கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம நண்பர் உலகசினிமா ரசிகன் அவர்களின் ப்ளோகுக்கு சென்று இருந்தேன். அவர் தன்னோட அழகான விமர்சனத்தின் மூலம் God Father அப்படிங்கற படத்த பத்தி சொல்லி இருந்தாரு...பொதுவா எனக்கு இந்த சினிமா சங்கதிகளில் சிரிப்பு மட்டுமே பிடிக்கும்!....அதுவும் உலக சினிமாங்கற அளவுக்கு எனக்கு அனுபவமில்லை(!) என்பதால் அதைப்பற்றி விவாதங்களில் பங்கேற்ப்பது இல்லை...
இருந்தாலும் அப்படி என்னத்ததான் இந்த படத்துல வெள்ளைக்காரன் நடிச்சி இருக்கான்(!).....நம்ம சிவாஜிய விடன்னு(!) போய் தேடிப்புடிச்சி DVD வாங்கி வந்து போட்டு பாத்தேன்...சும்மா சொல்லக்கூடாது என்னமா முகத்துல ரியாக்ஷன் காட்ராருய்யா அந்த நடிகரு!...பேரு என்னமோ போட்டாங்களே...ஆங் மர்லன் பிராண்டோ - இவரு தான் அந்த அப்பா சாமியாம்(God Father!).....இவரு புள்ளயா நடிச்சி இருந்தவரு அல்பசினோ அப்படின்னு ஒரு நடிகரு!....
ஒரு சாதாரண ராணுவ வீரன் விதி வசத்தால(!) எப்படி அடுத்த அப்பா சாமி...அதாங்க God Father ஆக மாறுராருன்னு காட்டி இருந்தாங்க....அதுவும் அந்த பிராண்டோ நடிகரு அந்த பஞ்சடச்சா மாதிரி இருக்க மூஞ்சிய வச்சிக்கிட்டு என்னமா முக வித்தியாசங்கள காட்டுராருய்யா...
என்னமா நடிச்சி இருக்காங்கன்னு பாத்துக்கிட்டே வரும்போது ஒரு விஷயம் சட்டுன்னு ஞாபகம் வந்துச்சி....அதான் தமிழ்ல இந்தப்படத்தோட காப்பிய நெனச்சி பாத்தேன்.....இப்போதைய கலை கடல்(!) தான் அப்படியே உல்டா பண்ணி எடுத்திருந்தாரு போல!....காப்பி அடிக்கறது அடிக்கிறாங்கப்பா....அதுக்காக முக உணர்சிகள, அந்த வெளிநாட்டு நடிகரோட நடைய கூடவா அடிப்பாங்க....அந்த அழுகைய கூட சுட்டு புட்டாங்க பாவம்!
சரி இங்லீஷ்காரன் வீட்டுக்கு போனா...அவன் சாப்பிட்டுகின்னு இருந்தா ஒரு வாய் சாப்பிடுன்னு கூட கேக்க மாட்டான்...அவங்க ஊருல செத்து போன ஒரு மார்கமா பார்வைய வச்சிக்கிட்டு அப்படியே கொஞ்சம் நின்னு பாத்துட்டு பூடுவாங்க....நம்மூர்ல நெஞ்சில அடிச்சிக்கிட்டு அழுவுற சனமாச்சே!...
இதுக்கு நடிப்புன்னு சொல்லி பேர போட்டுக்கறாங்க(!)...ஒரு DVD போட்டு பாத்து புட்டு அதே போல பல முறை செய்ஞ்சி பாத்து நடிப்பாங்க போல...இதுக்கு பேருதான் உலக நடிப்புங்கறதா....ஸ் ஸ் ஸ் அபா...இதுக்கு தான் பெரிய அப்பா டக்கருன்னு நெறைய பேரு சொல்லுறாங்களோ!....கேட்டா என்னமா பண்றாங்கன்னு சால்ஜாப்பு வேற...!
சரிங்க ராசாக்களா எனக்கெதுக்கு பொல்லாப்பு எதோ தோணிச்சி கொட்டிபுட்டேன்....நன்றி!...
கொசுறு: சம்மந்தா சம்மந்தம் இல்லாம சரியா புரியாத மாதிரியே பதிவுல விஷயங்கள் தாறு மாறா ஏன் இருக்குது - அப்போதான் இது ஒரு காவியப்பதிவு(!) இதை ஆஸ்கருக்கு அனுப்ப முடியுமாமே!..... இது ஒரு மாக்கானின் பார்வையில் மட்டுமே!

மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
38 comments:
motha மொத வெட்டு
// அதான் தமிழ்ல இந்தப்படத்தோட காப்பிய நெனச்சி பாத்தேன்.....இப்போதைய கலை கடல்(!) தான் அப்படியே உல்டா பண்ணி எடுத்திருந்தாரு போல!....காப்பி அடிக்கறது அடிக்கிறாங்கப்பா....அதுக்காக முக உணர்சிகள, அந்த வெளிநாட்டு நடிகரோட நடைய கூடவா அடிப்பாங்க....அந்த அழுகைய கூட சுட்டு புட்டாங்க பாவம்! //
நாயகன் படமா?? நான் God Father பாத்தில்ல ..
