Followers

Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Sunday, April 17, 2011

மணக்கும் ஆறு!

வணக்கம் நண்பர்களே..............


மணக்கும் ஆறு(!)............இந்தப்பேரை கேட்டவுடன் நம்மூரு மக்களை எண்ணிப்பார்க்கிறேன்..........என்ன ஒரு ஆனந்தம்...........பல கட்சிக்கரப்பயளுங்க வந்தும் இன்னும் இப்படியே மணக்கிறதே இந்த ஆறு ஏன்......கொஞ்சம் பின்னாடி போவோம்....பின்னாடின்னா கொஞ்ச காலத்துக்கு பின்னாடின்னு அர்த்தம்.............!

கூவம்...இந்த பெயரை சொல்லும்போதே நம் சென்னை மக்கள் முகம் அஷ்டகோனலாவதை பார்க்கலாம்..........கிட்ட தட்ட 75 கிமீ சுற்றிவரும் நதி அல்ல சாக்கடை இது...........இப்படியாக்கியவர்கள் யாரு!

ஒரு காலத்துல தர்மபுரிய தாயகமா கொண்டு ஆரம்பிச்ச இந்த சிற்றாறு.............தமிழ்நாட்டு கால மாறுப்பாட்டால திருவள்ளுருல இருந்து மாறிக்கிச்சி...........முன்கால மக்களுக்கு தெரியும் இது ஒரு படகு போக்குவரத்து நடந்த ஆறுங்கறது.........(எ.கா. மதராசப்பட்டினம்........சினிமாவோட சொல்லணும் ஹிஹி!)

2004 ல வந்த சுனாமி இந்த ஆத்த சுத்திகரிச்சி விட்டுட்டுட்டு போச்சி.......அப்படியும் நம்ம மக்கள்.........நாங்க எப்பவும் சுத்தத்துக்கு அடிமையாக மாட்டோம்ங்கர கொள்கைள விழிப்பா இருந்ததால இப்ப மறுபடியும் சாக்கடயாகிப்போச்சி.........


இத தூர் வார்ரன்னு வந்த முதல்வர் மகனும் அவரோட எதிர்காலத்துக்காக அப்படியே கெடப்புல போட்டு வச்சி இருக்காரு.............


இன்னொரு பேரு உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன்......"அம்பட்டன் பிரிட்ஜ் - அம்பட்டன் வாராவதி" என்று அன்பாக அழைக்கப்பட்ட ஹாமில்டன் பிரிட்ஜ்..............இது சாக்கடை மேல கட்டப்பட்ட சிறிய பாலம்....இன்னிக்கி அம்பேத்கர் பாலம்னு அழைக்கப்படுது..........இப்போ இதுக்கு அருகில தான் ஒரு மிகப்பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டு இருக்கு.......அந்த வணிக வளாகத்துக்கு பின்னாடி இருக்க மக்கள் யாரும் இது உள்ள நுழையற அளவுக்கு துட்டு வச்சி இருக்காங்களான்னு தெரியல(!)


கொசுறு: கூவம் கோவமா இருக்கு மக்களே புரிஞ்சிக்கங்க ஹிஹி!.....சீக்கிரம் மாத்துவாங்களா இல்ல மாறுவாங்கலா டவுட்டு..........உங்க டவுடுகள சொல்லுங்க நண்பர்களே...........

Post Comment