Followers

Tuesday, July 12, 2011

குழந்தையின் கல்வி - (வியட்நாம் நகரில் - பெண் பார்வையில்) - VN

வணக்கம் உறவுகளே....

குழந்தையின் கல்வி விஷயத்திட்க்காக சில நாட்களாக சென்று வந்தேன். கணவருக்கு நேரம் இல்லை(!), மற்றும் விடுமுறை எடுக்க முடியாது என்பதால் நானே சென்று வந்தேன். 

இந்தியாவில் முதன் முதல் கல்வியை குழந்தை ஆரம்பித்து இருந்தாலும், இங்கு பள்ளி செல்வது கொஞ்சம் கடினமாக தோன்றியது. நாங்கள் ஆராய்ந்தவரை குறைந்த பட்சம் $500 (25000 ரூபாய்கள் மாதத்திற்கு!) குறைவாக இல்லை. அதிலும் உலகத்தரம் என்று கூறிக்கொள்ளும் பள்ளிகளின் தரம் அவ்வளவாக தரமாக இல்லாதது வருத்தத்திற்குரியது. 

20 நாட்களில் கிட்ட தட்ட 13 பள்ளிகளை அணுகிவிட்டோம். இறுதியாக என் கணவரின் வியட்நாமிய நண்பரின் பள்ளியில் இடம் கிடைத்தது. அதுவும் ($150) மூன்று வித மொழிகள் கற்பிகிறார்களாம். பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் வியத்நாமிய மொழி என்று அலுவலர் விளக்கி கூறினார்.


பல மொழிகளை கற்கும் போது குழந்தைகளுக்கு தடு மாற்றம் வருவது இயல்பே. அதிலும் இந்திய பள்ளியில் ஒரு வருடம் படித்த குழந்தை. பள்ளியில் தமிழ் பேசக்கூடாது(!) என்ற வற்புறுத்தலால் ஆங்கிலம் மட்டுமே பேசி வந்தான். நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இங்கு வீட்டில் கணவரின் வற்புறுத்தலால்(!) குழந்தை தமிழ் மட்டுமே பேசுகிறான். 

இன்று முதல் நாளில் குழந்தையை விட்டு பிரியும் போது மனது ஏங்கியது. ஒரு நிமிடம் அவன் கண்கள் கலங்கி இருந்தன. என்னை பார்த்து அவன் கேட்ட கேள்வி.

"அம்மா இங்க எப்படி பேசணும், இவங்க பேசுறது எனக்கு புரியல (அனைவரும் வியட்நாமிய குழந்தைகள்!)

இல்லப்பா...கொஞ்ச நாள் பேச பேச உனக்கு புரிஞ்சிடும் அதுவரை ஆங்கிலத்தில் பேசு என்றேன்.


என்ன இருந்தாலும் குழந்தைகளுக்கு மொழி தடுமாற்றம் வருவது நல்லதில்லை. என்ன செய்வது காலம் தான் நம் வாழ்கையை தீர்மானிக்கும் பொறுப்பை வைத்துள்ளது. 

பாடங்கள் அதிகமில்லை இருந்தாலும் இந்த சிறு வயதில் தற்காப்பு பயிற்சியை சொல்லித்தருவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 5 வயது குழந்தைகள் ஈடுபாட்டுடன் அதனை கற்கின்றனர். 

விளையாட்டு கல்வி முறை அதிகம். அதாவது எல்லா வித விஷயங்களையும் விளையாட்டின் மூலம் கற்பது. இந்த கல்வி முறை தான் வேண்டும் என்று என் கணவர் தேடித்தேடி இறுதியில் இந்த பள்ளியை முடிவு செய்தார். 


குழைந்தைகளை பார்க்கும் போது அப்படி ஒரு ஆனந்தமாக இருந்தது. இருந்தாலும் காலையில் 7.30 மணியில் இருந்து மாலை 5.30 மணிவரை குழந்தைகள் இங்கு இருக்கின்றனர்!. மதியம் 12 மணிக்கு மேல் வெறும் தூக்கம் மட்டுமே என்பதால் என் மகன் அரை நாள் மட்டுமே சென்று வருகிறான்!(றார்!). இந்த நகரத்தில் அனைத்து பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். அதுவும் 2 வயது ஆகாத குழந்தைகூட இங்கு தனிப்பட்ட காப்பகத்தில் இருக்கிறது.