மைனஸ் ஓட்டுப்போட விரும்பும் கமல் ரசிகர்கள் அமைதியாக வரிசையாக வந்து ஓட்டுப்போடவும். ( ஆனா தமிழ் மணம் ஒர்க் ஆகலையே என நினைப்பவர்கள் தக்காளியைதிட்டிட்டு போகவும் ஹி ஹி )
நான்கூட நாயகனை பார்த்துதான் காட்பாதர் படத்தை எடுத்தாங்கன்னு நம்பிட்டேனுங்க. ஹே. ஹே..
@சி.பி.செந்தில்குமார்
வாயா 1000 உதை வாங்கும் ஆரோக்கிய சிகாமணி வா!
@கறுவல்
கண்டு புடிங்க.....ஒ பாப்பா லாலி!
@! சிவகுமார் !
" ! சிவகுமார் ! said...
நான்கூட நாயகனை பார்த்துதான் காட்பாதர் படத்தை எடுத்தாங்கன்னு நம்பிட்டேனுங்க. ஹே. ஹே.."
>>>>>>>>>>>>>
மாப்ள நீ அம்புட்டு அப்பாவியாய்யா!
@சி.பி.செந்தில்குமார்
" சி.பி.செந்தில்குமார் said...
மைனஸ் ஓட்டுப்போட விரும்பும் கமல் ரசிகர்கள் அமைதியாக வரிசையாக வந்து ஓட்டுப்போடவும். ( ஆனா தமிழ் மணம் ஒர்க் ஆகலையே என நினைப்பவர்கள் தக்காளியைதிட்டிட்டு போகவும் ஹி ஹி )"
>>>
நாங்களும் சீப்பு வச்சிருக்கோம் ஹிஹி!
@விக்கியுலகம்
அப்பிடித்தான் இங்க பேசிக்கிட்ட்டாங்க , அதான் கேட்டேன்,, நம்புய்யா! சத்தியமா நான் பர்க்கல்ல பார்க்கல்ல,,
ஒரு வேள மார்லன் பிராண்டோ வேசத்தில கமல் நடிச்சிருப்பாரோ????? # டவுட்டு
நாயகன் பொருந்தும் பின் வந்த தீனா கொஞ்சம் சுட்டது இப்படி அடுக்கலாம் விக்கி அண்ணா !
இது ஒரு காவியப்பதிவு(!) இதை ஆஸ்கருக்கு அனுப்ப முடியுமாமே!....//
வாழ்த்துக்க்ள்.
@Nesan
" Nesan said...
நாயகன் பொருந்தும் பின் வந்த தீனா கொஞ்சம் சுட்டது இப்படி அடுக்கலாம் விக்கி அண்ணா !"
>>>>>
சுடட்டும் அதுக்காக மண்டைய சொரியறத கூடவா சுடனும்..சொந்தமா அப்போ என்னதான் இருக்கு...சொல்லுங்க மாப்ள!
"கறுவல் said...
@விக்கியுலகம்
அப்பிடித்தான் இங்க பேசிக்கிட்ட்டாங்க , அதான் கேட்டேன்,, நம்புய்யா! சத்தியமா நான் பர்க்கல்ல பார்க்கல்ல,,
ஒரு வேள மார்லன் பிராண்டோ வேசத்தில கமல் நடிச்சிருப்பாரோ????? # டவுட்டு"
>>>>>>>>>>>>
நம்பிட்டேன்யா விடு!
அய்யாயோ இது வேறயா!....இதுக்கு தான் பூஞ்சி பூரா பூச்ச பூசிக்கிரான்களோ!
@விக்கியுலகம்
ஆமா ! கமல் மேல அப்புடி என்ன கடுப்புய்யா உமக்கு?
@கறுவல்
" கறுவல் said...
@விக்கியுலகம்
ஆமா ! கமல் மேல அப்புடி என்ன கடுப்புய்யா உமக்கு?"
>>>>>>>>
இதுல என்ன கடுப்பு இருக்கு....நான் கண்டதை சொல்றேன் அம்புட்டு தான்...இது எனக்கு தோணிச்சி...இதுல எந்த வித சார்பும் இல்ல!
@இராஜராஜேஸ்வரி
வருகைக்கு நன்றி!
@விக்கியுலகம்
ஓக்கே ஓக்கே!!
பாஸ் ,சினிமா பற்றி எனக்கு அவ்வளவு புரிதல் இல்ல ..))
தல இப்ப சினிமா விமர்சனம்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாரா ,ஓகே ஓகே
@நிகழ்வுகள்
வருகைக்கு நன்றி மாப்ள!
