வணக்கம் நண்பர்களே.....
நம்ம வாழ்கைல கால் ஏஜ்(!) வரை வரும் இடம் காலேஜ்(!)...அங்கு கிடைக்கும் அனுபவங்கள் வாழ்கையின் எந்த பகுதியில் நினைத்தாலும் நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும்...
அப்பேற்பட்ட கால் பகுதியில்(!) பட்ட உணர்வுகள் மற்றும் அனுபவங்களை தொகுத்து வழங்க உள்ளேன்....முடிந்தால் ரசிக்கவும்(முடியவில்லை என்றாலும்!)......
அப்போதான் அந்த கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது.....திடீரென்று நண்பன் ஓடி வந்தான்...
மாப்ள விஷயம் தெரியுமா...
என்னடா சொல்லு.....
## அந்த காலேஜ் பாசங்க நம்ம பையன போட்டு பின்னிட்டாங்க...
என்ன மேட்டரு சொல்லு....
பொண்ணு மேட்டருதான்....
ஏன்டா ரெண்டு பேரு மோத வேண்டிய இடத்துல பத்து பேரு சேந்து ஒருத்தன அடிச்சிருக்காங்க...இன்னிக்கு பாத்துருவோம் கெளம்புங்க....
மாப்ள வேணாம் இது சரியா வராது..அவன தனியா தூக்குவோம்(மூர்த்தி என் நண்பன்...ஒட்டடை குச்சி போல இருந்து கிட்டு சாணக்கியத்தனத்தை அடக்கி ஆண்டவன்!)...
(ஏற்கனவே சேர்ந்த புதிதில் சீனியர் கிட்ட ஏற்பட்ட மோதலால் தூக்கி போட்டு ஒரு சீனியரை மிதித்து இருந்தேன்...அதனால் சீனியராக பார்ம் ஆகி இருந்தேன் அந்த வேட்டி கட்டும் காலேஜில் ஜீன்ஸ் போட்ட நான்!)
வில்லிவாக்கத்தில் இருந்து கிளம்பிய (அப்போதைய!) பல்லவனில் நாங்களும் தொற்றிக்கொண்டோம்...சரியாக அயனாவரம் டேங்க் நிறுத்தத்தில் அந்த பயலிடம் பேசினேன்...
ராசா அடுத்து வர்ற ஸ்டாப்புல இறங்கு....
யார்ரா நீங்க....நான் யாரு தெரியுமா...எந்த காலேஜ் தெரியுமா........
ஸ் ஸ்....எல்லாம் தெரிஞ்சி தான்டா வந்து இருக்கேன்...நீயா இறங்கினா முழுசா இருப்ப...நானா இறக்குனா சேதாரம் ஆகும் பரவாயில்லையா......
அவன் அடுத்த நிறுத்தத்தில் என் கண்ட்ரோலில் வந்தான்....
ஒரு டீக்கடையில் உக்கார வைத்தோம்...
மேட்டரு என்னன்னா.......நீயும் இவனும் ஒரே பிகர ஓட்டுறீங்க...எவனுக்கு அது ஒர்க்கவுட் ஆகுதோ அந்த பொண்ணோட இஷ்டம்(!)....எதுக்கு ஆளுங்கள கூட்டி வந்து அடிச்சே...இப்போ இவன் உன்ன ஒரு அறை விடுவான்(!)...நீ இதோட இந்த விஷயத்த நிறுத்திக்க(!)...அந்த பொண்ணு கிட்ட கேப்போம்....அவ என்ன சொல்றாளோ அதுதான் பைனல்(இது செமி பைனல்!)....நடுவுல எவனையாவது கூட்டி வந்து சீன் போட்ட.....என்ன நடக்கும்னு உனக்கு சொல்ல வேண்டியதில்லன்னு நெனைக்கிறேன் என்றேன்...
(அறை விழுந்தது....அடுத்து அவனை அழைத்துக்கொண்டு(!)...அந்தப்பெண்ணின் காலேஜுக்கு அருகே சென்றோம்...ஏற்கனவே நம்ம நண்பி ஒருத்தங்க கிட்ட சொல்லி அந்த பொண்ண காலேஜ் கிட்ட இருக்க ஒரு இடத்துல நிக்க சொல்லி இருந்தேன்!)
