண்டைன்னா பரவாயில்ல....தின்னதுக்கு துட்டு கொடுக்கலன்னா அவமானமா இல்ல...- நான்..

சரி விடு கெளம்புவோம் என்றாள் - மகா!

அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தேன்...அப்போது அந்த கம்யூட்டர் சென்டருக்கு அருகில் ஒரு நண்பனின் வீடு இருந்தது....அவன் பெரிய பணக்காரன்...ஆனால், வயதுக்கு தகுந்தாற்போல இல்லாமல் குழந்தை போல நடந்து கொள்வான்....அவன் அம்மா என்னிடம்....இவனை கொஞ்சம் பாத்துக்கப்பா இவனுக்கு உலகம் தெரியாது என்பாள்(!)....அதனால் நான் அவனுடன் நெருங்கிய நட்பு கொள்ள வேண்டி இருந்தது.....

ஒரு நாள் கிளாசில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தேன்....மாப்ள! என்ற குரல் கேட்டு திரும்பினேன்....அவன் நின்று கொண்டு இருந்தான்....

என்னடா...இன்னைக்கு கிளாசுக்கு வரலையா என்றேன்....


அவன் முகத்தில் ஒரு குரூர புன்னகை மின்னியது....ஒன்றும் புரியாமல் விழித்தேன்..அவனே பேசினான்...

வீட்டுக்கு வா....என்னை எல்லோரும் ஒன்னுத்துக்கும் உதவாதவன்னு சொன்னாங்களே நான் என்னெல்லாம் செய்ஞ்சிருக்கேன்னு காமிக்கிறேன் வா என்றான்!....


சரி என்ன பெரிசா செய்ஞ்சி இருக்கப்போறான்னு நெனச்சி கிளம்பி சென்றேன் அவன் வீட்டுக்கு!...அவன் வீடு அந்த பணக்காரர்களின் தெருவில் மின்னியது!....அதுவும் அவனின் தாய், தந்தை இருவரும் மருத்துவர்கள்....அவனின் பெரிய தந்தை பிரபல வக்கீல்!....அந்த வீட்டுக்கு சற்றும் சம்பந்த மில்லாத இந்த கருப்பு உருவத்தை அவன் அடிக்கடி அழைத்து செல்வது...அவன் தாயை தவிர யாருக்கும் பிடிப்பதில்லை...

அவனின் வற்புறுத்தல் காரணமாகவே நான் அங்கு வந்து சென்று கொண்டு இருந்தேன்!...அது ஒரு பெரிய கூட்டு குடும்பம்!


வீட்டுக்கு வந்த உடன் அவனை பார்த்து கேட்டேன்...என்னடா அப்படி செய்ஞ்சி கிழிச்சிட்டே இன்னைக்கு என்றேன்...அவன் அந்த அகல டிவி யில் அந்த காட்சிகளை வீடியோ டேபேரிக்காடரின் துணை கொண்டு ஓட விட்டான்...அதில் நான் கண்ட காட்சி.....என்னை அப்படியே உறைய வைத்தது...


அந்தக்காட்சியை பார்த்ததும் உறைந்து போனேன்....அந்த காட்சியில் இவனின் சித்தி(இவர்களும் ஒரு வக்கீல்!) இவனுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ந்து விட்டேன்....

ஏன்டா...இதெல்லாம் நல்லதா...இப்படி நடந்து கிட்டு இருக்கியே என்றேன்...


இதுக்கே இப்படி சொல்றியே இன்னும் கொஞ்சம் முன்னோக்கி(forward!) செய்யிறேன் பாரு என்று....மீண்டும் காட்சிகளை ஓட விட்டான்....பார்த்தால் அந்த சித்தியின் மகள் இவனுடன் அந்தக்காட்சியில்(!) இருக்கிறாள்....இதற்கும் அவளுக்கு இன்னும் இரு மாதங்களில் திருமணம் நடக்க இருக்கிறது(அப்போது!)....


என்னால் எதுவும் பேச முடிய வில்லை....வாயடைத்து போனேன்...பணக்கார குடும்பம் வெளி வேஷம்...தாங்கள் பெரிய இது என்று நினைத்து கொண்டு நான் வந்து சென்ற இடத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி தங்கள் குலத்தை(!) உயர்த்தி காட்டிக்கொள்ளும் செயல் என் கண்முன் வந்து சென்றது.....அந்த இரு பெண்களின் மேல் ஒரு வித அருவருப்பு தோன்றியது....


டேய்...என்னடா அவங்க தான் அப்படி நடந்து கிட்டாங்க நீ ஏன்டா அப்படி நடந்து கிட்ட - கேட்டது நான்!


ஏன்டா பெண்கள் அவங்களுக்கே கூச்சமில்ல என்ன வலுக்கட்டாயமா அவங்க ரூமுக்கு வரவச்சி தனி தனியா இப்படி நடந்துக்கிட்டாங்க...- என்றான் அவன்!


அது சரி இந்த கருமத்த எல்லாம் எப்படி வீடியோ பண்ணி வச்சிருக்க என்றேன்...


இதையும் அவர்கள் விருப்பத்துடன் தனி ரூமில் செட் செய்து விட்டு இருக்கின்றனர் என்பதை சுட்டி காட்டினான்....

