Followers

Monday, September 5, 2011

குட்டிச்சுவர் - பாகம் 7

வணக்கம் நண்பர்களே....


குட்டிச்சுவர் பற்றிய சில விஷயங்கள் சொல்ல தூண்டிய நண்பர்களுக்கு நன்றி...இந்த தொடரில் வரும் விஷயங்கள் கற்பனையே!....நான் பதிவிடுபவன் மட்டுமே..."நான் அவன் இல்லை" என்பதை மனதில் கொண்டு இந்த கமர்சியல் கதையை வாசிக்கவும்....நன்றி!

முந்தய பாகங்களுக்கு....சுவர் புராணம் (6)

குட்டிச்சுவர் தொடர்கிறது.....

விசுக் விசுக் என்று அருவாள்கள் மோதிக்கொண்ட சில நிமிடங்களில் டிங்கு அணிந்திருந்த சட்டை முழுக்க ரத்தக்கறை....அவனிடம் மோதியவர்களில் பலரும் அந்த இடத்தை விட்டு ஓடிக்கொண்டு இருந்தனர்.....ஒருவனைத்தவிர....

டிங்கு: என்னடா வாங்குனதுல சுத்திகிட்டு விழுந்திட்டியா...என்று கேட்டுக்கொண்டே அருகில் சென்ற டிங்கு அதிர்ச்சி அடைந்தான்.....

நண்பன்: என்ன மாப்ள அப்படியே உறைஞ்சி போய் நிக்குற அதான் எல்லாம் ஓடிட்டான்களே என்று கூறிக்கொண்டே அருகில் வந்த நண்பன்....என்னடா இது இவனுக்கு "தலைய காணோம்" என்றான்....

ஆம் அந்த அடியாளின் தலை பத்து அடி தூரத்தில் தனியாக கிடந்தது....

நண்பன்: என்னடா மாப்ள இப்படி பண்ணிட்ட....கொலை பண்ணிட்டியே....


டிங்கு: இல்லடா....தெரியாம.....

நண்பன்: இப்போ என்ன பண்றது......சரிவா இந்த இடத்த விட்டு ஓடிடுவோம்....இல்லன்னா மாட்டிக்குவோம்....

டிங்கு: எப்படியும் போலீஸ் புடிச்சிடுவாங்க....அதனால நானே போய் சரண்டர் ஆகிடுறேன்...

நண்பன்: டேய் நீ மட்டும் இல்ல என்னைய தூக்கி உள்ள போட்ருவாங்க....வேணாம்டா....

டிங்கு: நீவேனா இங்கிருந்து போயிரு....ஒரு உதவி செய்ய முடியுமா....

நண்பன்: சொல்றா....போலீசுக்கு போறத தவிர எதுவேணா சொல்லு கேக்குறேன்...

டிங்கு: அந்த @@@ஸ்டேஷனுக்கு போன் போட்டு அரவிந்தன்னு இன்ஸ்பெக்டர் இருப்பாரு.....அவருகிட்ட பேசணும்னு சொல்லு....நீங்க யாருன்னு கேட்டா கிளின்னு சொல்லு....உடனே கொடுப்பாங்க...அவரு லைன்ல வந்தப்புறம்....இங்க வர சொல்லு மீதிய நான் பாத்துக்கறேன்....

நண்பன்: இதனால எனக்கு எந்த பிரச்சனையும் வராதே.....

டிங்கு: வராது நண்பா....எனக்காக நான் யாரையும் பலி கொடுக்க மாட்டேன்....நீ தைரியமா போய் போன் மட்டும் பண்ணிட்டு போயிரு.....


(எந்த நண்பனுக்காக கத்தியை எடுத்தானோ....அந்த நண்பனை முதலில் தப்புவித்தான்....அந்த முட்டாள்!)

நேரம் சென்று கொண்டு இருந்தது....யாரும் வருவதாக தெரிய வில்லை....முதலில் தன் சட்டையை கழட்டி அருகாமையில் உள்ள குட்டையில் அலசிவிட்டு எடுத்து ஒரு புதரில் வைத்து விட்டு பனியனுடன் தூரத்தில் தெரிந்த டீக்கடையை நோக்கி நடந்தான்.....அங்கிருந்த PCO போனில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொடர்பு கிடைத்தது.....

டிங்கு: ஹலோ.....நான் கிளி பேசுறேன்...அரவிந்த் இருக்காரா.....

எதிர்முனையில் அரவிந்த் பேசலானார்....விஷயம் தெரிந்துகொண்டவர்....அங்கேயே இருக்கும்படி சொன்னார்....அவனும் ஒரு முடிவுடன் காத்திருந்தான்.....மப்டியில் வந்து சேர்ந்தார் அரவிந்த்..


அரவிந்த்: ஹலோ.....வாங்க போகலாம்....

டிங்கு: சாரி சார்....என்னால உங்களுக்கு பிரச்சன....

அரவிந்த்: பரவாயில்ல விடுங்க....சரி body எங்க இருக்கு காமிங்க....

அந்த இடத்தை இருவரும் அடைந்தனர்....ஜீப்பின் முகப்பு வெளிச்சத்தில் அந்த தலையிழந்த மனிதனின் உடலை தேடினர்....

அங்கே....

தொடரும்...

கொசுறு: இதை படமா எடுக்கலாம்னு ஒரு தயாரிப்பாளர் கேட்டு இருக்கார்...எனவே சீக்கிரத்துல படமா வரும்னு நெனைக்கிறேன் ஹிஹி!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

27 comments:

மகேந்திரன் said...