அந்த பெண்ணிடம்...
இந்தாம்மா...இந்த ரெண்டு ஹீரோல யார விரும்புற என்றேன்...
இல்லைங்கண்ணா(!)...நான் யாரையும் விரும்பல...எனக்கு படிப்பு தான் முக்கியம் என்றாள் அந்தப்பெண்...
சரி நீ கெளம்பு என்றேன்...(அவள் சென்று விட்டாள்!)
பாருங்கடா நாதாரிகளா..அந்தப்பொண்ணு உங்க ரெண்டு பேரையும் விரும்பல...என்ன ### சண்ட போட்டு திரியிறீங்க...இதுக்கு கூட்ட கூட்டமா பஞ்சாயத்து வேற தூ(!).....
(அதோடு அந்தப்பிரச்சனை முடிந்தது என்று எண்ணி இருந்தேன்....அடுத்த நாளே வேறுவிதமாக வந்தது!).....
காலேஜ் ஜன்னலில் அரை செங்கல்கள் பறந்து வந்து விழுந்து கொண்டு இருந்தன.....என்ன என்று பார்க்க வெளியே வந்த காலேஜ் சேர்மன் தலையை குறி பார்த்து ஒரு செங்கல் வீசப்பட்டது....அவர் மண்டையுடைந்தது நானும் நண்பனும் அவரை பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினோம்...
அடுத்து..........
தொடரும்...........
கொசுறு: இது ஒரு அறியாத வயது தொடர்(!)...ஆகையால் யாரும் டென்சனாக வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்(!)

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
30 comments:
திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா...
>>தமிழ்வாசி - Prakash said...
திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா...
யோவ்,. இதே கமெண்ட்டை இன்னொரு பிளாக்ல பார்த்தேன். பிச்சு பிச்சு .. ஹா ஹா
காலேஜ்.. டேமேஜ் தக்காளி இமேஜ்
அப்பேற்பட்ட கால் பகுதியில்(!) பட்ட உணர்வுகள் மற்றும் அனுபவங்களை தொகுத்து வழங்க உள்ளேன்....முடிந்தால் ரசிக்கவும்(முடியவில்லை என்றாலும்!)......>>>>>
மாம்ஸ் இளமை ஊஞ்சலாடுகிறதோ?
சி.பி.செந்தில்குமார் said...
>>தமிழ்வாசி - Prakash said...
திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா...
யோவ்,. இதே கமெண்ட்டை இன்னொரு பிளாக்ல பார்த்தேன். பிச்சு பிச்சு .. ஹா ஹா>>>>>
சி.பி இந்த கமெண்ட்டை நான் போடுவேன்... போடுவேன்... உங்களால ஒன்னும் செய்யமுடியாது.....ஹா,,,ஹா....
கொசுறு: இது ஒரு அறியாத வயது தொடர்(!)...ஆகையால் யாரும் டென்சனாக வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்(!)>>>>
மாம்ஸ் நாங்க டென்சன் ஆக மாட்டோம்... நீங்க ஏதாவது டென்சன் ஆகி மேட்டரு கீட்டரு ஒளராம இருந்தா சரி...
கிளைமாக்ஸ்-ல ஹெலிகாப்டர் வரமாறி கதைய மாத்து மச்சி..
:-)
ஆகையால் யாரும் டென்சனாக வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்(!)
//
சே..சே..,,
யாரு .. நாங்களா?..
நீ டென்ஷன் ஆகாம..ஹெலிக்காப்டர் வரமாறி கதை எழுது... ஹி..ஹி
>>மேட்டரு என்னன்னா.......நீயும் இவனும் ஒரே பிகர ஓட்டுறீங்க...எவனுக்கு அது ஒர்க்கவுட் ஆகுதோ அந்த பொண்ணோட இஷ்டம்(!)....எதுக்கு ஆளுங்கள கூட்டி வந்து அடிச்சே..
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
சீக்கிரம் வரட்டும் இரண்டாம் பாகம்
maapla.. enna?
