கொஞ்ச கொஞ்சமாக தரை இறங்கும் விமானம் போல சராசரி மனநிலைக்கு வந்துகொண்டு இருக்கிறது என் மனம். இந்த நேரத்தில் என்னைப்பாதித்த தோழிகளைப்பற்றி கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.
என் சிறுவயது முதல் கடந்து வந்த பாதையில்(முட்கள் எனும் அனுபவங்களின் கோர்வைக்கு நன்றி) பல பெண்கள் என்னை மனதளவில் பாதித்துள்ளார்கள். அவர்களின் ஒரு பகுதி தொகுப்பு இந்தப் பதிவு.
அ. சித்ரா (ஹாக்கி சித்ரா):
எங்க கேங்குல இருந்த பசங்க எப்பவுமே ஒரு புனைபெயருடன் தான் சுத்துவோம். அதுவும் நமக்கு நண்பி ஆயிட்டா கேக்கவே வேணாம்!?. அவங்களுக்கு ஆளுக்கு ஒரு பட்டப்பேரு வச்சி ஓட்டுவோம்(பட்டப்பேர மட்டும்).
இவங்க சாதாரண ஆள் இல்லீங்க பயங்கர வேகமா ஹாக்கி விளையாடக்கூடிய பெண் சிறுத்தை(புலின்னு சொல்லபடாதுல்ல!?). இவளுடைய மேட்சுக்கு மறக்காம லீவு போட்டுட்டாவது போயிடுவோம். இல்லன்னா வீட்டுக்கே வந்து அவளோட ஹாக்கி ஸ்டிக்கால மண்டயப்பொலந்திடுவா! அவ்ளோ பொறுமைசாலின்னா பாத்துக்கங்க!. சும்மா சொல்லப்படாது இவளோட ரிவர்ஸ் ப்ளேக்கு நாங்க அடிமை(கூட்டாளிங்க கூட்டுத்தொகை 12).
ஆ. ஆனந்தி (கதை, கவிதைப்புயல்- ரீல் ஆனந்தி)
இவங்க கத சொல்ல ஆரம்பிச்சாங்கன்னா நம்ம டைரடக்கருங்க கெட்டாங்க போங்க. சீன் சீகுவன்செல்லாம் சொல்லுவா. அப்போ நமக்கிருந்த அறிவுக்கு இவ தான் எங்க கேங்குலையே பெரிய கவிப்பேரரசு. எவன் வந்து கேட்டாலும் அவன் ஆள மடக்கரத்துக்கு என்கந்து சுட்டு கொண்டு வருவா தெரியாது, சும்மா கவிதைய கேட்ட அந்தப்பய்யன்னுடைய ஆளு அப்பிடியே மயங்கி விழுந்துடுவான்னா பார்த்துக்கோங்க. யாரு சொன்னா கட்டடிக்கரதுல பசங்கதான் பெரிய ஆளுன்னு!?
இவ சூப்பரா ப்ளான் பண்ணிக்குடுப்பா, எப்படி வீட்டுல, காலேஜுல மாட்டிக்காம கட் அடிக்கறதுன்னு ஒரு புக்கே போடக்கொடிய தகுதி இவளுக்கு உண்டு.
இ. லக்ஷ்மி (வரைகலை நிபுணி- zoo லக்ஷ்மி)
இவங்க பெரிய வரைகலை நிபுணிங்க. எங்க ரெகார்டு புக்கு காலத்துல இருந்து எங்களுக்காகவே சேவை செய்ய வந்தவுங்க. யார் எத சொல்லி வரையசொன்னாலும் சும்மா அரைமணில வரைஞ்சி அசத்திப்புடுவாங்க. இந்த அம்மணியாலதான் ஸ்கூல்ல விலங்கியல் பிரிவுல அதிக மார்க்கே வந்தது. கொஞ்சம் கூட அடுத்தவங்க மனச புண் படுத்த தெரியாத அப்பாவி. படிப்புல பயங்கர சுட்டி மற்றும் விளையாட்டுலயம் தான்.
மிச்சம்: இவங்க மூவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டுன்னா அது இந்த மூணு அறிவாளிகளும் காதல்ங்கிற அரக்கனால எங்கள விட்டு பறந்து போன பட்டாம்பூச்சிக்கள். உயிர் எனும் மிகப்பெரிய விஷயத்த ரொம்ப மலிவா நினச்சி தற்கொலைப்புரிந்துகொண்ட அதி மேதாவிகள். காலம் எனும் காலன் என்னைப்பற்றி என்ன நினைத்து கொண்டு இருக்கிறான் என்று தெரியவில்லை. எத்தன இழப்புகள தான் நான் தாங்குறது................. அவ்வளவு கொடியவனா நான்.............
