முதலில் நண்பர்கள் அனைவருக்கும் என் மனம்மார்ந்த நன்றி!...நான் டைப்புவது(!) கன்றாவியா இருந்தாலும் அதை சகித்து கொண்டு ஒரு லட்சம் ஹிட்சை அடைய உறுதுணையாக இருந்த உங்கள் பொறுமைக்கு ஒரு ராயல் கோல்ட் சல்யூட்!
கடந்த சினிகூத்தர்களின் காப்பி சேவை பதிவுல ஒரு நண்பர் என்னை அர்ச்சனை செய்ஞ்சி இருந்தார் (ஹிஹி!)....அப்புறம்தான் தான் கொஞ்சம் எனக்கு தோணினத பதியலாம்னு நினைத்த போது வந்த பதிவு இது...
சிவாஜி - இந்த பெயரை சொல்லும்போதே ஒரு கர்ஜனை தோன்றும்....அந்தகாலத்து சரித்திர சிவாஜிஇடமிருந்து இந்த கர்ஜனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது......நான் சொல்ல வந்தது நம்ம சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் அய்யாவை பற்றியது....
எல்லோரும் இந்தக்காலத்தில் உலக சினிமா பாக்க வாய்ப்புகள் அதிகமா கிடைக்குது...டிவி பொட்டியிலயும் புரியும் படியா தமிழ்ல மொழிமாற்றத்துடன் படங்களை தருவதால் மக்களுக்கு சென்று சேர ஆரம்பித்து இருக்கிறது...அதிலும் குறை என்னனா எல்லாம் சண்டை படங்களாகவோ அல்லது பேய் படங்களாகவோ(சில நேரத்தில் குழந்தைங்க படங்கள்!) போடுறாங்க.....
இந்தக்காலத்து இளவட்டங்கள்.....அதுவும் கணிப்பொறி கிடைத்தோர் உலக படங்களை எளிதா பாத்துடறாங்க....என்ன இருந்தாலும் நம்ம ஊருல இருந்து நம்ம நாட்டு முன்னேற்றத்துக்கு பாடுபட்ட பல சரித்திர புருஷர்களை நம் கண் முன் நிறுத்துன நடிகர் திரு. சிவாஜி அவர்கள் தான் என்பது பொதுவான கருத்து....
இன்னைக்கும் நமக்கு "கட்ட பொம்மு" எப்படி இருந்திருப்பாருன்னு ஒரு கற்ப்பன பண்ணி பாக்க நெனச்சா சிம்மக்குரலோன் முகம் தான் ஞாபகம் வரும்.....கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார் நினச்சாலும் இவரோட ஞாபகம்தான் வரும்...பல மறைந்த மகான்களை இவரின் துணை கொண்டுதான் நாம் நம் மனத்தில் பதிய முடிந்தது....
பொதுவா மனுசங்களுக்கு ஒரு கெட்ட குணம் உண்டு...அது என்னன்னா கையில இருக்குற விஷயத்த மதிப்பது கிடையாது.....தூர இருக்க விஷயத்த தான் அண்ணாந்து பாத்து கொட்டாவி விடுவாங்க(ஹிஹி என்னைய சொல்லிக்கிறேன்!).....
அந்தக்காலத்துல நாடக மேடைல நடிச்சி புகழ் பெற்று பின்பு தன் நடிப்பால இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகிறார் சிவாஜி அவர்கள்....அவர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு "மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு" என்பது!....நம்ம ஊருல யாராவது எமன் கிட்ட அனுமதி வாங்கிட்டாங்கன்னா(!)...அதுவும் நமக்கு பிடிச்ச நெருக்கமானவங்களா இருந்தா எப்படி அழாமல் இருப்போம்...
நாம என்ன ப்ரெட் பட்டர் பாமிலியா....தூரத்துல நின்னு god உங்கள பாத்துப்பாருன்னு சொல்லிட்டு கோட்டு போட்டு நிக்க!....உணர்ச்சி வசப்பட்ட மனிதன் என்னவெல்லாம் செய்வானோ அதை சிம்மக்குரலோனின் நடிப்பில் நாம் பார்த்தோம்....இன்று வரை அந்த குரல் காதில் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது...
எப்பேர்பட்ட அப்பா டக்கரும் எங்கள் தமிழ் நடிகன் சிவாஜியிடம் நடிப்பில் நெருங்க முடியாது என்பதை இந்தப்பதிவில் என் கருத்தாக பதிய வைக்கிறேன்...நன்றி!....
கொசுறு: அந்த முகம் தெரியாத அன்பருக்கு நன்றி!...அடைந்தேன் 1 லட்சம் வருகை பதிவேடு! - ஹிட்ஸ்பா!...இத வச்சி தக்காளி(!) பெரிய பணக்காரன் ஆயிட்டான்னு நண்பர்கள் நினைக்க வேண்டாம்(!) என்று நன்றியுடன் கேட்டுக்கொள்கிறேன்...