பட்டாபட்டி.... said...
கிளைமாக்ஸ்-ல ஹெலிகாப்டர் வரமாறி கதைய மாத்து மச்சி..
:-)// correctuuuuuuuu..
தமிழ்வாசி - Prakash said...
திருநெல்வேலி அல்வாடா.... மதுரை மணக்கும் மல்லிடா...
யோவ்,. இதே கமெண்ட்டை இன்னொரு பிளாக்ல பார்த்தேன். பிச்சு பிச்சு .. ஹா ஹா///
maapla unblog la thaan potten..
மாப்ளைக்கு எப்பவுமே இப்படி தான் கட்டிங் உள்ள போயிட்டா பழைய ஞாபகமெல்லாம் வந்திடும். விடு மாப்ள அந்த நினைவுகள் திரும்ப வருமா?
Nenka periya rowdy nu othukuren. . .
ஏதோ நினைவுகள் மலருதே மனதில் ஹே ஹே ஹே ஹே.....!!
சி.பி.செந்தில்குமார் said...
காலேஜ்.. டேமேஜ் தக்காளி இமேஜ்//
குற்றாலத்துல நீ டேமேஜ் ஆனதை விடவுமாடா நாயே.......உருப்படுவியா ராஸ்கல்....
நெட் ரொம்ப சுலோவா இருக்குலேய், இல்லைனா உங்களை எல்லாம் பிரிச்சி மேஞ்சிருவேன் மேஞ்சி....
ஆஹா..விக்கி அடுத்த தொடரை ஆரம்பிச்சுட்டாரா..ஒரே நேரத்துல எப்படி இத்தனையை மெயிண்டய்ன் பண்றாரு?
இன்னிக்கு வீட்ல வெளியூர் போயிருக்காங்களா?
ராசா அடுத்து வர்ற ஸ்டாப்புல இறங்கு.//
தக்காளி..அப்பவே நீ ராசாகிட்ட பேசிருக்கியோ? அப்ப...அவங்...சரி வேணாம் :)
அப்ப அண்ணாத்த காலேஜுக்கே பிஸ்த்தாவா ஓகே ஓகே
///செங்கோவி said...
ஆஹா..விக்கி அடுத்த தொடரை ஆரம்பிச்சுட்டாரா..ஒரே நேரத்துல எப்படி இத்தனையை மெயிண்டய்ன் பண்றாரு?///
செங்கோவி அண்ணே சிபி அண்ணன்கிட்ட கேக்க வேண்டியதை இவரு கிட்ட கேக்குறீங்க ,சிபி அண்ணன்தான் ஏகப்பட்ட பிகர மெய்ண்டைன் பண்றாரு
அது சரி.. என்னையா கண்ணகியை நீங்களும் தூக்கிட்டீங்க... உண்மையில கண்ணகி பாவம் ஐயா :)
வாவ் அண்ணன் ஏன் இராணுவத்துல சேர்ந்தாருன்னு இப்பல்ல தெரியுது, சூப்பர் மாம்ஸ்
அண்ணே காலைல இங்க ஒரு பதிவு இருந்துச்சே பாத்தீங்களா?
அண்ணே நீங்க பெரிய ரவுடியா, இது தெரியாம நான் கூட உங்கள நாலஞ்சுதடவ கலாய் கலாஉனு கலாய்ச்சுட்டேனே, அதெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்கண்ணே.....
///////செங்கோவி said...
ஆஹா..விக்கி அடுத்த தொடரை ஆரம்பிச்சுட்டாரா..ஒரே நேரத்துல எப்படி இத்தனையை மெயிண்டய்ன் பண்றாரு?
///////
எல்லாம் நீங்க குடுக்குற ஞானப்பழம்தாண்ணே....!
பயங்கரமான ஆளா இருப்பீங்க போல் இருக்கு . தமிழ் சினிமா பார்த்த மாதிரி இருக்குது
காலேஜ் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வண்ணம் உங்கள் பதிவு அமைந்துள்ளது..
இறுதிப் பந்தி...திரிலிங் ஆக இருக்கிறது. அடுத்த பகுதியினைப் படிப்போம்.
Post a Comment