சொச்சம்:நண்பேண்டா(டி!)உரிமையுடன் பகிர காரணமான தொடர்பதிவு டைப்ப அழைத்த நிரூபன் அவர்களுக்கு நன்றி!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
24 comments:
சுவராசியமான பதிவு, க்டைசி பாரா...வலி!
Meel pathivu thaana anne...
சுவாரஷ்யம்! கடைசியில் வலி! மனசு கனக்கிறது!
ஆனா ஏற்கெனவே வாசிச்ச மாதிரியும் இருக்கு! மீள்பதிவா பாஸ்?
படித்தேன்
நல்லா தானே போயிட்டு இருந்துச்சு... கடைசில இப்படி சோக பத்தி...
மாப்பு..இதை எங்கயோ படிச்சிருக்கனே..மீளா?
அருமையா பகிர்ந்திருக்கீங்க. ஆனா, இதுக்கு முன்னாடி, நான் எங்கேயும் இத படிக்கலையே!
@டக்கால்டி
ஞாபக சக்திக்கு நீதான் மாப்ள!
@பன்னிக்குட்டி ராம்சாமி
"பன்னிக்குட்டி ராம்சாமி said...
சுவராசியமான பதிவு, க்டைசி பாரா...வலி!"
>>>>>>
வலி நெறைஞ்சதே வாழ்கை மாப்ள!
@ஷர்புதீன்
மாப்ள வாரும்!
@ஜீ...
" ஜீ... said...
ஆனா ஏற்கெனவே வாசிச்ச மாதிரியும் இருக்கு! மீள்பதிவா பாஸ்?"
>>>>>>>>>>>
வலி நெறைஞ்சதே வாழ்கை மாப்ள!......மீள் பதிவுதான்...மீளா மக்களைக்கொண்டது!
@செங்கோவி
ஆமாம் ஓய்!
@தமிழ்வாசி - Prakash
" தமிழ்வாசி - Prakash said...
நல்லா தானே போயிட்டு இருந்துச்சு... கடைசில இப்படி சோக பத்தி..."
>>>>>>>
உண்மைகள் பல சோகங்களின் பிரதிபலிப்புகளே மாப்ள!
@FOOD
அண்ணே பல பழைய விஷயங்கள் மீண்டும் உங்களுக்காக!
பதிவில் குறிப்பிடக்கூடிய அளவிற்கு ஒரு ஆண் நண்பர்கள் கூட இல்லையா .......உம்மை வன்மையாக கண்டிக்கிறேன் மாம்ஸ் ...
பதிவின் மூலமா எனக்கு கிடைச்ச நீதி என்னான்னா இவன் கூட நெருங்கிப்பழகறது ஆபத்து ஹி ஹி
என்னங்க பாலா படம் மாதிரி கிளைமாக்ஸ்ல இப்படி ஒரு அதிர்ச்சி கொடுத்துட்டீங்க...
ninaivugal enrume sugam..
malarum ninaivugalaa maapla..
வணக்கம் அக்காச்சி,
பள்ளிக்கால நினைவுகளை மீட்டி, ஞாபக அலைகளினூடாக மீண்டும் ஒரு தரம் அந்த நண்பிகளைத் தரிசித்து வந்திருக்கிறீங்க என்று நினைக்கிறேன் - காரணம் அவ்வளவு சிறப்பாக உங்களுடைய லூட்டிகளை, ஜாலியான கல்லூரி நினைவலைகளைப் பகிர்ந்திருக்கிறீங்க..
இறுதிப் பந்தியில் வரும் தற்கொலை தான்....எல்லா நிகழ்வுகளையும் மறக்கச் செய்து, மனதைத் தொட்டு நிற்கிறது.
ஐந்து நிமிடம் யோசிக்காமல் செய்யும் ஒரு செயலால் அவர்களின் குடும்பம் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
மாப்பிள உனக்கு தெரியும்தானே காட்டானுக்கு பள்ளிகூட அனுபவமில்லைன்னு இதில கருத்து சொல்றேன்னா கற்பனைதான் எடுத்து விடவேண்டும் பதிவுலகில காட்டான் இன்னும் தொழில தொடங்கள..!?
மாப்பு... ஆகட்டும்., ஆகட்டும்.
Post a Comment