Followers

Showing posts with label சிரியஸ். Show all posts
Showing posts with label சிரியஸ். Show all posts

Monday, May 9, 2011

அப்பாடக்கர் பதிவர்களே கொஞ்சம் கவனிங்க!

வணக்கம் நண்பர்களே......


ரொம்ப நாளா மிதிஉலகத்துல சண்டையே இல்லன்னு நெறைய பதிவர்கள் தனி மெயிலில் அங்கலாய்த்ததாலும்(!)........சில பதிவர்கள் தங்களை பற்றி மட்டுமே கலாய்கிறார்களே(!)......என்று "ஊ"என்று ஊளையிட்டதாலும்(!), நான் கேட்டதற்கு......அப்படி பொங்கி எழுந்தால் எண்ணெய் ஊற்றி தன்னை கொளுத்தி விடுவார்கள் மிதிஉலகத்தில் என்று அஞ்சியதாலும்.......அவர்கள் பொருட்டு என்னை எழுத சொல்லி வற்ப்புருத்தியதால் இந்தப்பதிவு.......(!!!!!!!!)

தற்போது பதிவுலக மேனியா எப்படி போய்க்கொண்டு இருக்கிறது...........

நான் கிட்ட தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த பதிவுலகத்தில் வாசகனாக இருந்து பின்பு ஒரு சாதா(ஸ்பெஷல்னா!) பதிவராக உருவெடுக்க கிட்ட தட்ட 6 இலிருந்து 7 மாதமாகியது.....இப்பவும் நான் ஒரு சாதாதான்(சோதா!)...........


ஆனால், இப்போது அப்படியல்ல ஒரு பிரபலத்துக்கு(!) தெரிந்து இருந்தாலே போதும் அவர் சட்டென்று அனைவராலும் திரும்பி பார்க்கப்படுகிறார்(எனக்கு வயித்தெரிச்சல் என்று சொல்லிக்கொள்ளவும்!)......அதுவும் பதிவுகளுக்கு போகாமல் என்னமோ இவர் தான் பல விஷயங்களை கரைத்து குடித்தது போலவும்...அதற்க்கு தனி மெயிலில் வேண்டுதல் வேறு ஹிஹி!............ஏன்யா பல பதிவர்கள் இன்று கொஞ்சமாவது பலருக்கு தெரிய எவ்வளவு பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு இருப்பார்கள்.....கொய்யால...இருங்கடி இருக்கு!......நான் பம்முற ஆளு இல்ல.........அதே நேரத்துல இலக்கிய பதிவரும் இல்ல ஹிஹி(உண்மை எப்பவுமே சொல்லிடனுமில்ல அதான்!)

இது இப்படி என்றால்......இன்னொரு புறம் தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல்(நோ டபுள் மீனிங் ஹிஹி!)........குய்யோ முறையோன்னு ஒரு கூட்டம்........அதுவும் உலக தரத்துக்கு இணையான ஈரான் பட ரேஞ்சுல கும்முறாங்க........(யார்ரா அங்க கைதட்டுறது.....!)


ஒரு பய புள்ள தனியா இருந்து கிட்டு ஜொள்ளு விட்டுட்டு இருக்கான்(டேய் உன்னதான்!).........அவனுக்கு தெரிஞ்ச பொருள கொண்டாந்து பின்னூட்டத்துல போட்டுட்டு போறான்.......அதுக்கு ஏன்யா உனக்கு இதெல்லாம் தேவையான்னு கேக்குறீங்க.......ஏதொ அவனுக்கு பொழுது போகல பல பெண் பதிவர்களிடம் மொக்க போட்டுட்டு இருக்கான்(சரிய்யா விடு உனக்கு இது சகஜம்தானே!) .........வேற என்னதான்யா பண்ண சொல்றீங்க.....பேசாம எல்லாரும் உக்காந்து அழுமூஞ்சி பதிவு போடுங்க........அதுக்கு இனிமே..........

ஹிஹி.........

ஹோ ஹோ......ஹே ஹே............ம் ம் ............

இந்த மாதிரி கம்மண்டுல போடாம.........ஐயோ போயிட்டியே.........அட தாத்தா போயிட்டேயே.........அட ஆயா போயிட்டியே.......ஹூம் ஹூம்...........

இனிமே இப்படி போடுறோம் கம்மன்ட்ஸ்..........சரியா............


பல பேரு ஏன் இப்படி செய்திய பதிவா போடுறீங்கன்னு கேக்குறீங்களே........உங்களுக்கு அந்த பதிவர்களின் சார்புல ஒன்னு விட்ட தம்பியா சொல்லிக்கறேன்......எங்களுக்கு என்ன வருமோ அத தானே போட முடியும்........இதுக்கெல்லாம் போய் பொங்குறீங்களே(!).........விடுங்கய்யா பாவம் வீட்ல வாங்குற அடிய தாங்கிகிட்டு நம்மளுக்கு சேதி சொல்றாங்க நண்பங்கன்னு பாக்காம(!).......சில டயலாகுகள் வருமாறு.......

எவ்ளவோ பாத்துட்டாங்க இத பாக்க மாட்டாங்களா.......

மானத்துக்கு பயந்தா பதிவனா இருக்க முடியுமா.........

குட்டின்னு ச்சே குட்டையின்னு வந்துட்டா அதுல சேரும் இருக்கும் செந்தாமரையும் இருக்கும்..........

etc...............


கொசுறு: பாதிக்கப்பட்ட பதிவர்கள்.......என்னிடம் வருந்தி வேண்டி கேட்டுக்கொண்டதால் இந்த பதிவு..........அதுவும் அவர்கள் பெயர் கெட்டு விடக்கூடாது என்று கேட்டுக்கொண்டதால் அவர்கள் பெயர் போடப்படவில்லை ஹிஹி! 

Post Comment