வணக்கம் நண்பர்களே உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் இது ஹி ஹி!
இந்த காதையில்(கதை அல்ல) வரும் கதா பாத்திரங்களை ஒரு பார்வையாளனாக எங்கு எது வரும் என்று போட்டு புரிந்து கொள்வது உங்கள் அறிவுக்கு உகந்ததாகப்பார்க்கப்படும்.
அது ஒரு மாலைபொழுது:
ஏன்டா முருகா அந்தா தொலைவுல வருதே அந்த பொண்ணு என்னா அழாக இருக்குது இல்ல.....
அண்ணே இப்ப சொல்லுங்க தூக்கிட்டு வந்துடறேன்.........
டேய் நெறைய விவரம் தெரிஞ்ச பொண்ணு மாதிரி இருக்கு.. பாத்து ஜாக்கிரதை!
விடுங்கண்ணே நாம பாக்காததா....
ரெண்டு நாளு கழிச்சி ஒரு ஷூட்டிங்கில்:
ஏன் பாட்டி நானு ஒரு IAS ஆகனும்ன்னு கனவுகண்டுகிட்டு இருந்தேன் என்னை ஏன் ஸ்கூலுக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்ட...........
இங்க பாரு கண்ணு நீ படிச்சி வேலைக்கு போயி தான் சம்பாதிக்கணும்னு இல்ல .... பாரு சீக்கிரத்துல நீ பெரிய பணக்காரி ஆகப்போறே பாரு!
அதுதான் இப்பவே பணம் நம்ம கிட்டே இருக்கே போதாதா.........
இது போதாது கண்ணு..............
ஒரு பின்னிரவில்:
இங்க பாரு... எங்க போறே இந்த ராத்திரியில.....?
ஹும்...... என் தலையெழுத்து எனக்கு வாச்ச அம்மா அப்படி! வாழ்கைய நல்லா வாழ சொல்லிக்குடுக்க வேண்டிய பாட்டி கூட்டி குடுத்துட்டு போயிட்டா............
அதுக்கு ஏன் கவலைப்படுறே நான் இருக்கேன்..........
யோவ் நீ எதுக்கய்யா லாயக்கு........உன் மனச தொட்டு சொல்லு...... உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன்......... நான் பாட்டுக்கு படிச்சுகிட்டு இருந்தேன் என்ன கூட்டியாந்து இப்போ எந்தப்பக்கமும் போக முடியாதபடி ஆக்கிட்டீயே!?
இப்போ என்ன ஆச்சின்னு இப்படி கோவப்படுறே.......
போய்யா..................நீ ஒரு ஆம்பிளையா...... சொல்லு.......... நாயிக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்.........உன்னால ஒரு சராசரி மனுஷன், அவன் கூட இருக்க பொண்ணுக்கு குடுக்குற சந்தோசத்த குடுக்க முடியுமா........எவ்ளோ பணக்காரனா இருந்தா என்னாயா......... என்னாத்துக்கு வேணும் உன் பணம்......... என் வாழ்கையையே நாசம் பண்ணிட்டீயே.......நீ நல்லா இருப்பியா.............என்ன விட்டுடு............
அவன் திக்கித்து நின்றான் அவள் அந்த இடத்தை விட்டு சென்று நெடு நேரமாகியது.
என்ன அண்ணே அந்தப்பொண்ண விட்டுடீங்க,,,,,,,,,,
இல்ல முருகா........இன்னிக்கி அவ கேட்ட கேள்விகளால என் உடம்பு அப்படியே கரண்டு அடிபட்ட எலிக்கனக்கா நின்னுடுச்சி.
மூன்று வருடம் கழித்து:
ஏன்டா அங்க பாரு............
ஆமாண்ணே ஒரு பொண்ணு மயங்கி கெடக்கு.......
அண்ணே அதே பொண்ணு தான்னே.....
சரி தூக்கு வீட்டுக்கு கொண்டு போவோம்.
கொஞ்ச நேரம் கழித்து:
என்ன ஆச்சி ..............
என்ன ஆகணும்.........நான் நம்பிய அத்தன ஆம்புளைங்களும் என்னை ஒரு போகப்பொருளா பாத்தானுங்களே தவிர உயிருள்ள ஒரு பெண்ணா பாக்கலியே..... நான் என்னா செய்ய.......எல்லாம் என் தல விதி!
கவலைப்படாதே என் கூடவே இரு உன்னோட எதிர்காலம் நல்லா இருக்கும்..........
இனி இருக்கேன் ..... இருப்பேன்
(மனதுக்குள் - என் எதிர்காலம் மற்றும் குறிக்கோள் - ஆண்கள் என் முன் மண்டியிட்டு என் அடிமைகளாக இருக்க வைப்பேன் இது சபதம் மட்டும் அல்ல சத்தியம்)
கொசுறு: இது ஒரு மனசாட்சியின் குரல்(தக்காளி யாருன்னு சொல்லுங்க பாப்போம் ஹிஹி! இதுவும் ஒரு மீண்ட பதிவு ஹிஹி!)