டேய்....இவங்கல்லாம் பொம்பளைங்களா இல்ல உடல் வெறியர்களா என்றேன்!


நீ என்னமோ தப்புங்கறியே....தப்பா இருந்த அவங்க ஏன் இப்படி செய்ய சொல்லி என்ன வர்ப்புருத்துனாங்க சொல்லு என்றான்!......


எனக்கு பீதியாகிவிட்டது(பேதியல்ல!)......இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் இந்த காம குடும்பத்தில் நான் எதோ கையடக்க அடிமையாகி விடுவது போன்று தோன்றியது.....


டேய் ராஜா...நான் எதோ உங்க வீட்டுக்கு வர்றது சும்மா பொழுது போக்கத்தான்...அய்யயோ இந்த நிலமையில இருக்கா இந்த வீடு உட்ரா சாமி....என்றே எடுத்தேன் ஓட்டத்தை...


கொசுறு: இன்று இவன் ஒரு கம்பனிக்கு முதலாளி....அந்த பெண் ஒரு பெரிய வக்கீல்...இரண்டு பிள்ளைகளுக்கு தாய் அவள்....!.....என்னத்த சொல்ல....இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் நண்பர்களே!


தொடரும்.....

கொசுறு: இது பீலா கதைகள் அல்ல!....சந்திக்க(!) கூடாத விஷயங்களை அதிகமாக சந்தித்த ஒரு மாக்கானின் பார்வையின் பிரதிபலிப்பு!...
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

18 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நீ ஒரு கலாட்டாப்பேர்வழின்னு தான் ஊருக்கே தெரியுமே?

வலைஞன் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

ஜீ... said...

ஆகா! இதுக்கும் நீங்கதான் வசமா மாட்டினீங்களா? :-)

FOOD said...

அனுபவத்தொடர்கள் அருமை. சஸ்பென்ஸ் மட்டும் தாங்கல.

சங்கவி said...

மாப்ள கலக்கல் தொடர்....

சசிகுமார் said...

ஒரு கதையை கூட ஒழுங்கா சொல்லி முடிக்கல அதுக்குள்ள என்ன தொடரும்... சீக்கிரம் அப்படி என்ன தான் செஞ்சு வசிருக்காருன்னு பார்ப்போம்

ஈரோடு தங்கதுரை said...

கதையை எப்போ முடிபீங்க ...? அருமை .. வாழ்த்துக்கள்

தமிழ்வாசி - Prakash said...

கதை ரூட் மாறுதே... எப்படியோ ஓசியில பாத்துடிங்க...

! சிவகுமார் ! said...

கூட்டு குடும்பமா? குடும்பத்தலைவர் சமையல்காரரா?

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

உண்மை சில நேரம் கற்பனையை விட கொடூருமாய் தான் இருக்கும்...

அது சரி இன்னுமா அதை நீங்க மறக்கலை!!??

Ramani said...

படிக்கவே சங்கடமாய் இருக்கு
பார்க்க எப்படி இருக்கும்
கதையல்ல நிஜம் என வேற
பயமுறுத்துறீங்க...
வித்தியாசமான அனுபவம் எனச் சொல்லாமல்
விபரீதமான அனுபவம் எனச் சொல்லலாம
எனது பதிவைப் பார்வையிட்டு
வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி
தொடர்ந்து சந்திப்போம்.வாழ்த்துக்கள்

செங்கோவி said...

யோவ், என்னய்யா இது மஜா மல்லிகா தோத்துடும்போல....கதி கலங்க வைக்கிறீரு.

♔ம.தி.சுதா♔ said...

/////கால்+ஏஜ் = காலேஜ் /////

தலைப்புத் தான் என்னை ரொம்ப ரொம்ப ரசிக்க வச்சுது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

லேட் டா வந்தாலும் வந்துட்டேன் தலைவரே..

நிரூபன் said...

ஏன் மகா...இம்புட்டு கஷ்டப்படனுமா...ஒரு சைன கழட்டி கொடுத்து புட்டு பணத்த கொண்டாந்து கொடுத்திட்டு வாங்கிக்கலாம்ல என்றேன்.....வந்திருந்த நண்பிகள் யாருடைய சைனும் ஒரிஜினல் இல்லையாம்...(ஹிஹி!)//

ஆகா...சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல பொய் சொல்லியிருக்காளுங்க. நீங்க செக் பண்ணிப் பார்த்திருக்க வேண்டாம், ஒரிஜினலா...டுப்ளிக்கேட் செயினா என்று.

நிரூபன் said...

மனதைக் கனக்கும் விடயத்தை இறுதிப் பந்திகளில் பகிர்ந்திருக்கிறீங்க. என்ன சொல்ல தலைவா.
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே.

பாவம் அந்த குழந்தை உள்ளம் கொண்ட உங்கள் நண்பன், அவன் வாழ்வில் பாலியல் தூண்டலை மேற்கொண்ட நபராக அவனது சித்தி மகள் இருப்பார் என்பதில் ஐயமில்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விபரீதமா இருக்கே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////செங்கோவி said...
யோவ், என்னய்யா இது மஜா மல்லிகா தோத்துடும்போல....கதி கலங்க வைக்கிறீரு.
///////

மஜா மல்லிகா சைட்டை மூட போறங்களாமே, ஏதாவது பண்ணப்படாதா?