வணக்கம் நண்பர்களே....
கடந்த அரைவாரத்திற்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்....
கொஞ்ச நாளைக்கு முன்னே இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்றதற்கு சில ஆயிரங்கள் பரிசுத்தொகையா அறிவிச்சது இந்திய ஹாக்கி நிர்வாகம்...அதற்க்கு அவ்வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து பரிசுத்தொகையை வாங்க மறுத்தனர்...
அதே நேரம் இந்திய கிரிக்கெட் அணிக்கு அள்ளி கொடுக்கும் நிர்வாகத்தினர்(!) தேசிய விளையாட்டுக்கு கிள்ளி கொடுக்க கூட விரும்ப வில்லை என்று நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது....நல்லா விளையாடினால் தலையில் தூக்கி வைத்துக்கொள்வதும், இல்லையென்றால் கீழே போட்டு மிதிப்பதும் ஒரு புறம் இருந்தாலும்...பணம் என்று வரும்போது வீடு தருவது, அள்ளி அள்ளி கரன்சிகளை தருவது போதாது என்று வரி விலக்கும் கொடுத்து இவர்களை கோடீஸ்வரர்களாக ஆக்கி விட்டு அவர்களை போய் குனி நிமிர் என்றால் நடக்குமா....
சாதாரண ஒரு மனிதனுக்கு ஒரு கோடி பணம் கிடைத்தால் என்ன செய்வான்...ஹாயாக வாழவே முயற்சி செய்வான்...அதை விடுத்து அவனை முன்பை போல் வேலை செய் என்றால் அவனுக்கு செய்யதோன்றுமா....அதே போலத்தான் இந்த மனிதர்களும்....அவர்தம் விளையாட்டுக்கு சம்பளமாக கொடுப்பது தவித்து விளம்பரங்கள் மூலம் அள்ளுபவை ஏராளம்....தங்களின் இந்த நிலையை நிலைத்து நிற்க வைக்கவே தொடர்ந்து அணியில் ஒட்டிகொண்டு இருக்கிறார்கள்....
தொழில் ரீதியாக விளையாடுபவர்களுக்கு அதுவே தொழில், விளையாட்டு எல்லாம்...அதே நேரத்தில் உலகத்திலேயே அதிக பணக்கார கிரிக்கெட் நிர்வாகம் இந்தியாவினுடையது தான்....அரசு நினைத்தாலும் இன்று வரை ஒரு பெரிய தாத்தாவின் ச்சே தாதாவின் பின் நின்று கொண்டு மங்காத்தா ஆடி வருகிறது....
இதை தடுப்பது முடியாத காரியமாக இருந்தாலும்(!)...முடிந்தவரை குறைக்கவாவது முயற்சிக்க வேண்டும் என்பது பலரின் அவா....அதுவும் இவர்களை வீரர்கள் என்று விளிப்பது இன்னும் கொடூரம்...ஒரு பந்தை லாவகமாக பயன் படுத்த தெரியாத இவர்களா வீரர்கள்...என்ன கொடுமைய்யா இது....எதிர் நிக்கறவன் வேகமா பந்து போட்டாலே ஓடி ஒளிந்து கொள்ள முயல்பவர்களை விளையாட்டில் மட்டுமே பார்ப்பது சிறப்பு....நல்ல வேலை இவர்களுக்கு பரம் வீர் சக்ரா கொடுக்கணும்னு இதுவரை யாரும் கேற்க்கவில்லை....
இதுவரை வெற்றிகளை குவிக்கும்போது தேவைக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு எப்படி அள்ளி கொடுக்கப்பட்டதோ...அதே போல தோற்று ஓடி வரும்போது அபராதம் விதிப்பதே சரியான அணுகுமுறை....அதுவும் கொஞ்சம் பத்தாது இவர்கள் ஒவ்வொருத்தருக்கும் "ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிச்சா என்ன...?"
கொசுறு: கொசுறு சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைக்கு கும்மி அடிக்கறவங்க அடிக்கலாம்!