ஆஹா இன்னைக்கு வடை எனக்கா??!!

மகேந்திரன் said...

கொலை பண்றத கூட தெரியாம லா செய்வாங்க
இப்பவே கண்ணை கட்டுது மாம்ஸ்,
லேசான அழகிய நடைமுறைத்தமிழிலில்
பதிவினைக் கொடுக்க உங்களை மிஞ்ச யாரும் இல்லை மாம்ஸ்.
சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

நீ நல்லா கதை விடுவேன்னு தெரியும்... ஆனா உன் கதை சினிமா ஆகுதா? சும்மாவே நீ ஓவரா ஆடுவே.இனி அலப்பறைதான்..

தமிழ் மணம் 3 வது இடம் வாழ்த்தி தொலைக்கிறேன் . ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

நேத்து உன் கூட வாய்ஸ் சேட்டிங்கில் இருந்தப்ப திடீர்னு உன் லவ்வர் வந்ததும் ஏன் என்னை கட் பண்ணிட்டே?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//இதை படமா எடுக்கலாம்னு ஒரு தயாரிப்பாளர் கேட்டு இருக்கார்//ஹி...ஹி...

விக்கியுலகம் said...

@மகேந்திரன்

"மகேந்திரன் said...
கொலை பண்றத கூட தெரியாம லா செய்வாங்க
இப்பவே கண்ணை கட்டுது மாம்ஸ்,
லேசான அழகிய நடைமுறைத்தமிழிலில்
பதிவினைக் கொடுக்க உங்களை மிஞ்ச யாரும் இல்லை மாம்ஸ்.
சூப்பர்"

>>>>>>>>>>>

வருகைக்கும், புரிந்துணர்வுக்கும், வாழ்த்துரைக்கும் நன்றி மாப்ள!

விக்கியுலகம் said...

@நண்டு @நொரண்டு -ஈரோடு

வருகைக்கு நன்றிங்கோ!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

"சி.பி.செந்தில்குமார் said...
நீ நல்லா கதை விடுவேன்னு தெரியும்... ஆனா உன் கதை சினிமா ஆகுதா? சும்மாவே நீ ஓவரா ஆடுவே.இனி அலப்பறைதான்..

தமிழ் மணம் 3 வது இடம் வாழ்த்தி தொலைக்கிறேன் . ஹி ஹி"

>>>>>>>>>>

வாழ்த்துரைக்கு நன்றி
........................

" சி.பி.செந்தில்குமார் said...
நேத்து உன் கூட வாய்ஸ் சேட்டிங்கில் இருந்தப்ப திடீர்னு உன் லவ்வர் வந்ததும் ஏன் என்னை கட் பண்ணிட்டே?"

>>>>>>>>>>>

தவறான கருத்துக்களை பகிர்வோர் மேல் போடா (பொடா அல்ல!) சட்டம் பாயும் என்று கூறிக்கொல்வதில்(கொள்வதில்!) பெருமையடைகிறேன் ஹிஹி!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ஆசிரியர் தின வாழ்த்துகள்
என்று என் வலையில்

இவளுகளை என்ன செய்யலாம் சார்..?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

குட்டி சுவர் னு சொல்லிட்டு சுவர் பெரிசா போகுது

M.R said...

தமிழ் மணம் ஐந்து

M.R said...

மாம்ஸ் இது நல்லா இல்ல

நாங்க மட்டும் மண்டைய போட்டு குழப்பிக்கணும் ,நீங்க ஹாயா இருப்பீங்க
அப்பிடித்தானே .

எனக்கு மட்டும் மெயில் அனுப்புங்க

அங்க என்ன ?

பொணத்த காணுமா ?
சொல்லுங்க மாம்ஸ்
ரகசியமா என்கிட்டே மட்டும் சொல்லுங்க நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்

செங்கோவி said...

படமா எடுக்க வேண்டிய நல்ல தொடரை எல்லாம் பாதில நிப்பாட்டிப்புட்டு, லொள்ளைப் பாரு..

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

திகில் படம் பார்த்த மாதிரி இருக்கே விக்கி..

தமிழ்வாசி - Prakash said...

ரத்தக்கறை டயரி தொடர் முடிச்சாச்சா?

நிரூபன் said...

அடிதடி ரகளையோடு தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

Powder Star - Dr. ஐடியாமணி said...

வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க! ஹாலிவூட் படம் பார்த்த மாதிரியே இருக்கே சார்!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள பிரசண்டுஊஊஊஊஊ.

ராஜா MVS said...

தமிழ்மணம் 11

! சிவகுமார் ! said...

பாகம் ஏழா...குட்டிச்சுவரா..சீனா சுவரா..?

மாய உலகம் said...

மாம்ஸ்...குட்டிச்சுவர் ஏழு....தூளு

பாலா said...

மாப்ள பல டுவிஸ்டுகள் உள்ளன. கண்டிப்பாக படமாக எடுக்கலாம். தலைப்பு கூட அப்படியே வைக்கலாம்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

திகில் கதையா .. நல்லா இருக்கு..

மைந்தன் சிவா said...

நாசமா போன தயாரிப்பாளர்!!

மைந்தன் சிவா said...

நாசமா போன தயாரிப்பாளர்!!

சதீஷ் மாஸ் said...

நல்லா இருக்கு.. ஆனா படம் பண்ற அளவுக்கு மசாலா இல்லையே சாமி.. ஒரு டுயட் சாங் வச்சா நல்லா இருக்கும்...

shanmugavel said...

ஒரே பரபரப்பு சமாச்சாரமா இருக்கே சார்.