இந்த குழந்தைகளை பார்க்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த வயதில் குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு எவ்வளவு தேவை என்று நாம் நினைக்கிறோம். இங்கு பெண்கள் எந்த அளவுக்கு நெஞ்சுரம் இருந்தால் இப்படி  வேலைக்கு செல்வார்கள் என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் இவர்களின் உழைப்பை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. ஆணின் கையை எதிர்பார்க்காத பெண்கள்!(பாரதி கண்ட புதுமைப்பெண்களை இங்கு காண முடிகிறது!).

நேரம் செலவிட்டு இந்த பதிவை வாசித்த அன்பு உறவுகளுக்கு நன்றிகள்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

24 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

தாயுள்ளத்தோடு மழலைப்பேசுகிறது தங்கள் பதிவு....

கல்விதான் ஒரு குழந்தையின் உண்மையான ஆயுள் ரேகை..

நாய்க்குட்டி மனசு said...

குழந்தைகளின் கல்விக்கு இது சனி தசையோ !!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குழந்தையின் கல்விக்காக தாங்கள் இருவரும் எடுத்திருக்கும் சிரத்தை மகத்தானது, சரியான முடிவுதான்! பாராட்டுக்கள்!

செங்கோவி said...

என்னது விக்கிக்கு நேரம் இல்லையா? உங்களை ஊருக்கு வந்து கூட்டிப்போகவும் நேரம் இல்லை..இப்போ ஸ்கூலுக்கு அலையவும் நேரம் இல்லை...எனக்கென்னமோ டவுட்டா இருக்கு...விக்கியை நல்லா க்ளோசா வாட்ச் பண்ணுங்கக்கா.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

எனக்கென்னவோ செங்கோவி சொல்லரதுதான் கரக்ட் ன்னு தோணுது..(மாட்னான்டா மாப்ள)

சசிகுமார் said...

இன்னும் ஒரு மாசத்துக்கு குழந்தைக்கு எதுவுமே புரியாது. அவுங்க வாயையே மொறச்சி பார்த்துகிட்டிருக்க வேண்டியது தான்.

உலக சினிமா ரசிகன் said...

அன்புச்சகோதரி...இந்த வயதில் எத்தனை மொழிகளும் கற்க்கலாம்.
மனோதத்துவப்படி
குழந்தைகளுக்கு சிறு வயதில் எத்தனை மொழிகளை கற்கிறதோ அந்த மொழியறிவில் பிற்காலத்தில் மேதைகளாக விளங்கும்.
இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
குழந்தைகள் சிரமப்படும் என்றெண்ணி நாம்தான் வீணாக கவலைப்படுவோம்.

மதுரை சரவணன் said...

மொழி பிரச்னைக்கு உரியது தான் கற்கும் வரை , விரைவில் தங்கள் குழந்தை மொழியை கற்றுக் கொள்வான். புக புக சரியாகும் . சிறு வயதில் தற்காப்புக் கலை கறப்பது வியப்புக் குரியது தான். பகிர்வுக்கு வாழ்த்துக்கள் .

Vishali said...

" # கவிதை வீதி # சௌந்தர் said...
தாயுள்ளத்தோடு மழலைப்பேசுகிறது தங்கள் பதிவு....

கல்விதான் ஒரு குழந்தையின் உண்மையான ஆயுள் ரேகை.."

>>>>>

உண்மை...

வருகைக்கு நன்றி தோழரே!

Vishali said...

@நாய்க்குட்டி மனசு

" நாய்க்குட்டி மனசு said...
குழந்தைகளின் கல்விக்கு இது சனி தசையோ !!"

>>>>>>>>

வருகைக்கு நன்றி தோழி.....எதிர்மறையாக நான் என்றும் சிந்திப்பதில்லை!

Vishali said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
குழந்தையின் கல்விக்காக தாங்கள் இருவரும் எடுத்திருக்கும் சிரத்தை மகத்தானது, சரியான முடிவுதான்! பாராட்டுக்கள்!"

>>>>>>>

வருகைக்கு நன்றி தோழரே!

ஊக்கப்படுத்தியட்க்கும் நன்றி

FOOD said...

இந்த வயது இளம் மனதில், எந்த மொழியும் நன்கு பதியும். நாளை தங்கள் மகன், வியட்நாமின் விடிவெள்ளியாய் ஜொலிப்பான்(ர்).

ezhilan said...

எங்குமே கல்வி வியாபாரம்தான் என்பது புரிகிறது.தரமான கல்வி தரணியில் கிடைப்பது சற்று சிரமம்தானோ?.எழிலன்

பாலா said...

