வணக்கம் நண்பர்களே....
காலையில் லபக்கு டிவியில் ஒரு நிகழ்ச்சி போய் கொண்டு இருந்தது....என்ன நிகழ்ச்சின்னு பாத்தா பிஞ்ச மணி பேட்டியாம்...எனக்கு வேலைக்கு செல்ல நேரம் அதிகமாக இருந்ததால்(!) அந்த பெட்டியை ச்சே பேட்டியை காணும் கண்கொள்ளாக்காட்சி காணக்கிடைத்தது....
நூறு நாள் வேலை விஷயத்தை எப்படி மாற்றி அமைப்பதுன்னு அந்த அறிவாளி சொல்லிக்கொண்டு இருந்தார்...அதுவும் பாதிப்பணத்தை மானியமாக விவசாயிகளுக்கு கொடுத்துவிடும்படியும்(!)....மீதிப்பணத்தை வேலை செய்பவர்களுக்கு நேரிடையாக அளித்துவிடும்படியும் கூறிக்கொண்டு இருந்தார்...
ஏற்கனவே இந்த பணத்தில் ஒரு பகுதி அதை செயல் படுத்துபவர்கள் எடுத்துக்கொண்டு மீதம் இருப்பதையே வேலை செய்பவர்களுக்கு கொடுத்து வருவது ஊரறிந்த விஷயம்...இது இல்லாமல் ட்ராக்டர் ரெண்டு வாங்கி ஊராட்சி மன்ற தலைவரிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம்...அதனை தினமும் வாடகைக்கு எடுத்து விவசாயிகள் பயன் பெறுவார்களாம்....
ஊராட்சி தலைவர்கள் உண்மையாக கொண்டு சேர்த்தால் பரவாயில்லையே...!
இத்தனை நாள் நேரடியாக மக்களை சந்திக்காமல் குறுக்கு வழியில் ஜாதி எனும் பீடையை காட்டியே பிச்சை எடுத்த பரதேசி...தமிழ் பற்றி சொல்லுகின்றது...எல்லோரும் தமிழ் வழிக்கல்வியை மட்டுமே பற்றிக்கொள்ள வேண்டுமாம்....தன் குழந்தைகளை உலகத்தரம் வாய்ந்த பள்ளியில் படிக்கவைத்துக்கொண்டு இருக்கும் ஒரு தந்தை(!)...தமிழ் மக்கள் எங்கு படிக்கவேண்டும்...என்ன படிக்க வேண்டும் என்று கூறுகிறார்..
ஏற்கனவே கடந்த அரை நூற்றாண்டுகளாக தமிழனை முட்டாளாக்கிக் கொண்டு இருக்கும் சூனியக்கார கிழவரிடம்(!) இருந்தே இன்னும் மீளாத தமிழ் இனம் இன்னும் இப்படிப்பட்ட அரை(!!) அறிவாளிகளிடம் இன்னும் ஏமாந்து கொண்டு இருக்கிறதே என்ற ஆதங்கமே இந்தப்பதிவின் காரணம்...
தேர்தலில் தோற்ற போதும் மக்களுக்காக போராடுவதை நிறுத்தமாட்டார்களாம்(!)...என்ன கொடுமை இது...இதுவரை தான் பெற்றெடுத்த மக்களுக்காக போராடும் தலைவர்களின் வாயில் வந்து விழும் வார்த்தைகள் அவ்வளவும் உள் நோக்கத்துடன் இருக்கின்றன.........
இன்னும் இவர்களை நம்பிக்கொண்டு இருக்கும் மனிதர்களை(!) என் சொல்வது தெரியவில்லை.....எதிரிகளிடம் போராடத்தெரிந்த நமக்கு, துரோகிகளை இனங்கானத்தெரியவில்லையே!.....
இலங்கை பிரச்சனயை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இவர்களின் தொலைகாட்சி துடித்த செயலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்!.....
இனியாவது திருந்துங்கப்பா....விடுமுறையை கடலுக்கடியில்(!) வெளிநாட்டில் கழிக்கும் செல்வசீமான்களே...இனியாவது தமிழனை வாழவிடுங்கள்....
அலுவலுக்காக எல்லா மொழியும் கற்போம்....தமிழை மறக்காது காப்போம்!...முடிந்தால் தமிழனுக்காக கொஞ்சமாவது சிந்திப்போம்!
கொசுறு: இந்தப்பதிவு ஒரு குமுறலே...நன்றி!