@நா.மணிவண்ணன்
" நா.மணிவண்ணன் said...
தல இப்ப சினிமா விமர்சனம்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாரா ,ஓகே ஓகே"
>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி மாப்ள!
அய்யாயோ இதுக்கு பேரு தான் விமர்சனமா சாமி மன்னிசிகங்க!
சுடுறதுன்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் அதுல என்ன நியாயம் , நேர்மை? சீன பை சீனா அப்புடியே லபக்குராயங்க மாம்ஸ்!
@ஜீ...
" ஜீ... said...
சுடுறதுன்னு முடிவு பண்ணிட்டா அப்புறம் அதுல என்ன நியாயம் , நேர்மை? சீன பை சீனா அப்புடியே லபக்குராயங்க மாம்ஸ்!"
>>>>>>
பாத்துய்யா சீனாக்காரேன் சண்டைக்கு வந்துடப்போறான்...
பய புள்ள ஏற்கனவே கொலவெறியோட சுத்திட்டு இருக்கு!
இப்ப யோசிக்க நேரம் இல்லிங்க இதான் இப்படியெல்லாம் நடக்குது...
சரக்கு இருக்குறவங்க இங்க கம்மி ஆயிக்கிட்டே இருக்காங்க அதுவும் இல்லாம சாயல் இல்லாத சினிமா இப்ப எங்கேயும் இல்லை.
உங்க சினிமா விமர்சனம்கூட நல்லாத்தான் இருக்கு மாம்ஸ் ....
மாப்பிள இததான் நானும் சொன்னேன் அவரிடம் ஒலக மஹா நடிகர் தமிழன் வெலிநாட்டு படங்களை பார்கமாட்டான்னு நினைக்கிரார் கொஞ்சம் ஏமாந்தா எங்கட தலையில மிளகாய் அரைத்து விடுவார் ஒலக நாயகன்...
காட்டான் குழ போட்டுட்டான்..
மாக்கானின் பார்வையில் நிறைய இருக்கு போல...அடிக்கடி என்னனமோ போடறாரு.... அதுல ஒன்னொன்னு ரொம்ப நல்லாவே இருக்கு.
தமிழ்வாசியில் இன்று:
அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)
நான் god father புக் படிச்சிருக்கேன். நாவலை மிஞ்சி படம் எடுக்க தனித் திறமை வேணும்
மாப்ள இத அந்த மனுஷன் காலம் காலமா செஞ்சுட்டு வர்ராறு... மண்டைய சொறியிரத கூட காபி அடிச்சிருக்காரே இது நியாயமா?
பதிவெல்லாம் ஒரு மார்க்கமா போகுதே!
ஹிஹி தல இங்கிலீசு படம் பாத்திரிச்சு ஹிஹி
விக்கி பார்த்த ஒரே ஒலகப்படம் என்ற பெருமையை பெற்றுவிட்டது காட் ஃபாதர்.
நண்பரே...
தங்கள் பதிவில் என்னை பெருமை படுத்தியதற்க்கு நன்றி.
நாயகன் படம் எடுக்கும் போது...
டிவிடி என்ற தொழில் நுட்பம் வீட்டுக்கு வீடு உலக சினிமாவை கொண்டு சேர்க்கும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
ஐ யாம் சாம் என்ற திரைப்படத்தை இப்போது காப்பியடித்த கொடுமையை என்னவென்று சொல்வது...
பாஸ், நான் இன்னமும் ஹாட்பாதர் பார்க்கவில்லை. பெரும்பாலான தமிழ்ப் படங்கள் ஆங்கிலத் தழுவல்களில் தான் வந்து போகின்றன. காரணம் எம் மக்கள் பலரினை உலக சினிமா சென்றடையவில்லை என்பதேயாகும்.
Batman என்று ஒரு படம் பல வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தது,. அதன் தழுவலில் தமிழ் சினிமாவில் இன்னோர் படம் வந்திருந்தது. அதனைப் பார்த்து விட்டு, என்ன படம் என்று சொல்லுங்க பார்ப்போம்.
பாஸ், நான் இன்னமும் ஹாட்பாதர் பார்க்கவில்லை///////.
.
இந்த விக்கி லூசுக்கு இப்படிப்பட்ட லூசு பாலோயர்ஸ் வேற!!!என்னைய கொடுமை!!
நான்கூட நாயகனை பார்த்துதான் காட்பாதர் படத்தை எடுத்தாங்கன்னு நம்பிட்டேனுங்க. ஹே. ஹே.."////.
.
.
இப்படிப்பட்ட ஒனக்கு ஒலக சினிமா விமர்சனம் தேவையா?இங்க ஒரு டுபாகூர் ஒலக நாயகன் இருக்கான் அப்புறம் ஒனக்கு பிடித்த ஒவ்ராச்டு மன்னன சிவாஜி அதோட நிறுத்திக்க
ரைட்டு,,,
Post a Comment