சிறு வயதில் இரண்டுக்கு மேற்பட்ட மொழிகள் படிக்கும் குழந்தைகள் மேதைகளாக வருவார்கள் என்று எப்போதோ படித்ததாக கேள்வி. வியட்நாம் பற்றி பல தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மைந்தன் சிவா said...

//"அம்மா இங்க எப்படி பேசணும், இவங்க பேசுறது எனக்கு புரியல (அனைவரும் வியட்நாமிய குழந்தைகள்!)
//
பாவம் பாஸ்!

குணசேகரன்... said...

நல்ல பதிவுங்க....நல்ல விசயங்க

Mahan.Thamesh said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே

காட்டான் said...

பெண்கள் வேலை செய்வதை பற்றி கூறுகிறீர்கள்.. காட்டானை பொறுத்தவரை பெண்களின் சம்பாத்தியம் வீட்டுக்கு சாப்பாட்டு செலவுக்குதான் போகிறதென்றால் அந்த குடுப்பத்தில் எங்கோ ஒரு பிரச்சனை இருக்கென்று அர்த்தம்..!? 

கணவன் ஒரு ஊனமுடையவனால் இருந்தால் இது பொருந்தாது..!!? நான் பார்த்தவரை குடிகார கணவர்கள் தங்கள் சம்பாத்தியம்  முழுவதையும் மதுவிற்கே செல்வளிப்பார்கள்..! பாவம் பெண்கள் உழைத்து குடும்பத்தை காப்பாற்றுகிரார்கள் இதுவேண்டுமா...!!??

காட்டான் said...

ஐந்து வயதிற்குட்பட்ட குழைந்தைகளால் 6 மொழிகளுக்குமேல் இலகுவாக படிக்க முடியுமாம் பாருங்க உங்க பொடியன் இன்னும் கொஞ்ச நாள்ல சிங் கொ சாங்கோ என்று வியட்னாம் மொழி பேசேக்க நீங்க சிதம்பர சக்கரத்த எதோ பார்த்த மாதிரி நிற்பீங்க ..!!?

சி.பி.செந்தில்குமார் said...

வர வர இவனுக்கு லொள்ளு ஜாஸ்தி ஆகிடுச்சு.. லிங்க் கொடுடான்னா தேடி வா இல்லைன்னா வராதேன்னு கோவிச்சுக்கறான்,.,. தேடி வர இவன் என்ன ஃபிகரா? ராஸ்கல்..

சி.பி.செந்தில்குமார் said...

ஓ சாரி.. பதிவு போட்டது அண்ணியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

>>>குழைந்தைகளை பார்க்கும் போது அப்படி ஒரு ஆனந்தமாக இருந்தது.

குழந்தைகளைப்பார்க்கும்போதெல்லாம் நம் மனம் குழைந்துபோய் விடுவதால் குழைந்தகள் என்பதும் சரிதான்..

MANO நாஞ்சில் மனோ said...

என்ன இருந்தாலும் குழந்தைகளுக்கு மொழி தடுமாற்றம் வருவது நல்லதில்லை. என்ன செய்வது காலம் தான் நம் வாழ்கையை தீர்மானிக்கும் பொறுப்பை வைத்துள்ளது. //

சரியாக சொன்னீர்கள்.....

MANO நாஞ்சில் மனோ said...

அய் அண்ணியும் பதிவு எழுத ஆரம்பிச்சாச்சி, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இனி தக்காளியை திட்ட முடியாதோ...???

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, குழந்தைகள் பெற்றோரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையில் வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது.
ஆனால் எம் நாடுகளோடு ஒப்பிடும் போது, இங்கே நீங்கள் விளக்கிய கல்வி முறை சிற்பாக இருக்கிறது தானே, காரணம்,

ஆறு அல்லது ஏழு வயது வரை பெற்றோரின் அரவணைப்பிலும், ஏன் அதற்குப் பிறகும் பிளஸ் டூ
முடிக்கும் வரைக்கும் நாம் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதால், தங்கி வாழ்தல் தன்மை அதிகமாகி, எமது தேவைகள் அனைத்தையும் பெற்றோரே நிறைவேற்றி வைப்பதால்,
உழைத்து வாழ வேண்டும் எனும் தனி மனித சிந்தனைக்கு முரணாக சோம்பேறித் தனம் தானே வந்து தொற்றிக் கொள்கிறது.